கேள்வி:
ஒவ்வொரு முஸ்லிமும் பெரும்பாலும் தான் ஒரு முஃமின் (இறை நம்பிக்கையாளர்) என்று கருதியே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறார். ஆனால் நமக்கு முஃமின் என்பதன் பொருள் தெரியுமா?
நாம் முஃமின்களாக இருந்தால், யூதர்களும், கிறிஸ்தவர்களும் மற்றும் ஹிந்துக்களும் நம்மை விட எண்ணிக்கையில் அதிகமாகவும், தொழில் நுட்பத்தில் முன்னேறியவர்களாகவும் இருக்கிறார்களே!!! இறைவனைப் பற்றிய சிந்தனைகளை விட அவர்களுடைய எண்ணிக்கை மற்றும், வலிமையைப் பற்றிய சிந்தனை தான் நமது எண்ணத்தை ஆட்டிப்படைக்கிறதே!
அவர்கள் நம்மைவிட விலிமை மிக்கவர்களாக இருப்பதால் அவர்களை நாம் வெற்றி கொள்ள முடியாது என்ற சிந்தனை நமக்கு மேலோங்குகிறதே!! இந்நிலையில், நாம் வல்லமை மிக்க இறைவனின் நம்பிக்கயாளர்கள் தானா?
பதில்:
இறைவனின் பெயரால், அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத் தஆலாவைத் தவிர வேறு (சிலைகளோ, மனிதர்களோ, சமாதிகளோ, நபிமார்களோ, இமாம்களோ, குருவோ) யாருமில்லை என்று சாட்சி கூறகிறேன்; மேலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன்.
என தருமை சகோதரரே, நாம் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்து, நமது பொறுப்புகளை அவனிடமே பறைசாற்றி, அவனையே முற்றிலும் சார்ந்திருந்து அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டளைகளை பற்றிப் படித்துக்கொண்டு அவைகளுக்குக் கீழ்படிந்து நடப்போமேயானால் அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தை உலகில் உள்ள மற்ற மதங்களை விட மேலோங்கச் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறான்.
அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 9, ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) வசனம் 33 ல் கூறுகிறான்: –
”அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான்; முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்)” (அல்குர்ஆன் 9:33)
அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 58. ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்) வசனம் 22 ல் கூறுகிறான்: –
”அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்”
கடந்த கால வரலாற்றையும் நாம் சற்று உற்று நோக்கவேண்டும். இஸ்லாத்தின் ஆரம்பக்காலக் கட்டங்களிலிந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமே தேர்ந்தெடுக்கப் பட்ட மார்க்கமாக, பலரால் விரும்பக் கூடிய மார்க்கமாக இருந்து வந்திருக்கிறது. கடந்த ஒரு சில நூற்றாண்டுகளாகத் தான் இணை வைப்பாளர்கள் முஸ்லிம்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு, முஸ்லிம்களையும், முஸ்லிம் நாடுகளையும் அவர்களுடைய ஆதிக்கம், அவர்களுடைய உலக வங்கி, மற்றும் அவர்களின் வட்டி சார்ந்த நிறுவனங்களின் கீழ் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள்.
ஏன் இப்படி? அதுதான் உங்களுடையதும் மற்றும் ஒவ்வொரு முஃமினின் சிந்தனையிலும் எழக்கூடிய கேள்வி.
”எல்லா மார்க்கங்களையும் விட இஸ்லாத்தை மிகைக்குமாறு செய்வேன்” என்ற அல்லாஹ்வின் வாக்கு உண்மைதானா? ஆமாம் சகோதரரே! அல்லாஹ்வின் வாக்கு முற்றிலும் உண்மை. நாம் தான் நம்முடைய அமல்களிலும், செயல்களிலும் குறைபாடுகளையுடைய முஸ்லிம்களாக, முஃமின்களாக இருக்கிறோம்.
நாம் இன்று மிகவும் வலிமையிழந்தவர்களாக இருப்பதற்கும், அவமானப்படுத்தப் படுவதற்கும், நம் சகோதர, சகோதரிகள் சித்திரவதைக்குள்ளாக்கப் படுவதற்கும், நம் கண்கள் முன்னே படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப் படுவதற்கும், நம்முடைய முஸ்லிம் நாடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, இறை நிராகரிப்பாளர்களின் (முஷ்ரிக்குகளின்) விருப்பத்திற்கேற்ப கைப்பற்றப்படுவதற்கும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தும் ஒன்றும் கூற முடியாமல் சக்தியற்றவர்களாக இருப்பதற்கும் காரணம் என்ன வெனில்:-
நாம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி காட்டுதல்களை கைவிட்டு விட்டு முஷ்ரிக்குகளை அவர்களின் ஒவ்வொரு செயல்களிலும் பின்பற்ற முயற்சிப்பதுதான். நம்முடைய வலிமையை நாமே முறித்து நிறம், மொழி, குலம், கோத்திரங்கள், பிரிவுகள், நாடுகள் ஆகியவைகளின் அடிப்படைகளில் பிரிந்து சின்னா பின்னமாகி இருக்கிறோம். மேலும் ஒரு உம்மத்தாக இருந்து ஒரே இறைவனை வணங்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து ஆட்சி அதிகாரத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மற்றும் பதவி சுகத்திற்காகவும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றோம். நாம் நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தின் கவர்ச்சியிலும், ஆடம்பரத்திலும் மயங்கி இதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸில் வருகிறது: –
‘முஃமின்கள் இந்த உலக வாழ்வை நேசித்து மரணத்தை வெறுக்கும் போது, அல்லாஹ் எதிரிகளுக்கு முஸ்லிம்களின் மீதுள்ள பயத்தை போக்கிவிட்டு, முஸ்லிம்களின் உள்ளத்தில் எதிரிகளைப் பற்றிய பயத்தைப் போட்டுவிடுவான்”
நிச்சயமாக இது தான் நடந்திருக்கிறது.
ஆனால்,
முஸ்லிம்கள் ஒன்றுபடும் நாளில்,
நிரந்தரமற்ற இந்த உலகத்தின் ஆடம்பர வாழ்க்கையை விட மறுமையை அதிகமாக நேசிக்கும் போது,
தற்போதைய அவமானத்தை விட மரணத்தை விரும்பும் போது,
மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவைகளை பின்பற்றி நடக்க ஆரம்பிக்கும் போது,
ஒரே இறைவணை மட்டும் வணங்கக் கூடிய உண்மையான முஸ்லிம்களாக மாறும் போது,
அல்லாஹ்வின் கட்டளைகளை, சட்டங்களை இந்த உலகத்தில் மேலோங்கச் செய்ய முயற்சிக்கும் போது ஸ
அப்போது அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி முஸ்லிம்கள் இழந்த தங்களின் கவுரவத்தை மீட்க உதவி செய்வான்.
ஆகையால், இன்று ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்னவெனில்,
மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒவ்வொரு கட்டளைக்கும் கட்டுப்பட்டு நடப்பது.
தன்னால் முடிந்த அனைத்து செயல்களையும் செய்து பிரிந்து பல்வேறு கூறுகளாக போன இந்த சமுதாயத்தை ஒன்று சேர்க்க முயற்சிப்பது
இது தான் இந்த உலகில் அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் மேலோங்கச் செய்யப்பட நாம் அளிக்கும் நம்முடைய பங்களிப்பாகும்.
இஸ்லாம் நமக்கு என்ன செய்திருக்கிறது என்று கேட்காமல், நாம் இஸ்லாத்திற்காக என்ன செய்திருக்கிறோம் என்று நமக்கு நாமே கேட்கவேண்டும். நம்முடைய மனசாட்சி கூறும் உண்மை நமக்கு விருப்பமானதாக இல்லாமல் இருந்தால், நம்மை படைத்த அல்லாஹ்வுக்கு பணிந்து ஸுஜுது செய்தவர்களாக பாவமன்னிப்பு கோரவேண்டும். நாம் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை இவ்வுலகில் நிலை நிறுத்த, நம்முடைய சக்திக்கேற்றவாறு பாடுபடுவேன் என்று அல்லாஹ்விடம் உறுதியான உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டும். மேலும் இதை முதலில் நம்மிலிருந்தும் பின்னர் நமது குடும்பத்தார்களிடமிருந்தும் ஆரம்பம் செய்யவேண்டும்ஸ.
ஆமாம், இதற்கு 50 ஆண்டுகள் அல்லது 200 ஆண்டுகள் அல்லது ஏன் 500 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் அல்லாஹ்வின் வாக்குறுதி நிலையானது, உண்மையானது, என்றுமே மாறாதது. நாம் இவ்வுலக வாழ்வைவிட மறுமை வாழ்விற்கு முக்கியத்துவம் தந்து, மரணத்தை வெறுப்பதை விட நேசிக்க ஆரம்பித்து, முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயலாற்றினால் இன்ஷா அல்லாஹ் இவ்வுலகில் உள்ள அனைத்து மதங்களையும் விட இஸ்லாம் மார்க்கமே மேலோங்கி நிற்கும். நானும், நீங்களும் மற்றும் ஒவ்வொரு முஸ்லிமும் அந்த நிலையை அடையும் நாளில் அல்லாஹ் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவான்.
அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 24, ஸூரத்துத் நூர் (பேரொலி), வசனங்கள் 55-57 ல் கூறுகிறான்: –
”உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்;”
”அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்; இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்;
”(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள். நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்”
யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்து எங்களின் பாவங்களை மன்னித்து எங்களுக்கு நேர்வழி காட்டுவாயாக!
யா அல்லாஹ், இந்த உலகில் இஸ்லாத்தை மேலோங்கி நிற்கச் செய்யவும் மேலும் உன்னுடைய வாக்குகளை, சட்டத்திட்டங்களை எல்லாவற்றையும் விட மேலோங்கி நிற்கச் செய்ய நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களுக்கு உதவி செய்வாயாக!
யா அல்லாஹ் தனித்தனியாகவோ, கூட்டாகவோ அல்லது சமுதாயமாகவோ உன்னுயை திருக்குர்ஆனில் கூறப்பட்ட ஒவ்வொரு சட்ட திட்டங்களையும் புரிந்துக் கொண்டு நடப்பதற்கு எங்களுக்கு வழிகாட்டுவாயாக!
யா அல்லாஹ் புனித குர்ஆனின் வசனங்களைப் புரிந்து கொள்வதற்காக எங்களின் இதய கதவுகளைத் திறப்பாயாக!
யா அல்லாஹ், இஸ்லாத்தின் எதிரிகளுடைய சூழ்ச்சிகளுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!
யா அல்லாஹ், இஸ்லாத்தின் எதிரிகளைப் பற்றிய எங்களின் இதயங்களிலுள்ள பயத்தை நீக்கி உன்னைப் பற்றிய பயத்தையும், உன் மீதுள்ள நேசத்தையும் எங்களின் உள்ளங்களில் விதைப்பாயாக!
யா அல்லாஹ், நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வை விட மறுமை வாழ்வை தேர்ந்தெடுப்பதற்கு எங்களுக்க உதவி செய்து வழிகாட்டுவாயாக!
யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்து, வழிகாட்டி, எங்களின் பாவங்களை மன்னித்து, நிராகரிப்பாளர்களுக்கு எதிராக எங்களுக்க வெற்றியைத் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ், எங்களுக்கு உன்னுடைய பாதையில் வெற்றியையோ அல்லது உன் வழியில் ஷஹீதுடைய மரணத்தையோ தந்தருள்வாயாக என்று உன்னிடம் மன்றாடிக் கேட்கிறோம்.
யா அல்லாஹ், எங்கள் மீது கருணை காட்டி இஸ்லாத்தின் உம்மத்துக்களை ஒரே உம்மத்தாக ஆக்கியருள்வாயாக. ஆமீன்
அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும் கருணை புரிந்து நம் அனைவருக்கும் இஸ்லாத்தின் நேரான பாதையைக் காட்டுவானாகவும்!
புர்ஹான்,சவூதி அரேபியா.
நன்றி source:www.islamhelpline.com