இப்பொழுதெல்லாம் அடிக்கடி காதில் விழும் சில புலம்பல்கள்….
o கால்குலேட்டர் மூளையின் செயலை குறைத்துவிடும்.
இவர்கள் சொன்னதை பிடித்துக்கொண்டு எடு பேப்பரையும் / பேனாவையும் ‘எட்டுக்கால் ரெண்டு..பைத்தஞ்சு அம்பது” என்று பாடிக்கொண்டிருந்தால்- உங்கள் செயலைக்குறைத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.
o கைத்தொலைபேசி வைத்துகொள்வதால் பிரச்சினைதான். இது நடைமுறையில் சாத்தியமே அல்ல. பொதுவாக இதுபோன்ற கோபத்தில் போடும் சட்டங்களுக்கு எக்ஸ்பயரி டேட் வெகு சமீபத்திலேயே இருக்கும்
இதுபோன்ற புலம்பல்கள் ஏன் வருகிறது ?
…உறவுகளின் நெருக்கம் குறைந்துவிட்டது.
பிள்ளைகள நாம் ரிசல்ட்டை வைத்தே பாசம் காண்பிக்கும் மனப்போக்கு மாற வேண்டும். பிள்ளகளின் விறுப்பு வெறுப்புகளை நாம் பேசியே தெரிந்துகொள்ளலாம் இதற்கெல்லாம் ஏஜன்ட் தேவையில்லை.
வளரும் இளைஞர்கள் (சில குடும்பங்களில்) தஞ்சாவூரை தாண்டவே பயப்படும் பெரியவர்களின் வாயிலிரிருந்து வரும் வார்த்தயை அநியாயத்துக்கு நம்புகிறார்கள். இவர்களும் (பெரியவ்ர்களும்) அவ்வப்போது தனக்கு எது தெரியுமோ அது சரிதான் என சத்தியமாக பேசுகிறாகள்.
பெரும்பாலான வீடுகளில் T.V ரிமோட்டுக்கு உள்ள முக்கியத்துவம் உறவுகளுக்கு இல்லை.
சில பெண்களும் தன் பிள்ளை கம்ப்யூட்ட்ரில் கெட்டிக்காரன் என்று சொல்லவே பிரியப்படுகிறார்கள். இந்த பெண்களை அடையாளம் காண்பது மிக எளிது. நான் தான் அவனை துபாய்க்கு ஏத்திவிட்டேன் / அமெரிக்காவுக்கு ஏத்திவிட்டேன் என்று கூட்டமான இடங்களில் இவர்களின் அலப்பரைக்குகுறைவு இருக்காது.
பிள்ளைகள் கம்ப்யூட்டரில் என்னதான் பார்க்கிறார்கள் என்பதை கவனிக்க வீட்டின் நடுவிடத்தைலெயெ கம்ப்யூட்டர் மேசை இருந்த்தால் பிரச்சினை குறைவு.
விஞ்ஞானம் உங்கள் உறவுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும்போது கவனமாக இருக்க கடவது.
பெரும்பாலான குடும்ப பிரச்சினைகளை அன்பால் திருத்தி விடலாம். இது ஒன்றும் ஆசிரம ரேஞ்சுகான அறிவுரை அல்ல, நடைமுறையில் நாமாக போட்டுக்கொண்ட தேவையற்ற வேலியினால் வந்தது. பிள்ளைகளை டீன் ஏஜ் பருவங்களில் மரியாதை கருதி நாம் தூரமாகி விட்டோம்.
பிள்ளகளை வளர்ப்பது புத்தகத்தில் இல்லை…காலம் தரும் பாடம் அது.
posted by: ZAKIR HUSSAIN