பெண்கள் இட ஒதுக்கீ(கே)டு மூலம் பலனடையப் போவது அரசியல் வியாதிகளின் வீட்டு பெண்கள்தான், அவ்வாறு தேர்தெடுக்கப்படும் பெண்கள் டம்மி பீசாக உலா வருவார்கள், ஆண் அரசியல் வியாதிகள்தான் அவர்களை ஆட்டுவிப்பர்கள் என்பது அப்பட்டமான உண்மை. இந்த இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் அரசியால் வாதிகளின் எதிர் பார்ப்பும் இதுதான். உண்மைக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இன்றைய நிலையில் எடுத்துக்கொண்டாலும், அரசியல் பின்னணி இல்லாத எத்தனை பெண்கள் உள்ளாட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, சட்டப்பேரவை மற்றும் மக்களவையில் உறுப்பினர்களாக முடிகிறது? மகளிருக்கான இடஒதுக்கீடு பிரச்னையில் முன்வரிசையில் இருக்கும் சோனியா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், பிருந்தா காரத் மூவருமே தங்களது அரசியல் விலாசத்தால் அரசியலில் முன்வரிசைக்கு வந்தவர்களே தவிர, கட்சியின் கடைநிலைத் தொண்டராக இருந்து முன்வரிசைக்கு வந்தவர்களல்ல. அப்படி வந்திருந்தால் அவர்களுக்கு ஆணாதிக்கத்தின் கோரமுகம் எத்தகையது என்பது தெரிந்திருக்கும்.
15-வது மக்களவையில் உறுப்பினர்களாக இருக்கும் 59 மகளிரில், 45 பேர் அரசியல் பின்னணி உடையவர்கள். ஏனைய 14 பேரில் 6 பேர் மட்டும்தான் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். தமிழக அமைச்சரவையையே எடுத்துக் கொள்வோம். அமைச்சர்கள் பூங்கோதை மற்றும் கீதா ஜீவனின் இன்றைய நிலைமைக்குக் காரணம் அவர்களது கட்சிப் பணியல்ல. அவர்களது விலாசம். அமைச்சர் தமிழரசியின் பின்னணி அவரது கணவர் ரவிகுமார்தான் என்பதும், தனது மதுரை மேற்கு ஒன்றிய வார்டு மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அவர் தன் மனைவியைப் போட்டியிட வைத்து அரசியலுக்கு அறிமுகப்படுத்தினார் என்பதும் தெரியாத விஷயமல்ல.
இந்தியா முழுவதும் உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் இதுதான் நிலைமை. அரசியல் கட்சிகளின் அமைப்பில் மாறுதல் ஏற்படுத்தப்படாமல் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளிலும் இந்த நிலைமைதான் ஏற்படப்போகிறது. ஒன்று தனது மனைவி மக்களை மகளிருக்கான ஒதுக்கீடைப் பயன்படுத்தி வேட்பாளராக்கி மகிழ்வார்கள். இல்லையென்றால், தங்களது கைப்பாவைகளை வேட்பாளராக்கித் தங்களது விரலசைப்புக்கு ஏற்பச் செயல்பட வைப்பார்கள்.
ஏதோ மூன்றில் ஒரு பங்காவது கிடைத்ததே என்று மகிழ்ச்சி அடையும் மகளிர், இரண்டு வகையில் ஏமாற்றம் அடைய இருக்கிறார்கள். முதலாவதாக, இவர்கள் நினைப்பதுபோல அதிகாரப் பகிர்ந்தளிப்பு கிடைக்கப் போவதில்லை. இரண்டாவதாக, ஆணாதிக்க அரசியல்வாதிகளின் மேலாதிக்கம் மேலும் அதிகரிக்கும்.
சுயமாக சிந்திக்கத் தெரியாத, பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப் பட்டு கட்சியின் தலைவர் எதைச்சொன்னாலும் தலையாட்டும் வேஷ்டி கட்டிய பெண்கள்தான் எல்லா கட்சியிலும்
ஆண்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருந்தபோது, சமுதாயம் சிக்கல்கள் இவ்வளவு இல்லை, குடும்ப அமைப்பு பெண்களால் காப்பற்றப்பட்டது, பெண்களும் ஒழுக்கம் கெட்டு போனதால் ஒரு குடும்பம் மட்டும் அல்ல. ஒரு தலை முறையே அழிந்துபொய் கொண்டிருக்கிறது… இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ரீதியாகவும், ஜனநாயகரீதியாகவும்,சமுக ரீதியாகவும், தனிப்பட்டமுறையிலும் பெண்களுக்கு ஒன்னும் செய்யப்போவதில்லை, வெட்டி வேலை.. வேற அரசியல்ரீதியாக முக்கியமான விசயங்களை திசை திருப்புகிறார்கள்,
”எல்லா சுதந்திரமும், உரிமைகளும் அவர்களுக்கு உள்ளது. சில இடங்களில் நடக்கும் பெண்–கொடுமைகளை தவிர.. அவர்களும் பெண்தன்மை இல்லாமல் ஆண் உடைகளை அணிகிறார்கள், அவுத்துப்போட்டு திரிகிறார்கள், புகை–மது எல்லாம் வெளிப்படையாகவே அடிக்கிறார்கள்.. அப்பா அம்மாவை மதிக்காமல் ஒழுக்கம் இல்லாமல் எவனையோ இழுத்துக்கொண்டு ஓடுகிறார்கள்.. வேணுமானால் புருஷனை வைத்து கொள்கிறார்கள், இல்லை என்றால் வேறு எவனோ முட்டாள் ஆண்களை வழிக்குகொண்டு வரவேண்டியவர்கள் இந்த பெண்களே” என்று இப்படியெல்லாம் சொல்லக்கூடிய அதே வேளையில் ஆண் சமூகத்தால் பெண்கள் வஞ்சிக்கப்படுவது தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது!