அபூ இமான்
தலை விரித்தாடும் தகாத உறவுகள்!
பாதிரியார்களுக்கு போப் எச்சரிக்கை!
வாடிகன்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பாதிரியார்கள் அங்குள்ள சிறுவர்களுடன் தகாத உறவு வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து தேவாலய பாதிரியார்களுக்கும் இது குறித்த எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளதாக போப் பெனிடிக்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, அயர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களிடம் தகாத உறவு வைத்துக் கொள்வதாக நூற்றுக்கணக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், வாடிகன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட் வருத்தமடைந்துள்ளார்.
போப் பெனிடிக்ட் ஜெர்மனியில் பிறந்தவர். முனிச் நகர பிஷப்பாக 77ம் ஆண்டு முதல் 81ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். ஜெர்மனியில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் செக்ஸ் வைத்து கொண்டது தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண்பது குறித்து வாடிகன் நகரில் போப் பெனிடிக்ட் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.
சிறுவர்களிடம் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் வந்த தேவாலயங்களுக்கு அவர் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளார். இந்த கடிதம் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு கேட்பதாகவும், இந்த விஷயத்தால் ஏற்பட்ட மனபாதிப்பை சாந்தப்படுத்த உதவும் வகையில் அமையும் என்று கோடிட்டு காட்டினார்.
இதற்கிடையே அயர்லாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க தலைவர்கள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர். அயர்லாந்தில் தந்தை பிரன்டன் ஸ்மித் என்பவர் வெளிப்படையாக, ‘என்னால் பாதிக்கப்பட்டதாக கருதுபவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்‘ என்று கூறினார். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் மலை போல வந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெர்மன் சர்ச்சுகளில் உள்ள பாதிரியார்கள் மீதான சிறுவர் பாலியல் புகார்கள் ஏராளமாக வாடிகனில் வந்து குவிந்திருப்பதாகவும், அவற்றை பரிசீலிப்பதில் பத்து பேர் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விரத வாதமும் காம தாகமும்
விரத வாதத்தை வெளியில் பேசிக் கொண்டு காம தாகத்தை மனதில் நிறைத்து வாழும் மத குருமார்கள், காம தாகம் தீர்க்க நடத்தும் சுழி ஓட்ட செய்திகள் காலம்காலமாய் வெளி வந்துகொண்டுதான் இருக்கின்றன.
மாட்டிக் கொண்டவர்களை கேடுகெட்டவர்களாகவும் மாட்டதவர்களை மகான்களாகவும் மதிக்கும் சூழலிளிருந்து மக்கள் மீண்டதாகத் தெரியவில்லை.
இந்த நாட்டு நடப்புக்களில் இருந்து மனிதன் படிக்க வேண்டிய பாடங்கள், தன்னை நோக்கியே கேட்க வேண்டிய கேள்விகள் எத்தனையோ இருக்கின்றன.
மனிதன் தான் தோன்றியல்ல. சமயவாதிகளின் பார்வையில் இறைவனின் படைப்பு.
எதையும் வீனுக்கும் விளையாட்டுக்கும் படைப்பவனல்ல இறைவன். மனிதனில் எந்த உறுப்பும் உணர்வும் வீணுக்கு இறைவனால் படிக்கப்பட்டிருக்க மாட்டாது.
கடவுளை நம்புபவன் முதலில் இதை நம்ப வேண்டும்.
மனிதன் தன் உறுப்புக்களையும் உணர்வுகளையும் ஒழுங்குபடுத்தி வாழ வேண்டும்.
ஆனால் அதை, அதன் இயற்க்கை பணிகளை செய்யாமல் கட்டுப்படுத்தி வாழக் கூடாது.
அப்படி வாழவும் முடியாது. அப்படி வாழ முடியும் என்ற போதனைகள் போலியானவைகள் என்பதைதான் தலைவிரித்தாடும் இத் தகாத உறவுகள் உணர்த்துகின்றன.
பசி வந்தால் சிறிது காலம் கட்டுப்படுத்தலாம் ஆனால் புசித்தாக வேண்டும்.
அது இயற்க்கை. தவிர்க்க முடியாது. அப்படி முடியும் என்பவன் முட்டாள். விதண்டாவாதி.
பிரம்மச்சாரியம் என்பது ஆன்மீக வெற்றியை ஈட்டித் தரும் என்ற இந்துத்துவ, கிறிஸ்த்துவ வாதங்கள் (அதன் வேதங்களில் இருக்குமானால் அது) போலியானதாகும்.
இயற்க்கைக்கு எதிரான வாதமுமாகும்.
இறைவனின் படைப்புக்கள் அத்தனையும் அற்புதமானவைகள். தத்ரூபமானவைகள். அதில்
ஆண் பெண் என்று அனைத்தையும் ஜோடிகளாக படித்திருப்பதன் தத்துவத்தை படிக்காதவனும், பகுத்தரியாதவனும் உண்மை இறை பக்தனாக இருக்க முடியாது.
இறை நேசர்கள் என்ற போர்வையில் இச்சை தாசர்கள் தோன்றுவதை தடுக்க:
மனிதர்கள் மனிதர்களை வணங்குவதை விடுத்து இறைவனை வணங்க வேண்டும்,
தான் தோன்றா மனிதன், தான்தோன்றித் தனமாக வழாது.
படைத்தவன் விதித்த பிரகாரம்தான் வாழ வேண்டும்.
மனதில் பட்டத்தை பட்டென்று எழுதி விட்டேன்.
பிழைகள் இருந்தால் தொட்டுக் காட்டுங்கள் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.