Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அழுகை-ஓர் உணர்ச்சி வெளிப்பாடு!

Posted on April 12, 2010July 2, 2021 by admin

[ பெரும்பாலான கலாச்சாரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அழுவது ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஆண்கள் அழுவதை சமூகம் எளிதில் ஏற்பதில்லை.

மற்ற அழுகையின் போது சுரக்கும் கண்ணீரும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சுரக்கும் கண்ணீரும் ரசாயனக் கலவையில் மாறுபடுகின்றது.

அழுகை நமது கண்ணோட்டத்தை மறைத்து போராட்ட எண்ணத்தை முடக்கி விடுகிறது. மேலும் நமது அமைதி, தேவை மற்றும் அன்பை வெளிப்படுத்தும் கருவியாக பயன்படுகிறது.

வாழ்க்கை ஆயிரம் காரணங்களை நீங்கள் அழுவதற்காகத் தரும்போது, நீங்கள் புன்னகைக்க பல காரணங்களை வாழ்க்கைக்குக் கொடுங்கள்.]

அழுகை என்பது கண்களிலிருந்து நீரை சிந்தும் உணர்ச்சிவசப்பட்ட மனிதனின் ஒரு நிலை. அழுகை என்பது ஓர் உணர்ச்சி வெளிப்பாடு.

அழுகைச் செயல் பற்றி மேலும் கூறுகையில் ஒரு நுணுக்கமான செக்ரெடொமொடொர் செயல்பாடு காராணமாக லாக்ரிமல் சுரப்பியிலிருந்து கண்களை உறுத்தாத வகையில் கண்ணீர் சுரக்கிறது.


லாக்ரிமல் சுரப்பிக்கும் மனித மூளையின் உணர்வுகள் தொடர்புடைய பகுதிக்கும் நியூரான் இணைப்பு உள்ளது. சில விஞ்ஞானிகளின் வாததில் உள்ள போதும் வேறு எந்த ஒரு மிருகமும் உணர்ச்சியின் விளைவாக கண்ணீர் சிந்துவதில்லை.

சுமார் 300 நபருக்கு மேல் ஆய்வு செய்ததில் சராசரியாக ஆண் மாதம் ஒரு முறையும் பெண் மாதம் ஐந்து முறையும் அழுவதாக ஆய்வு எடுத்துக் காட்டுகிறது.

அதிலும் குறிப்பாக பெண்கள் மாதவிடாய் சமயத்திலும் அதற்கு முன்பும் குறிப்பிடும்படியான காரணம்(மன அழுத்தம் அல்லது துயரம் போன்று) இன்றி ஐந்து மடங்கு அதிகம் அழுகிறார்கள்.

பெரும்பாலான கலாச்சாரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அழுவது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஆண்கள் அழுவதை சமூகம் எளிதில் ஏற்பதில்லை.

மற்ற அழுகையின் போது சுரக்கும் கண்ணீரும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சுரக்கும் கண்ணீரும் ரசாயனக் கலவையில் மாறுபடுகின்றது.

உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சுரக்கும் கண்ணீரானது அதிக அளவில் ப்ரொலாக்டின், அட்ரெனொகொர்டிகொட்ரொபிக் ஹார்மோன், லியூஎன்கெப்கலின் போன்ற ஹார்மோன்களையும், பொட்டாஸியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற தனிமங்களையும் கொண்டுள்ளது.

எதனால் அழுகை வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அழுகையானது வலி போன்ற சாதாரண காரணங்களுக்காகவும், மற்றவர்கள் நாம் உதவி கேட்கும் போது வார்த்தைகளாலும் வார்த்தைகள் இன்றி சைகையால் நம்மை அவமானப்படுத்தும் போதும் வரும்.

மனிதர்களின் மன அழுத்த ஹார்மோன் அளவு அதிகமாகும் போது அதை அழிப்பதற்கு அழுகை பயன்படுகிறது. சமீபத்திய மனநலக் குறிப்புகள் அழுகைக்கும் இயலாமைக்கும் உள்ள தொடர்பை அழுத்தமாக தெளிவு படுத்துகிறது.

இந்த கோணத்தில் பார்க்கும் போது அடிமனதில் உள்ள இயலாமையின் அனுபவத்தால் மக்கள் அழுகிறார்கள் என்பது தெளிவாகிறது. எடுத்துக்காட்டாக மகிழ்ச்சியான செய்தி கேட்கும் போது சிலர் அழுவார்கள். ஏனெனில் நடக்கும் நிகழ்வு தனது கட்டுப்பாட்டில் இல்லை என்று நினைப்பார்கள்.

அழுகை நமது கண்ணோட்டத்தை மறைத்து போராட்ட எண்ணத்தை முடக்கி விடுகிறது. மேலும் நமது அமைதி, தேவை மற்றும் அன்பை வெளிப்படுத்தும் கருவியாக பயன்படுகிறது.

மருத்துவ ரீதியாக நம் நகைச்சுவைக்கும் கண்ணீருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப் படுகிறது. மேலும் அழுகை மூளையில் உள்ள அதிகப்படியான நகைச்சுவை உனர்வை அகற்றி மூளையை சுத்தப்படுத்த உதவுகிறது. வில்லியம் ஜேம்ஸ் என்பவர் எண்ணங்களின் பிரதிபலிப்பு காரணமாக உணர்வுகள் உடல் ரீதியாக வெளிப்படுகிறது. மன அழுத்தம் , எரிச்சல் போன்றவை பயம்,கோபமாக வெளிப்படுகிறது. அழுகை மற்றும் அதன் காரணமாக சுரக்கும் சளியானது ஒரு முடிவுக்கு வழி வகுக்கிறது.

குழந்தையின் அழுகை

பிறந்தவுடன் குழந்தை அழுகிறது. இதனால் அதற்கு உயிருள்ளது என்று அறிந்து கொள்கிறோம். அதன்பிறகு வரும் அழுகையினால் பசி, வலி போன்ற உணர்வுகளை தாய் புரிந்து கொள்கிறார். குழந்தையின் ஒரே மொழி அழுகையாயினும் அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி குழந்தையின் அழுகை இருக்காது.

சிசுவின் அழுகையை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது அடிப்படை அழுகை. இதில் அழுகையும் அமைதியும் மாறி மாறி வரும்.அழுகை, அமைதி, பின் ஒரு சிறிய வேகமான மூச்சிழுப்பு சத்தம். மீண்டும் அழுகை, அமைதி…

இந்த அழுகையின் முக்கியக் காரணம் பசி.

இரண்டாவதாக கோப அழுகை.

அடிப்படை அழுகையைப் போலவே இருக்கும்.

எனினும் அதிகக் காற்று பேச்சுக் குழாய் மூலமாக உள்ளிழுக்கப்படுவதால் அதிக சத்தமான திடீர் அழுகையாக இருக்கும்.

மூன்றாவது வலி அழுகை.மற்ற இரண்டைப் போல் இல்லாமல் அழுகைக்கு முன் ஒரு சிணுங்கல் அல்லது முனகல் இருக்கும்.

பெரும்பாலான பெரியவர்களால் குழந்தையின் அழுகைக்கான காரணத்தை உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான பெற்றோர்களால் தங்களது குழந்தையின் அழுகையை மற்ற குழந்தைகளின் அழுகையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலும்.

அழுகை கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலை நாடுகளான கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் குழந்தைகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் குழந்தைகளை விட அதிகம் அழுகின்றன.

கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியக் குழந்தைகள் உலகிலேயே அதிகம் அழுகின்றன.

ஆப்பிரிக்கக் குழந்தைகள் உலகிலேயே குறைவாக அழுகின்றன.

முதல் மூன்று மாதங்கள் அதிலும் ஐந்தாவது வாரம் உச்சகட்டமாக அழுவதுதான் காரணம்.

அழுகை, கலாச்சாரத்திற்கு ஏற்ப மாறுபடுவதன் காரணம் அறியப்படவில்லை.

சிலர் குழந்தைகளை கிள்ளி, அடித்து அதன் உடலுறுப்புகளை இம்சித்து அழ விட்டு வேடிக்கை பார்த்து ரசிப்பார்கள். இப்படிப்பட்டவர்களை குழந்தையின் அருகில் விடவே கூடாது.

வாழ்க்கை ஆயிரம் காரணங்களை நீங்கள் அழுவதற்காகத் தரும்போது,

நீங்கள் புன்னகைக்க பல காரணங்களை வாழ்க்கைக்குக் கொடுங்கள்.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

43 + = 52

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb