Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (5)

Posted on March 19, 2010July 2, 2021 by admin

டாக்டர் ஷேக் சையது M.D

கடந்த தொடரில் நுத்பா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தம் உள்ள என்று பார்த்தோம்.

இந்தத் தொடரில் விந்துவின் சேர்மங்கள் என்ன என்ன உள்ளது என்றும் நுத்ஃபா என்ற வார்த்தை எவ்வாறெல்லாம் பயன் படுத்தப்பட்டுள்ளது என்பதையும் பார்ப்போம்.

ஓரு ஆணுக்கு ஒரு தடவை விந்து வெளியாகும் போது அதனுடைய அளவு சுமார் 2.5ml முதல் 3.5ml இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதில் ஒரு துளியில் சுமார் 40 கோடி உயிரணுக்கள் இருக்கும். அவற்றில் 70% சதவீதம் மட்டும்தான் வீரியம் உள்ளதாக இருக்கும்.

அந்த உயிரணுக்கள் தலைப்பகுதி, வால்பகுதி என இரு பகுதியைக் கொண்டிருக்கும். தலைப்பகுதி சற்று நீள உருண்டை வடிவத்திலும், வால்பகுதி சற்று நீண்ட நிலையிலும் இருக்கும். தலை 5 மைக்ரோன் அளவும், வால் 55 மைக்ரோன் அளவும் கொண்டதாகும்.

தலைப்பகுதியில் ஒரு வகை திரவும் சுரந்து கொண்டிருக்கும். அந்த திரவம் பெண்ணின் கருவரைக்குள் இருக்கும் கருமுட்டையை மூடியிருக்கும் மெல்லி திரையை தகர்த்து, கருமுட்டையை சென்று அடைவதற்கு துணை புரிகிறது. இந்த உயிரணுக்கள் கருவறையை நோக்கி நீந்தி செல்லும் தன்மை வாய்ந்தது. அவ்வாறு நீந்திச் செல்வதற்கு வாலை துடுப்பாக பயன்படுத்தி ஒரு நிமிடத்திற்கு 3mm வேகம் என்ற விகிதத்தில் முன்னேறிச் செல்கிறது.

இந்த உயிரணு கர்பப்பைய அடைந்து, பெண்ணின் கரு முட்டையுடன் சேர்ந்ததும் வால் பகுதி முறிந்து வெளியில் தங்கி விடும். அந்த கருமுட்டை உயிரணுவுடன் சேர்ந்ததும், வேறொரு உயிரணு வந்து தன்னுடன் சேர்ந்துவிடாமல் இருக்க மெல்லிய தடையை ஏற்படுத்தி விடும். சில வேளைகளில் இறைவனின் நாட்டத்தால் வேறொரு உயிரணுவும் அந்த தடையை தகர்த்துவிட்டு உள்ளே சென்றுவிடும்.

அப்போது அந்த கரு முட்டை இரண்டு உயிரணுவுடன் சேர்ந்து இரட்டை குழந்தை உருவாகுகிறது. இது போல்தான் அபூர்வமாக பல உயிரணுக்கள் பெண்கரு முட்டையுடன் சேர்ந்துவிடும் போது 3,4,5 குழந்தைகள் பிறக்கும் அதிசயமும் நடைபெறுகிறது. அல்லாஹ் அவ்வப்பொழுது இது போன்ற அதிசயங்களை நிகழ்த்தி, குழந்தை உருவாக்கல் தனது கட்டுப்பாட்டில் மட்டும்தான் இருக்கிறது என்ற உண்மையை மனித சமுதாயத்திற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறான்.

இந்த உயிரணுக்களை பாதுகாப்பாக சுமந்து வருவதற்கு சில திரவங்களும் உற்பத்தியாகும். மீன்கள் உயிர் வாழ்வதற்கு நீர் எவ்வாறு அவசியமோ அது போல இந்த உயிரணுக்கள் உயிர்வாழ்வதற்கும் சில திரவங்கள் அவசியமாகும். அவைகளை பின் வருமாறு மருத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

1. Fructose (ஃபிரக்டோஸ்)

2. Pyro Phasphates (பைரோ பாஸ்ஃபேட்)

3. Ascorbic Acid (அஸ்கார்பிக் அமிலம்) 4. Prosta glandins (புரோஸ்டோ கிளான்டின்ஸ்)

இந்தவகைத்திரவங்கள் சுமார் 60% வரை இருக்கும்.

 

1. Citric Acid (சிட்டிரிக் அமிலம்)

2. Cholesterol (கொலஸ்டிரால்)

3. Zinc Phosphates (ஜின்க் பாஸ்ஃபேட்)

4. Acid Phosphates (ஆசிட் பாஸ்ஃபேட்)

5. Bicarbonates (பைகார்பனேட்)

6. Hyalorunic Acid (ஹைலோரினிக் அமிலம்)

இந்த வகைத் திரவஙகள் சுமார் 20% வரை இருக்கும்.

 

1. Androgen (ஆன்ரோஜன்)

2. Estrogen (ஈஸ்ட்ரோஜன்)

3. Glutamic Acid (குளுட்டாமிக் ஆசிட்)

4. Inositol (இனோசிட்டால்)

5. Inhibin (இன்ஹிபின்)

6. Protein (புரதம்)

இந்த திரவங்களும், உயிரணுக்களும் சேர்ந்து 20% இருக்கும்.

 

இந்த அனைத்து வகைத் திரவங்களும் உயிணுக்கள் உயிர் வாழ்வதற்கும், பாதுகாப்பாக கர்பறைக்கு செல்வதற்கும் துணை புரிகிறது.

இந்த உயிரணுக்கள், திரவங்கள் சேர்ந்த மொத்தத்திற்கு பெயர்தான் விந்து அல்லது இந்திரியம் என்று கூறுகிறோம். இதனை இறைவன் குர்ஆனில் மாஉ என்றும், மஹீன் என்றும் குறிப்பிட்டிருப்பதை பின்வரும் வசனங்களின் மூலம் அறிந்து கொள்கிறோம்.

ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ

அற்ப நீரிலிருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட மூலத்தில் (நுத்ஃபா) மனிதனின் சந்ததிகளை உண்டாக்கினான். அல் குர்ஆன்: 32:8

أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ

அற்பமான நீரிலிருந்து உங்களை நாம் படைக்க வில்லையா? அல் குர்ஆன்: 77:20

خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ

குதித்து வெளிவரும் நீரிலிருந்து மனிதன் படைக்கபட்டான். அல் குர்ஆன்: 86:6

أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى

(கர்பத்தில்) செலுத்தப்படும் விந்துவில் (மனியில்) உள்ள ஒரு நுத்ஃபாவாக அவன் இருக்கவில்லையா? அல் குர்ஆன்:75:37.

மேற்கூறப்பட்ட முதல் மூன்று வசனத்தில் விந்துவின் மொத்தத்திற்கு மாஉ என்ற வார்த்தையையும், நான்காவது வசனத்தில் மஹீன் என்ற வார்த்தையையும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆனால் நுத்ஃபத் என்ற வார்த்தைக்கு விந்து என்று பொருள் கொள்வதை விட, விந்துவில் உள்ள உயிரணு என்று அர்த்தம் கொள்வது குர்ஆனுடைய வசனங்களுடன் மிகவும் பொருந்தி வருகிறது. இந்த அர்த்ததைக் அந்த வார்த்தைக்கு கொடுத்து பொருள் விளங்கும் போது அல்லாஹ் எவ்வளவு ஆழமாக இந்த விஞ்ஞான செய்தியை சொல்லியிருக்கிறான் என்பதும் நமக்குத் தெரியவரும்.

நுத்ஃபா என்பதற்கு உயிரணு என்று பொருள் கொள்ள வேண்டும் என்பற்கு பின் வரும் வசனங்கள் சான்றாக உள்ளன.

அந்த வசனங்களை ஆய்வு செய்யும் முன்பு இன்றைய மருத்துவ அறிவியலில் இந்த உயிரணு குறித்து என்ன முடிவுக்கு வந்துள்ளது என்ற செய்தியைத் தெரிந்துக் கொள்வோம். கர்பப்பையை நோக்கிச் செலுத்தப்படும் இந்திரியம் அனைத்தும் கர்ப்பையை சென்று அடைவதில்லை. மாறாக ஒரே ஒரு உயிரணு மட்டும்தான் பெண் கருமுட்டையுடன் சேர்ந்து, பல மாற்ற நிலைகளுக்கு உள்ளாகி மனித உருவம் பெற்று குழந்தையாக பிறக்கிறது.

இந்த விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டு பின் வரும் இறைவசனங்களை ஆய்வு செய்து பார்ப்போம்.

أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى

(கர்பத்தில்) செலுத்தப்படும் விந்துவில் உள்ள ஒரு நுத்ஃபாவாக அவன் இருக்கவில்லையா? அல் குர்ஆன்:75:37.

இந்த வசனத்தில் கர்ப்பப்பையில் செலுத்தப்படும் இந்திரியத்தில் உள்ள நுத்ஃபா வாக ஆகியருக்க வில்லையா? என்று இறைவன் வினவுகிறான். இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள நுத்ஃபா என்ற வார்த்தைக்கு இந்திரியத் துளி என்ற பொருள் கொடுப்பதைவிட உயிரணு என்ற பொருள் கொடுப்பது இந்த தொடருக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.

அதாவது இந்திரியத்தின் ஒரு துளியாக அவன் இருக்க வில்லையா? என்று பொருள் கொடுப்பதைவிட, இந்திரியத்தில் அவன் ஒரு உயிரணுவாக இருக்க வில்லையா? என்ற பொருள் கொடுத்து இந்த வசனத்தை வாசிக்கும் போது மிகப் பொருத்தமாக உள்ளது.

ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ

பின்னர், (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பபையில்) அவனை நுத்ஃபா ஆக்கினோம். அல் குர்ஆன்: 23:13.

இதற்கு முந்திய வசனத்தில் முதல் மனிதரை களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம் என்ற செய்தியைக் கூறி விட்டு அதற்குப்பிறகு இந்த வசனத்தைக் கூறியுள்ளான் இறைவன்.

முதல் மனிதர் எவ்வாறு களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டாரோ அது போல அவரது சந்ததிகளை அற்பமான நீரின் மூலப்பொருளிலிருந்துதான் படைத்தேன் என்று உணர்த்துவதற்காக இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம். இதையே 32வது அத்தியாயம் 8வது வசனத்தில் குறிப்பிடுகிறான்.

அற்ப நீரிலிருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட மூலத்திலிருந்து மனிதனின் சந்ததிகளை உண்டாக்கினான். அல் குர்ஆன்: 32:8

அந்த மூலம்தான் உயிரணு.

அதனை சுலாலத் என்று 32வது அத்தியாயம் 8வசனத்திலும், நுத்ஃபா என்று மேற்குறிப்பிட்ட வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள நுத்ஃபத் என்ற வார்த்தைக்கு உயிரணு என்று பொருள் கொள்ள வேண்டும் என்று நாம் சொல்வதற்கு காரணம் நுத்ஃபாவை பாதுகாப்பான கர்ப்பப்பையில் ஆக்கியதாக இறைவன் கூறுகிறான். கர்ப்பப்பையில் ஆக்கப்படுவது ஒரு துளி இந்திரியம் அல்ல, அதில் உள்ள ஒரு உயிரணுதான் என்பது அறிவியல் உலகில் ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக நிரூபணம் செய்யப்பட்ட விஷயமாகும். அறிவியலுக்கு எதிரான கருத்தை குர்ஆன் ஒரு போதும் முன் வைக்காது. எனவே இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள நுத்ஃபா என்ற வார்த்தைக்கு உயிரணு என்று பொருள் கொள்வதே சரியானதாகும்.

அதன்படி இந்த வசனத்தின் பொருள் பின்வருமாறு இருக்கும்.

பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) அவனை (பெண் முட்டையுடன் சேரும்) ஒரு உயிரணுவாக ஆக்கினோம்.

ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً

பின்பு நுத்ஃபாவை அலகத்தாக படைத்தோம். அல் குர்ஆன்: 23:14

இந்த வசனத்தில் நுத்ஃபாவை அலகத்தாக (இது குறித்து பின்பு விளக்கப்படும்.) படைத்தோம் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அலகத் என்ற நிலைக்கு மாறுவது கர்ப்பப்பைக்குள் சென்ற ஒரு உயிரணு மட்டும்தான். ஒரு துளி இந்திரியம் அல்ல என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும்.

மேற்கூறப்பட்ட மூன்ற வசனங்களிலும் நுத்ஃபா என்ற வார்த்தையை உயிரணு என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்படடிருப்பதை காணலாம். இதன்படி நுத்ஃபா என்பதற்கு உயிரணு என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

إِنَّا خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ

நிச்சயமாக நாம் மனிதனை கலப்பான விந்தணுவிலிருந்து படைத்தோம். அல் குர்ஆன்: 76:2

நுத்ஃபா என்பதற்கு விந்தணு என பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டதின் அடிப்படையில் மேலே கூறப்பட்ட 76 வது அத்தியாயம் 2 வது வசனத்தில் இடம் பெற்றுள்ள நுத்ஃபா என்ற வார்த்தைக்கு விந்தணு என்று பொருள் கொள்ளும் போது அம்ஷாஜ் (கலப்பான) என்ற வார்த்தைக்கு இந்த விந்தணுவை பாதுகாப்பாக சுமந்து வருவதற்கு பயன்படும் வேதியல் திரவங்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். காரணம் அந்த திரவங்கள் இன்றி விந்தணுக்கள் மட்டும் இருக்க முடியாது.

அதன்படி வேதியல் திரவங்களுடன் கலந்த ஒரு விந்தணுவிலிருந்து மனிதனை நாம் படைத்தோம் என்று இந்த வசனத்திற்கு பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறு பொருள் கொள்ளும் போது இந்த விந்தணுவை பாதுகாப்பதற்கு பல திரவங்கள் இருக்கிறது என்ற ஒரு பெரிய அறிவியல் உண்மையை 1423 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வசனத்தில் இறைவன் கூறியருப்பதை புரிந்து கொள்ளலாம். அந்த விந்தணுவோடு கலந்த பல்வேறு வேதியியல் திரவங்கள் உண்டு என்றும், அது என்ன என்ன என்பதையும் இப்போதுதான் மருத்துவ அறிவியல் உலகம் கண்டு பிடித்துள்ளது.

”Jazaakallaahu khairan” source: http://www.islamkalvi.com/portal/?p=4605

இன்ஷா அல்லாஹ் தொடரும்

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

50 − 40 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb