பழைய சூழ்ச்சி புதிய வடிவில்!
[ கட்டுக்கதை என்பது கடவுள்களைப் பற்றிய மூடநம்பிக்கைகளையும், கதாநாயகர்களின் அற்புதங்களையும் உள்ளடக்கிய பழைய கதையாகும். அது மூடநம்பிக்கைகள் நிறைந்த கற்பனை சம்பவங்களைப் பற்றி பேசும்.
குர்ஆன் அதற்கு எதிரான எல்லா சதித்திட்டங்களையும் விஞ்சி நிற்கிறது என்பது அதன் தனித்தன்மையாகும். இந்த இறைவேதம் இவை போன்ற தனித்தன்மைகளையும் இயல்பாகவே மனிதனைக் கவரக்கூடியதாகவும் இருக்கிறது. அது இவ்வுலகின் தீய சக்திகள் தீட்டுகிற திட்டங்களை வென்றுவிடக்கூடியது.
யூதர்களின் சதித்திட்டங்களையும் கிருத்தவர்களின் சதித்திட்டங்களையும் அகில உலக அனைத்து சக்திகளையும் எவ்விடத்திலும் எல்லா நேரத்திலும் வெல்லும் திறனை இது பெற்றுள்ளது.]
பழைய சூழ்ச்சி புதிய வடிவில்
“அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், ‘நாம் நிச்சயமாக இவற்றை முன்னரே கேட்டிருக்கின்றோம், நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லி விடுவோம். இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை’ என்று சொல்கிறார்கள். (அல்குர்ஆன் 8:31)
“லாஇலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்பதை உறுதியாக நம்புவதாக சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறோமே, அதன் பொருள் என்ன?
“வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்” என்று உறுதியாக நம்புவதாக உறுதிமொழி எடுத்திருக்கின்றோமே, அதற்கு என்ன பொருள்?
“இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதே, ஒரு முஸ்லிமின் அரச நம்பிக்கையாக இருக்க வேண்டும்” என்பதே அதன் பொருளாகும்.
ஓர் உண்மையான முஸ்லிம் மனித சட்டங்களை ஏற்றுக்கொள்ள மாட்டான். அவன் இறைச்சட்டங்களையே செயல் படுத்துவான்.
இதுதான் குரைஷிப் பெரியார்களை மிகவும் கவலைப்படச் செய்தது.
இதுதான் திருக்குர்ஆன் ஏற்படுத்திய மாபெரும் மாற்றங்களை தடுக்க அவர்களை முயற்சிக்கவும் செய்தது.
குர்ஆனைப் போன்ற ஒன்றை அவர்களால் தயாரிக்க முடியும் என்று சொன்னதுதான் அவர்களது முயற்சிகளில் ஒன்றாகும். ஏனெனில் ‘குர்ஆன் முன்னோர்களின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை’ என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.
கட்டுக்கதை என்பது கடவுள்களைப் பற்றிய மூடநம்பிக்கைகளையும், கதாநாயகர்களின் அற்புதங்களையும் உள்ளடக்கிய பழைய கதையாகும். அது மூடநம்பிக்கைகள் நிறைந்த கற்பனை சம்பவங்களைப் பற்றி பேசும்.
அந்த குரைஷிப் பெரியவர்கள், குர்ஆனில் சொல்லப்பட்டு இருக்கிற முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் பற்றியும், அவர்களுக்கு காட்டப்பட்ட அதிசயங்கள் பற்றியும், இறைவன் எவ்வாறு காபிர்களை அழித்து, முஸ்லிம்களை பாதுகாத்தான் என்பதைப் பற்றியும் அடிக்கடி பேசிக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தனர்.
இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாம் முன்னோர்களின் கட்டுக்கதைகளே என்று அவர்கள் மக்களிடத்தில் அடிக்கடி சொல்லக் கூடியவர்களாகவும் இருந்தனர். முஹம்மது இவற்றை உங்களிடம் வந்து சொல்வதற்காக தாமே அவற்றை எழுதி வைத்துக் கொண்டு, இறைவனிடமிருந்து அருளப்படுவதாக பொய் சொல்லிக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தனர்.
அன்னத்ர் இபுன் அல்ஹரித் என்பவன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தனது பேச்சை முடித்ததும் அவர்களின் இடத்தை பிடித்துக் கொள்வான். அவன் எப்போதும் எங்கே மக்கள் கூட்டம் அதிகம் இருக்கிறதோ அங்கே உட்கார்ந்து கொண்டு, அவன் ஈரான் சென்றிருந்த போது கற்ற கட்டுக்கதைகளையும் பழங்கதைகளையும் சொல்லிக் கொண்டு இருப்பான்.
பிறகு அவன் அதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களிடம் சொல்வான், ‘இந்தப் பழங்கதைகள் எல்லாம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சொல்கிற கட்டுக்கதைகளைப் போன்றவைதான், நான் அவரைப் போன்று கட்டுக்கதைகளைச் சொல்வதால் நான் ஒரு அல்லாஹ்வின் தூதர் என்றோ, எனக்கு வஹீ வருகின்றது என்றோ சொல்லவில்லையே, இவைகள் எல்லாம் அவைகளைப் போன்ற கட்டுக்கதை பழங்கதைகளே’.
இந்த விஷயங்கள் ஆரம்ப நேரத்தில் மக்களை தடுமாறச் செய்தன. முன்பு, இவனது கட்டுக்கதைகளுக்கும் குர்ஆனுக்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாக மக்களால் பார்க்கப்பட வில்லை என்பதை மறுக்க முடியாது.
இதனாலேயே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப் போருக்கு முன்பு, அன்னத்ர் இப்னு அல்ஹரித் கொல்லப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்கள் என்று புரிந்து கொள்கிறோம். பிறகு அவன் சிறைப்பிடிக்கப்பட்ட பொழுது அவனோடு சில கைதிகள் இருந்தும் அவனுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுமாறு கட்டளை இட்டார்கள். அவனுக்காக எந்த ஈட்டுப் பணத்தையும் பெற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மறுத்து விட்டார்கள்.
இந்த விஷயங்கள் மக்காவில் அதிக நாட்கள் நீடித்திருக்க வில்லை. இவைகள் சதித்திட்டங்களாகவே பார்க்கப்பட்டன. குர்ஆன் அதனுடைய பகுத்தறிவை வெல்லக்கூடிய தன்மையோடும், மனிதனின் இயல்புக்குள் ஊடுருவக்கூடிய ஆழ்ந்த உண்மைகளோடும், அது எப்படிப்பட்ட கட்டுக்கதைகளையும் எளிதில் தோற்கடித்து விடும். அவர்களின் எந்த சதியும் குர்ஆனை தடுக்க சக்தி பெறவில்லை.
அதனால் குரைஷிப் பெரியவர்கள் கதிகலங்கினார்கள், அவர்களைப் பின் பற்றுகிறவர்களை எல்லாம் அழைத்துச் சொன்னார்கள்: ‘இந்தக் குர்ஆனை செவிமடுக்காதீர்கள், அது உங்கள் காதுகளில் விழாதிருப்பதற்க்காக சிரியுங்கள், கூச்சல் போடுங்கள், அப்படிச் செய்தால் தான் உங்கள் கை ஓங்கி இருக்கும்’.
ஆனால் அவர்களின் தலைவர்களான அபூசுப்யான், அபூஜஹல், அல் அக்னாஸ் இபுனு சுரைக் போன்றோர்கள் இரவில் ரகசியமாக, ஒருவர் மற்றவருக்கு தெரியாமல் குர்ஆனை செவிமடுக்க சென்று கொண்டிருந்தனர். அவர்களில் எவரும் இரவு தோறும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் ஓதுதலை கேட்கச் செல்வதிலிருந்து அவர்களாகவே தவிர்ந்து கொள்ள வில்லை. ஒவ்வொருவரும் தங்களை தனியாகவே இருப்பதாகவே நினைத்துக் கொண்டார்கள். ஒருவர் மற்றவரை பார்த்து விட்ட பிறகு, திரும்பவும் அவ்வாறு செய்யாதிருக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இவர்களை மற்ற இளைஞர்கள் பார்த்து விட்டால், அவர்களும் குர்ஆனை செவிமடுப்பார்கள், பின்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விடுவார்களோ! என்று அப்பெரியார்கள் பயந்தார்கள்.
குர்ஆனை விட்டும் மக்களை தூரமாக்குவதற்க்காக, தன் கதைகளின் பக்கம் அவர்களது கவனத்தை திருப்ப முயன்ற அன்னத்ரின் முயற்சி, இவ்வகையான முயற்சிகளின் கடைசியானது அல்ல. அதுவே பலவகையான வடிவத்திலும், அமைப்பிலும் திரும்பத் திரும்ப செய்யப்பட்டது. அதுவே திரும்பத் திரும்ப தொடரவும் செய்யும். இஸ்லாத்தின் விரோதிகள் குர்ஆனை விட்டும் மக்களைத் தூரமாக்குவத்ற்காக எப்போதும் முயற்சித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.
ஆனால் அவர்களின் சதித்திட்டம் தோல்வியில் முடிந்து விட்டதை அவர்களால் உணர்ந்து கொண்ட பொழுது, பாட்டாக பாடி ரசிகர்களை மதிமயக்கக் கூடிய மந்திரங்களாக குர்ஆனை தாழ்த்தி விட்டார்கள். தாயத்துக்களில் அடைக்கவும், நூல்களில் ஓதி முடியவும் அவர்கள் குர்ஆனை பயன்படுத்தினார்கள், அவற்றை மக்கள் கைகளிலும் இடுப்பிலும் கட்டிக்கொள்கிறார்கள், சட்டைப்பைகளில் போட்டுக் கொள்கிறார்கள், தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்கிறார்கள்.
மக்கள் அவ்வாறு செய்யும் போது, அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று கற்பனை செய்து கொள்கிறார்கள், அதன் மூலம் அவர்கள் குர்ஆனுக்கு செய்ய வேண்டிய மரியாதையை செலுத்தி விட்டதாகவும் நினைத்துக் கொள்கிறார்கள்.
குர்ஆன் மனித வாழ்வின் வழிகாட்டியாக நீடித்திருக்க வில்லை. மார்க்கத்தின் எதிரிகள் குர்ஆனுக்கு பதிலாக, அன்றாட வாழ்க்கையின் அத்தனை விஷயங்களிலும் பின்பற்றுவதற்க்கு உருப்படி இல்லாத வேறொன்றை கொடுத்து விட்டார்கள்.
உண்மையாக, அதிலிருந்து தான் மக்கள் அவர்களுடைய கொள்கைகளையும், சட்டங்களையும், அன்றாட வாழ்க்கை வழிமுறைகளையும் மதிப்பற்ற மாற்றுக்களில் இருந்து பெறுகின்றனர்.
அந்த விரோதிகள் மக்களிடம் சொன்னார்கள், ‘மார்க்கம் ஒரு மதிப்பு மிக்க இடத்தைப் பிடித்து விட்டது, குர்ஆன் என்றைக்கும் மாறாது. அது காலையிலும் மாலையிலும் எல்லா நேரங்களிலும் படிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட ஓதுதலை நீங்கள் செவிமடுக்கலாம். இன்னும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். குர்ஆன் இதை விட அதிகமாக உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? உங்களுடைய கொள்கைகள், வாழ்க்கை வழிமுறைகள், சட்டங்கள், அரசியல், மதிப்பு, தரம் ஆகியவற்றில் நீங்கள் எதை வேண்டுமானாலும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம், அது தான் எல்லாவற்றையும விட உயர்ந்தது’.
இது அன்னத்ர் இப்னு அல்ஹரிதின் சதித்திட்டம் போன்றது தான். இது நவீன வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பொருந்தக் கூடிய அளவுக்கு மிகவும் எளிதாக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக இது எத்தனையோ வகையான சதித்திட்டங்களில் இதுவும் ஒன்று. இதனுடைய வரலாறு முழுக்க, இந்த மார்க்கத்திற்க்கு எதிராக திட்டம் தீட்டுகிற எதிரிகளுக்கு பஞ்சம் இல்லை.
குர்ஆன் அதற்கு எதிரான எல்லா சதித்திட்டங்களையும் விஞ்சி நிற்கிறது என்பது அதன் தனித்தன்மையாகும். இந்த இறைவேதம் இவை போன்ற தனித்தன்மைகளையும் இயல்பாகவே மனிதனைக் கவரக்கூடியதாகவும் இருக்கிறது. அது இவ்வுலகின் தீய சக்திகள் தீட்டுகிற திட்டங்களை வென்றுவிடக்கூடியது.
யூதர்களின் சதித்திட்டங்களையும் கிருத்தவர்களின் சதித்திட்டங்களையும் அகில உலக அனைத்து சக்திகளையும் எவ்விடத்திலும் எல்லா நேரத்திலும் வெல்லும் திறனை இது பெற்றுள்ளது.
இந்த வேதம் உலகெங்கும் உள்ள அதனுடைய எதிரிகளை தொடர்ந்து நசுக்கிக் கொண்டே இருக்கிறது.
இது எல்லா வானொலி நிலையங்களிலும் உலக முஸ்லிம்களுக்காக அதற்கென ஒரு இடத்தை ஒதுக்குமாறு வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. யூத கிருத்தவ ரேடியோ நிலையங்களிலும், தங்களை முஸ்லிம்கள் எனப் பிரகடனப்படுத்துகிற அவர்களின் கைக்கூலிகளிடம் உள்ள நிலையங்களிலும் குர்ஆன் ஒலிபரப்பப்படுவதை நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
தாயத்துக்களாக, மந்திரித்த கயிறுகளாக மந்திரங்களாக முஸ்லிம் மக்களிடம் குர்ஆனை குறைத்து விட்ட பிறகே, அதை ஒலிபரப்ப ஆரம்பித்தார்கள் என்பது உண்மையே.
முஸ்லிம்களின் மனதை விட்டு குர்ஆனை அப்புறப்படுத்தியதிலும் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள், அதனால் தான் அது முஸ்லிம்களின் வாழ்க்கை வழிகாட்டியாக நீடிக்கவில்லை. அவர்கள் குர்ஆனுக்கு பதிலாக மாற்று விஷயங்களை கொடுத்து விட்டார்கள். இருப்பினும் இந்த வேதம் எல்லா சதித்திட்டங்களுக்கும் மாற்றமாக அத்தனை மாறுதல்களையும் நிகழ்த்திக் கொண்டு தான் இருக்கிறது. அது அவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கும்.
குர்ஆனை தனது வாழ்க்கை வழிகாட்டியாக ஆக்கிக் கொண்ட, குர்ஆனுக்கு அதன் சரியான மதிப்பை வழங்குகிற முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து இருந்து கொண்டும் இருக்கும்.
இந்த சமுதாயம் இறைவனின் வெற்றிவாக்கை நிறைவேற்றக் காத்துக் கொண்டிருக்கிறது. அப்போது தான் அவர்கள் இஸ்லாத்தை – அதன் ஆட்சியை இப்பூமியில் திரும்பப் பெற முடியும். அது முன்பு ஒரு முறை நடந்தது. முஸ்லிம் சமுதாயம் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதற்க்கும் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதற்க்கும் மாற்றமாக அது மீண்டும் உறுதியாக நடந்தே தீரும். இன்ஷா அல்லாஹ்..