[ நாடு முன்னேற வேண்டும் என்பது முக்கியம் தான். ஆனால், எவற்றிலெல்லாம் முன்னேற்றம் வேண்டும், எவற்றிலெல்லாம் சீர்திருத்தம் வேண்டும் என்ற தெளிவும் திட்டமும் நாட்டை ஆள்வோரிடம் வேண்டும். இல்லையேல், சிங்கார சென்னை என்பது எதிர்காலத்தில் சிங்காரிகளின் சென்னை என்ற பெயரைப் பெற வைத்துவிடும்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பல்வேறு வடிவங்களில் பரவி வரும் விபச்சாரத்தை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறியாவிடில் ‘குடி’மகன்களுக்கு ”TASMAC’ சாராயத்தை அரசே விற்க தொடங்கியது போல் விபச்சார ஏரியாக்களையும் அரசே ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் அபாயத்தை உணர வேண்டும். ஏனெனில் ஓட்டுக்காகவும், இலவசம் தந்து ஆட்சியைத் தக்கவைக்கவும் நம் அரசியல் தலைவர்கள் எவ்வகை வருமான உற்பத்தியையும் செய்யத் தயாராகவே உள்ளனர்.
விபச்சாரம் பெருகுவது ‘பாலியல்’ தொடர்பான குற்றங்களைச் சமூகத்தில் பெருகச் செய்கிறது. இது காவல்துறைக்கு இன்னொரு தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கினால் நாட்டில் கற்பழிப்பு குற்றங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து இருக்கின்றன. 1971ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இந்தியாவில் தற்போது கற்பழிப்பு குற்றங்கள் 678 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு தகவல் ஒன்று கூறுகிறது.]
தகவல் தொழில்நுட்பம், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் என்று இந்திய நகரங்களிலேயே சென்னை ஒருபுறம் அதிக வளர்ச்சி அடைந்து வந்தாலும், மக்கள் நெருக்கடி, திட்டமிடப்படாத நகர வளர்ச்சித் திட்டம், மோசமான நோய்களை பரப்பும் சுற்றுச் சூழல், சாக்கடை கலந்த குடிநீர் என இன்னொரு பக்கம் சென்னை வாழத் தகுதி இழக்கும் நகரங்களில் ஒன்றாகவும் ஆகி வருகிறது.
அத்தோடு மட்டும் நில்லாமல் கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும் சமுதாய ஒழுக்கக்கேடான செயல்பாடுகளும் சென்னையில் இப்போது அதிகமாகி வருகிறது. தொடர் கொள்ளை, கொலைகள் போன்றவை மட்டும் இல்லாமல் தற்போது வளரும் இளம் தலைமுறையினரிடம் போதை பழக்கம், கடத்தப்பட்டு விபசாரத்தில் ஈடுபடச் செய்தல் போன்றவையும் அதிகரித்து வருகிறது.
சென்னையின் சாமானியர்கள் முதல் சாமியார்களிடம் வரை விபச்சாரம் பெருகி வருவதைப் பார்க்கும் போது எதிர்கால சமுதாயம் பற்றிய அக்கறை கவலை கொள்ளச் செய்கிறது. “விபசாரத்தை ஒழிக்க முடியாவிட்டால் அதை சட்டபூர்வமாக்க வேண்டியது தானே?” என்று அண்மையில் உயர்நீதிமன்றம் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டியது அவசியம். அந்த அளவிற்கு நாட்டில் விபச்சாரம் தனது கிளைகளைப் பரப்பி வேகமாக பரவி வருகிறது.
“இந்தியாவில் நாள்தோறும் 200 பெண்கள் புதிதாக விபச்சாரத் தொழிலுக்கு வருகிறார்கள்” என்று சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் “பிரஜன்யா” என்ற சமூக அமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விபச்சாரத் தொழில் தற்போது சென்னையையும் ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது.
விபச்சாரத்தைத் தடுப்பதற்காகக் காவல்துறை பல முயற்சிகள் செய்தும் நாளுக்கு நாள் இது அதிகமாகி வருவதற்கு வறுமை உள்ளிட்டப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. வறுமையைக் காரணமாகக் கூறி இந்தத் தொழிலுக்கு வரும் பெண்களுக்குச் சமுதாயத்தில் ஆதரவும் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு திரைப்பட நடிகர் அண்மையில் ஒரு மேடையில் பேசும் போது, “அவர்கள் ஒன்றும் ஜல்சா பண்ண இந்தத் தொழிலுக்கு வரவில்லை. இரண்டு வேளை சோற்றுக்காகத் தான் வருகிறார்கள்” என்று வறுமையைக் காரணமாக கூறி விபச்சார தொழில் செய்பவர்களுக்கு ஆதரவாக பேசினார்.
அதே இரண்டு வேளை சோற்றுக்காகத் தானே வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்றவைகளும் நடை பெறுகிறது. அவ்வாறெனில் இவையும் நியாயப்படுத்தப்பட வேண்டியவைகள் தானா? அவ்வளவு ஏன், அதே இரண்டு வேளை சோற்றுக்காகத் தானே சாலையோரங்களில் ஏழைகள் திருட்டி வி.சி.டி. விற்கின்றனர்? அதை மட்டும் கடுமையாக சாடும் இத்திரைப்படத் துறையினர், சமூக, கலாச்சார, பாரம்பரியத்தையும் எதிர்கால தலைமுறையினரையும் சீரழிக்கும் இந்த விபச்சாரத்தை நியாயப்படுத்துவது ஏன்?.
தமிழ்த் திரை உலகம் இன்று விபச்சாரம் மற்றும் இளம் தலைமுறையினரைச் சீரழிக்கும் செயல்களிலும், மக்கள் மத்தியில் மத, இனவெறியைத் தூண்டிவிடும் செயல்களைச் செய்து நாட்டைக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லாமல் இல்லை.
நடிகைகள், மசாஜ் பெண்கள், மொபைல் அழகிகள் என விபச்சாரிகள் புதுப்புது ஒப்பனைகளுடனும் புதுப்புது கவர்ச்சிகரமான பெயர்களுடனும் வருகிறார்கள். தற்போது வாடகை இல்லத்தரசிகள் என்ற போர்வையிலும் சென்னையில் விபச்சார அழகிகள் உலா வர ஆரம்பித்துள்ளனர். அண்மையில் காவல்துறை ஒரு மசாஜ் சென்டரில் மேற்கொண்ட சோதனையில் பிடிபட்ட அனைத்து விபச்சார அழகிகளும் திருமணமான குடும்பப் பெண்கள்(?), பகுதி நேர ஊழியமாக விபச்சாரம் செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
எல்லாவற்றையும் விட மேலாக விபச்சாரத்தை ஒழிக்க வேண்டிய தொண்டு நிறுவனங்களே விபசார அழகிகளுக்கு கராத்தே கற்று கொடுத்து அவர்களது தொழிலை திறம்பட செய்ய மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது. இன்னும் சில அமைப்புகள் சுகாதார முறையில் விபச்சாரம் செய்ய ஆளுமைத் திறமை வகுப்புகள் நடத்துகின்றன. இதே ரீதியில் போனால், விபச்சாரத்திற்கென ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு ஒரு அமைச்சகத்தை அரசாங்கம் திறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மும்பையில் உள்ள பார்களில் பெண்கள் பரிமாறும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அதற்குத் தடை விதிக்க முற்பட்ட போது அதில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கு மாற்று வேலை தர வேண்டும் என்று போராடினர். அவர்களின் வேலைக்கு மாற்று வழி காட்ட முடியாமல் அரசாங்கம் ‘ஜகா’ வங்கியது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். பார்களில் பெண்கள் பரிமாறுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றனர் என்ற தகவல் உளவுத்துறையின் மூலம் பெற்று, ஆரம்பத்திலேயே அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்நிலைமை வந்திருக்காது.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பல்வேறு வடிவங்களில் பரவி வரும் விபச்சாரத்தை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறியாவிடில் ‘குடி’மகன்களுக்கு ”TASMAC’ சாராயத்தை அரசே விற்க தொடங்கியது போல் விபச்சார ஏரியாக்களையும் அரசே ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் அபாயத்தை உணர வேண்டும். ஏனெனில் ஓட்டுக்காகவும், இலவசம் தந்து ஆட்சியைத் தக்கவைக்கவும் நம் அரசியல் தலைவர்கள் எவ்வகை வருமான உற்பத்தியையும் செய்யத் தயாராகவே உள்ளனர்.
விபச்சாரம் பெருகுவது ‘பாலியல்’ தொடர்பான குற்றங்களைச் சமூகத்தில் பெருகச் செய்கிறது. இது காவல்துறைக்கு இன்னொரு தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கினால் நாட்டில் கற்பழிப்பு குற்றங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து இருக்கின்றன. 1971ஆம் ஆண்டை ஒப்பிடும்போது
“இப்படி சீரழிக்கப்படும் பெண்களும், சிறுமிகளும் பெரும்பாலும் பின்தங்கிய சமுதாய-பொருளாதார நிலையில் இருப்பவர்களாவர். பெரும்பாலானவர்கள் நகரங்களில் வேலை வாங்கி தருவதாக கூறியும், தமிழ் சினிமாவில் சேர்த்து விடுவதாகவும் ஆசை காட்டி பெற்றோரிடம் இருந்து அழைத்து வரும் சாதாரண இடை நிலைத் தரகர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் ஆவார்கள்” என்கிறார் சென்னை பல்கலைக் கழகத்தின் குற்றவியல் துறை தலைவர் தியாகராஜன்.
GIS எனப்படும் Geographical Infromation System உதவி கொண்டு இவ்வாறு தமிழ் நாட்டின் உள்ளேயும், வெளியேயும் விபசாரத்திற்கு ஆளாக்கப்படும் பெண்கள் சென்னைக்கு தான் முதலில் கடத்தப்படுகிறார்கள். அங்கிருந்து மும்பை, கொல்கத்தா, தில்லி, பெங்களூர் மற்றும் கோவாவிற்கு கடத்தப்படுகிறார்கள் என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
அதிர்ச்சியளிக்கும் இத்தகைய ஆய்வு முடிவுகள் ஒரு பக்கம் வெளியானாலும் மறுபக்கம் எவ்வித பாதிப்பும் இன்றி இத்தகைய சமூக விரோத கும்பல்கள் சமூகத்தைச் சீரழிக்கும் பணியில் மிக தைரியமாக செயல்பட்டு வருகின்றனர்.
நாடு முன்னேற வேண்டும் என்பது முக்கியம் தான். ஆனால், எவற்றிலெல்லாம் முன்னேற்றம் வேண்டும், எவற்றிலெல்லாம் சீர்திருத்தம் வேண்டும் என்ற தெளிவும் திட்டமும் நாட்டை ஆள்வோரிடம் வேண்டும். இல்லையேல், சிங்கார சென்னை என்பது எதிர்காலத்தில் சிங்காரிகளின் சென்னை என்ற பெயரைப் பெற வைத்துவிடும் என்பதை மட்டும் நாட்டை ஆள்வோருக்குச் சொல்லி வைப்போம்.
source: www.inneram.com