நம் குழந்தைகளைத் தொழ ஆர்வமூட்ட வேண்டியது நமது கடமை என்பதிலும் , அதைச் செய்யாத பட்சத்தில் அல்லாஹ்விடம் அதற்காக பதில் கூற வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. குழந்தைகளிடம் தொழுகையை ஆர்வமூட்டும் போது அவர்களுக்கு பிடித்த மாதிரி அவர்களுடைய மனநிலைக்கு ஏற்றவாறு செய்ய வேண்டும். இவற்றை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே ”MY PRAYER TREE”
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்…
1) இதனுடன் இணைக்கப்பட்டுள்ள ”MY PRAYER TREE” ஐ பிரதி எடுத்து குழந்தையிடம் கொடுத்து வீட்டின் முக்கிய பகுதியில் ஒட்டச் சொல்லவும். (மாதம் ஒரு பிரதி)
2) பச்சை , மஞ்சள் , சிகப்பு நிற கலர் பென்சில்களை வாங்கிக் கொடுக்கவும்.
3) அதில் குறிப்பிட்டுள்ள 1,2,3,…..31 மாதத்தின் நாட்களைக் குறிக்கும். ஒவ்வொரு நாளிளும் 5 நேரத் தொழுகையைக் குறிக்க 5 இலைகள் உள்ளன.
4) குறிப்பிட்டுள்ளபடி, ஜமாத்துடன் தொழும் தொழுகையை பச்சை நிறத்திலும், ஜமாத்தில்லாமல் ஆனால் குறித்த நேரத்தில் தொழும் தொழுகையை மஞ்சள் நிறத்திலும், நேரம் தவறிய தொழுகையை சிகப்பு நிறத்திலும் (அதற்கான இலையை) வண்ணமிட வேண்டும்.
5) மாதத்தின் இறுதியில் வண்ண இலைகளுக்கு மதிப்பெண் வழங்கி , மதிப்பெண்ணிற்கு ஏற்ப பரிசு வழங்கவும்.
6) இன்ஷா அல்லாஹ் சில மாதங்களில் உங்கள் குழந்தை நியமமாக தொழக் கூடியவர்களாக ஆகி விடுவர். நீங்களும் உங்கள் பொறுப்பை நிறைவேற்றிய நிம்மதியை அடைவீர்கள்.
குறிப்பு: பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிவோர் தங்கள் வகுப்பின் மொத்த முஸ்லிம் குழந்தைகளையும் தங்கள் பொறுப்பில் எடுத்து தொழ ஆர்வமூட்டலாம்.
”Jazaakallaahu khairan” posted by: Saleem Mohamed