அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
‘‘இன்பங்களைத் தகர்த்து எறியக் கூடியதை (அதாவது மரணத்தை) நினைவு கூர்வதை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ)
புரைதா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
”மண்ணறைகளுக்கு நபித்தோழர்கள் சென்றால், அவர்கள் (பின்வரும் துஆவை) கூறும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
”அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியாரி மினல்மூஃமினீன வல்முஸ்லிமீன வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆஃபியத.” (முஸ்லிம்)
துஆவின் பொருள்:
மூஃமினான, முஸ்லிமான மண்ணறைவாசிகளே! அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும்! நிச்சயமாக நாம் அல்லாஹ் நாடினால் உங்களைச் சந்திப்போம். அல்லாஹ்விடம் நமக்கும் உங்களுக்கும் ஈடேற்றத்தைக் கேட்கிறேன்.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மதீனாவில் உள்ள மண்ணறைகளைக் கடந்து சென்றார்கள். அவற்றைத் தன் முகத்தால் முன்னோக்கி ”அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் குபூரி யஹ்ஃபிருல்லாஹு லனா வலகும் அன்துஸ் ஸலஃபுனா வநஹ்னு பில் அஸரி” என்று கூறினார்கள். (திர்மிதீ)
துஆவின் பொருள்:
மண்ணறைவாசிகளே! உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்! எங்களையும், உங்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக! நீங்கள், எங்களை முந்தி சென்றீர்கள்.நாங்கள் உங்களைப் பின் தொடர்வோம்.