மிகச் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் தகவல் தொழில் நுட்பச் சட்டம். இந்தச் சட்டம் மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் தகவல்களை ஏற்றுக் கொள்வதுடன் மின்தகவல் மூலமாக நடக்கும் சட்டவிரோதமான செய்கைகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவும் வழி செய்கிறது.
இந்திய சட்டங்களின் நோக்கங்கள் உயர்ந்ததாக இருந்தாலும் இந்த சட்டத்திலுள்ள ஓட்டைகள் மூலமாக சட்டத்திலிருந்து சுலபமாகத் தப்பித்து வெளியே வந்துவிடமுடியும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.]
இந்திய நாட்டுச் சட்டவிதிகள் பெரும்பாலும் ஆங்கிலேய நாட்டுப் பொதுச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றன. இந்தியச் சட்டங்கள் முதன் முதலாகப் பிரிட்டிஷாரால் அவர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தபோது கொண்டு வரப்பட்டன. பிரிட்டிஷ்காரர்கள் வகுத்த பல விதிகளும், ஆணைகளும் இன்றும் இந்தியாவில் அமலில் இருக்கின்றன.
இந்திய அரசியல் சட்டம்,அயர்லாந்து, அமெரிக்கா , பிரிட்டன், ஃபிரான்ஸ் ஆகிய நாட்டு சட்டவிதிகளை நன்கு ஆராய்ந்து அவற்றிலிருந்து தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து ஒழுங்குபடுத்தி தருவிக்கப்பட்டது.
ஐக்கிய நாட்டு ஸ்தாபனத்தின் வழிமுறைகளுக்கும், மனித உரிமை மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை விதிகளுக்கும் பொருந்துமாறு அமைக்கப்பட்டுள்ளன நம் சட்டங்கள். இந்தச் சட்டங்கள் உலக வர்த்தகத்திற்குப் பொருந்துகின்ற சிந்தனைத் திறன் உரிமைகளையும் மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்திய சமூகச் சட்டம் சற்றே மாறுபட்டது- ஒவ்வொரு மதத்துக்கும் தனிச் சட்ட திட்டங்கள். பல மாநிலங்களில் திருமணங்களை மற்றும் விவாக ரத்துக்களைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் தனித் தனி விதிகள். கோவாவில் இன்னும் அனைத்து ஜாதியினருக்கும் பொதுவான போர்த்துக்கீஸியருடைய சமூகச் சட்டம் அமலில் இருக்கிறது.
ஜுரிகள் முறை 1960 ஆண்டு நீக்கப்பட்டது. ஊடகங்களால் ஜூரிகள் கருத்துக்கள் பாதிக்கப் படுகின்றன என்று காரணம் கூறப்பட்டது. இந்த முடிவு ஜூரிகள் நானாவதி கொலைவழக்கில் நானாவதியை விடுவித்ததையடுத்து எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு மாநிலமும் அதற்கென்று தனிச் சட்டங்களை உருவாக்கிக் கொள்கின்றன- ஆனால் எல்லா மாநிலங்களிலும் சட்டங்கள் பொதுவாக ஒரே மாதிரிதான் இருக்கின்றன. மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மற்றும் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சட்டவிதிகள் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்துபவை. ஆனால் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென்று தனியாகத் தொழிலாளர் நலச் சட்டங்களும் வரி விதிப்பு முறைகளும் கொண்டிருக்கின்றன.
இரண்டு நாடுகளில் ஒரே நேரத்தில் குடியுரிமை பெறுவது இந்திய குடியுரிமைச் சட்டப்படி தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்திய வழக்குமன்றங்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் எந்த ஒரு நாட்டிற்கும் நம்பிக்கையுள்ளவர்களாக நடந்து கொள்ள முடியாது என்பதால் இரட்டைக் குடியுரிமையைத் தடைசெய்திருக்கிறது. ஜனவரி 7, 2004ல் இந்தியப் பாராளுமன்றம் வேறு நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஒருவரையறைக்குட்பட்ட இரட்டைக் குடியுரிமை வழங்கும் சட்டத்தை இயற்றியது. கடல்கடந்துவாழும் இந்தியர்களுக்கு இந்தச் சட்டத்தின்படி எந்தவிதமான அரசியல் உரிமையோ அரசாங்கத்தில் பங்குபெறும் உரிமையோ கிடையாது. அவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டும் கிடைக்காது.
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு காலத்திற்கேற்ப அவ்வப்போது பழைய சட்டங்களில் மாற்றங்களும் திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. மிகச் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் தகவல் தொழில் நுட்பச் சட்டம். இந்தச் சட்டம் மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் தகவல்களை ஏற்றுக் கொள்வதுடன் மின்தகவல் மூலமாக நடக்கும் சட்டவிரோதமான செய்கைகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவும் வழி செய்கிறது
இந்திய சட்டங்களின் நோக்கங்கள் உயர்ந்ததாக இருந்தாலும் இந்த சட்டத்திலுள்ள ஓட்டைகள் மூலமாக சட்டத்திலிருந்து சுலபமாகத் தப்பித்து வெளியே வந்துவிடமுடியும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. லஞ்சம் வாங்குபவர்கள் சட்டத்திலிருந்து எளிதில் வெளிவருவதும், சாட்சிகளுக்கு சரியான பாதுகாப்பின்மையும் மக்கள் மனதில் சட்டத்தின்பால் ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன.
அரசியல் தொடர்புடையவர்கள் தங்கள் அரசியல் சக்தியினால் நீதியையே தங்கள் பக்கம் வளைக்க முயற்சி செய்வதும் சாதாரணமாக நடைபெறும் விஷயம்தான். ஜெசிகா லால் வழக்கில் அவர் சுடப்பட்டதை நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தும் அரசியல் காரணங்களால் வழக்கு சரியாக நடத்தப் படாததால் கீழ்க் கோர்ட்டில் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பியது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்னொரு வழக்கில் குடிபோதையில் சஞ்சீவ் நந்தா என்பவர் (உலக அளவில் ஆயுதங்களை விற்பனை செய்யும் Crown corporation அதிபரின் மகனும், அட்மிரல் எஸ்.எம். நந்தாவின் பேரனுமான)அதிவேகத்தில் போலிஸ் தடையை மீறிக் காரை ஓட்டி, மூன்று போலிஸ்காரர்களையும் சாலையில் சென்று கொண்டிருந்த பலரையும் கொன்ற வழக்கில் நேரில் பார்த்த பல சாட்சிகள் முதலில் சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும், சஞ்சீவ் நந்தா தனது காரிலுள்ள இரத்தக் கறையை சுத்தம் செய்யும்போது கையும் களவுமாகப் பிடிக்கப் பட்டதாகச் சொன்னாலும் கடைசியில் அவர்கள் பல்டி அடித்து தாங்கள் பார்த்தது காரா அல்லது டிரக்கா என்பது நினைவில்லை என்று கூறினர். பிரியதர்ஷினி மாட்டோ வழக்கிலும் இதே கதிதான், குஜராத்தின் பெஸ்ட் பேக்கரி வழக்கிலும் சாட்சிகள் கடைசி நிமிஷத்தில் காலை வாரிவிட்டனர்.
இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராகக் கிளம்பிய வன்முறையில் பல சீக்கியக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களது சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டன. இதுபற்றி கிட்டத்தட்ட 12 கமிஷன்கள் வைக்கப்பட்டு இதற்குப் பின்னணியிலிருந்த அரசியல்வாதிகளும் போலிஸ் அதிகாரிகளும் அடையாளம் காணப்பட்ட பிறகும் அவர்கள் யார் மீதும் ஒரு சுண்டுவிரல் கூடப் படவில்லை. சட்டம் ஒரு இருட்டைரயா? அல்லது இந்திய சட்டமே இருட்டா?!!!