Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்!

Posted on March 17, 2010 by admin

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்!

ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கானபாங்கொலி கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில்எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக ”விடிவதற்கு இன்னும் நேரம்இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு” என்றான்.

”தூங்கினால் ஜமாத்தோடு தொழமுடியாமல் போய்விடுமே” என்றேன்.

அதற்கு ஷைத்தான் ”நான்அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப்போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்துகொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். தொழ மறந்தால் வீட்டில் தனியாகதொழ அனுமதி இருக்கிறதே! உன்னை வருத்திக் கொள்ளாதே! இஸ்லாமிய மார்க்கம்இலேசானது. அதை கடினமாக்கி விடாதே!” என்றான்.

அவன் பேச்சில் மயங்கி உறங்கிவிட்டேன். சூரியன் உதயமாகி நன்கு வெளிச்சம் பரவிய பின்பே விழித்தேன். அப்பொழுது ஷைத்தான் எதிரில் வந்து ”வருத்தப்படாதே! நன்மை சம்பாதிக்க பல வழிகள்இருக்கிறது” என்றான்.நான் தௌபா செய்ய நாடினேன்.

உடனே ஷைத்தான் ”உன் இளமைப் பருவம் முடியுமுன்அதை முழுமையாக அனுபவி” என்றான்.

நான் ”மரணம் வந்து விடுமே என அஞ்சுகிறேன்” என்றேன்.

அதற்கவன் ”பைத்தியம் மாதிரி பேசாதே. உன் வாழ்வு இப்பொழுது முடிவடையாது” என்றான்.

நான் அல்லாஹ்வின் ஞாபகத்தில் (திக்ர்) ஆழ்ந்தேன். உடனே அவன் என் உள்ளத்தில்உலகத்தின் பல்வேறு இன்பங்களைப் பற்றிய எண்ணங்களை விதைத்தான்.

”நான்அல்லாஹ்விடம் துஆ செய்வதை நீ தடுக்கிறாய்” என்றேன்.

”இல்லை, இல்லை. நீ இரவுபடுக்குமுன் துஆ செய்யலாமே” என்றான்.

”நான் உம்ரா செல்ல நாடியுள்ளேன்” என்றேன்.

”நல்லது. ஆனால், சுன்னத்தை விட ஃபர்ளுதானே முக்கியம். நீ உம்ரா செல்லாதே, ஹஜ் செல்ல முயற்சி செய்” என்றான்.

நான் குர்ஆன் ஓத முற்பட்டேன். உடனே அவன் ”நீ ஏன் பாடல், கவிதைகளை பாடிஉன்னை சோர்விலிருந்து விடுவிக்க மறுக்கிறாய்?” என்றான்.

நான் ”பாடல் பாடி கூப்பாடுபோடுவது ஹராம்” என்றேன்.

உடனே அவன் ”மார்க்க மேதைகளிடையே இசை, பாடல்குறித்து கருத்து வேற்றுமை உள்ளது” என்றான்.

”இசையை ஹராம் என்று கூறும்ஹதீஸ்களை நான் படித்துள்ளேன்” என்றேன். உடனே அவன் ”அந்த ஹதீஸ்களின்அறிவிப்பாளர்கள் வரிசை பலஹீனமானது” என்றான்.

அந்த சமயத்தில் ஒரு அழகிய இளமங்கை என்னை கடந்து சென்றாள். நான் என் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன். உடனே அவன் ”என்ன வெட்கப்படுகிறாய்?முதல் பார்வை தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே!” என்றான். ”அந்நியப் பெண்ணை பார்ப்பதுநரகில் தள்ளிவிடும் என அஞ்சுகிறேன்” என்றேன்.

அவன் சிரித்து விட்டு ”இயற்கை அழகைகலைக்கண்ணோடு ரசிப்பது அனுமதிக்கட்டதுதான்” என்றான்.

”நான் தாவா-அழைப்புப்பணி செய்ய நாடியுள்ளேன்” என்றேன்.

உடனே அவன், ”ஏன் நீதர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க விரும்புகிறாய்?” என்றான்.

”என் நோக்கம் இஸ்லாத்தைபிறருக்கு எடுத்து இயம்புவது” என்றேன்.

உடனே அவன் ”இல்லை உன் நோக்கம் உன்னைஎல்லோரும் பெரிய பேச்சாளன் எனப் பாராட்ட வேண்டும். இந்த பெருமை தான் உன்அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். அதனால், தாவாவை விட்டு விட்டு உன் சொந்தவேலையை செய்” என்றான்.

நான் ”பிர்அவ்ன் எப்படி?” என்றேன். அதற்கு அவன் ”அவனுக்கு என் ஆதரவு உண்டு. அவன்வெற்றி பெற விரும்பினேன்” என்றான்.நான்

”அபு ஜஹ்ல் பற்றி என்ன நினைக்கிறாய்?” எனப் பேச்சை மாற்றினேன்.அதற்கு அவன், ”அப்படிக் கேளு. நானும், அவனும் உடன் பிறவா சகோதரர்கள் என்று” உற்சாகமாகக் கூறினான்.

நான் ”அபூ லஹப் எப்படி?” என்றேன். அதற்கு அவன் ”நாங்கள் என்றென்றும் இணைபிரியாததோழர்கள்” என்றான்.

நான் ”லெனின் எப்படி?” என்றேன். அதற்கு அவன். ”என் சிறந்த சீடர், ஸ்டாலின் என்ற என்சிறந்த தளபதியை உருவாக்கினார்” என்றான்.

நான் ”மஞ்சள் பத்திரிக்கைகள் பற்றி?” என இழுத்தேன். உடனே அவன் ”அவை தான் என்வேத புத்தகங்கள்” என்றான்.நான்

”மார்க்கப் பத்திரிக்கைகள் பற்றி என்ன கூறுகிறாய்?” என்றேன். அதற்கு அவன் ”அல்-ஜன்னத், சமரசம், விடியல் வெள்ளி, அல் முபீன், ஒற்றுமை, முஸ்லிம் பெண்மணி பற்றித்தானே கேட்கிறாய்? அவர்கள் எல்லாம் காசு சம்பாதிக்கும் எழுத்து வியாபாரிகள். அவற்றைநான் படிப்பது வீண் விரயம்” என்றான் கேலியாக. 

நான் ”டி.வி., சாடிலைட் சேனல் பற்றி என்றேன். அதற்கு அவன் அவை தான் மக்களைஎன்றென்றும் என் ஞாபகத்திலேயே வைத்திருப்பவை” என்றான்.

நான் ”பிபிசி, சிஎன்என் சேனல் பற்றிக் கூறு” என்றேன்.

அதற்கு அவன் ”அவை மட்டுமல்ல சன், ஜெயா, விஜய், ஸ்டார், ஜீ, ஸஹாரா, தமிழன், சோனி, பொதிகை, தூர்தர்ஷன், ராஜ்இவையெல்லாம் என் ஆயுதங்கள். அதன் மூலம் தான் விஷம் தடவிய தேனை மக்கள்பருகுமாறு செய்கிறேன். முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை இவைமூலமே வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்” என்று பெருமையாகக் கூறினான்.

நான் காபி ஷாப், இண்டர்நெட் கஃபே எப்படி? என்றேன். அதற்கு அவன் அல்லாஹ்வின்நினைவிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் மக்களைத் திசை திருப்பும் எந்த செயலையும் நான்வரவேற்கிறேன் என்றான்.நான் சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பிளாஸா பற்றி என்ன கூறுகிறாய்?என்றேன்.அதற்கு அவன் அவை தான் என் தோழர்கள் கூடும் சங்கம்-கிளப் , என்றான்.

நான் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன நினைக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் என்எண்ணங்கள், நோக்கங்கள், பிரார்த்தனைகள், சொத்துக்களை அவர்களுக்கு அளித்து,அவர்களை இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கினேன் என்று பெருமையோடு கூறினான்.

நான் இஸ்ரேல் யூத நாடு பற்றி என்ன நினைக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் நீ புறம்பேசாதே. என் விருப்பத்திற்குரிய என் தாய் நாட்டை பற்றி தவறாக பேசி என்னைநோகடிக்காதே என்றான்.நான் வாஷிங்டன் பற்றி என்ன சொல்கிறாய்? என்றேன். அதற்கு அவன் அதுவே என் புகுந்தவீடு. என் இராணுவம் அங்கு தான் நிலைகொண்டுள்ளது. என் தலைமை அலுவலகமும்அதுவே என்று பெருமையாகக் கூறினான்.

நான் மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறாய்? என்றேன். அதற்கு அவன் பேராசை, சந்தேகம்,வீண் பொழுது போக்கு அம்சங்கள், பாடல், ஆட்டம், குழப்பம் மற்றும் பொய், போலியானநம்பிக்கைகள் மூலம் தான். இன்னும் புறங்கூறுவது, வீண் வதந்திகளைப் பரப்புவது,நேரத்தை வீணடிப்பது, தேவையற்ற விவாதங்கள், இவற்றின் மூலம் வழிக்கெடுக்கின்றேன்.ஆமாம், என்ன நீ என் தொழில் ரகசியங்களை கேட்கின்றாயே, எதற்கப்பா? என்றுவினவினான்.

சரி மார்க்க அறிஞர்களை எப்படி வழிதவறச் செய்கிறாய்? என்று நான் வினவினேன். அதற்குஅவன் அது தான் மிகவும் சுலபம். பெருமை, புகழ், பாராட்டு, கர்வம், பொறாமை, இயக்கம்மூலம் தான் என்றான்.

சரி வியாபாரிகளை எப்படி உன் வழிக்கு கொண்டு வருகிறாய்? என்று நான்வினவினேன்.அதற்கு அவன் அவர்களை லஞ்சம் கொடுக்கவும், வட்டிக்கு கடன் வாங்கவும்,கொடுக்கவும் மற்றும் ஜகாத், ஸதகா கொடுப்பதை விட்டு தடுப்பது, கலப்படம், மோசடிசெய்யத் தூண்டியும் அவர்களை சரிகட்டுகிறேன் என்றான்.

நான் பெண்களை எப்படி வழிகெடுப்பது? எனப் பேச்சை மாற்றினேன்.

அதற்கு அவன் சபாஷ்.நீ அவர்களை வழிகெடுக்க யோசனை கேட்கிறாய். எக்ஸலண்ட். என் வழிமுறை என்னதெரியுமா? அவர்கள் உள்ளத்தில் பேரழகி என்ற மாயையை, போதையை ஏற்படுத்தி, தங்கள்அங்க அவயங்களை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாக்கத் தூண்டுவது.ஹலாலைவிட ஹராமை சிறந்ததாக அவர்களுக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குவது.ஒரு பெண்ணை வழிகெடுத்தால் அவள் மூலம் குறைந்தது நான்கு ஆண்களை வழிதவறச்செய்யலாம். 1. தந்தை, 2. சகோதரன், 3. கணவன், 4. மகன். சுருங்கச் சொன்னால் ஒருபெண் மூலம் ஒரு குடும்பத்தையே வழிகெடுக்கலாம் என உற்சாகம் கொப்பளிக்கக்கூறினான்.

நான் இளைஞர்களை எப்படி சரிகட்டுகிறாய்? என்றேன். அதற்கு அவன் சினிமா, இசை,இண்டர்நெட், டிஸ்கோ, காதல், சிகரெட், போதை மருந்து, கவர்ச்சியாக உடைஉடுத்துவது, சைட் அடிப்பது, மார்க்க விஷயத்தில் அசட்டை, அரசியல், இயக்க வெறி மற்றும்ஹராமை பேண போலியான ஆதாரங்களை காட்டுவது மூலம் தான் என்றான்.

நான் புதிய கலாச்சாரம் பற்றி கூறேன்என்றேன். அதற்கு அவன் என் கொள்கைகளை முழுவதும் பின்பற்றி, பரப்பும் சினிமா மற்றும்பத்திரிக்கை உலகைச் சார்ந்த என் சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம் மக்களைஇஸ்லாத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆகவே அது சிறந்தது தானே? என்றான்.

நான் மூட நம்பிக்கைகள் குறித்து என்ன கூறுகிறாய்? என்றேன். அதற்கு அவன் அது தான்என் ஈமான். அதை பரப்புபவர்கள் மந்திரவாதிகளும், ஜோஸ்யர்களும். நாங்கள் மூவருமேவௌ;வேறு பெயர்களுடைய ஒரு தாய் மக்கள் என்றான்.

நான் ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைப்பவர்களை விமர்சனம் செய் என்றேன்.அதற்கு அவன் கோபமாக அவர்கள் என்னை சிறுமைப்படுத்தி, நோவினை செய்கிறார்கள். என்பலத்தைக் குலைத்த சதிகாரர்கள்.நான் கஷ்டப்பட்டு வழிகெடுத்தவர்களையெல்லாம் நேர்வழிக்கு திருப்பிய சண்டாளர்கள். நான்பேச ஆரம்பித்தால் அவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். நான் பாட ஆரம்பித்தால் அவர்கள் திக்ர்செய்கிறார்கள். என் பேச்சை அவர்கள் மதிப்பதே இல்லை. என்னை விட்டும் அல்லாஹ்விடம்பாதுகாவல் தேடுகிறார்கள் என்று இயலாமை கலந்த வருத்தத்தில் கூறினான்.

நான் காரூனிடம் என்ன வித்தை காட்டினாய்? என்று கேட்டேன்.அதற்கு அவன் உற்சாகமாக, நான் அவன் காதுகளில் கிசுகிசுத்தேன். கிழவனின்இளமையான மகனே! உன் பொக்கிஷங்களை நிரப்பு. நீ தான் கடவுள் என்றேன். குஷியாகஎன் வலையில் வீழ்ந்தான் என்று கூறினேன்.நான் பிர் அவ்ன் எப்படி உன் வலையில் வீழ்ந்தான் என்று கேட்டேன்.அதற்கு அவன், நான் பிர் அவ்னிடம் கூறினேன். நீ தான் மாபெரும் சக்தியாளன். உன்னைஎதிர்ப்பவர் இந்த எகிப்திலோ, பூமியிலோ உள்ளனரா? என்றேன். அவனும் என்அடிமையானான் என்று கூறினான்.

நான் ஒரு மனிதனை எப்படி மதுவிற்கு அடிமையாக்குகிறாய்? என்று கேட்டேன்.அதற்கு அவன் அது மிகவும் எளிது. இது திராட்சை ரசம். உன் உடல் நோய்கள்அனைத்தையும் இது தீர்க்கும். இது குற்றம் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்புதேடுவதற்கு உனக்கு ஆயுள் இருக்கிறதே. ஏன் அஞ்சுகிறாய்? என்று மயக்குவேன் எனக்கூறினான்.நான் உன் துஆ எது? என்றேன். அவன் சினிமா பாடல்கள் என்றான்.நான் உன் குறிக்கோள் என்ன? என்றேன். அதற்கு அவன் மக்களிடையே பொய்யானநம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுப்பது என்றான்.

நான் எது உன்னை அழிக்கும்? என்று கேட்டேன். அதற்கு அவன், குர்ஆனில் உள்ளஆயத்துல் குர்ஸி 2வது அத்தியாயம் 255வது வசனம் யார் ஓதுகிறார்களோ அவர்களைஎன்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான் என்றுகூறினான்.நான் அடடே! அப்படியா, எனக் கூறிவிட்டு ஆயத்துல் குர்ஸியை ஓத ஆரம்பித்தேன். உடனேஷைத்தான் கூக்குரலிட்டவாறு, அவ்விடத்தை விட்டு வெருண்டோடி மறைந்தான்.

மூலம் – – ஷேக் அயாத்

அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தன் திருமறையாம் குர்ஆனில் கூறுகின்றான்,நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்.ஷைத்தானுடைய அடிச்சுவட்டைக் கூட பின்பற்றாதீர்கள். ஏனெனில், அவன் உங்களுக்குபகிரங்க விரோதி ஆவான் குர்ஆன் 2 : 208ஆகவே, இன்ஷாஅல்லாஹ் நாம் அனைவரும்ஷைத்தானுடைய பாதையில் செல்வதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம்.நம்முடைய மற்ற சகோதர, சகோதரிகளையும் அங்ஙனம் செயல்பட அறிவுறுத்துவோம்.

நன்றி: அஹ்மது ஸாஹிபு

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb