IIT- சாவலை சந்திக்க தாயாரகும் முஸ்லீம் மாணவர்கள் – முஸ்லீம் கல்வி நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மை .
ஐஐடி–யில் முஸ்லீம் மாணவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று TNTJ மாணவர் அணி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், துண்டு பிரசுரங்கள் மூலமும், பயிற்சி முகாம்களையும் நடத்தியது. இதன் பலனாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவ மாணவியர் B.Tech-கான ஐஐடி நுழைவு தேர்வை எழுத உள்ளனர். இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு கிழைமை (11/04/10) அன்று ஐஐடி நுழைவு தேர்வு இரண்டு கட்டங்களா (ஒரே நாளில்) நடைபெறுகின்றது. இதில் முஸ்லீம் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என அல்லாஹ்விடம் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.முஸ்லீம் கல்வி நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மை :
சென்னைக்கு அருகில் உள்ள கிரசென்ட் பொறியியல் கல்லூரி (தற்போதைய அப்துல் ரஹ்மான் நிகர் நிலை பல்கலைகழகம்) தனது கல்லூரியில் B.E/B.Tech சேருவதர்க்கான நுழைவு தேர்வை ஐஐடி நுழைவு தேர்வு நடைபெறும் நாளில் (11/04/10) நடத்துகின்றது.
ஐஐடி–க்கும் கிரெசென்ட் பொறியியல் கல்லூரிக்கும் விண்ணப்பம் செய்த முஸ்லீம் மாணவர்கள் பெறும் கவலையில் உள்ளனர். கிரெசென்ட் கல்லூரி முஸ்லீம் நடத்தும் கல்லூரி எனபதால் முஸ்லீம் மாணவர்கள் அதிகமாக விண்ணப்பிப்பார்கள்.
இந்த நிலையில் திடீரென ஐஐடி நுழைவு தேர்வு நடை பெறும் நாளில் கிரசென்ட் பொறியியல் கல்லூரி நுழைவு தேர்வு நடக்கும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்து இருப்பது அவர்களது சமுதாய அக்கரையின்மையை காட்டுகின்றது.
இது முஸ்லீம் மாணவர்களையும் பெற்றோர்களையும் அதிர்சியிலும் கவலையிலும் ஆழ்த்தி உள்ளது. தேர்வு எழுத தயாராகிக்கொண்டிருக்கும் நமது சமுதாய மாணவர்களுக்கு மன உலைசலையும் ஏற்படுத்தி உள்ளது. ஐஐடி– தேர்வு நடைபெறும் நாள் என்று தெரிந்துகொண்டே அதே நாளில் தேர்வு நடத்துவது கண்டனத்துக்குறியது, கண்டிக்கப்பட வேண்டியது.
திருந்துவார்களா?
சிறுபன்மை கல்வி நிறுவனம் என அரசிடம் இருந்து பல்வேறு சலுகைகளை பெற்றுகொண்டு, இப்படி சமுதாய அக்கையில்லாமல் நடப்பது மனிதாபிமானமற்ற செயல். பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் கொஞ்சம் சமுதாய நலனுக்காகவும் பணியாற்ற வேண்டும்.
தேர்வை ஒரு நாள் இரு நாள் தள்ளிவைப்பதால் கல்லூரிக்கு ஒன்றும் ஆகிவிடபோவதில்லை. கொஞ்சமாவது சமுதயா அக்கரையுடன் தேர்வு தேதியை தள்ளிவைப்பார்களா? திருந்துவார்களா?
S.சித்தீக்.M.Tech., TNTJ மாணவர் அணி
posted by; mzmalim@hotmail.com