Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இந்து மதமும் இஸ்லாமும் (5)

Posted on March 18, 2010 by admin

இருபத்தைந்து (25) நபிமார்கள் பெயரே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. (உ-ம்) ஆதம் (அலைஹிஸ்ஸலாம்), நூஹ் (அலைஹிஸ்ஸலாம்), இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்), மூஸா (அலைஹிஸ்ஸலாம்), தாவூத் (அலைஹிஸ்ஸலாம்), சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்), ஈஸா(அலைஹிஸ்ஸலாம்), முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) போன்ற இறைத்தூதர்கள்.

ஹதீஸின்படி உலகிற்கு இதுவல்லாமல் பல நபிமார்கள் இறைவனால் அனுப்பபட்டதை தெளிவுபடுத்துகிறது. அவ்வாறு அனுப்பட்ட இறைத்தூதர்கள் அவர்கள் சார்ந்திருந்த சமூகத்தை ஒரு குறிப்பிட்ட காலம் வாழும் வரை நேர் வழிப்படுத்தவே வந்தனர். அருள்மறை குர்ஆன் கூறுகிறது:

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான் இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்) ”நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன் நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன் அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன் அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோதையும் உயிர்ப்பிப்பேன் நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்ற நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவென். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்). (3:49)

நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இறுதி இறைத்தூதராவார்

நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இறுதி இறைத்தூதராவார் என்பதை கீழ்கண்ட குர்ஆனி வசனம் தெளிவுபடுத்துகிறது.

முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.(33:40)

நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் நபி ஆவார்.

நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் நபி ஆவார் என்பதை கீழ்கண்ட குர்ஆனி வசனம் தெளிவுபடுத்துகிறது.

”(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை”. (21:107)

”இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.(34:28)

ஹதீஸ்: ஒவ்வொரு நபிமார்களும் அவர்களின் சமுதாய மக்களுக்காக மட்டுமே அனுப்பபட்டனர். நான் மனித சமுதாயம் அனைத்துக்கும் நபியாவேன். (புகாரி: ஜாபிர்(ரலி))

குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான எந்த நபி மொழிகளிலும் தெளிவான ஆதாரங்கள் எதுவும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் குறித்து காணப்பட்வில்லை. மேலும், இராமர் குறித்தோ கிருஷ்ணர் குறித்தோ எந்தப் பெயரும் கூட குர்ஆன், ஹதீஸ்களில் தென்படவில்லை. ஆகவே அவர்கள் இறைத்தூதர்களாக இருக்கவும் செய்யலாம் இல்லாமலும் இருக்கலாம். உறுதியாக இருவரும் இறைத்தூதர்கள் தான் என்று எவரும் கூற வியலாது. சில முஸ்லீம்கள் அரசியல்வாதிகள் மாற்று மதத்தாரின் ஓட்டுக்களைப் பெற அவர்களின் மனதில் இடம் பிடிக்க ராம் எனக்கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறே. ஏனெனில் ராம் இறைத்தூதரா? ஏன்பதே தெளிவு செய்யப்பட்டாத போது குர்ஆன் ஹதீஸின் தெளிவின்றி மனோ இச்சைப் பிரகாரம் இவ்வாறு கூறுவது முரணானது. அநேகமாக அவர்களும் இறைத்தூதர்களாக இருந்திருக்கலாம், அல்லாஹ் அறிந்தவன் என்றே கூறவேண்டும்.

இராமரும், கிருஷ்ணரும் இறைத்தூதர்களாகயிருந்தாலும் கூட இன்றும் நாம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையே பின்பற்றுதல் வேண்டும். ஏனெனில் இராமரும், கிருஷ்ணரும் இறைத்தூதர்களாக இருந்திருப்பினும் அவர்கள் குறிப்பிட்ட கால கட்டத்துக்கு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கே இறைத்தூதர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் இன்றோ ஒட்டு மொத்த உலக மனித சமுதாயத்தாருக்கும் (இந்தியா உட்பட) இறுதி இறைத்தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையே பின்பற்றுதல் வேண்டும்.

கேள்வி: பிறக்கும் குழந்தைகள் சில ஆரோக்கியமானவையாகவும் சில அங்கஹீன மாகவும் பிறக்கின்றனவே ஏன்? கடவுள் நீதி செலுத்துபவர் தானா?

பதில்: அல்லாஹ் மனிதனை பல்வேறு சோதனைக் களம் என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.

”உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.”(67:2)

அல்லாஹ் மனிதனை பல்வேறுவழிகளில் சோதிக்கிறான் பள்ளிகளில் நிகழும் தேர்வுகளில் வினாத்தாள்கள் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு கேள்விகள் மாற்றி மாற்றி கேட்கப்படுகின்றன. அதுபோன்று மனிதனை படைத்த இரட்சகன் பல்வேறு வழிகளில் சோதிக்கின்றான் அதாவது சில குழந்தைகளை நோயுற்றதாகவும் சில குழந்தைகளை செல்வ நிலையுடனும் சிலதை வறுமையுடனும் பிறக்க வைக்கிறான்.

சோதனைகளில் எதிர்கொள்ளும் துன்பத்தைப் பொறுத்தே தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அல்லாஹ் தன் படைப்புகளை அதிகம் சோதித்தால் அச்சோதனையின் கடினத்தைப் பொறுத்து அதன் மீது வழங்கும் தீர்வில் எளிமையைக் கையாள்கிறான். இதனை எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது ஏழ்மையில் உழலும் ஒருவன்தான் சுய தேவையைப் பூர்ததி செய்யவே மிக அல்லலும் துன்பமும் படுகிறான். எனவே ஜக்காத் அவன் மீது சுமத்தப்படவில்லை. ஆகவே ஜக்காத் என்னும் இஸ்லாமியக் கடமையைப் பொறுத்தவரை இந்த ஏழை நூறு சதவீத பலனை நுகர்கிறான். மாறாக பணம் படைத்து செல்வந்தனோ ஜக்காத் வகையில் பல கேள்விகளுக்கு இறைவனிடம் ஆளாகி ஏழை பெற்றது போல் முழுப்பலனையும் பெற முடியாமல் சிக்கித் தவிக்கிறான். ஆக சோதனையின் கடினம் ஒருவனின் மறுமை வாழ்வில் தீர்வில் எளிமையை வழங்குகிறது.

சிலரை அல்லாஹ் குருடர்களாக, செவிடர்களாக அங்கஹீனனாகப் படைப்பதன் காரணம் அக்குழந்தை செய்த எந்தத் தீங்கும் அல்ல மாறாக அதன் பெற்றோர்கள் அல்லாஹ்வின் சோதனைக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றனர். என்றே பொருள் கொள்ளவேண்டும். இச்சோதனையில் அப்பெற்றோர்கள். ஈமானிய உறுதியுடன் பொறுமை காக்கின்றனரா? புலம்பித்தீர்க்கின்றனரா என சோதித்தறியவே. இதை கீழ்கண்ட அருள் மறை வசனம் தெளிவுபடுத்துகிறது.

”நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.” (8:28)

சிலை வணக்கம் மனதை ஒரு நிலைப்படுத்தவா?!

கேள்வி: இந்து மதக்குருக்களும், அறிஞர்களும் சிலை வணக்கத்தை வேதங்களும், ஸ்ருதிகளும் தடுத்திருக்க இந்துக்கள் சிலை வணக்கத்தை ஏன் மேற்கொண்டுள்ளனர் என்ற கேள்விக்கு கடளை வழிபாடு செய்வதில் மன நிலையை உறுதியாக ஒரு முகப்படுத்த சிலை வணக்க வழிபாடு அத்தியாவசியமாகிறது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் எவ்வாறு உருவமின்றி மனதை ஒருமைப்படுத்த முடிகிறது?

பதில்: இந்துப் பண்டிதர்களும் அறிஞர்களும் இறை வழிபாட்டில் மனதை ஒரு நிலைப்படுத்த மட்டுமே, சிலை தேவைப்படுகிறது. ஒரு நிலைப்படுத்துப் பட்டபின் சிலையின் அவசியமில்லை எனக்கருத்துக் கூறுகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ உருவமற்ற இறைவனை அவனின் தன்மைகளை (சிபத்துகளை) மனதில் கொண்டு வணக்க வழிபாடகளின் போது நாம் சக்திமிகு படைத்த வல்லோனுடன் உரையாடுகிறோம் எனும் தூய எண்ணத்துடன் தம் மனதை ஒரு நிலைப் படுத்திவிடுகின்றனர். சிலைகள் போன்ற உருவங்களின் அவசியம் முஸ்லீம்களுக்கு தேவைப்படுவதில்லை.

குழந்தை இடி ஏன் முழங்குகிறது எனக் நம்மிடம் கேட்டால்? நாம் அக்குழந்தைகளிடம் பாட்டி வானில் மாவு ஆட்டுகிறாள் ஆகவே அவ்வாறு சப்தம் கேட்கிறது என்று பதில் கூறகிறோம். அக்கேள்விக் குறிய இப்பதிலைக் குறித்து அக்குழந்தைகள் ஆழமாக சிந்திக்க வியலாததால் நம் பதிலில் திருப்தியுறுவது போல் ஆரம்பத்தில் இறை வழிபாட்டில் மனதை ஒரு நிலைப்படுத்த சிலை வணக்கம் அவசியப்படுகிறது என்று ஸ்வாமி ஒருவர் சிலைவழிபாட்டை நியாயப் படுத்துகிறார். ஆனால் இஸ்லாமமோ தெளிவாக எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்துபோல் பொய்யாகக் கூறுவதையும் தடைசெய்கிறது.

குழந்தையிடம் கூறும் அப்பொய்க்காரணம் அக்குழந்தை பள்ளிக்கு செல்லும் நாளில் அங்கு ஆசிரியர் கற்பிக்கும் போது ”இடியானது மின்னலுக்கு பின் ஏற்படுகிறது” என்ற செய்தியைக் கேட்டதும் ஆசிரியர் பொய்சொல்கிறார் அல்லது நம் பெற்றோர் நமக்குச் சொன்னது பொய்யா? என்ற ஆராய்ச்சியில் இறங்கும். ஆகவே சுருக்கமாக குழந்தைகளுக்கு இந்தப் பதிலை பொய் கலவாமல் கூற வேண்டியது. நமக்கு பதில் தெரியாத பட்சத்தில் தெரியவில்லை என்ற உண்மைப் பதிலையே கூற முயற்சிப்பது பெற்றோரின் கடமை.

மனதை ஓர்மைப் படுத்த சிலை வணக்கம் நாடுவோரின் மனோதத்துவம் சரியா? மனதை ஒரு நிலைப் படுத்த ஆரம்பத்தில் சிலை தேவைப்படுகிறது என வாதிவோர் கூற்று முற்றிலும் அபத்தமானது. சில இந்து மதப் பண்டிதர்கள் சிலை வணக்க வழிபாட்டை சரியென வாதிடும்போது மனதை ஆரம்பத்தில் ஒரு நிலைப் படுத்த சிலை அவசியமாகிறது. ஒருமைப்படுத்தப்பட்ட பின் சிலை தேவையில்லை என்று கூறுகின்றனர். ஆரம்பத்தில் வணக்க வழிபாட்டுக்கு பயிற்று விக்கப்படும் மாணவன் ஒருவனுக்கு இச்சிலை தேவைப்படுகிறது. பின்னர் அவசியமில்லை என்று அழகாக கூறுகின்றனர்.

ஆனால் ஆரம்ப நிலையில் மாணவனுக்கு கற்றுக் கொடுக்கப்படும் இரண்டும் இரண்டும் 4 என்ற நிலை தான் அவன் முதல் வகுப்பிலிருந்து ஆயு படிக்கும் வரை இறக்கும் வரை தொடர்கிறது. ஆகவே அடிப்படை என்றும் மாறுவதில்லை. ஆரம்பத்தில் இருக்கும் அடிப்படையே அஸ்திவாரம் அது என்றென்றும் பின் பற்றக் கூடிய ஒன்றே. ஆகவே சிலை வணக்கம் என்ற தவறான கொள்கை மனதை ஒருநிலைப்படுத்த என்று கொள்வது மிகமிக அபத்தமானது வேதங்கள் இறைவனைப் பற்றிக் கூறும் போது அவன் உருவமற்றவன் ஏகன் என்றே கூறுகின்றன. இன்னும் உங்களின் மாணவன் இரண்டும் இரண்டும் 5 எனக் கூறினால் அவனை அப்பொழுதே 4 எனத் திருத்துவது போல் சிலைவணக்கம் என்பதையும் திருத்த இந்துப் பண்டிதர்கள் முற்படவேண்டடும்.

முஸ்லிம்கள் கஃபாவை ஏன் வணங்குகின்றனர்?

கேள்வி: இஸ்லாம் சிலை வணக்கத்தை எதிர்க்கிறது இருப்பினும் முஸ்லீம்கள் ஏன் கஃபாவைத் தொழுகிறனர்?

பதில்: முஸ்லீம்கள் தொழுகையில் கஃபாவை வணங்கவில்லை மாறாக கஃபா இருக்கும் திசை நோக்கி தம் முகத்தை வைத்துக் கொண்டு தொழுகின்றனர். (முன்னோக்கியவர்களாக) இது இஸ்லாமியர்களின் வணக்க வழிபாடுகள் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதற்காக இரட்சகனின் விருப்பப்படி நடக்கிறது.

”(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம் எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம் ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் தொழுங்கள் நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள் அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை”. (2:144)

ஆகவே கிழக்கு பாகங்களில் இருப்போர் கஃபா இருக்கும் மேற்கு நோக்கியும் மேற்கில் இருப்போர் கஃபா இருக்கும் கிழக்கு நோக்கியும் தொழுவர்.

முதன் முதலில் உலக வரைபடத்தைத் தந்தவர்கள் முஸ்லீம்களே. அவர்களின் வரைபடத்தில் தெற்கு மேலும் வடக்கு கீழும் கஃபா எனும் இறையாலயம் வரைபடத்தின் நடுவிலும் இருந்தது. பின்னரே மேற்கத்தியர்கள் வரைபடத்தை மாற்றியமைத்தனர். வடக்கை மேற்புறமும் தெற்கை கீழ் புறமுமாக மாற்றினர். இருப்பினும் இவ்வரை படத்திலும் கஃபா உலகின் மையமாக உள்ளது.

கஃபாவை வலம் வருவது ஓரிறைக்கொள்கையை உணர்த்துவதற்கே. மக்காவிலுள்ள கஃபாவை முஸ்லீம்கள் வலம் வருவர், இதற்கு தவாஃப் என்று பெயர். ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு மையம் (Center) இருப்பது போல் ஒட்டு மொத்த உலக படைப்புகளுக்கம் ஒரு இரட்சகன் உள்ளான் என்பதை பறைசாற்றுவதாக உள்ளது.

நீ ஒரு கல்லாக உள்ளாய். உன்னால் எனக்கு எந்த பயனையோ, தீங்கைபோ செய்யவியலாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை தொட்டு முத்தமிடுவதை நான் கண்டிராவிடில் உன்னை நான் ஒரு போதும் தொட்டிருக்கமாட்டேன் (முத்தமிட) என்று உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிற செய்தியை ஹதீஸ் புகாரியில் காண்கிறோம்.

நாம் முஸ்லிம்கள் கஃபாவை வணங்குவதில்லை. மாறாக கஃபாவை படைத்த அல்லாஹ்வையே வணங்குகிறோம். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கஃபா மீது ஏறி பாங்கோசை ஒலித்ததை ஹதீஸ்களில் காண்கிறோம்.

‘;Jazaakallaahu khairan” Source: இஸ்லாம்கல்வி.காம் 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + = 14

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb