[ முதல் முறை குஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திரமோடி விசாரணை குழு ஒன்றின் முன்பாக ஆஜராவது இதுவே முதல் முறையாகும். அதேபோல் கலவரத்தில் பலர் கொல்லப்பட்ட கிரிமினல் குற்ற புகார் தொடர்பான விசாரணை குழு முன்பு முதல்மந்திரி ஆஜராவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரிடம் கேட்கப்பட்ட 68 கேள்விகளில், 62 கேள்விகளுக்கு மோடி பதில் அளித்ததாக தெரிகிறது.
முஸ்லிம் இன சுத்திகரிப்பு நடத்திய பயங்கரவாதிகள் தங்களுக்கு மோடியின் பரிபூரண ஒத்துழைப்பு இருந்தது என்பதை ஏற்கனவே பலமுறை பகிரங்கமாக சொல்லியுள்ளனர். ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை’ என்பதைப்போல மோடிதான் முஸ்லிம்களின் ரத்தம் உறிஞ்சிய காட்டேரி என்பது நாடறிந்த உண்மை.]
பல்வேறு மதத்தவர், இனத்தவர் சூழ வாழ்ந்துவரும் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை அகில உலகமும் காரி உமிழும் வண்ணம், ஒரு மாநில முதல்வரின் மதவெறி ஆசியோடு நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை எத்துனை ஆண்டுகளானாலும் மனிதநேயம் உள்ள எவராலும் மறக்கமுடியாது.
அத்தகைய ஆறா ரணத்தை ஏற்படுத்திய குஜராத் கலவர வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு நியமித்த விசாரணை குழு முன்பு முதல்மந்திரி நரேந்திரமோடி ஆஜர் ஆனார். அவரிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது. அதிகாரிகள் சரமாரியாக கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
குழுகுல்பர்க் சொசைட்டி பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. எஷன் ஜாப்ரி உள்பட 69 பேர் பலியானார்கள். இந்த படுகொலைக்கு காரணமாக இருந்ததாகவும், கலவரத்தை தூண்டியதாகவும், நரேந்திரமோடி மற்றும் மந்திரிகள் அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
கலவரத்தில் பலியான காங்கிரஸ் எம்.பி.யின் மனைவி ஜகியா ஜாப்ரி தொடர்ந்த இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்காக, சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. முதல்மந்திரி நரேந்திர மோடிக்கு கடந்த 21ந்தேதி அன்று இந்த விசாரணை குழு முன்பு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது., நரேந்திரமோடி விசாரணை குழு முன்பு ஆஜராகவில்லை. குறிப்பிட்ட அந்த தேதியில் ஆஜராகும்படி தனக்கு விசாரணைக்குழு சம்மன் அனுப்பவில்லை என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில், காந்திநகர் பழைய தலைமை செயலக வளாகத்தில் செயல்பட்டுவரும் விசாரணை குழு முன்பு நரேந்திரமோடி நேற்று மதியம் ஆஜர் ஆனார். சி.பி.ஐ. முன்னாள் டி.ஐ.ஜி. ஏ.கே.மல்கோத்ரா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மோடியை சரமாரி கேள்விகளால் துளைத்தெடுத்தனர். மதியத்தில் இருந்து மாலை 5.30 மணி வரை ஏறத்தாழ 5 மணி நேரம் மோடியிடம் அவர்கள் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.
அவரிடம் கேட்கப்பட்ட 68 கேள்விகளில், 62 கேள்விகளுக்கு மோடி பதில் அளித்ததாக தெரிகிறது. இரவு 9 மணிக்கு விசாரணை குழு முன்பு நரேந்திர மோடி மீண்டும் ஆஜர் ஆனார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு மோடி பதில் அளித்தார். 11 மணிக்கு பிறகும் மோடியிடம் விசாரணை நீடித்தது.
மொத்தம் 7 மணி நேரத்துக்கும் மேலாக நேற்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். முதல் முறைகுஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திரமோடி விசாரணை குழு ஒன்றின் முன்பாக ஆஜராவது இதுவே முதல் முறையாகும். அதேபோல் கலவரத்தில் பலர் கொல்லப்பட்ட கிரிமினல் குற்ற புகார் தொடர்பான விசாரணை குழு முன்பு முதல்மந்திரி ஆஜராவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் இன சுத்திகரிப்பு நடத்திய பயங்கரவாதிகள் தங்களுக்கு மோடியின் பரிபூரண ஒத்துழைப்பு இருந்தது என்பதை ஏற்கனவே பலமுறை பகிரங்கமாக சொல்லியுள்ளனர். ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை’ என்பதைப்போல மோடிதான் முஸ்லிம்களின் ரத்தம் உறிஞ்சிய காட்டேரி என்பது நாடறிந்த உண்மை.
விசாரணையில் மோடியே குற்றத்தை ஒத்துக்கொண்டாலும் இந்துத்துவாக்களை சட்டம் கண்டுகொள்ளாது என்பதற்கு பாபர் மஸ்ஜித் இடிப்பு பல்லாண்டுகால சான்றாக திகழ்கிறது.
மோடி வகையறாக்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பது நீதியின்மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்ப்பாக உள்ளது. அது நிறைவேறும் நாள் என்றோ என தெரிவதற்கு முன், ஒரு முதல் அமைச்சர் கொலைக்குற்றவாளியாக கைகட்டி பதில் சொல்லும் நிலை மோடிக்கு ஏற்பட்டது மோடி வகையறாக்களுக்கு தற்கால தண்டனையாகும்.
முகவை எஸ்.அப்பாஸ்