யாசர் அரஃபாத்
அன்பைப் போதித்த
அழகிய மார்க்கத்திற்க்கு
அடையாளமிட்டுள்ளது
அயல் நாடுகள்
தீவிரவாதம் என்று!!
மூலைக்கு மூலை துரத்தி அடிக்கப்பட்டாலும்
மூலதனமாய் எங்களிடம் உள்ளது
ஒன்றே ஒன்றுதான்;
ஒரிறைக்கொள்கைதான்!!
அணைத்துவிடலாம் என்றெண்ணி
ஊதியவருக்கெல்லாம்
பேரிடியாக;
அமுங்கி இருந்த
கங்குகள் இப்போதுதான்
சூடு பிடிக்கத்துடங்கி உள்ளதை எண்ணி!!
ஒழிப்பதற்க்கு முன்
ஒன்றுபடு !
உறங்கியதுப் போதும்
உயர்திப் பிடிப்பதற்கு வா
கொள்கையை!!
குனிந்து குனிந்து
குப்புற வீழ்ந்ததும் போதும்;
இனி
சீண்டிப்பார்க்கும் தருதலையை
தட்டிவைப்போம்;
தலையில் குட்டு வைப்போம்!!
வரலாறும் மங்கியது.
தகராறுதான் பெருகியது;
வித்திட்ட விஷமிகளுக்கு
மாற்று மருந்தொன்று உண்டு;
மார்க்கம் சொன்ன போதனைகளைக் கொண்டு!!
வன்முறை இல்லை
வரைமுறை உண்டு;
கர்வம் இல்லை;
கருணை உண்டு;
மொத்தத்தில்
சுவர்க்கம் உண்டு
மறுமையில் சோதனை இல்லை!! (இன்ஷா அல்லாஹ்)