குர்ஆன் கூறுகிறது:
”மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்குத் தவிர மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.”(2:45)
”(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும் அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும்.
ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் – ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்;
ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது. எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.(4:102)
6. இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட அருள் வளங்களில் ஒன்று அருள் மறை குர்ஆன் ஆகும். அதனை இறைத்தூதர் தம் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார், அவர்கள் அதனை மனனம் செய்தனர்.
குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.(21:107)
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்(34:28)
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.(68:4)
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(33:21)
7. கஃபா (மக்காவில் உள்ள இறைவனின் ஆலயம்) புணர்நிர்மாணத்தின் போது அரபுக் கோத்திரங்களுக் கிடையில் எழுந்த போர் மூட்டத்தைக் போக்கி சமாதானம் நிலவச் செய்தவர். இறைத்தூதர் மக்கா வெற்றி கூட மிகப் பெரிய நிலப்பரப்பை இரத்த சேத மின்றி அறுர்மியவர். நபி(ஸல்), தம்மை எதிர்த்த மிகப்பெரும் விரோதிகளையும் மன்னித்த இறைத்தூதர்.
8. அறியாமைக்கால இருளில் மூழ்கிக்கிடந்த அரபுலக மக்களை தம் போதனைகளால் நேர்வழியின் பக்கம் அழைத்தவர்.
குர்ஆன் கூறுகிறது:
74:1 (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!
74:2 நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.
74:3 மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
3:159 அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள் எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும் பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
114:1 (நபியே!) நீர் கூறுவீராக. மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
114:2 (அவனே) மனிதர்களின் அரசன்.
114:3 (அவனே) மனிதர்களின் நாயன்.
வேதங்களைப் பின்பற்றுவோர், இறைவனைப் போற்றிப்புகழ்ந்து இறைத்தூதரைப் பின்பற்றி நரக நெருப்பிலிருந்து விடுபட வேதங்கள் கூறும் சுலோகங்கள் தான் மேலே கூறப்பட்டவை.
இந்து மதத்தில் அவதாரங்களும், இறைத்தூதர்களும்
இறைத்தூதர்களுக்கென இந்து மதத்தில் எந்தக் கோட்பாடும் இல்லை. இருப்பினும் அவதாரங்கள் என்று கோட்பாடு உள்ளது. ”அவ்தார்” என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு ”கீழே இறங்கி வருதல் “எனப் பொருள். அவ்தார் என்னும் சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகராதியில் இந்து இதிகாசாங்கள் படி கடவுள் பூமிக்கு உடல் உருவம் கொண்டு இறங்கி வருதல் எனப் பொருள். சுருக்கமாக கடவுள் பூமிக்கு ஏதேனும் உருவம் கொண்டு இறங்கிவருதல் என உணரலாம்.
இந்து மத விசுவாசப் படி கடவுள் மதத்தைப் பாதுகாக்க நீதியை நிலை நாட்ட சட்டங்களை அமுல் படுத்த மனித சமுதாயத்துக்கு உணர்த்த சில உருவங்களில் அவதாரம் எடுத்து பூமிக்கு இறங்கி வந்தார் என்பதாகும். வேதங்களில் அவதாரங்கள் பற்றி எந்த குறிப்பீடுகளும் இல்லை. குறிப்பாக ஸ்ருதிகளில் எதுவும் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஸ்ருதிகளில் அவதாரங்கள் குறித்த செய்திகள் உள்ளன. புராணங்களிலும் இதிகாசங்களிலும் அவதராங்கள் பற்றிய செய்திகள் மலிந்து காணப்படுகின்றன.
பகவத் கீதையில் 4ம் பக்கம் ஸலோகம் 7-8 கூறுகிறது. எங்கெல்லாம் அநீதி தலை தூக்கி தர்மம் சரிகிறதோ அங்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் இறங்குவேன் என கடவுள் கூறுகிறார். நீதியை நிலைநாட்ட, அநீதியை ஒழிக்க, மார்க்க சட்டங்களை நிலை நிறுத்த நானே பூவுலகுக்கு வருவேன். ஆக பகவத் கீதையின் பிரகாரம் கடவுள் அவதாரம் எடுத்து பூமிக்கு வருகிறார். பூமியின் நீதியை நிலைநாட்டி, அநீதியை அகற்றி மார்க்கச் சட்டங்களை நிலை நிறுத்த கடவுளுக்கு அவதாரம் தேவைப்படுகிறது. புராணங்களின் படியே கடவுள் நூற்றுக்கணக்கான அவதாரங்கள் எடுத்ததை அழகுபடக் கூறுகிறது. விஷ்ணு பகவான் (ஜீவராசிகளை இரட்சித்து உணவு வழங்கும் கடவுள்). பத்து அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அவையாவன
1) மதஸ்ய அவ்தார் – மீன் அவதராம்
2) குர்ம் அவ்தார் – ஆமை அவதாரம்
3) வரஹ் அவ்தார் – பன்றி அவதாரம்
4) நரஷிம்ம அவ்தார் – பாதி மனிதன் பாதி சிம்ம அவதராம்
5) வாமண அவ்தார் – பிராமன் அவதாரம்
6) பரஷுராம் அவ்தார் – பரசுராமன் அவதாரம்
7) ராம் அவ்தார் – ராமரின் (ராமாயண) அவதாரம்
8) கிருஷ்ணா அவ்தார் – பகவத் கீதையின் கிருஷ்ணர் அவதாரம்
9) புத்த அவ்தார் – கெளதம் புத்தரின் அவதாரம்
10) கல்கி அவ்தார் – கல்கியின் அவதாரம் (ஆதாரம்: ரிக் வேதம் சம்ஹித் பாகம்-12 பக்கம் 4309 ஸ்வாமி சத்ய பிரகாஷ் சரஸ்வதி)
ஆக வேதங்களிலிருந்து கூறும் சத்தியப் பாதையிலிருந்து கொஞ்சம் கொச்சமாக உண்மைக்குப் புறம்பான வழிகளுக்கு அழைத்துச் செல்லும் அவதாரங்கள் இவைகள் தாம்.
மனித உருவெடுத்து வருதல் (ANTHRO POMOPHISM)
1. மனிதனைப் புரிந்து கொள்ள கடவுளுக்கு மனித உருவெடுக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான மதஙகள் பூமிக்கு கடவுளின் மனித உருவ வருகையை நம்பிக்கை கொண்டுள்ளன. அதற்கு சரியான மனோதத்துவ முறைப்படியான சமாதானத்தை அம்மதங்கள் கூறுகின்றன சர்வ வல்லமை படைத்த கடவுள் அதிக புனிதமானவன். எனவே அவனுக்கு கடினங்கள், கஷ்டங்கள், துன்ப துயரங்கள், பின் விளைவுகள் (மனிதனுக்கு நேர்பவை) பற்றிய அனுபவங்கள் சிந்தனைகளை அவன் அறியமாட்டான். ஒரு மனிதன் மனவேதனையின் போது எப்படி சிரமப்படுகிறான் என்பதை கடவுள் அறியமாட்டார். எனவே துன்பக் கடலில் நீந்தும் மனித சமுதாய மத்தியில் மனித உருவில் தோன்றி மனிதனின் குறை நலன்களுடன் கூடிய கடவுள் மனித அவதாரம் எடுத்து வருகிறார் என மிக லாவகமாக அவதாரங்களை நியாயப்படுத்கின்றன புராணஙய்கள்.
2. படைப்பவர் உபயோகிக்கும் முறை தயார் செய்தல்: ஒரு டேப் ரிக்கார்டர் தயாரிக்கும் உற்பத்தியாளர் (படைப்பவர்) அதனை இயக்குவது எவ்வாறு? எந்த பட்டனை அழுத்தினால் ஒலி நாடா முன்பாக செல்லும், பின்னால் செல்லும், நிற்கும், , இயங்கும், பாடும் மற்றும் பதிவு செய்யும் என்ற செய்முறைகளைத் தெரிவிக்கும் ஒரு விபரத்தை கருவியுடன் சேர்த்து தருவார் அந்த விபரத்தில் என்னென்ன செய்யக் கூடாது? என்று முழுவிபரங்களும் அதில் இருக்கும். இந்த டேப் ரிகார்ட்ரைத் தயாரிப்பவர், அதற்காக டேப் ரிகார்டர் அவதாரம் எடுக்கவேண்டிய அவசியமில்லை. அதற்குரிய செயல்முறைகளை விவரித்து ஒரு பிரசுரம் கருவியுடன் வைத்தால் போதும் என்று எல்லோருக்கும் தெரியும்.
ஆக மனிதனுக்கு நீதியைக் கற்றுக் கொடுக்க அநீதியை அகற்ற, மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க இறைவனின் தூதர்களை மனித உருவில் மனித சமுதாயத்துக்கு அனுப்பி வைத்தால் போதும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆக மனிதனுக்கு நீதியைக் கற்றுக் கொடுக்க அநீதியை அகற்ற, மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க இறைவனின் தூதர்களை மனித உருவில் மனித சமுதாயத்துக்கு அனுப்பி வைத்தான். அத்தூதர்களுக்கு வேதங்களையும் இறக்கியருளினான்.
அவ்வாறு இறக்கியருளப்பட்ட இறுதி நபிக்கு இறங்கிய இறை வேதமே குர்ஆன் படைத்த இரட்சகனால் வாழும் முறையையும் அவ்வாழ்வின் சுவையை இனிமையுடன் சுவைக்கும் மறுமைப் பேற்றையும் தவறினால் கிட்டும் நரகவேதனையையும் விவரமாக விளக்கும் வாழ்க்கை நடைமுறைத்திட்டமே அருள் மறை குர்ஆன் எது நல்லது? எது கெட்டது? எனப்பிரித்தறிவிக்கும் அல்லாஹ்வின் செய்முறை விளக்கமே குர்ஆன். கடவுளே மனித உருவில் அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. மனித சமுதாயத்தில் கடவுளுக்கு எவர் விருப்பமானவரோ அவரை கடவுள் தன் இடத்துக்கு தேர்வு செய்து அவரைத் தூதராக்கி அவர் மூலமாக தான் நாடும் செய்திகளைத் தன் படைப்பினங்கள் வரை கொண்டு சேர்க்கும் திறன் கடவுளுக்கு உண்டு அவ்வாறு கடவுளால் தேர்வு செய்யப்பட்ட மனித சமுதாயத்தைச் சார்ந்த தூதர்களே இறைத்தூதர்களாவார்கள்.
மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கை (மறுமை)
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(2:28)
இஸ்லாம் கூறுகிறது மனிதன் இப்பூவுலகுக்கு ஒரே ஒரு முறை மட்டும்தான் வருகிறான். வாழ்ந்து மரணித்த மனிதன் அடக்கஸ்தலத்தில் ஒரு வாழ்வைச் சந்திக்கிறான் (மண்ணறை வாழ்வு) அதன் பின் ஒரு நாள் அவன் தன் இரட்சகனால் உயிர் கொடுக்கப்பட்டு மீண்டும் எழுப்பப்படுகிறனான். மண்ணறையிலிருந்து. பின்னர் அவன் அணு அளவும் மோசம் செய்யப்படாமல் விசாரிக்கப்பட்டு நன்மைகள் அதிகம் செய்திருந்தால் சுவனத்துக்கம் தீமைகள் அதிகம் செய்திருந்தால் நரகுக்கும் அனுப்பப்படுகிறான்.
இவ்வுலக வாழ்வு மறுமை வாழ்வுக்கு ஒரு சோதனைக் களமே
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.(67:2)
படைத்த இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிந்து உலக வாழ்வில் நடந்தால் இத்தேர்வில் வெற்றிபெறுவான். சுவனில் நுழைவான். கட்டளைக்கு மாறு செய்தல் இத்தேர்வில் தேர்வு பெற மாட்டான். நரகில் நுழைவான்.
மறுமையில் கூலி கொடுக்கப்படுகிறான்
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும் அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும் எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.(3:185)
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். (99:7)
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (99:8)
இஸ்லாமியப் பார்வையில் சுவனம்
இதனை அரபியில் “ஜன்னத்” என்பர் சகல செழிப்புகளும் வளங்களும் அடங்கிய நந்தவனம் என்று இதன் பொருள். குர்ஆன் வசனம் சுவனம் பற்றிக் கூறும் போது சுவனத்தின் அடியில் நதிகள் ஒடுவதாக கூறுகிறது. அந்நதிகள் பால், தேன் போன்றவைகள். பலதரப்பட்ட கனி வகைகளின் சோலைகளால் ஆனது. எவரும் முதுமையடைய மாட்டார்கள். கெட்டவார்த்தைகளைக் கேட்டகமாட்டார்கள். அங்கு சாந்தியும் சாந்தமும் மட்டுமே நிலவும்.
இஸ்லாமியப் பார்வையில் நரகம்
இதனை அரபியில் “ஜஹன்னம்” என்பர். நெருப்பினால் வேதனை செய்யப்படும் இடம் என்று பொருள். இந்நரக நெருப்பின் எரிபொருட்கள் மனிதர்களும் கற்களும் அருள் மறையின் கீழ்கண்ட வசனம் கூறுகிறது. (66:10)
பூர்ண ஜன்மம் (மறுபிறவி எடுத்தல்)
சமஸ்கிருதத்தில் புனர் ஜன்மம் அல்லது பூரண ஜன்மம் என்று கூறுவர். மரணத்துக்கு பின் மீண்டும் மறுபிறவி எடுத்தல் எனதே இதன் மையக்கருத்து. வேதங்களிலோ உபநிஷங்களிலோ மறுபிறவி பற்றிக் கூறப்படவில்லை. பகவத்கீதையில் மரணத்துக்கு பின் உள்ள வாழ்வு குறித்து கூறப்பட்டுள்ளதேயில்லாமல் மீண்டும் மீண்டும் ஜன்மம் எடுக்கும் மறுபிறவி பற்றிக் கூறப்படவில்லை. மறுபிறவி, மனிதன் மிருகமாக ஜன்மம் எடுத்தல், மிருகம் மனிதனாக ஜன்மம் எடுத்தல், என்று பின்னால் வந்த வேதாதிகள் உருவாக்கிய சித்தாந்த மேயன்றி இந்து மதப் புனிதங்களில் எதுவும் மறுபிறவி பற்றிய தெளிவு எதுவுமில்லை. மேலும் மறுபிறவி எடுக்கும் எந்த படைப்பிணத்துக்கும் அது எதற்காக அவ்வாறு ஒரு சிறப்பபை அல்லது தண்டனையைப் பெற்றது என்று அறியாது. இவ்வாறு மறு பிறவி தத்துவம் படைத்த இரட்சகனின் நீதித்தன்மைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியதாக உள்ளது.
வேதங்களின் ஒளியில் மரணத்துக்கு பின் உள்ள வாழ்க்கை
ரிக் வேதம் நூல் 10, அத்தியாயம் 16, ஸ்லோகம் 4 கூறுகிறது சமஸ்கிருத வார்த்தை ”சுக்ரிதம் யு லோகம்” என்பதன் பொருள் உண்மை நிரந்தர உலகம் அல்லது பயபக்தியுடையோருக்குறிய உலகம் என்பதாகும். அதன் அடுத்த ஸலோகமோ இவ்வுலகவாழ்விற்குப் பின் மீண்டும் ஒர் வாழ்க்கை உரியது என்று உறுதிப்படுத்துகின்றது.
இன்ஷா அல்லாஹ், தொடரும்….
source: www.islamkalvi.com