Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பித்அத்கள் தோன்றுவதற்கான காரணங்கள் என்ன? (2)

Posted on March 15, 2010July 2, 2021 by admin

[ இன்றைய முஸ்லீம்கள் அனைவரும்; குறிப்பாக ஆலிம்களும் படிக்க வேண்டிய முக்கியமான கட்டுரை ]

[ ஆராயக்கூடாத முதஷாபிஹ் ஹகீகியோடு தொடர்பானவற்றை ஆராய முனைந்ததனால் பல பித்அத்கள் உருவாயின.

ஷியாக்கள் தங்களது இமாம்களைப் பாவங்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்களாகக் கருதி அவர்களை முற்று முழுதாக ஏற்றுப் பின்பற்றியதனால், தங்களுடைய இமாம்களின் சொல், செயல் அனைத்தையும் மார்க்கமாகக் அவர்கள் கருதினர். இதனால் உருவான பித்அத்கள் எண்ணிலடங்காதவை.

ஸுன்னத்து வல்ஜமாஅத்தைச் சேர்ந்த பலரும்கூட தங்களது ஆன்மீக வழிகாட்டிகளையும் இமாம்களையும் மேற்குறித்த நிலையில் வைத்து நோக்க முனைந்ததனால் பல பித்அத்கள் உருவாகின என்பதை மறுப்பதற்கில்லை.

ஏனெனில், இத்தகையோர் தமது தலைவர்களின் கருத்துக்களுக்கு முரணாக அமைந்த அனைத்தையும் வழிகேடாகக் கருதியது மாத்திரமல்ல, இஸ்லாத்தில் மூலாதாரங்களுக்கு அக்கருத்துக்கள் முரணாக அமைந்தாலும், அவற்றை ஏற்றுப் பின்பற்றத் தயங்கவில்லை.

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இந்நிலயே இன்னும் தொடர்வது நிச்சயமாக நல்ல விஷயமல்ல. இஸ்லாத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் ஆலிம்களுக்கு எப்படி முக்கிய பங்குண்டோ; அது போன்று, ”பித் அத்”களை மக்களிடம் பரவச்செய்தததில் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

”வீண் விளையாட்டுக்களும் உடல் சார்ந்த குற்றங்களும், கூடியது பெரும்பாவமாக மாத்திரமே அமையும், ஆனால், இறைவன் பற்றிய ஆய்வின் இறுதி எல்லை ஷிர்க்காக அமைந்துவிடும். அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்க மாட்டான். ஏனையவற்றை தான் நாடியவர்களுக்கு மன்னித்து விடுகிறான்.” – இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி.]

ஆராயக்கூடாத முதஷாபிஹ் ஹகீகியோடு தொடர்பானவற்றை ஆராய முனைந்ததனால் பல பித்அத்கள் உருவாயின. அல்லாஹ்வின் ‘தாத்து’ ‘ஸிபாத்து’பற்றிய ஆய்வில் ஈடுபட்டதனால்தான் வரலாற்றில் முஜஸ்ஸிமாக்கள், முஷப்பிஹாக்கள், முஅத்திலாக்கள், பாத்தினிய்யாக்கள் பேன்ற பிரிவுகள் உருவாகின.

இஸ்லாமிய அறிஞர்கள் இவ்வனைத்துப் பிரிவுகளையும் ‘அஹ்லுல் பிதஇ வல்-அஹ்வாஃ’ எனும் பிரிவிலேயே அடங்குகின்றனர். முதஸாபிஹ் ஹகீகியோடு தொடர்பானவற்றை ஆராய முனைந்ததனால்தான் ‘வஹ்ததுல் வுஜூத்’ எனும் வழிகெட்ட அனைத்திறைக் கோட்பாடும் தோற்றம் பெற்றதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லாஹ்வின் தாத்து-ஸிபாத்து போன்ற முதஷாபிஹ் ஹகீகியோடு தொடர்பான விடயங்களை ஆராய்வதனை இமாம் கஸ்ஸாலி வன்மையாகக் கண்டிக்கிறார். ஒருவர் இத்தகைய ஆய்வில் ஈடுபடுவதைவிட வீண் விளையாட்டுக்களில் ஈடுபடுவது சிறந்தது எனக் கருதுகிறார்.

அதிலும் குறிப்பாக, ஒரு பாமரனைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வின் மூலத்தை அறியும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதை விட உடல் சார்ந்த பாவங்களில் ஈடுபடுவது அவனுக்குப் பாதுகாப்பானது எனக் கூறும் இமாம் கஸ்ஸாலி, அதற்கான காரணத்தைக் குறிப்பிடுகையில், வீண் விளையாட்டுக்களும் உடல் சார்ந்த குற்றங்களும், கூடியது பெரும்பாவமாக மாத்திரமே அமையும், ஆனால், இறைவன் பற்றிய ஆய்வின் இறுதி எல்லை ஷிர்க்காக அமைந்துவிடும். அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்க மாட்டான். ஏனையவற்றை தான் நாடியவர்களுக்கு மன்னித்து விடுகிறான் எனக் கூறுகிறார்.

5. பாவங்கள், தவறுகள், பிழைகள் ஆகியவற்றைச் செய்வதிலிருந்து பாதுகாப்புப் பெறாதோரை முற்றாக ஏற்றுப் பின்பற்றுதல்.

ஷியாக்கள் தங்களது இமாம்களைப் பாவங்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்களாகக் கருதி அவர்களை முற்று முழுதாக ஏற்றுப் பின்பற்றியதனால், தங்களுடைய இமாம்களின் சொல், செயல் அனைத்தையும் மார்க்கமாகக் அவர்கள் கருதினர். இதனால் உருவான பித்அத்கள் எண்ணிலடங்காதவை.

ஸுன்னத்து வல்ஜமாஅத்தைச் சேர்ந்த பலரும்கூட தங்களது ஆன்மீக வழிகாட்டிகளையும் இமாம்களையும் மேற்குறித்த நிலையில் வைத்து நோக்க முனைந்ததனால் பல பித்அத்கள் உருவாகின என்பதை மறுப்பதற்கில்லை. ஏனெனில், இத்தகையோர் தமது தலைவர்களின் கருத்துக்களுக்கு முரணாக அமைந்த அனைத்தையும் வழிகேடாகக் கருதியது மாத்திரமல்ல, இஸ்லாத்தில் மூலாதாரங்களுக்கு அக்கருத்துக்கள் முரணாக அமைந்தாலும், அவற்றை ஏற்றுப் பின்பற்றத் தயங்கவில்லை.

”தக்லீத்” எனும் இமாம்களைப் பின்பற்றும் நிலையை இஸ்லாம் அனுமதித்தாலும், இத்தகைய போக்கை அது அனுமதிப்பதில்லை. இஸ்லாம் அனுமதிக்கும் ‘தக்லீத்’ அமைப்பை விளக்கவந்த ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஒருவர் தான் பின்பற்றுகின்ற முஜ்தஹிதான இமாம், சரியான முடிவுகளைப் பெறும் ஆற்றல் படைத்தவராக இருப்பது போலவே பிழையான முடிவுகளுக்கும் வரக்கூடியவர் என்பதை அறிந்த நிலையில் அவரைப் பின்பற்றுவதை இஸ்லாம் அனுமதித்துள்ள ”தக்லீத்” என்றும், தனது இமாமின் கருத்துக்கு முரணான ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கின்ற நேரத்தில் தக்லீதை விட்டுவிட்டு ஹதீஸை ஏற்றுப் பின்பற்றுவோராகவும் அவர் இருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார்.

இதனால்தான் எல்லா இமாம்களும் தங்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதைக் கண்டிக்கின்றனர்.

6. ஷரீஅத்தில் சட்ட மூலாதாரமாகக் கொள்ள முடியாத ஒன்றை ஏற்றுச் செயற்படல்

கனவு, கராமத்துக்கள் போன்றன ஷரீஅத்தில் சட்ட மூலாதாரங்களாகக் கொள்ளப்பட முடியாதவைகளாகும். சிலர் இத்தகையவற்றை அடிப்படையாக வைத்து வெளியிட்ட கருத்துக்களினாலும் பல பித்அத்கள் உருவாகின.

7. சில ஹதீஸ்களைத் தவறாக விளங்கிக் கொண்டமை

மார்க்கத்தில் நூதனங்களைப் புகுத்த விரும்புவோர், குறிப்பாக கீழ்வரும் இரு ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி நல்ல செயல்களை (அவற்றுக்கு மார்க்கத்தில் ஆதாரங்கள் இல்லையெனினும்) அங்கீகரித்து வணக்கங்களாகக் கருதுவது பிழையானதல்ல என்று அன்றும் இன்றும் கூறிவருகின்றனர். அவ்விரு ஹதீஸ்களும் கீழ்வருமாறு:-

o ”எவர் ஒரு நல்ல வழிமுறையை உருவாக்குகின்றாரோ அவருக்கு அதற்குரிய கூலியும் இறுதி நாள் வரை அதனை எடுத்து பின்பற்றி நடப்போருக்கான கூலியும் கிடைக்கும்.” (முஸ்லிம்)

o ”முஸ்லிம்கள் நல்லதாகக் கருதுகின்ற அனைத்தும் அல்லாஹ்விடத்திலும் நல்லதாகவே இருக்கும்.”(ஆதாரம்: அஹ்மத், அல்-பஸ்ஸார், அத்தபரானி, அல்- பைஹகீ)

உண்மையில், இவ்விரு ஹதீஸ்களும் எவ்வகையிலும் மார்க்கத்தில் புதியன புகுவதற்கு ஆதாரங்களாக அமையக்கூடியவையல்ல. எந்தவொரு நல்ல வழிமுறையாக இருந்தாலும், அதற்கு குர்ஆனிலோ, ஸுன்னாவிலோ ஓர் அடிப்படை இருத்தல் வேண்டும். ஒரு நல்ல வழிமுறை அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தெரியாமற்போக முடியாது.

குர்ஆனிலோ ஸுன்னாவிலோ அது இடம்பெறாமல் இருக்கவும் முடியாது. எனவே, ஒரு நல்ல வழிமுறையை வகுக்கின்றபோது குர்ஆனையோ ஹதீஸையோ அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். இதுவே முதலாவது ஹதீஸுக்குரிய சரியான விளக்கமாகும். கீழ்வரும் ஹதீஸ்கள்கூட இவ்வடிப்படையிலேயே விளக்கப்படல் வேண்டும்.

”எவர் ஒரு நேர்வழியின் பால் அழைக்கின்றாரோ அவருக்கு அதற்குரிய கூலியும் அதனைப் பின்தொடர்ந்தவருக்குக் கிடைக்கும் கூலியும் கிடைக்கும்” (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத், நஸாயி, திர்மிதி)

”ஒரு நன்மையான விடயத்தைக் காண்பித்துக் கொடுத்தவர் அதனைச் செய்தவர் போலாவார்.” (அல்-பஸ்ஸார்,அத்தபரானி).

இரண்டாவது ஹதீஸைப் பொறுத்தவரையில் அது ஒரு நபி மொழியல்ல. ஒரு ஸஹாபியான அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்தாகும். இக்கருத்தை கூறி, தீனில் ஒன்றைக் கூட்டுவதற்கோ, குறைப்பதற்கோ உம்மத்தினருக்கு அவர் அனுமதி கொடுத்திருக்க முடியாது. ஏனெனில், இந் நபித் தோழர் மார்க்க விவகாரங்களில் சுயவிருப்பு வெறுப்புகளுக்கும் மனோ இச்சைக்கும் இடம்கொடுக்காதவர்.

உண்மையில், ஸஹாபாக்களினதும், பிற்கால முஜ்தஹித்களதும் இஜ்மாஃ எனும் ஏகோபித்த முடிவுகளின் தூய்மையை எடுத்துக் காட்டுவதற்காகவே இக்கருத்தை அவர் கூறியிருக்க வேண்டும். அல்லது மார்க்கத்துடன் நேரடித் தொடர்பில்லாத சாதாரண வாழ்க்கை விவகாரங்களுடன் தொடர்பானவற்றில் பெரும்பாலான முஸ்லிம்கள் எடுக்கின்ற முடிவு, அல்லாஹ்விடத்திலும் சரியானதாக இருக்கும் என்பதை விளக்குவதற்காக இக்கருத்தை அவர் கூறியிருக்கலாம்.

நன்மையான எவ்விடயமும் விடுபடாதவாறு, அனைத்தையும் உள்ளடக்கியதாகவே இஸ்லாம் மனித சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதில் இடம்பெறாத ஒன்று மனிதர்கள் நன்மையாகக் கருதினாலும் அவ்வாறு அமைய முடியாதென்பதே ஒரு முஸ்லிமின் நம்பிக்கையாகும். இவ்வகையில் மேற்குறிப்பிட்ட இரு ஹதீஸ்களை, பித்அத்களை உருவாக்குவதற்கு ஆதாரங்களாகக் கொள்வது பிழையானதாகும்.

8. மார்க்கத்தைப் பின்பற்றுவதில் அளவு கடந்த தீவிரப் போக்கைக் கடைப்பிடித்தல்

இஸ்லாம் வரம்புமீறிய தீவிரப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய போக்கைக் கடைப்பிடித்ததனால்தான் கிறிஸ்தவர்கள் முஷ்ரிகீன்களாக மாறினர் என அல்குர்ஆன் கூறுகிறது. ‘வேதத்தை உடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறி தீவிரமாக நடக்காதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையையன்றி வேறெதனையும் கூறாதீர்கள்.’

அளவுகடந்த போக்கினால்தான் அல்லாஹ் ஆகுமாக்கிக் கொடுத்தவற்றைக் கூடத் தங்களுக்கு ஹராமாக்கிக் கொள்கின்றனர். இத்தகையோரை அல்குர்ஆன் கீழ்வருமாறு கண்டிக்கின்றது:

o ”ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கித் தந்துள்ள நல்லவற்றை வரம்புமீறி ஹராமாக்கிக் கொள்ளாதீர்கள்.”

இத்தகைய தீவிரப் போக்கைக் கண்டிக்கும் பல நபிமொழிகளும் காணப்படுகின்றன. உதாரணமாக ‘தீவிரவாதிகள் அழியட்டும்! தீவிரவாதிகள் அழியட்டும்!! தீவிரவாதிகள் அழியட்டும்!!!’

பின்வருவனவும் சமூகத்தில் பித்அத்கள் பரவக் காரணமாகின்றன:

 o ஆலிம்கள் பித்அத்களை ஏற்றுச் செயற்படுவது:- இந்நிலையில் பொதுமக்களும் ஆலிம்கள் சரியானதையே செய்வர் என்று எண்ணி அவர்களைப் பின்பற்றி பித்அத்களை ஏற்றுச் செயற்பட முனைவர்.

o ஆலிம்கள் பித்அத்களை எதிர்க்காமல் மௌனம் சாதிப்பது: இந்நிலையில் பொதுமக்கள் அவர்களது மௌனத்தை அங்கீகாரமாகக் கருதி பித்அத்களைத் தொடர்ந்தும் செய்துவரல்.

o பித்அத்கள் சம்பிரதாயங்களாக மாறுதல்

o பித்அத்கள் மக்களது மனோ இச்சைகளுக்குச் சார்பானவைகளாக அமைதல்.

ஆலிம்களே பித்அத்களுக்கு வலிந்து விளக்கங்கள் கொடுத்து அவற்றை நியாயப்படுத்துவது.

source:http://www.sheikhagar.net/articles/fiqh/40-bidhhathgalaithonruvathatkanakaranagal

”Jazaakallaahu khairan”

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

68 − 58 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb