அதிரை ஏ.எம்.பாரூக்
[ அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழி கெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன். (6:119)
சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் விஷயங்களை நாளொரு மேனிப் பொழுதொரு வண்ணம் தினம் ஒரு இல்லாத தகவலை கிரியேட் செய்து கொடுத்துக் கொண்டிருந்த அவாள்கள் நடத்தும் பத்திரிகைகள் நித்யானந்தா மேட்டரில் கழுவிய மீனாய் நழுவியது.
முதல் நாள் நித்யானந்தா ஆஸ்ரமம் சூறை என்று மட்டும் தகவலை கொடுத்துவிட்டு அடுத்தடுத்த நாட்களில் அதை கிராஃபிக்ஸ் என்றும், தொழில் நுட்பம் என்றும், சதித் திட்டம் என்றும், அதை மறுத்ததை பரபரப்புப் பேட்டி என்றும் எழுதித் தள்ளுகின்றனர்.
ஆஸ்ரமங்களில் இறையருள் இல்லை என்பதை அறிந்த கேடிகள் இந்தியாவின் கோடான கோடி அப்பாவி இந்து மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி கோடி, கோடியாய் பணம் பண்ணுவதற்காக சாமியார் வேடம் தரித்து ஆஸ்ரமங்கள் அமைத்து அவற்றை உல்லாச பீடங்களாக மாற்றுகின்றனர்.]
அறிவுச் சுடராம் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சத்தியப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் மக்களிடத்தில் நிலவும் அறியாமையை அகற்றுவதற்காக அரும்பாடுபட்டார்கள்.
மக்காவின் புனித இறை இல்லம் கஃபாவில் இணைவைப்பாளர்களால் நிருவப்பட்டிருந்த 360க்கும் மேற்பட்ட சிலைகளில் சில பிரபலமான சிலைகளுக்கு மக்காவிற்கு வெளியிலும் கிளை கோயில்கள் நிருவப்பட்டிருந்தன.
அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பின் கீழுள்ளவர்கள் ஏறத்தாழ இன்றைய இந்தியாவின் உயர்ஜாதி பரமஹம்ஸ வகையறாக்கள் போலவே அன்றைய அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி இவைகள் உங்களை இறைவனிடம் நெருக்கி வைக்கும் ஆற்றல் படைத்தவைகள் என்றும், எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஜோதிடம், மற்றும் சகுனம் போன்ற அனைத்து வழிகளிலும் அவர்களை ஏமாற்றி எத்திப் பிழைத்து வந்தனர்.
o ஏகஇறைவன் ஒருவனே,
o அவனிடத்தில் யாரும் யாருக்கும் பரிந்துப் பேச முடியாது,
o யாரும் யாருடைய எதிர் காலத்தையும் கணித்துக் கூற முடியாது,
o இறைவனின் நாட்டத்தில் நடக்கவிருப்பதை சகுனத்தின் மூலம் தடுத்துக் கொள்ள முடியாது.
என்ற நபிகளாரின் ஏகத்தவ முழக்கம் மக்கமா நகரில் முழங்கத் தொடங்கிய பொழுது அது அன்றைய உயர் ஜாதி வகையறாக்களின் செவிப்பறைகளை கிழிக்கும் இடி முழக்கமாகியது. அதனால் அவர்கள் தங்களது செவிகளுக்குள் விரல்களை நுழைத்துக் கொண்டதுடன் பொதுமக்களையும் அவ்வாறே ஏவினர்.
ஏகத்துவ முழக்கம் தங்களது பிழைப்பின் மீதும், உயர் ஜாதி அந்தஸ்த்தின் மீதும் விழுந்த சவுக்கடியாக கருதிய ஏமாற்றுப் பேர்வழிகள் இறைத்தூதரையும், அவர்களுடன் இணைந்து கொண்டவர்களையும் இரும்புக் கரம் கொண்டு எதிர்த்தனர்
அவர்களின் கடுமையான எதிர்ப்புகளை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உதவி கொண்டு தங்களின் அறிவுக் கூர்மையால் எதிர்கொண்டார்கள், எதிர்த்தவர்களையே ஏகத்துவததையும் ஏற்கச் செய்து அவர்கள் அனைவரையும் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரேக் கோட்டின் கீழ் நிற்கச் செய்தார்கள்.
o மனிதர்கள் அனைவரும் சமம்,
o மனிதர்கள் புனிதர்கள் அல்ல,
o மனிதர்களில் யாரும் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் அல்ல,
என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார்கள் அதனால் அவர்கள் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பின்னரும் அரேபிய தீபகற்பத்தில் மனிதர்களில் யாரும் யாருக்கும் தெய்வீகத்தன்மை இருப்பதாக கருதி தனி மரியாதை செலுத்த முன்வர வில்லை.
o அவர்களில் யாரும் யாருக்கும் தனி மரியாதை செலுத்த முன்வராத காரணத்தால்
o அவர்களில் ஜோதிட நிபுனர்கள் உருவாக வில்லை,
o அவர்களில் அருள்வாக்குக் கூறும் போலி ஆசாமிகள் உருவாகவில்லை,
o அவர்கள் பெயரால் ஆஸ்ரமங்களும், யாகசாலைகளும் நிருவப்;படவில்லை.
இன்றைய இந்தியாவின் நிலை.
அருளாசியும், அருள்வாக்கும் வழங்கிக் கொண்டு ஏராளமான பக்தகோடிகளைக் கொண்ட உயிருடன் வாழும் சாய்பாபாவின் பெயரில் டெல்லி மற்றும் பல மாநிலங்களில் சிவ்முரத்தி வேதி என்ற போலி சாமியாரால் அமைக்கப்பட்ட ஆஸ்ரமங்களில் உலகிலேயே அதிக ரேட்டில் விபச்சாரம் நடந்து கொண்டிருந்ததை அவரது ஞானக் கண்களால் (?) காண முடியவில்லை.
சாய்பாபாவிடம் இறையருள் இருப்பது உண்மை என்றால் அவர் பெயரால் அரவது பக்தன் ஆரம்பிக்கப்பட்ட ஆஸ்ரமத்தில் நடந்து கொண்டிருக்கும் விஐபி விபச்சாரத்தை எனது ஞானக் கண்களால் கண்டேன் பக்தர்களே ஓடுங்கள் அந்த ஆஸ்ரமங்களை அடித்து நொறுக்குங்கள் அவனைப் படித்து சங்கிலியால் பிணைத்து இழுத்து வாருங்கள் என்று சொல்லி இருப்பார்.
அவரிடம் இறையருள் இல்லை, எவரிடமும் இருக்காது அவரும் ஒரு டுபாகூர் என்பதற்கு இதையாவது உதாரணமாக எடுத்துக்கொண்டு சாய்பாபா பக்தர்கள் அவரை விட்டு விலகுவார்களா? என்றுப்பார்ப்போம்.
உத்தரப்பிரதேசத்தில் கிரிபாலு மஹாராஜ் என்ற சாமியாரின் ஆஸ்ரமத்தில் இரண்டு தினங்களுக்கு முன் கூட்ட நெரிசலில் 65 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் தலைவர் கிரிபாலு மஹாராஜ் 1997ல் பாலியல் வழக்கிலும், நிலமோசடி வழக்கிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
சாமியார்களை நம்பக் கூடாது என்பது வேறு விஷயம் சாமியார்களுக்கு இன்னத் தகுதியாவது இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாத அப்பாவி மக்களாக இருப்பதாலேயே போலி சாமியார்கள் உருவாவதற்கு காரணமாக அமைகிறது. இவருக்கும் வெளிநாடுகளில் ஏராளமான ஆஸ்ரமங்கள் இருக்கின்றனவாம் ?
திருவண்ணாமலை ராஜசேகர் பிறந்து 10 வது நாளில் எதிர்காலத்தில் பிரபல ஆன்மீக சாமியாராக வருவார் என்று ஜோதிடன் கணித்துக் கூறியதைக் கேட்ட அவருடைய பெற்றோர் அவரை சாமியார் ஃபீல்டில் திணித்து சந்நியாஸம், துறவரம், அருள் வாக்குக் கூறும் கலைகளை கற்கச்செய்து பால்குடிப் பருவத்தில் காவி உடையையும், ருத்ராட்ச மாலையையும் மாட்டிவிட்டனர். பால்குடிப் பருவம் மாறி பாலுணர்வுப் பருவம் வந்ததும் காவி உடையுடனும், ருத்ராட்ச மாலையுடனம் ரஞ்சிதாவிடம் தஞ்சம் புகுந்து விட்டார்.
ஜோதிடக்கலை பொய்த்து சினிமா நடிகையின் காலில் சரணடைந்து விட்டது. இதையாவது உதாரணமாக எடுத்துக் கொண்டு ஜோதிடத்தை நம்பி எதிர்காலத்தை தொலைக்கும் மக்கள் அதிலிருந்து விலகுவார்களா? என்றுப் பார்ப்போம்.
எதிர்பாராமல் சிக்கிக் கொண்ட ஜெயேந்திரர், தேவநாதன், நித்யானந்தன் அல்லாத இன்னுமுள்ள சாமியார்கள், துறவிகள், திருமனம் செய்யாத வாஜ்பாய் ராமகோபாலன் வரையிலான பிரம்மச்சாரிகள் அனைவரையும் ஆண்மை பரிசோதனைக்குட்படுத்தினால் ஒருவர் கூட தேற மாட்டார்கள்,தேற முடியாது.
ஆரிய பத்திரிகை தர்மம்
சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் விஷயங்களை நாளொரு மேனிப் பொழுதொரு வண்ணம் தினம் ஒரு இல்லாத தகவலை கிரியேட் செய்து கொடுத்துக் கொண்டிருந்த அவாள்கள் நடத்தும் பத்திரிகைகள் நித்யானந்தா மேட்டரில் கழுவிய மீனாய் நழுவியது.
முதல் நாள் நித்யானந்தா ஆஸ்ரமம் சூறை என்று மட்டும் தகவலை கொடுத்துவிட்டு அடுத்தடுத்த நாட்களில் அதை கிராஃபிக்ஸ் என்றும், தொழில் நுட்பம் என்றும், சதித் திட்டம் என்றும், அதை மறுத்ததை பரபரப்புப் பேட்டி என்றும் எழுதித் தள்ளுகின்றனர்.
ஏற்கனவே புவனேஸ்வரி விஷயத்தில் செய்தி வெளியிட்டு நடிகர், நடிகைகளின் கடுமையான கோபத்திற்கு உள்ளான தினமலர் மட்டும் நடிகர், நடிகைகளுக்கும், நடிகர் சங்கத்திற்கும் பதிலடியாக இதைப் பிரசுரித்திருந்தது.
சன் குழுமத்தினர் மட்டும் தினகரன் செய்தித் தாளிலும், சன் தொலைகாட்சியிலும் ஃப்ளாஸ் நியூஸாக வெளியிட்டது.
இன்றைய இந்தியாவின் தேவை.
ஆஸ்ரமங்களில் இறையருள் இல்லை என்பதை அறிந்த கேடிகள் இந்தியாவின் கோடான கோடி அப்பாவி இந்து மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி கோடி, கோடியாய் பணம் பண்ணுவதற்காக சாமியார் வேடம் தரித்து ஆஸ்ரமங்கள் அமைத்து அவற்றை உல்லாச பீடங்களாக மாற்றுகின்றனர்.
எப்பொழுதாவது ஒன்றிரண்டுப் பேர் மட்டுமே அதுவும் உடன் இருப்பவர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் காரணமாக காட்டிக் கொடுக்கப்பட்டு சிக்குகின்றனர். பொதுமக்களால், அல்லது போலீஸால் அதிகம் இவர்கள் சிக்குவதில்லை.
காட்டிக் கொடுக்கும் ஒன்றிரண்டுப் பேர்களையும் கூட நிரபராதிகளாக்கி விடுவதற்கு வாதத் திறமை வாய்ந்த வக்கீல் தொழிலாளர்கள் வீதி தோறும் மலிந்து கிடக்கின்றனர்.
உதாரணத்திற்கு கொலை, மற்றும் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரர் இன்னும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வேளை பிரேமானந்தா போல் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்து விட்டாலும் கூட சிறையில் அவர்களுக்குத் தேவையான அனைத்தும் வேறு ஒரு வாசல் வழியாக கிடைத்துக் கொண்டிருக்கும்.
அதுவும் அண்ணா, அல்லது காமராஜர் போன்ற பெருந் தலைகள் பிறந்த நிணைவு நாட்களில் அரசே அவர்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்து விடும். வெளியில் வந்து வேறொரு ஸ்டேட்டில் வேறொருப் பெயரில் ஆஸ்ரமம் திறந்து விடுவார்கள்.
o இதுவரை ஆன்மீகப் பெயரால் நிருவப்பட்டுள்ள ஆஸ்ரமங்கள், யாகசாலைகள், மடங்கள், பீடங்கள், அனைத்தும் முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும்.
o இனிவரும் காலங்களிலும் அவைகள் நிருவப்படாதவாறு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
o இதுவரை சட்டத்தின் பிடியில் சிக்கிய போலி ஆசாமிகளுக்கு மக்களின் வரிப் பணத்தில் சுகாதார உணவு வழங்கப்படாமல் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.
o உலகிலேயே கடவுள் பக்தியாளர்கள் இந்தியாவில் அதிகம் இருப்பதால் அவர்களது ஆன்மீகத் தேடலுக்கு சரியான கடவுளையும், அந்தக் கடவுளின் தன்மைகளையும் எடுத்துக் கூறி போலி சாமியார்களின் சுரண்டலிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும்.
ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு அரசு தரப்பிலிருந்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டால் அனைத்து பட்டி, தொட்டிகளுக்கும் சென்று சரியான கடவுள் கொள்கைகளை போதித்து நாடாளுவோரையும், நாட்டு மக்களையும் கீழ்காணுமாறு பிறரை ஏமாற்றாதவர்களாகவும், பிறரால் ஏமாறாதவர்களகவும் மாற்றிக் காட்ட முடியும்.
அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பணியாள் ஒரு நாள் ஏதோ ஒரு உணவுப் பொருளைக் கொண்டு வந்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்து விட்டு இதை நான் எவ்வாறுப் பெற்றேன் என்று உங்களுக்குத் தெரியுமா ? எனக் கேட்டார் அதற்கவர்கள் தெரியாது என்றுக் கூற ‘நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது. ஆயினும் குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து அவரை ஏமாற்றி வந்தேன். அதற்காக அவர் எனக்குக் கூலியாகக் கொடுத்ததிலிருந்து தான் நீங்கள் இப்பொழுது உண்டது என்றுக்கூறினார். உடனே அபூபக்ர்(ரலி) அவர்கள் தம் கையை வாய்க்குள் நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்து விட்டார்கள். ஆதார நூல்: புகாரி 3842. அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள்.
வயிற்றுக்குள் போனதை விட்டு விடுவோம் இனிவரும் காலங்களில் சரியானதை விசாரித்து உண்டு கொள்வோம் என்றில்லாமல் ஒரு அப்பாவியிடம் குறி சொல்லி ஏமாற்றிய வருவாயில் அறியாமல் வயிற்றுக்குள் போனதை உடனே வாயினுள் விரலை விட்டு வாந்தி எடுத்து கக்கிய சமுதாயம் பெருமானார் உருவாக்கிய சமுதாயத்தைத் தவிற வேறொன்றை இதுவரை உலகம் கண்டதில்லை.
மேற்காணும் வழிகளிலல்லாது வேறெந்த வழிகளிலும் அப்பாவி மக்களை போலி சாமியார்களின் கடும் பிடியிலிருந்து காப்பாற்றவே முடியாது.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(3:104. )
posted by Adirai farouk