Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இஸ்லாமிய சமூகத்தில் மாற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உரிய வழி

Posted on March 20, 2010July 2, 2021 by admin

MUST READ

இஸ்லாமிய சமூகத்தில் மாற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உரிய வழி

[ அந்தக் காலத்தில் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்ட சட்டங்களால் இன்று விசாலமடைந்தது, சிக்கலடைந்திருக்கும் வாழ்க்கை முறையை எவ்வாறு நிர்வகிக்க முடியும்? இவ்விரண்டு வாழ்க்கை முறையும் ஒன்றின் சுமையை இன்னொன்று எவ்வாறு தனது தோளில் சுமக்க முடியும்?

இதுதான் இரு யுகங்கள் வித்தியாசமானதாகத் தென்பட்டால், அதன் கருத்து அவற்றினது வாழ்க்கையின் பொதுவான நிலைகள் வித்தியாசமடைந்துள்ளது என்பதல்ல. மாறாக, சில குறிப்பிட்ட விடயங்கள் வித்தியாசமடைந்துள்ளன என்பதுதான்.

வேறு வார்த்தையில் கூறுவதாயின், வாழ்க்கையில் மனிதனுக்கு உணவு தெவைப்படுகின்றது. உடை, உறையுள், போக்குவரத்துச் சாதனங்களும் வசதிகளும், வாழ்வதற்கு ஒரு சமூகம், பாலியல் உறவுகள், வர்த்தக, தொழில் நுட்ப, செயல் முறை உறவுகள் என்பனவும் வாழ்க்கையில் தேவைப்படுகின்றன.

இவை மாற்ற முடியாத பொதுவான தேவைகள். மனிதனுக்கு ஒரு மனிதன் என்ற வகையிலும், அவனுடைய மனித வாழ்வின் இயற்கையான கட்டமைப்பு உள்ளவரைக்கும் அவனுக்கு இவை தேவைப்படுகின்றன. இந்த எல்லா விடயங்களிலும் ஆதிகால மனிதன் தற்கால மனிதனில் இருந்து வித்தமியாசப்பட்டுக் காணப்படவில்லை.

நவீன உபாயங்கள் அவற்றினிடையே பிரிவினை இன்றி இயற்கையோடு இசைந்ததாக இருப்பின் இஸ்லாம் அதனோடு ஒத்துப் போகின்றது. ஆனால் அவை படைப்பின் அடிப்படைச் சட்டங்களுக்கு முரணாக இருப்பின் அது நவீன காலத்துக்கு உரியதாயினும் சரி, ஆதிகாலத்துக்கு உரியதாயினும் சரி இஸ்லாம் அதனை ஏற்றுக் கொள்வதில்லை.]

இஸ்லாமிய சமூகத்தில் மாற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உரிய வழி

]மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அத்தியவசியமான வழிகளையும் கொண்டதே இஸ்லாமிய வழி என்பது உண்மையாகும். மேலும் இஸ்லாமியச் சமூகம் பொறாமைப்படும் அளவுக்கு அதிஷ்டமானதாகும்.

ஆனால் இது நம்பிக்கையில் சுதந்திரம் இல்லாத விசாலமான ஒரு ஒழுங்கு முறையாகும், இது சமூகத்தை மந்தமாக்குகின்றது, எல்லா மாற்றங்களையும், வளர்ச்சியையும் இது சமூகத்தை மந்தமாக்குகின்றது, எல்லா மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் தடை செய்கின்றது என்று சிலர் கூறலாம். படிப்படியான வளர்ச்சிக்கு ஒரு விடயத்தை மையமாகக் கொண்ட எதிர் எதிரான சக்திகளின் தொடர்களும், பிணக்குகளும் அவசியமாகின்றது.

அப்போதுதான், குறுக்கம், முடிவு என்பவற்றின் முடிவாக புதியவை உருவாக்கப்படும். அது அந்த பிணக்குகளின் முடிவாக, மறைந்து போன, அவை உறுவாகியவற்றின் குறைபாடுகளில் இருந்து விடுபடும்.

ஆகவே நாம் இஸ்லாம் அதன் குறைபாடுகளையும் மாறானவைகளையும் அகற்றி, மேலும் குறிப்பாக எதிர் நம்பிக்கைகளில் இருந்து முழுமையாக விடுபட்டுவிட்டது எனக் கூறினால், அந்தக் கூற்றுக்கு அவசியமாகத் தேவைப்படுவது, இஸ்லாம் உறுவாக்கிய சமூகம், பரிணாம வளர்ச்சிப் பாதையில் இருந்து தடுக்கப்படும் என்பதாகும். தர்க்கரீதியான உலகாதாய வாதத்தினால் உரிமை கோரப்படுவதும் இதுவே.

சிலர், குறிப்பிட்ட விடயத்திலிருந்து ஆச்சரியப்படத்தக்க வகையில் வழிதவறியுள்ளனர். மனித நம்பிக்கைகளும், போதனைகளும் இரண்டு வகையானவை உலகாயத வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக அமர்த்தப்பட்டுள்ள கைத்தொழில் தொழில் நுட்ப விஞ்ஞானங்களும் இயற்கை கணித விஞ்ஞானங்கள் போன்ற மனித இன நலன்களுக்கானவையும் இதில் அடங்கும். இந்த விஞ்ஞானங்களும், தொழிநுட்பங்களும், மற்றும் இது போன்றவையும் மாற்றக் கூடியவை என்ற ஒரே வகுப்பில் சேறுகின்றன. மேலும் இவை மாற்ம் அடைகின்ற அளவுக்கு குறைபாடுகள் நீங்கி பூரணமாகின்றன. இந்த வகையில் இதற்கு ஏற்ப சமூக வாழ்வும் முன்னேற்றமடைகின்றது.

இன்னொரு வகையான போதனை, மாற்றங்களும் உட்படாதவை ஒரு வகையில் தெய்வீகப் போதனைகளே பரிபூரணமாக இருந்த போதிலும், அவை பரிணாம வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உட்பட்ட போதிலும், அவற்றின் மூலாதாரத்தைப் பொறுத்தமட்டில் அவற்றுக்கு தீர்க்கமான, நியாயமான, மாற்றமுடியாத ஒரு வடிவம் உள்ளன. இந்தப் போதனைகள் சமூகத்தைப் பொதுவாக மட்டுமே பாதிக்கின்றன.

ஆகவே இந்தக் கருத்துக்களும், போதனைகளும் சஞசலமின்றி நிலைத்திருக்குமானால், அது சமூகத்தை அதன் பரிமான வளர்ச்சியில்ருந்து தடுக்காது. நிலையான பொது சட்டங்கள் பல சமூக முன்னேற்றத்துக்கு தடையின்றி இருப்பதை நாம் அவதானிக்கலாம். உதாரணத்துக்கு மனிதன் தனது ஆயளைக் காப்பாற்றிக் கொள்ள உழைக்க வேண்டும் என்பது எல்லா மனிதர்களுக்கும் அவசியமான பொதுவிதியாகும்.

இன்னொரு உதாரணம், ஒரு செயல் ஒரு நன்மையைப் பெற்றுக் கொள்வதற்காகவே இருக்க வேண்டும் மேலும் இன்னொன்று, ஒரு மனிதன் சமூகத்தில் வாழ வேண்டியது அவசியம் என்பதாகும். அல்லது பிரபஞ்சம் உண்மையிலேயே இருசக்கின்றது அது கற்பனையோ, மாயையோ அல்ல என்று நாம் கூறலாம்: அல்லது மனிதனுக்கு அங்கங்கள் உண்டு, சக்திகளும் உபாயஙகளும் உள்ளன. அல்லது ஏனைய நிலையான கருத்துக்களிலும் போதனைகளிலும் அவற்றின் நிலையான தன்மையும், தேக்கமற்றதன்மையும், சமூகத்தின் உறுதியையும் மந்தமற்ற நிலைமையினையும் பாதிப்பதில்லை.

நிலையான சமய போதனைகள் ஒரே வகையினைச் சார்ந்தவை. உதாரணத்துக்கு நாம் இவ்வாறு கூறலாம். பிரபஞ்சத்துக்கு ஒரு இறைவனே இருக்கின்றான். சந்தோஷத்தின் எல்லா வழிமுறைகளையும் உள்ளடக்கிய தெய்வீகப் போதனையே இறைவன் மக்களுக்கு அனுப்பியுள்ளான். இது நபித்துவத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இறைவன் ஒரு தினத்தில் எல்லா படைப்பினங்களையும் அவற்றின் செயல்களுக்காக கணக்குக் கேட்க ஒன்று திரட்டுவான்.

இஸ்லாம் அதன் சமூகத்தை அமைத்து, அதன் எல்லா விடயங்களிலும் பாதுகாப்பினை அமைத்திருப்பதும் இந்த ஒரு வார்த்தையில் தான். இந்தச் சொல்லில் மறுப்பும் உறுதி மொழியும் வெளிப்படுமானால், மேலும் சாதக பாதகமான கருத்துக்கள் மோதிக் கொண்டு அதன் பெறுபேறு மூன்றாவது கோட்பாடு ஒன்றின் மூலம் உறுவானால் அதன் விளைவு சமூகத்தில் அழிவாகவே இருக்கும்.

மனித சமூகத்துக்கு முன்னேற்றப் பாதையில் ஒன்றே ஒன்றுதான் தேவைப்படுகின்றது. அது இயற்கை நலன்களை உபயோகிப்பதில் நாள்தோரும் மாற்றங்களுக்கு உட்பட்டு பரிபூரணத்தை அடைந்து கொள்வதாகும். இந்த மாற்றமும் வளர்ச்சியும் தொடர்ச்சியான விஞ்ஞான ஆய்வுகள் மூலம், செய்முறை விஞ்ஞானத்தின் நிலையான பிரயோகத்தின் மூலமும் பாதுகாக்கப்படுகின்றது. இந்த விடயம் ஒரு போதும் இஸ்லாத்தால் பரிசோதிக்கப்படாத தொன்றாகும்.

இன்னொரு விடயம், சமூக நிர்வாக முறையும்,சமூகங்கிளல் காணப்படுகின்ற முறைமைகளும் எப்போதுமே மாற்றங்களுக்கு உட்பட்டவை. உதாரணத்திற்கு எசேச்சதிகாரம் ஜனநாயகம் ஆனது. ஜனநாயகம் கம்யூனிஸமானது. இந்த மாற்றங்கள் ஒரே ஒரு காரணத்தால் தான் அவசியமாகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது இந்த முறைமைகள் எல்லாம் குறைபாடுகள் உள்ளவை. அவை ஒன்றுமே மனிதனால் விரும்பப்படும் சமூகப் பரிபூரணத்துவத்துக்கு சமமானவை அல்ல. மேலும் அவற்றால் அந்த பரிபூரணத்தை வழங்கவும் முடியாது. இந்த மாற்றங்கள் குறைபாடுகளிலிருந்து பூரணத்துவத்தை நோக்கி போக வேண்டும் என்பதல்ல. இந்த ஒழுங்கு முறைகளுக் இpடையில் ஒரு வித்தியாசம் இருக்குமானால், அது சரியானதுக்கும் தவறானதுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாகத்தான் இருக்கும்.

பூரணத்துவத்துக்கும் பூரணத்துவமற்றதற்கும் இடையிலான வித்தியாசமாக இருக்காது. இவ்வாராக சமூக ஒழுங்கு முறை ஸ்தாபிக்கப்பட்டால், முறையான கல்வி எனும் பாதையின் கீழ் மக்கள் வாழ்ந்தால், நன்மை பயக்கக் கூடிய காரியங்களைப் படித்துக் கொண்டால், நன்மைகளையே செய்தால், இந்த வழியில் சந்தோஷத்தை நோக்கி நகர்ந்தால், கொள்கை எனும் படிக்கட்டுகளில் ஏறி பூரணத்துவத்தை நோக்கி செயல்பட்டால், ஒவ்;வொரு நாளும் சந்தோஷத்தைக் கண்டு அதனை விருத்தி செய்து கொண்டால் சமூக மரபுகளையும், வாழ்க்கை முறையையும் மாற்றி அமைப்பதற்கான அவசியம் தான் என்ன? இத்தகைய மக்களுக்கு ஏற்கனவே தம்மிடம் இருப்பதை விட மேலதிகமாகத் தேவைப்படுவதுதான் என்ன?

மாற்றங்களே தேவைப்படாத சந்தர்ப்பங்களில் கூட மனிதனுக்கு எல்லா வகையிலும் மாற்றங்கள் தேவை, என்பதை தெளிவான சிந்தனையுள்ள ஒரு மனிதன் ஊர்ஜிதப்படுத்தமாட்டான்.

நீங்கள் குறிப்பிட்ட இவை எதற்குமே மாற்றங்கள் தேவையில்லை. நம்பிக்கை பொது ஒழுக்கம் போன்ற விடயங்கள் அவசியமாக மாற்றப்பட வேண்டியவை. மாற்றத்துக்குள்ளான நிலைமைகள் வித்தியாசமான சூழல்கள் என்பவற்றோடு இவையும் மாற்றத்துக்கு உட்பட வேண்டும். பண்டைய கால கருத்துக்களை விட வித்தியாசமான கருத்துக்கள் தற்காலத்தவர்க ளிடம் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது இது போலவே அவர் வாழும் வித்தியாசமான பிராந்தியங்களுடன் அவர்களின் எண்ணங்களும் வித்தியாசப்படுகின்றன.

துருவ பிரதேசத்திலும், வெப்பவலயத்திலும் உள்ள வாழ்க்கை நிலை போல மேலும் பல்வேறு வாழ்க்கை நிலைமைகள் அவர்களின் எண்ணங்களிலும், கண்ணோட்டங்களிலும் செல்வாக்கு செலுத்துகின்றன. ஒருவர் எஜமானனாக இருக்கின்றார் மற்றவர் சேவகனாக இருக்கின்றார். ஒருவர் கூடாரத்தில் வாழ்கின்றார் இன்னொருவர் பிரஜையாகவும் இருக்கின்றார். ஒருவர் செல்வந்தனாகவும் மற்றவர் ஏழையாகவும் இருக்கின்றார் ஒருவரிடம் பணம் இருக்கின்றது மற்றவரிடம் இது இல்லை இந்த வித்தியாசங்கள் எல்லாம் மனிதனின் சிந்தனையைப் பாதிக்கின்றன. ஆகவே அவை வித்தியாசமான காரணிகளாலும் காலப்பகுதிகளாலும் மாற்றமடைகின்றன. இந்த விடயத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஒரு வாசகர் கூறினால் அதற்குரிய பதில் இதுதான்.

இந்த விடயங்கள் யாவும் விஞ்ஞானம் மனிதக் கண்ணோட்டம் என்பவற்றோடு சம்பந்தப்பட்டுள்ளன. இந்தக் கொள்கைக்கு அவசியமானது, சரியும், பிழையும் நன்மையும் தீமையும் மேலதிக விவகாரங்களின் வரிசைக் கோவையில் அமைய வேண்டுமே அன்றி உண்மை யதார்த்தம் என்பவற்றின் வரிசைக் கோவையாக இருக்கக் கூடாது. இந்த கோட்பாட்டின்படி பொதுக் கொள்கை ரீதியான அறிவு இந்த மூலாதாரத்துடனும், மீள உயிர்ப்பித்தலோடும் இணைக்கப்பட்டுள்ளன. அது பேல் பொது செயல்முறைக் கண்ணோட்டம், சமூகம் மனிதனுக்கு பிரயோசனமானது, அல்லது நியாயம் சிறந்தது என்ற கருத்துக்கள,; மாறும் சூழ்நிலை, காலம் என்பவற்றோடு மாற்றமடையக் கூடிய பொதுவான விதிமுறைகளாகும்.பொதுவாக கூறும் போது இந்தக் கொள்கையை பொதுத்தன்மை அந்தஸ்தோடு பேசுவது தவறானதாகும். இது பற்றி பல இடங்களில் நாம் விவரமாகக் கலந்துரையாடி உள்ளோம்.

சுருங்கக் கூறின் இந்தக் கொள்கை ஒரே வகையான பொதுக் கண்ணோட்டத்தின் பொதுவான கொள்கை ரீதியான விடயங்களை உள்ளடக்கவில்லை.இந்தக் கொள்கையின் பொதுத் தன்மையின் சந்தேகத்தைக் காட்ட, இப்படிக் கூறுவதே போதுமானதாகும். அதாவது அது பொதுத் தன்மையைக் கொண்டிருந்தால், மேலும் முழுமையான, நிலையான பொதுக் கொள்கையைக் கொண்டிருந்தால் தனித்துவமான தொடர்புபற்ற ஒரு பிரேரணை எம்மிடம் இருந்திருக்கும் என்பதே அதன் கருத்தாகும். அவ்வாராயின் அதே கொள்கை அதுவே பொதுவானதாகவும், மாறுதல் இல்லாததாகவும் இருந்திருக்கும்.

அது ஒரு பொதுவான பிரேரணையாக இல்லாவிட்டாலும் கூட, தற்செயலானதாக மீண்டும் எம்மிடம் தனித்துவமான ஒரு பிரேரணை இருக்க வேண்டும் என்றே கூறுகின்றது. அதாவது நாம் தனித்துவமான ஒரு முறையில் இந்தக் கொள்கை பொதுவானதல்ல என்று கூறவேண்டும். எந்த வகையிலும் இந்தக் கொள்கையின் பொதுத்தன்மை செல்லுபடியற்றதும், பயனற்றதும் ஆகும். வேறு விதமாகக் கூறின், எல்லாக் கருத்துக்களும், நம்பிக்கைகளும் ஒரு நாள் மாற வேண்டும் என்ற கருத்து உன்மையாயின், இந்தக் கண்ணோட்டம் கூட மாறவே வேண்டும். மேல் சொன்ன கருத்து மாறுமாயின், அதன் கருத்து எல்லாக் கருத்துக்களும், நம்பிக்கைகளும் ஒரு நாள் மாற வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அதன் ஒரு பகுதி மட்டும் மாற்ற முடியாது.

தற்போதைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை சமயம் உத்தரவாதம் செய்யுமா?

சிலர் இப்படிக் கூறலாம்: குர்ஆன் இரக்கப்பட்ட வேளையில் இருந்த மனித நாட்டங்களை எல்லாம் இஸ்லாம் எதிர்த்தது என்பது உண்மையே. மேலும் இந்தக் காரணத்தால் தான் உண்மையான மகிழ்ச்சியையும், வாழ்க்கையின் எல்லா உயர்வுகளையும் நோக்கி இட்டுச் செல்லக் கூடியதாகவும் இருந்தது. ஆனால் காலங்களின் ஓட்டம் வாழ்க்கை முறை மாறிவிட்டது. கலாசார மற்றும் நவநாகரிகத்;தின் விஞ்ஞான தொழிநுட்ப வாழ்க்கை என்பவற்றுக்கும் 14 நூற்றாண்டுகளுக்கு முந்திய வாழ்க்கை முறைக்கும் இடையில் எவ்வித ஒற்றுமையும் காணப்படவில்லை. அன்றைய வாழ்க்கைமுறை இயற்கையின் ஆதாரப் பொருள்களோடு திருப்தியடைந்தது.

மனிதன் தனது நீண்ட கடின முயற்சிகளின் விளைவாகவே இத்தகைய முன்னேற்றகரமான அந்தஸ்தையும், வளர்ச்சியையும் அடைந்துள்ளான். இதனை பல நூற்றாண்டுகளுக்கு முன்னைய சூழ்நிலையோடு ஒப்பிடுவதானது, முழுக்க முழுக்க மாற்றமான இரு வகை;களை ஒப்பிடுவது போன்றதாகும்.

அந்தக் காலத்தில் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்ட சட்டங்களால் இன்று விசாலமடைந்தது, சிக்கலடைந்திருக்கும் வாழ்க்கை முறையை எவ்வாறு நிர்வகிக்க முடியும்? இவ்விரண்டு வாழ்க்கை முறையும் ஒன்றின் சுமையை இன்னொன்று எவ்வாறு தனது தோளில் சுமக்க முடியும்?

இதற்குரிய பதில் இதுதான் இரு யுகங்கள் வித்தியாசமானதாகத் தென்பட்டால், அதன் கருத்து அவற்றினது வாழ்க்கையின் பொதுவான நிலைகள் வித்தியாசமடைந்துள்ளது என்பதல்ல. மாறாக, சில குறிப்பிட்ட விடயங்கள் வித்தியாசமடைந்துள்ளன என்பதுதான். வேறு வார்த்தையில் கூறுவதாயின், வாழ்க்கையில் மனிதனுக்கு உணவு தெவைப்படுகின்றது. உடை, உறையுள், போக்குவரத்துச் சாதனங்களும் வசதிகளும், வாழ்வதற்கு ஒரு சமூகம், பாலியல் உறவுகள், வர்த்தக, தொழில் நுட்ப, செயல் முறை உறவுகள் என்பனவும் வாழ்க்கையில் தேவைப்படுகின்றன.

இவை மாற்ற முடியாத பொதுவான தேவைகள். மனிதனுக்கு ஒரு மனிதன் என்ற வகையிலும், அவனுடைய மனித வாழ்வின் இயற்கையான கட்டமைப்பு உள்ளவரைக்கும் அவனுக்கு இவை தேவைப்படுகின்றன. இந்த எல்லா விடயங்களிலும் ஆதிகால மனிதன் தற்கால மனிதனில் இருந்து வித்தமியாசப்பட்டுக் காணப்படவில்லை.

இந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்ட உபாயங்களிலேயே வித்தியாசம் உள்ளது. படிப்படியாக அவன் தெரிந்து கொண்ட தேவைகளிலும், அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவன் கற்றுக் கொண்ட வழிகளிலுமே வித்தியாசங்கள் உள்ளன. இந்த விடயத்தை விவரிக்க ஆதிகால மனிதன் பழங்களின் மூலமாகவும், தான் தேடிக் கொண்ட இறைச்சி போன்ற ஏனைய உணவுகளின் மூலமாகவும் இலகுவாக தனது பசியைத் தீர்த்துக் கொண்டான். ஆனால் இன்று மனிதன் ஆயிரக் கணக்கான வித்தியாசமான பண்டங்களைத் தயாரிக்கின்றான். அவனுடைய புத்திசாதுரியம், ஆற்றல் மிகு சிந்தனை என்பவற்றைக் கொண்டு ஒவ்வொன்றும் வித்தியாசமான பண்புகளையும், சுவையினையும், திறதினையும், மனத்தினையும் கொண்டதாகவும், இன்னும் விவரிக்க முடியாத விஷேடமான பண்புகளைக் கொண்டதாகவும் தயாரிக்கின்றான்.

உணவினைப் பொறுத்தமட்டில் இரண்டு வகையான வாழ்க்கை முறையிலும் எல்லா வகையான வித்தியாசங்களும் அப்பால், மனிதன் தனது பசியைத்தீர்த்துக் கொள்ளவே உணவைத் தயாரிக்கின்றான். என்பதில் எவ்வித வித்தியாசமும் இல்லை. உடை உறையுள் ஆகியவற்றிலும் இதே நிலைதான்.

உணவு, உடை, உறையுள் மற்றும் வாழ்க்கையின் ஏனைய தேவைகளைப் பொறுத்த மடடில் இந்தப் பொதுவான நம்பிக்கைகள் மனித வாழ்வின் முதல் நாளில் இருந்தே இருந்து வந்துள்ளதையும, வேறுபட்ட காலப்பகுதிகளில் அது மாற்றங்களுக்கு உட்படவில்லை என்பதையும் நீங்கள் காணலாம். மேலும் அதுபோலவே முதலாவது நம்பிக்கை, நம்பிக்கையின் முன்னேற்றகரமான கடைசிக் கட்டத்தோடு ஒத்திருக்குமானால் இயற்கையின் அழைப்புக்கு ஏற்பவும், மகிழ்ச்சியைப் பாதுகாப்பதற்குமாகவே திட்டமிடப்பட்டுள்ள இஸ்லாத்தின் பொதுச் சட்டங்கள் வாழ்க்கையின் ஓர் உபாயத்தை, இன்னொன்றால் ஈடுசெய்வதற்காக அவற்றை இல்லாதொழித்து விடவில்லை என்பதையும் காணலாம்.

 நவீன உபாயங்கள் அவற்றினிடையே பிரிவினை இன்றி இயற்கையோடு இசைந்ததாக இருப்பின் இஸ்லாம் அதனோடு ஒத்துப் போகின்றது. ஆனால் அவை படைப்பின் அடிப்படைச் சட்டங்களுக்கு முரணாக இருப்பின் அது நவீன காலத்துக்கு உரியதாயினும் சரி, ஆதிகாலத்துக்கு உரியதாயினும் சரி இஸ்லாம் அதனை ஏற்றுக் கொள்வதில்லை.

செல்வ அந்தஸ்து, பாதுகாப்பு, விதிகள், தொலைத்தொடர்பு சாதனங்களின் வசதி, நெருங்கிய தொடர்புகள், நகரம் ஒன்றினை நிர்வகிப்பதற்கான விதிமுறைகள் போன்றவை, வித்தியாசமான காலப்பகுதிகளுக்கு சொந்தமானவையாகவும் விரைவாக மாறுகின்றவையாகவும் உள்ள தற்செயலாக நடக்கின்ற சம்பவங்களாகும். இவை எல்லாமே இஸ்லாமிய சமூகத்தில் அல்லது அரசாங்க விவகாரங்களுக்கான பொறுப்பில் ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த இஸ்லாமிய அதிகாரி, அல்லது ஆளுனர் தனது இராச்சியத்துக்குள், ஒரு வீட்டின் எஜமான் தனது வீட்டு விவகாரங்களை முடிவு செய்து நிர்வகிப்பது போலவே செயல்படுகின்றார். ஒரு முஸ்லிம் சமூகத்தின் உள்ளார்ந்த வெளிவாரியான எல்லா விடயங்களிலும் முடிவு செய்யும் உரிமை இஸ்லாமிய சமூக அதிகாரிக்கு உண்டு.

ஒரு முஸ்லிம் அதிகாரிக்கு யுத்தம்-சமாதானம் தொடர்பாக முடிவு செய்யும் உரிமை உண்டு. நிதி, நிதி சம்பந்தமற்ற விடயங்களிலும் அவர் முடிவு செய்யலாம். அவருடைய முடிவு முஸ்லிம்களுடன் கலந்தாலோசனை செய்தபின் சமூகத்தின் நன்மையைக் கருதியதாக இருக்க வேண்டும். இறைவன் கூறுகின்றான்.

”..சகல காரியங்களும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும் பின்னர்(அவைபற்றி) நீர் முடிவு கட்டினால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்தும்..” (அத்தியாயம்3:159)

இவை மக்களோடு தொடர்புடைய விடயங்கள். எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் எடுக்கப்படும் இந்த தற்செயலான முடிவுகளும், விதிகளும், மாற்றத்துக்குரிய உபாயங்களுடனும் மாற்றமடையும், மேலும் சில வேளைகளில் அவை வெளிவரும் சில வேளைகளில் அவை மறைந்துவிடும். இந்த மாற்றத்துக்குரிய விதிமுறைகள், வேதத்தையும் மரபுகளையும் உள்ளடக்கிய பொதுவான தெய்வீக விதிகளில் இருந்தும் வித்தியாசமானவை. இவற்றை செல்லுபடியற்றதாக்க முடியாது. இவை பற்றி இன்னும் பல விடயங்கள் கூறலாம். இருந்தாலும் இப்போதைக்கு இது போதுமானதாகும்.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 26 = 27

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb