சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் காய்வதால், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. தமிழகத்தில் பருவமழை போதுமான அளவு பெய்யாததால், வெயிலின் தாக்கம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெயில் சுட்டெரிக்கத் துவங்கியது.
கடல்காற்று வீசியதால் சென்னை மட்டுமின்றி கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. ஆனால், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெயில் கடுமையாக இருந்து வருகிறது. அக்னி வெயில் துவங்குவதற்கு முன்னரே கடந்த சில நாட்களாக சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும் வெயில் கொளுத்துகிறது.
மதுரை, கோவை, திருச்சி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியும் வெயில் அடித்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று பகல் முழுவதும் அனல்காற்றுடன் வெயில் கொளுத்தியது. இதனால், பகலில் பொதுமக்கள் வெளியே தலைகாட்ட அச்சப்பட்டனர். இதனால், சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. பகல் முழுவதும் கொளுத்திய வெயிலின் தாக்கம், இரவிலும் நீடித்தது. இதனால், இரவு நேர புழுக்கம் காரணமாக தூக்கமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
நம் மண்ணில் எத்தனையோ தரமான தயாரிப்புகள் உள்ளன நம் மண்ணின் ஆதார சுருதியான விவசாயத்தை சார்ந்த மோர் இளநீர் நுங்கு போன்றவைகள்.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு உலுக்கி எடுத்துவிடும். ‘ஜிவ்’ என்று கிளம்பியுள்ள கோடை வெயிலை எப்படி சமாளிக்கப் போகின்றனர் என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், ஒரு சில விஷயங்களை கையாண்டால் கோடையை சுலபமாக சமாளித்து விடலாம்.கோடை வெயிலில் இருந்து தப்பிக்க
இதோ சில டிப்ஸ்...
தாய் பாலுக்கு இணையான புரதச் சத்துக்களை கொண்ட இளநீர், சூட்டை தணிக்கும். உடலை சீராக வைத்துக் கொள்ளும். ஜீரண சக்தியை அதிகரிக்கும், சிறுநீரகத்தை சுத்திகரிக் கும். உடலில் ஏற்படும் நீர் – உப்பு பற்றாக்குறையை இளநீர் சரிசெய்கிறது. இளநீரின் உப்புத் தன்மை, வழுவழுப்பு, காலரா நோய்களுக்கு நல்ல சத்து. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரில் தயாரிக் கப்படும் ‘ஜெல்’ என்ற பொருள் கண் நோய்களுக்கு சிறந்து மருந்து. இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது.
வெயில் நேரத்தில் ‘ஃபிரிட்ஜில்’ வைத்த ‘கேஸ்’ குளிர் பானங்களை அருந்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழ வகைகளை அதிகம் சாப்பிடலாம். கோடையை முன்னிட்டு மூலைமுடுக்கெல்லாம் பழக்கடைகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. தற்போதுள்ள விலைவாசியில் 15 ரூபாய்க்கு குறைந்து எந்த பழரசமும் கிடைப்பதில்லை. தர்பூசணி, வெள்ளரி, கிர்ணிப்பழம் ஆகியவற்றை மொத்தமாக வாங்கி, பழரசம் தயாரித்து பருகலாம்.
உடலில் உண்டாகும் வியர்வையை உறிஞ்சிடவும், வியர்க்குரு வருவதை தவிர்க்கவும் உன்னத வழி கதராடைகள் அணிவதுதான். 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரையிலும் கதர் ரெடிமேட் சட்டைகள் விற்கப்படுகின்றன.* ஓட்டையாகிப்போன ஓசோன் படலத்தின் வழியாக அதிகமான ‘அல்ட்ரா வைலட்’ கதிர்கள் பாய்ந்து கண்நோய் உண்டாக்குவதும் இந்த மூன்று மாதங் களில்தான். எனவே, ‘ஆட்டோ நிப்லக் ஸன் கிளாஸ்’ அணிவதால் கண் நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.
இளநீர் குடிப்பதால் உடல் சூடு, காமாலை நோய், தோல் நோய் ஆகியவை வராமல் தடுக்கலாம். மேலும், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலையும் தவிர்க்கலாம்.* உடல் சூட்டை தவிர்க்கும் உன்னத பழம் என்று தர்பூசணியை கூறலாம். நுங்கு மற்றும் வெள்ளரி கோடை காலத்தில் மிகவும் உகந்தது.
குளிக்கும்போது, எலுமிச்சம் பழத்தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பை தடவி கழுத்து, அக்குள் ஆகிய பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்வை நாற்றம் ஓடிவிடும்.* வெள்ளரி, கிர்ணிப்பழம் தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் ‘அக்கி அம்மை’ நோய் அண்டாது. வாழைப்பழம் உண்டால் சீதபேதி, மலச்சிக்கல் இருக்காது.ரோஜாப்பூ, குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.* குடிநீரில் ‘வெட்டிவேர்’ போட்டு வைத்தால் குடிநீர் மணமாக இருப்பதோடு, உடல் சூட்டையும் தணிக்கும்.
இன்றைய இளைய தலைமுறை மோர் குடிப்பதை கௌரவ குறைச்சல் என்று நினைக்க காரணம் அயல் நாட்டு நிறுவனங்கள் செய்த மூளை மழுங்கடிக்கும் விளையாட்டு சினிமா கலைஞர்களின் ஆடம்பர விளம்பரம் தவிர வேறு எதுவும் இல்லை .இவர்களுக்கு தேவை கோடிக்கணக்கான பணம் மட்டுமே இதனால் ஏற்படும் பாதகம் பற்றி இவர்களுக்கு என்ன கவலை நாம் ஒவ்வொரு முறை மோர் குடிக்கும் போதும் ஒரு விவசாயி நன்றியுடன் நம்மை பார்ப்பான்.
இளநீர் விற்கும் சாலையோர வியாபாரி இடம் நாம் கொடுக்கும் பணம் அவன் வீட்டில் அடுப்பெரிய உதவியாக இருக்கும் நான் அந்நிய பொருள்களை முழுவதும் ஆகா புறக்கணியுங்கள் என்று சொல்ல வில்லை ஆனால் அந்த பொருள்களை நாம் பயன் படுத்துவதால் நம் இந்திய மண்ணிற்கு வருங்கால இயற்கைக்கு நாம் எவ்வளவு பெரும் தீமை செய்கிறோம் என்று மட்டும் நினைத்து பாருங்கள்
வரும் கோடை காலம் முழுவது மோர் மற்றும் இளநீர் மட்டும் குடிப்போம்.
source: http://iniyamarkam.blogspot.com/