”கதவைத்திற காற்று வரட்டும்
ஆத்மாவைத்திற ஆனந்தம் வரட்டும்”
இப்படியெல்லாம்
நித்தமும் திறக்கச்
சொன்னவர் வந்தார்!
தொலைக்காட்சியைத்
திறந்தால்
நடிகையைத்
திறந்தபடி…
உறவை விலகு…
துறவை ஒழுகு…
ஊடகங்களில் விரிகிறது
உபதேசிப்போர் அழகு…?
ஆசைகளைத்
துறப்பதற்கல்ல…
நிறைவேற்றிக்கொள்ள
குறுக்கு வழியானதோ
ஆன்மீகம்…?
இவர்கள்
வெளிச்சத்தில்
காவிகளோடு…
இருட்டில்
தேவிகளோடு…
அச்சம், மடம்
பெண்களின்
குணங்களாம்
பெண்களுக்கு
இப்போது
மடம் என்றாலே
அச்சம்…
ஒரு காவி
ஒரு தேவி
ஒரு டிவி
ஒரு மூவி
மனிதா எங்கே உன்
பகுத்தறிவின் சாவி…
அங்கே
அச்சத்தில் ஒருவன்
அலறுகிறான்
”மாமிகளே ஒளியுங்கள்
சுவாமிகள் வருகிறார்கள்…!”
தீட்சை பெறுவோரே
தெளிவு பெறுக…
நித்யானந்தர்களிடம் இல்லை
நிஜமான ஆன்மீகம்
ஆனால்
நிஜமான ஆன்மீகத்தில்
உண்டு
நித்யானந்தம்… (நிரந்தர ஆனந்தம்)
பெண்துணையே
பெரும்பாவம் என்போர்
வாழ்கிறார்கள்
பெண்களின் துணையோடு…
ஆண்துணை மறுப்போரும்
அப்படியே…
இல்லறமல்லது
நல்லற மன்று…
இவ்வாறு
இயம்பும்
இறைக்கொள்கை ஒன்று…
அதை
ஏற்றுப்போற்றுதல்
எல்லோர்க்கும் நன்று…
posted by: JAINUL ABDEEN