[ கூகுளின் ‘குட்–பை‘ முடிவு ‘முற்றிலும் தவறானது‘ என்று சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களுக்கு சீனாவை குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்றும் சீனா மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் கூகுளுக்கு எரிச்சல் வரும் வகையில் தொடர்ந்து சீனா செயல்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததுதான். கூகுளைப் போலவே போலியான ஒரு இணையதளமும் சீன மொழியில் வெளியானது. அதேபோல யூ டியூபை அப்படியே காப்பி அடித்து சீன மொழியில் ஒரு இணையதளம் வெளியானது.
இதுகுறித்து சீன அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வந்தது. இந்த நிலையில்தான் சீனாவை விட்டு வெளியேறியுள்ளது கூகுள்.]
பெய்ஜிங்: பிரபல சர்ச் என்ஜின் நிறுவனமான கூகுள் டாட் காம், தனது பிரதான சீனமொழி தேடுதளம் மூலம் (google.cn) சேவைகள் வழங்குவதை நிறுத்திக் கொண்டது. எனினும், சீன மொழிக்கான தேடுதல் சேவைகளை ஹாங்காங்கில் இருந்து தொடரப் போவதாக அது அறிவித்துள்ளது.google.cn எனும் சீன மொழியில் அமைந்திருந்த தேடு தளத்திற்கு வரும் பார்வையாளர்கள், google.com.hk என்ற தளத்திற்கு திருப்பிவிடப்படுவார்கள் என கூகுள் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இத்தகவல் வெளியான உடனடியாக பெய்ஜிங்கில் உள்ள கூகுள் நிறுவனத்தின் சீன தலைமையக அலுவலகத்தின் முன்பு ஏராளமானோர் இன்று காலை கூடிவிட்டனர்.
இன்டர்நெட் அக்கவுன்டில் அத்துமீறி ஹாக்கிங் செய்யப்பட்டது, தகவல்கள் திருடப்பட்டது என பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக சீனாவுடன் முட்டிக்கொண்டிருந்த கூகுள் எந்நேரமும் வெளியேறலாம் என்ற சூழல் தான் கடந்த சில வாரங்களாக காணப்பட்டது.
இந்த நிலையில், இன்று கூகுள் தனது அதிகாரப்பூர்வ முடிவை செயல்படுத்தி உள்ளதால், சீனாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நிலையும், முதலீட்டாளர்களின் நிலையும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள கூகுள் தலைமையக செய்தித் தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில், ‘‘இது வழக்கமான வர்த்தக நடைமுறை தான். பணியாளர்கள் அனைவரும் ஹாங்காங்கிற்கு மாற்றப்படுவார்களா என்பது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. இவையாவும் வர்த்தக செயல்பாடுகளுக்கான மாற்று ஏற்பாடுகள் மட்டுமே‘‘ என்றார்.
கூகுளின் இந்த முடிவு ‘முற்றிலும் தவறானது‘ என்று சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களுக்கு சீனாவை குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்றும் சீனா மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் கூகுளுக்கு எரிச்சல் வரும் வகையில் தொடர்ந்து சீனா செயல்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததுதான். கூகுளைப் போலவே போலியான ஒரு இணையதளமும் சீன மொழியில் வெளியானது. அதேபோல யூடியூபை அப்படியே காப்பி அடித்து சீன மொழியில் ஒரு இணையதளம் வெளியானது.
இதுகுறித்து சீன அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வந்தது. இந்த நிலையில்தான் சீனாவை விட்டு வெளியேறியுள்ளது கூகுள்.
உலக அளவில் 38 கோடி இன்டர்நெட் பார்வையாளர்களை கொண்ட சீன சந்தையில் இருந்து கூகுள் வெளியேறுவது இணைய பொருளாதாரத்தில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் நிலைப்பாடு கபட நாடகம்: ஈரான்
தெஹ்ரான்: ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு அவர்களுடைய கபட முகத்தை காண்பிப்பதாக ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காமினி கூறியுள்ளார்.
ஈரான் புதுவருடம் தொடர்பாக தொலைக்காட்சியில் நடத்திய உரையில் காமினி அமெரிக்காவின் இரட்டை வேடத்தை கடுமையாக விமர்சித்தார். ஒரேநேரத்தில் ஈரானை அழிப்பதற்கு சதியாலோசனை நடத்துவதும், சமாதானத்தைக் குறித்தும், நட்புறவைக் குறித்தும் பேசுவதையும் அமெரிக்கா நிறுத்தவேண்டுமென காமினி கூறினார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஈரான் மக்களுக்கு அளித்த புதுவருட வீடியோ வாழ்த்துச் செய்தியில் ஈரானுடனான பேச்சுவார்த்தைத் தொடர்வதில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடியாகத்தான் காமினியின் உரை அமைந்திருந்தது. ஆனால் காமினி ஒபாமாவின் வாழ்த்துச் செய்திக் குறித்து நேரடியாக விமர்சிக்கவில்லை. அமெரிக்காவின் வார்த்தைகளில் நட்புறவு அணுகுமுறை இருந்தாலும் செயல்பாடுகளிலும் கொள்கைகளிலும் அதனைக் காண முடியவில்லை என அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஈரான் அதிபர் தேர்தலில் ஈரான் மக்களுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்தது. எட்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் வன்முறையாளர்களை சமூகசேவகர்கள் என்றுக் கூறிக்கொண்டு களமிறங்கியது. சில நேரங்களில் நரியும், ஓநாயாகவும் மாறும் அமெரிக்கா சிலநேரங்களில் அழகிய முகத்தைக் காட்டிக் கொள்கிறது என காமினி கூறினார்.