Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது?

Posted on April 8, 2010 by admin

மயிலாடுதுறை டாக்டர்.M.A.ஹாரூன் MD(MA),D.ACU.Ph.D(Cey),MNSA(INDIA)

யுனானி – லேசர் அக்குபஞ்சர் சிறப்பு மருத்துவர்

[எந்த நேரம் கருத்தரிக்க நல்ல நேரம், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட அந்த நேரம் என்ன? நமது உடலில் பாலியல் ஹார்மோன்களின் இயக்கம், உயிரணுக்கள் உச்சத்தில் உள்ள நேரம் சரியான நேரத்தை அறிந்து செயல்பட்டால் தாம்பத்ய உறவின் மூலம் குழந்தை பாக்கியம் அடைவது சாத்தியமாகிறது.

குழந்தையில்லாதவர்கள் மாலை நேரத்தில் தாம்பத்ய உறவு கொண்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் மாலை நேரத்தில் தான் உயிரணுக்கள் உடலில் அதிக அளவில் உற்பத்தியாகும் என்கிறார் ஜீயர்ஜென் ஜீல்லி என்ற ஜெர்மன் விஞ்ஞானி.

குழந்தையில்லாத ஆண்–பெண் இருவர்களின் நாடிப் பரிசோதனை செய்து அந்த உறுப்பின் சக்தி ஓட்டத்தை சீரமைப்பு செய்வதன் மூலம் அந்த உறுப்புகள் நன்றாக இயங்கவைக்க முடியும். உதாரணமாக ஆண்களின் விந்தணுவில் குறைந்த எண்ணிக்கை உடையவர்களுக்கு அதிக உயிரணுக்கள் எண்ணிக்கை உயர்த்த முடியும்.

பெண் கருப்பை வளர்ச்சியின்மை, மாதவிடாய் கோளாறுகள், குர்ந்தை கருப்பையில் தங்காத நிலை, ஆண்மை குறைபாடு இப்படி அனைத்தையும் அக்கு பிரஷர் சிகிச்சை மூலம் (வலியில்லா சிகிச்சை) குணப்படுத்த முடியும்.]


குழந்தையின்மை என்பது ஆண் – பெண் இருவர்களில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ ஏற்படும் உடல் ரீதியான குறைபாடு ஆகும். குழந்தையில்லாதவர்கள் யுனானி, ஆங்கில மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம் இப்படி பல வகையான மருத்துவங்களை மேற்கொண்டு குழந்தை பாக்கியம் அடைகின்றனர். மனித உடலில் ஏற்படும் நோய்களும், குறைபாடுகளும், நமது உடலில் ஏற்படும் இரசாயன மாற்றமே என்கின்ற மேலே நான் குறிப்பிட்ட மருத்துவங்கள். இதன்படி மூலிகைகள் மற்றும் செயற்கை இரசாயனங்களை கொடுத்து குழந்தை பாக்கியம் அடைய செய்கின்றனர். வேறுமுறையில் அதாவது ஓரியண்டல் எனப்படும் தென்கிழக்காகிய

நாடுகளான சீனா, கொரியா, ஜப்பான் ஆகியவை நோய்களையும், குறைபாடுகளையும் நீக்க சக்தி மருத்துவம் மூலம் நமது உடலில் சக்தி ஓட்ட மாற்றங்களை சீரமைக்கும் வைத்திய முறைகளை கடைபிடித்து சாதனை படைத்துள்ளார். இதுவே அக்குபஞ்சர் – மற்றும் அக்குபிரஷர் என உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. பக்க விளைவுகளோ தீமையோ இந்த மருத்துவத்தில் சிறிதும் இல்லாதது தான் இதன் சிறப்பாக கருதப்படுகிறது.

அக்கு பஞ்சர் சிகிச்சை செய்யப்படும் போது நோயாளிக்கு வலியோ, துன்பமோ தெரியாது. ஏனெனில் மிக மெலிதான ஊசிகள் கண் இமைக்கும் நேரத்தில் செலுத்தப்படுகிறது. ஒரு சிறந்த அக்குபஞ்சர் நிபுணர் சிறிது கூட வலியை நீங்கள் உணராமல் செய்வதனாலேயே அந்த பெயரை பெற்றுள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது ஊசியே இல்லாமல் உங்கள் உடலில் குறிப்பிட்ட இடத்தில், உங்கள் கைகளாலேயே (விரல் மூலம்) அழுத்தம் – கொடுத்து சிகிச்சை செய்யும் முறையை சொல்லித்தர முடியும். இதன் பலனோ மிக அதிகம்.

உதாரணமாக பெண்களுக்கு குழந்தை பிறக்க தடையாக அமைவது, மாதவிடாய் கோளாறுகள், இதை அக்கு பிரஷர் முறை மூலம் நீங்களே குணப்படுத்திக் கொள்ளலாம். மாதவிலக்கு முன்பு ஏற்படும், தலைவலி, டென்ஷன், தூக்கமின்மை, கோபம் போன்றவைகளும், மாதவிடாயின் போது குறைந்தது அல்லது அதிகமாக ஏற்படும் இரத்த போக்கு கூட இவைகளை எளிமையாக உங்கள் கைவிரலால் மண்ணீரல் பகுதி, வயிறு பகுதி, முழங்கால் பகுதி ஆகியவற்றில் ஓடும் சக்தி நாளங்களை விரலால் அழுத்துவதன் மூலம் மேற்சொன்ன பிரச்சினைகள் குணமாகும் அக்குபஞ்சர் வைத்தியத்தின் தத்துவத்தின்படி பெண் இன உறுப்பு மற்றும் ஆண் இன உறுப்பில் ஏற்படும் போதிய சக்தி ஓட்டம் இல்லாமையே குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் என்று கூறுகிறது.

குழந்தையில்லாத ஆண்–பெண் இருவர்களின் நாடிப் பரிசோதனை செய்து அந்த உறுப்பின் சக்தி ஓட்டத்தை சீரமைப்பு செய்வதன் மூலம் அந்த உறுப்புகள் நன்றாக இயங்கவைக்க முடியும். உதாரணமாக ஆண்களின் விந்தணுவில் குறைந்த எண்ணிக்கை உடையவர்களுக்கு அதிக உயிரணுக்கள் எண்ணிக்கை உயர்த்த முடியும். பெண் கருப்பை வளர்ச்சியின்மை, மாதவிடாய் கோளாறுகள், குர்ந்தை கருப்பையில் தங்காத நிலை, ஆண்மை குறைபாடு இப்படி அனைத்தையும் அக்கு பிரஷர் சிகிச்சை மூலம் (வலியில்லா சிகிச்சை) குணப்படுத்த முடியும்.

அவரவர்களே தங்களின் சிகிச்சைகளை என்னிடம் கற்றுக் கொண்டு நேரிடையாக பயிற்சியை துவங்கிவிடலாம். பயிற்சியின் போது உடலில் இரசாயன சக்தியை அதிகரிக்கச் செய்ய பக்க விளைவுகள் இல்லாமல் குழந்தை பாக்கியம் உருவாக யுனானி மூலிகை மருந்துகள் மூன்று மாதத்திற்கு கொடுக்கப்படுகின்றன.

ஆண்களைப் பொருத்தவரை ஆண்மைக் குறைபாடு மிகப் பெரிய பிரச்சினை இவர்களுக்கு பெண்ணிஸ் பாயிண்ட், சிறுநீரக பாதை, ஈரல், மண்ணீரல், வயிறு இவற்றில் சக்தியூட்டும் புள்ளிகளை அக்கு பிரஷர் செய்வதன் மூலம் ஆண்மை சக்தியை மீண்டும் அடைய முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக நேரம் என்ற காலக்கடிகாரம் நம்மை இயக்குகிறது. இதை திருக்குர் ஆனில் இறைவன் துல்லியமாக கூறுகின்றான். ”நேரத்தின் பிடியில் உடல் நலம்” என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள ”திருக்குர் ஆன் இயற்கை மருத்துவம்” என்ற நூலில் மிக ஆழமாக விளக்கியிருக்கிறேன்.

எந்த நேரம் கருத்தரிக்க நல்ல நேரம், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட அந்த நேரம் என்ன? நமது உடலில் பாலியல் ஹார்மோன்களின் இயக்கம், உயிரணுக்கள் உச்சத்தில் உள்ள நேரம் சரியான நேரத்தை அறிந்து செயல்பட்டால் தாம்பத்ய உறவின் மூலம் குழந்தை பாக்கியம் அடைவது சாத்தியமாகிறது.

ஜெர்மன் நாட்டு நல்வாழ்வு இதழில் வெளியான தகவல் ஒன்றை உங்களுக்கு தருகிறேன். குழந்தையில்லாதவர்கள் மாலை நேரத்தில் தாம்பத்ய உறவு கொண்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் மாலை நேரத்தில் தான் உயிரணுக்கள் உடலில் அதிக அளவில் உற்பத்தியாகும் என்கிறார் ஜீயர்ஜென் ஜீல்லி என்ற ஜெர்மன் விஞ்ஞானி.

நமது நாட்டு நல்வாழ்வு இதழில் வெளியான தகவல் ஒன்றை உங்களுக்கு தருகிறேன். குழந்தையில்லாதவர்கள் மாலை நேரத்தில் தாம்பத்ய உறவு கொண்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் மாலை நேரத்தில் தான் உயிரணுக்கள் உடலில் அதிக அளவில் உற்பத்தியாகும் என்கிறார் ஜீயர்ஜென் ஜீல்லி என்ற ஜெர்மன் விஞ்ஞானி.

நமது உடலின் அத்தனை நடவடிக்கைகளும் ஒரு குறிப்பிட்ட காலத்தின் அடிப்படையில் தான் நிகழ்கின்றன. நாம் காலத்தைத்தான் நேரம் (TIME) என்கிறோம். ஒவ்வொரு செயலும் நேரத்தின் அடிப்படையில் தான் நிகழ்கிறது என்கிறது திருக்குர்ஆன்.

இந்த அறிவியல் கருத்துக்கள் இன்று மருத்துவ விஞ்ஞானிகளுக்கு மனித படைப்பை ஆய்வு செய்வதன் மூலம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இன்ஷா அல்லாஹ், குழந்தை பாக்கியத்தை கொடுப்பதில் இயற்கை மருத்துவ சிகிச்சைகள், சீனா, ஜப்பான், இந்தியா, தைவான் என்ற தென்கிழக்காகிய நாடுகளிலிருந்து பரவி உலக முழுவதும் இன்று அற்புத சிகிச்சையாக புகழ்பெற்று விளங்குகிறது.

மயிலாடுதுறை டாக்டர்.M.A.ஹாரூன் MD(MA) D.ACU. Ph.D (Cey) MNSA (INDIA)

ஆசிரியர்: திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம்

source: seasonsnidur.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb