சுவனம் வேதங்களில்
சுவர்க்கம் வேதங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதர்வன வேதம் நூல் 4 அத்தியாயம் 34 ஸ்லோகம் 6
இவ்வுலக (சுவன) வாழ்வில் உங்களை மகிழ்விக்கும் வெண்ணெய், தேன், சுத்தமான நீர், பால், தயிர் போன்றவை உங்களின் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தி உங்களின் ஆன்மாவை மகிழ்விக்கின்றன. மேலும் பலன்தரும் பல சுகங்களும் இங்கு உண்டு. அதர்வண வேதம் நூல் 10 அத்தியாயம் 95 ஸ்லோகம் 18 சுவனத்தின் சிறப்பதைக் கூறுகிறது.
நரகம் வேதங்களில்
சமஸ்கிருத மொழியில் நரகத்தினை ”நரக ஸ்தானம்” என்பர். ரிக்வேதம் நூல் 4 அத்தியாயம் 5 ஸ்லோகம் 4 எவன் மனோ இச்சையைப் பின்பற்றி இரட்டசனின் கட்டளைக்கு மாறுசெய்தானோ அவன் தீயின் கொடிய வேதனைகளுக்கு ஆளாக்கப்படுவான். அதில் துன்பம் அனுபவிப்பான்.
இஸ்லாமிய கோட்பாட்டில் விதி
ஒரு மனிதன் படைக்கப்படும் முன்பே படைப் பாளனாகிய இரட்சகன் அந்த மனிதன் எங்கு யாருக்கு எப்படி பிறப்பான். எவ்வாறு வாழ்வான் இறுதியில் எங்கு சென்று சேர்வான் என்பதை, ஆதி முதல் அந்தம் வரை அறிந்து வைத்துள்ளான்.
விதி பற்றிய இந்துமதக் கோட்பாடு
இரு மனிதர்களின் பிறப்பில் உள்ள பாகுபாடு இவ்வாறு வரையறை செய்யப்படுகிறது. ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும் மற்றொன்று அங்கஹீனமாகவும், ஒரு குழந்தை ஒரு பெரிய பணக்காரன் வீட்டிலும் மற்றொன்று ஒரு வக்கற்ற ஏழை வீட்டிலும் பிற்க்கிறது. இவ்வாறு அவை ஏற்றத்தாழ்வுடன் பிறப்பதற்கு காரணம் அவைகளின் (கர்மங்களின்) அடிப்படையிலேயே இப்பிறவியில் பாகுபாடு உள்ளது, என்பது இந்துமத சித்தாந்தம். ஆனால் மறு பிறவி என்பதற்கு எந்த ஆதாரப் பூர்வமான மதசம்மந்தமான தெளிவுகளும் இல்லை.
இஸ்லாம் கூறும் நல்ல தீய செயல்கள்(அமல்கள்) குறித்து அருள்மறைக் குர்ஆன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.(அல் குர்ஆன் 67:2)
இவ்வுலக வாழ்வு மறுமை வாழ்வுக்கு ஒரு சோதனைக் களம் என்பதை தெளிவு படுத்துகிறது.
நம்மை எப்படியெல்லாம் சோதிக்கிறான் என்பதற்கு சில ஆதாரங்களை கீழ் கண்ட அருள் மறை வசனம் தெளிவுபடுத்துகிறது.
”நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!” (அல் குர்ஆன் 2:155)
”நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 8:28)
”உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன.’அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள் ”நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்)” -(2:214)
”நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?-(அல் குர்ஆன் 29:2)
”ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல் குர்ஆன் 21:35)
மரணத்துக்குப் பின் உள்ள நிலை இந்து மதக்கூற்று
மரணத்துக்குப் பின் மறுபிறவி எடுத்தல், திருஅவதாரம் எடுத்தல் (தெய்வமாகுதல்) பிற உடலில் புகுந்து மீண்டும் ஜன்மம் எடுத்தல் ஆகியவை இந்து மதத்தின் சித்தாந்தமாகும். மறுபிறவி பற்றிய இந்து மதக்கோட்பாட்டில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. முன்பிறவியில் செய்த செயல்களின் விளைவாகவே இப்பிறவியில் பிறக்கும் குழந்தைகள் அழகுடன் அல்லது அங்கஹீனமாக பிறக்கின்றன (கர்மம்) அது போன்ற கருக்துக்களும் இந்து மதச் சித்தாந்தத்தில் உண்டு.
பகவத்கீதை அத்தியாயம் 2, ஸ்லோகம் 22 கூறுகிறது
புத்தாடை அணியும் ஒருவன் பழைய ஆடையை விட்டுவிடுவது போன்று ஆன்மா புதிய உடலை ஏற்றுக் கொண்டு பழைய உடலை (உபயோக மற்றதை) விட்டு விடுகிறது.
மறுபிறவி சித்தாந்தத்தை ‘ப்ரக தரண்யா உபநிஷம்’ பாகம் 4 அத்தியாயம் 4 சுலோகம் 3 கூறுகிறது. ஒரு கம்பளிப்பூச்சி புல்லின் மேல் நுனியை வளைத்து நெளித்து ஓடித்துவிட்டால் அதிலிருந்து புதிய மேல்பாகம் முளைப்பிப்பது போல் ஒரு உடலிலிருந்து வெளிப்பட்ட ஆன்மா மற்றொரு உடலில்புகுந்து விடுவதால் திருப்தியுறுகிறது.
கர்மம்(கர்மா)-காரணமும்விளைவிக்கும் வினை அவனது மனநிலையை எண்ணத்தைச் சார்ந்தது. இதற்கு கூறும் விளக்கம். வினை விதைப்பவன் வினை அறுப்பான். தினை விதைப்பவன் தினைஅறுப்பான். கோதுமை விதைத்தவன் எவ்வாறு அரிசியை அறுவடை செய்ய இயலாதோ அதுபோல இவ்வுலகில் செய்யும் நல்லறங்களின் கூலியை மறுபிறவியில் பெற்றுக் கொள்ளலாம் என்று விளக்க மளிக்கப்படுகிறது.
தர்மா (நல்லறங்கள்)
ஒருவர் புரியும் நல்லசெயல்கள் ”தர்மா” என அழைக்கப்படுகிறது. ஆகசிறந்த நல்லறங்கள் (கர்மங்கள்) புரிபவர் மறுபிறவியில் அதன் பலனை நுகர்ந்து கொள்வார். கெட்ட காரியங்களைச் செய்பவர் செய்த கர்மத்தின் விளைவை மறுபிறவியில் கண்டு கொள்வார். ஆக நல்ல, கெட்ட அறங்கள் இவ்வுலக வாழ்வில் அனுபவிப்பதோடு மறுபிறவியிலம் அதன் பாலை நுகர்வர் என்பது இச்சித்தாந்தத்தின் சுருக்கம்.
மோட்சம் (மறுபிறவியிலிருந்து விடுதலை)
மோட்சம் என்பது மறுபிறவி போன்ற மீண்டும் ஜன்மம் எடுக்காமல் முக்தியடைவது இதனை ”சம்சாரா” எனக்கூறுவர். இந்து மத நம்பிக்கைப் பிரகாரம் ஒரு நாள் மறுஜன்மம் எடுக்கும் இந்நிலை முடிவுறும். அதாவது அந்த படைப்பினத்தின் மறுபிறவி எடுத்து தீர்க்கக் கூடிய எந்த கர்மமும் பாக்கி இல்லாது இருந்தால் மறுபிறவி எடுக்க மாட்டான் என்பது இதன் பொருள் மறு பிறவி(மீண்டும்) பிறவி (ஜன்மம்) எடுத்தல் வேதங்களில் குறிப்பிட படவில்லை. அதுபோன்று ஆன்மாக்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றில் பிவேசிக்கும் எந்தக் கருத்தும் வேதங்களில் குறிப்பிடப்படவில்லை.
வேதங்களில் ஒன்றினைந்து போரிட்ட போர் குறித்து
அகழ்போர் பற்றி அதர்வன வேதம்
அதர்வனவேதம் நூல் 20, அத்தியாயம் 21, சுலோகம் 6, ”விசுவாசிகளின் இறைவன், போர்க்களத்தில் பத்தாயிரம் எதிரிகளை எதிர்கொள்வதில் அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்து போரின்றி வெற்றியை வழங்கினான். எதிரிகள் ஆடல் பாடலுடன் போர்க்களத்தில் திளைத்திருந்தும் கூட”
1. அகழ்ப்போரில் இறைத்தூதருக்கு வழங்கிய இனிய வெற்றியை அதர்வனவேதம் மேற்கண்டவாறு கூறுகிறது.
குர்ஆன் கூறுகிறது:
”அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, ‘இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்‘ என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.”(அல் குர்ஆன் 33:22)
2. சமஸ்கிருத சுலோகத்தில் இடம் பெறும் வார்த்தை ”கரோ” அரபியில் மொழியாக்கம் செய்தால் அஹ்மத் எனும் இறைத்தூதரின் மற்றொரு பெயரைக் குறிக்கும்.
3. அகழ்ப்போரில் 10 ஆயிரம் எதிரிப்படையை சந்தித்த முஸ்லிம் போர் வீரர்கள் 3 ஆயிரம் பேர் மட்டுமே.
4. சுலோகத்தின் சமஸ்கிரத வார்த்தை ”அப்ரதினி பஷ்யாஹ்” என்பதன் பொருள் போரிடாமல் எதிரிகள் விரட்டப்பட்டு வெற்றி எனப்பொருள்.
ரிக் வேதம்
ரிக் வேதம் நூல் 1, அத்தியாயம் 53, சுலோகம் 9, ”அஹ்மத் தம் இரட்சகனிடமிருந்து அறிவையும், மார்க்க சட்டங்களையும் சூரியனிலிருந்து வரும் ஒளிபோல் பெற்றார். அவருக்கு மார்க்க சட்டம் (ஷரிஅத்) வழங்கப்பட்டது”.
குர்ஆன் கூறுகிறது:
”இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி (வேறு எதற்கும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் (அல் குர்ஆன் 34:28)
பொதுவாக இந்துக்கள் முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கும் கேள்வி
கேள்வி 1: ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் வேதங்களை அருளினானா?
இந்தியாவுக்கு எந்த வேதம் அருளப்பட்டது?
வேதங்களையும் இதர புராணங்களையும் அல்லாஹ்விடம் இருந்து அருளப்பட்ட வாக்குகளாகக் கொள்ளலாமா?
பதில்: வேதவாக்குகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அருளப்பட்டன. குர்ஆன் கூறுகிறது:
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம் அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம் மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.(அல் குர்ஆன்13:38)
நான்கு வேதங்கள் பற்றி குர்ஆன் கூறுவது தெளராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன்.
தவ்ராத் – மூஸா (அலைஹிஸ்ஸலாம்)
ஸபூர் – தாவூத் (அலைஹிஸ்ஸலாம்)
இன்ஜீல் – ஈஸா (அலைஹிஸ்ஸலாம்)
குர்ஆன் – முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
முந்திய எல்லா வேதங்களும் அந்ததந்த சமுதாய மக்களுக்கு அருளப்பட்டன. குர்ஆனுக்கு முன்பு அருளப்பட்ட வேதங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே அருளப்பட்டது. குர்ஆன் மட்டும் ஒட்டு மொத்த உலக சமுதாயத்தாருக்கும் அருளப்பட்டது. குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட இறுதி வேதம். இது முஸ்லிம்களுக்கு மட்டும் வேதநூல், அரபிகளுக்கு மட்டுமே வேதநூல் என்ற வாதங்கள் தவறு குர்ஆன் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகிறது.
”அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும் மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம் புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!)” (அல் குர்ஆன் 14:1)
”இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்”.(அல் குர்ஆன் 14:52)
”ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது.” (அல் குர்ஆன் 2:185)
”நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம் எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.” (அல் குர்ஆன் 39:41)
கேள்வி 2: எந்த வேதம் இந்தியாவில் அருளப்பட்டது? ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் வேதம் அருளப்பட்டதை குர்ஆன் கூறியதை அறிந்தோம். அப்படியானால் இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதம் எது? இந்துக்களின் புனித வேதங்களையும், புராணங்களையும் கடவுள் அருளிய வேதங்களாகக் கொள்ளலாமா?
பதில்: இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதங்கள் குறித்து குர்ஆன் அல்லது ஹதீஸில் தெளிவான சான்றுகள் ஒன்றுமில்லை. வேதங்களின் பெயர்களோ அல்லது புராணங்களின் பெயர்களோ குர்ஆனிலும், ஹதீஸிலும் காணப்படவில்லை. ஆகவே அவைகள் இறைவனிடமிருந்து வந்த வேதவாக்குகளாக இருக்கவும் செய்யலாம், இல்லாமலும் இருக்கலாம்.
கேள்வி 3: வேதங்கள் இறைவாக்காக இருந்தாலும் கூட குர்ஆனைப் பின்பற்ற வேண்டுமா?
பதில்: வேதங்களும், புராணங்களும் கடவுளினால் அருளப்பட்ட உண்மை வேத வாக்குகளாக இருந்தாலும் கூட அவை அச்சமுதாய மக்களை நேர்வழிப் படுத்த அந்த நேரத்தில் அருளப்பட்ட இறைவாக்குகளாகும். இருப்பினும் குர்ஆனோ பழைய வேதங்களை உண்மைப்படுத்தி ஒட்டு மொத்த உலக சமுதாயம் பின்பற்றுவதற்காக அருளப்பட்டது. மேலும் பழைய வேதங்கள் இன்றையவும் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை. அவைகள் அருளப்பட்ட மூல நிலையிலுமில்லை.
தம்மை இறைவேதம் எனும் வாதிடும் எந்த வேதமும் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை. கால சூழ்நிலைகளுக்கேற்ப மாறுதல், கூட்டுதல், குறைத்தல், திரித்தல், கழித்தல், சேர்த்தல், நீக்குதல் ஆகியவை நிகழ்ந்துள்ளன. இது போன்ற குறைகள் நேராமல் குர்ஆனை மட்டும் பாதுகாத்து இருப்பதாக அல்லாஹ் கூறுவதைக் கீழ்கண்ட குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.
”நிச்சயமாக நாம்தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம் நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.” (அல் குர்ஆன் 15:9)
கேள்வி 4: இராமரும், கிருஷ்ணரும் இறைவனின் திருத்தூதர்களா? இறைத்தூதர்கள் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும், ஒவ்வொரு மொழியிலும் உலகெங்கும் அனுப்பட்டிருக்கும் போது இந்தியாவுக்கு அனுப்பட்டிருப்பார்கள். ஆகவே ராமரையும், கிருஷ்ணரையும் இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்ளளாமா?
பதில்: இதனை கீழ் கண்ட குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.
”நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை” (அல் குர்ஆன் 35:24)
”இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந்நிராகரிப்போர் ”அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள் நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு” (அல் குர்ஆன் 13:7)
”(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம் இன்னும் (வேறு) தூதர்கள் (பரரையும் நாம் அனுப்பினோம் ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.(அல் குர்ஆன் 4:164)
”திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம் அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம் இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை. ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளை வரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும் அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.”(அல் குர்ஆன் 40:78)
”Jazaakallaahu khairan” sourrce: இஸ்லாம்கல்வி.காம்
இன்ஷா அல்லாஹ், தொடரும்….