Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சூடான கோடைக்கு குளிர்ச்சியான தர்பூசணி

Posted on April 2, 2010 by admin

[ 100 டிகிரி வெப்பத்தைத்தாண்டி கோடைக்காலம் மக்களை வாட்டி எடுக்கும் இந்நேரத்தில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு குளு குளு பழம் சந்தேகமில்லாமல் தர்பூசணிதான் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

இதில் ஆச்சர்யமான விஷயம் ஒன்று உண்டு என்றால் அது; நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரிவித்துள்ளதுதான்.

ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக்கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.]

தர்பூசணிக்கு என்ன சிறப்பு?

தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தவர் எல்லாம், ‘ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே…!” என்று அங்கலாய்க்கும் தகவல் இது.

அதாவது, தர்பூசணி பழம் ஓர் இயற்கையான ‘வயாக்ரா‘ என்பது தான்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர், இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதன்படி, தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ – நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.

இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.

அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை‘ அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்‘ என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்‘, `அர்ஜினைனாக‘ எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.

வெள்ளை பகுதியில்தான்…

இந்த சிட்ரூலின்–அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.

இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.

தர்பூசணியின் பயன்கள்:

கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்.

பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.

சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.

மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.

விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.

கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்.

மிகச்சிறந்த விட்டமின் C யும் விட்டமின் A (ஒரு துண்டு பழத்தில் 14.59 மில்லி கிராம் விட்டமின் C மற்றும் 556.32 IU of விட்டமின் A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு விட்டமின் B6 ம் விட்டமின் B1 ம், கனியுப்புக்களான பொட்டாஷியம் மற்றும் மக்னீஷியமும் உண்டு.

பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.

சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.

மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.

விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.

வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள்.

இந்த தர்பூசணி பற்றி சுவையான தகவல் ஒன்று:

ஜப்பானில் சில்லறைக்கடைகளும், பழங்கள் விற்பனை செய்யும் கடைகளும் ஒரு பிரச்சினையைச் சந்தித்தன.அவர்களது கடைகள் மிகப்பெரியதாக இல்லை.ஆகவே கடையிலிருக்கும் சிறிய இடமும் வீணாகக் கூடாது எனக் கருதினர்.

தர்ப்பூசணிப் பழங்கள் பெரிய உருளைவடிவானவை.வாடிக்கையாளர்களால் அதிகளவில் விரும்பி வாங்கப்படுபவை.ஆனால் கடைகளில் மிகப்பெரும் இடத்தை அவை அடைத்துக்கொண்டன.

இதனால் விவசாயிகளிடமிருந்து கடைச் சொந்தக்காரர்களால் அவை வாங்கப்படும் வீதம் குறைந்தது.

எனவே விவசாயிகள் ஒன்று கூடிச் சிந்திக்கத் தொடங்கினர்.தர்ப்பூசணிகளை பெட்டி வடிவில் வளர்த்தெடுப்பதைப் பற்றி கலந்தாலோசித்தனர்.அதன் முடிவில் தர்ப்பூசணிகள் சிறிதாக இருக்கும்போதே பெட்டியில் அடைக்கப்படுமிடத்து அது பெரிதாகும் போது பெட்டி வடிவிலேயே இருக்குமெனக் கண்டறிந்தனர்.

அதன்படியே காய்களை உருவாக்கத்தொடங்கினர்.கடையிலும்,வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியிலும் பெரும் இடத்தை அடைக்காத காரணத்தால் கடைக்காரர்களாலும்,வாடிக்கையாளர்களாலும் விரும்பி வாங்கப்பட்டன அப்பெட்டி வடிவக் காய்கள்.

சில்லறை விற்பனையில் அதிக விலை

சென்னை: கோடைகாலம் துவங்கவுள்ள நிலையில் தர்பூசணி வரத்து சென்னைக்கு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மொத்த விற்பனையில் தர்பூசணி விலை குறைந்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் அதிக விலையில் விற்கப்படுகிறது.

கோடைகாலம் துவங்குவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் சென்னையில் வெயிலின் தாக்கம் பகல் நேரங்களில் கடுமையாகவுள்ளது. வெயிலை சமாளிப்பதற்காக பழரசம், குளிர்பானம், இளநீர் ஆகியவற்றை பருகி வருகின்றனர். நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் கோடை தாகத்தை தீர்ப்பது தர்பூசணி.

தர்பூசணி வரத்து சென்னைக்கு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள் தோறும் 15 லாரிகள் மூலம் 150 டன்களுக்கு மேல் விற்பனைக்கு எடுத்துவரப்படுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் சென்று மொத்த விலையில் அவற்றை வாங்கிச் சென்று, விற்பனை செய்து வருகின்றனர்.

கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில் ஒரு டன் தர்பூசணி 6,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு இதே நாட்களில் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி 5 முதல் 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அவற்றை வாங்கி செல்லும் வியாபாரிகள் ஒரு கிலோ தர்பூசணியை 10 முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

உலகிலேயே விலை அதிகம் 2.5 லட்சத்துக்கு கறுப்பு தர்பூசணி ஏலம்

ஒரே ஒரு தர்பூசணி பழத்தை எவ்வளவு விலை கொடுத்து வாங்குவீர்கள்? ம்…ம்.. அதிகபட்சமாக 50 ரூபாய். ஆனால் ஜப்பானில் ஒரே ஒரு தர்பூசணி ரூ.2.5 லட்சத்துக்கு ஏலம் போய் உள்ளது.

டென்சுகே என்ற கறுப்பு நிற தர்பூசணி ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் மட்டும்தான் விளைகிறது. அதற்கு நல்ல மவுசு இருந்து வருகிறது. ஜப்பானில் பரிசுப் பொருட்களாக கூட தர்பூசணி தரப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் முதல் முறையாக 65 கறுப்பு நிற தர்பூசணி விற்பனைக்கு வந்துள்ளது. அதில் ஒன்றுதான் இது. முதல் முறையாக விற்பனைக்கு வருவதை ஏலம் விடுவது ஜப்பானில் வழக்கம். அதை ஏலம் எடுப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.

இந்தாண்டு ஏலம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. அதில் ஒரு கறுப்பு டென்சுகே தர்பூசணி ரூ.2.5 லட்சத்துக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது. இதுவரை நடந்த கறுப்பு தர்பூசணி ஏலங்களில் இதுதான் அதிகபட்சம். மேலும் ஒரே ஒரு கறுப்பு தர்பூசணி இந்த அளவு விலை போயுள்ளது உலகில் வேறெங்கும் இல்லை எனவும் கருதப்படுகிறது.

கடல் உணவுகளை வியாபாரம் செய்யும் ஒருவர் இந்த விலை கொடுத்து தர்பூசணியை வாங்கியுள்ளார். இதற்கு காரணம் தர்பூசணி மீது உள்ள காதல் அல்ல. உள்ளூர் விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்.

இந்த தர்பூசணி 7.7 கிலோ எடை உள்ளது. ஏப்ரல், மே மாத காலநிலை காரணமாக இதில் இனிப்பு அதிகமாக இருக்கிறதாம்.

பிற வகை தர்பூசணிகள் விலை இன்னும் அதிகமாக இருக்கிறது. கடந்த மாதத்தில் யுபாரி வகையை சேர்ந்த இரண்டு தர்பூசணிகள் ரூ.96 லட்சத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

 

தர்பூசணி பழத்தின் சிறப்பைப்பற்றிய கவிதை ஒன்றை பார்ப்போமா!

மனிதனுக்கும் பழத்துக்கும்

ரத்த உறவுகள்,

சத்து உறவுகள், என

உறவாட உரிமைவுண்டு!

இந்த தர்பூசணிக்கும்

பங்குவுண்டு!

சிட்ருலின் என்னும்,

சத்து பொருள்

இருப்பதைக் கண்டு ,

உண்டால் பலன்வுண்டு!

தர்பூசணி உண்டால்

சிட்ருலின்

வேதியல் பொருளாய்

அர்ஜினைன் மாறும்.

தன் வேலை செய்யும்.

ரத்தத்தோடு கலந்து

நம் உறுப்புகளை

சுறுசுறுப்பு தந்திடும்.

இன்னும் தர்பூசணி

சுவைத் தந்திடும்

தர்பூசணி வெள்ளை

பகுதியோ

ஆண்மைக்கு அழகு

சேர்க்கும்!

தர்பூசணியை…

ருசித்துப் பார்த்தால்

உடலும் அறிந்திடும்!

உண்மை புரிந்திடும்!

 www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

81 − = 77

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb