சென்னை – வண்ணாரப்பேட்டையில்
அரசமரத்திற்கும்–வேப்பமரத்திற்கும் கோலாகல திருமணம்
திருமண பத்திரிகை அச்சடித்து தடபுடலாக நடந்தது
[ கபுரு வணங்கிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு ஒன்றும் அதிகமில்லை. உயிரற்ற மரங்களுக்கு சக்தி இருப்பதாக இவர்கள் நினைக்கிறார்கள். கபுரு வணங்கிகள் உயிரற்ற உடம்புக்கு சக்தியிருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் இந்த மரம் வணங்கிகளைவிட கபுரு வணங்கிகள் அறியாமையில் மூழ்கிக்கிடப்பவர்கள்.. ஏனெனில் மரத்தை வணங்கக்கூடிய இவர்களுக்கு உண்மையான வேதம் என்று ஒன்று இல்லை. அதனால் வழி தவறுகிறார்கள் என்று கூட சொல்ல வாய்ப்புண்டு. ஆனால் கபுரு வணங்கிகளோ அல்லாஹ் அருளிய அற்புதப்புதையலான தித்திக்கும் திருக்குர்ஆனை கிடைக்கப் பெற்றும் வழி தவறிப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
அறியாமையில் மூழ்கியிருக்கும் இம்மக்களை நேர்வழிக்கு கொண்டு வரவேண்டிய முஸ்லீம்களோ தங்களுக்குள் பிளவுபட்டு சிதறிக்கிடப்பது சரிதானா? இறை நம்பிக்கை எல்லா மதத்தவர்களுக்கும் உண்டு என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. ஆனால் அந்த ஏக இறைவனை அடைய வழி தெரியாமல் கண்டதையெல்லாம் இறைவனாக எண்ணி வழிபடும் இவர்களுக்கு நேர்வழி காட்ட முஸ்லீம்கள் ஒன்றுபடுவது அவசியமல்லவா?
இல்லாவிட்டால் இவர்கள் செய்கின்ற இத்தவறுகளுக்கும் ஏக வல்ல அல்லாஹ் நம்மை கேள்வி கணக்கு கேட்டால் நமது கதி என்ன? ஒவ்வொரு நாளும் புதுப் புது இயக்கம் புதுப் புது தலைவர்கள். இதில் மட்டும் திருப்தி கண்டால் போதுமா….?!
சிந்தியுங்கள் சகோதரர்களே சிந்தியுங்கள்..! நம்மைப் படைத்த அல்லாஹ்தான் இவர்களையும் படைத்தான். இவர்களும் பெருமானார் ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கவ்முகளே! இவர்களையும் நேர்வழியின்பால் அழைத்துச்செல்ல வேண்டிய கடமை நமக்கிருக்கிறது என்பதை மறந்திட வேண்டாம். இவர்களுக்கும் ”நல்ல ஹிதாயத்” கிடைக்க அல்லாஹ்விடம் ”துஆச்”செய்வோம். – Adm.]
சென்னை, மார்ச்.27: சென்னையில் 300 ஆண்டு பழமைவாய்ந்த அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமண பத்திரிகை அச்சடித்து கோலாகலமாக திருமணம் நடந்தது. இதில் திரளான பொது மக்கள் கலந்துகொண்டனர்.சென்னை வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. ரோட்டில் மறைந்த காத்தவராயன் என்பவர் 300 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகட்ட தோண்டிய இடத்தில் சிலை ஒன்று கிடைத்தது.
அதைத்தொடர்ந்து அக்கோவில் 3 தலைமுறையில் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று பிரபலமாகி உள்ளது. இக்கோவிலின் இடது பக்கத்தில் அரச மரமும், வேப்பமரமும் உள்ளது. இந்த மரங்களை வலம் வந்தால் திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் கைகூடும் என்றும், குழந்தை பேறு இல்லாதவர்கள் இதனை வலம் வந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்றும், தீராத நோய்களும் இந்த மரத்தை சுற்றி வந்தால் குணமாகும் என்பதும் இப்பகுதியில் உள்ள மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
300 ஆண்டு பழமை வாய்ந்த தெய்வீக மரங்களுக்கு திருமணம் செய்து வைத்தால் இப்பகுதி மக்கள் எந்த குறையும் இல்லாமல் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என்று கருதிய கோவில் நிர்வாகத்தினர் தெய்வீக மரங்களுக்கு மூத்த சிவாச்சாரியர்களை கொண்டு திருமணம் நடத்த முடிவு செய்தனர்.
திருமண நிகழ்ச்சிக்கு அடிக்கப்படும் திருமண பத்திரிகை போன்று அரச மரத்திற்கும், வேப்பமரத்திற்கும் பங்குனி மாதம் 11-ந் தேதி (25.3.2010) தசமி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய நாளில் காலை 11 மணி முதல் 12.30 மணிக்குள் திருமணம் நடைபெறும் என அச்சடிக்கப்பட்டிருந்தது.
இதில் நாகராஜ சுவாமி என்கிற அரசமரத்திற்கும், நாகாயாஷணி அம்பிகை என்கிற வேப்பமரத்திற்கும் திருமணம் நடைபெறும் என்று குறிப்பிட்டு பொது மக்களுக்கு திருமண பத்திரிகை வினியோகிக்கப்பட்டு கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை மூத்த சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்துகொண்டனர். சீர்வரிசையுடன் நடந்த இந்த திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மறைந்த காத்தவராயன் பரம்பரை நிர்வாக தர்மகர்த்தாக்கள் செய்து இருந்தனர்.
கபுரு வணங்கிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு ஒன்றும் அதிகமில்லை.
உயிரற்ற மரங்களுக்கு சக்தி இருப்பதாக இவர்கள் நினைக்கிறார்கள்.
கபுரு வணங்கிகள் உயிரற்ற உடம்புக்கு சக்தியிருப்பதாக நினைக்கிறார்கள்.
ஆனால் இந்த மரம் வணங்கிகளைவிட கபுரு வணங்கிகள் மோசமானவர்கள்.
ஏனெனில் மரத்தை வணங்கக்கூடிய இவர்களுக்கு உண்மையான வேதம் என்று ஒன்று இல்லை.
அதனால் வழி தவறுகிறார்கள் என்று கூட சொல்ல வாய்ப்புண்டு.
ஆனால் கபுரு வணங்கிகளோ அல்லாஹ் அருளிய அற்புதப்புதையலான தித்திக்கும் திருக்குர்ஆனை கிடைக்கப் பெற்றும் வழி தவறிப் போய்க்கொண்டிருப்பவர்கள்.
அறியாமையில் மூழ்கியிருக்கும் இம்மக்களை நேர்வழிக்கு கொண்டு வரவேண்டிய முஸ்லீம்களோ தங்களுக்குள் பிளவுபட்டு சிதறிக்கிடப்பது சரிதானா? இறை நம்பிக்கை எல்லா மதத்தவர்களுக்கும் உண்டு என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. ஆனால் அந்த ஏக இறைவனை அடைய வழி தெரியாமல் கண்டதையெல்லாம் இறைவனாக எண்ணி வழிபடும் இவர்களுக்கு நேர்வழி காட்ட முஸ்லீம்கள் ஒன்றுபடுவது அவசியமல்லவா? இல்லாவிட்டால் இவர்கள் செய்கின்ற இத்தவறுகளுக்கும் ஏக வல்ல அல்லாஹ் நம்மை கேள்வி கணக்கு கேட்டால் நமது கதி என்ன? ஒவ்வொரு நாளும் புதுப் புது இயக்கம் புதுப் புது தலைவர்கள். இதில் மட்டும் திருப்தி கண்டால் போதுமா….?!
சிந்தியுங்கள் சகோதரர்களே சிந்தியுங்கள்.. நம்மைப் படைத்த அல்லாஹ்தான் இவர்களையும் படைத்தான். இவர்களும் பெருமானார் ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கவ்முகளே. இவர்களையும் நேர்வழியின்பால் அழைத்துச்செல்ல வேண்டிய கடமை நமக்கிருக்கிறது என்பதை மறந்திட வேண்டாம். இவர்களுக்கும் ”நல்ல ஹிதாயத்” கிடைக்க அல்லாஹ்விடம் ”துஆச்”செய்வோம்.