[ஆயிரக் கணக்கான அபூர்வங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரமிப்பூட்டும் பிரமிடின் மர்மங்களை விளக்க ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுத வேண்டும். பலன்களும் அதே அளவு இருப்பது தான் பெரிய அதிசயம்!
பிரமிடை ஆராயக்கூடிய எவருக்கும் தோன்றக்கூடிய ஒரு எண்ணம்; நிச்சயமாக இதை மனிதர்கள் வடிவமைத்திருக்க முடியவே முடியாது. பின் யாராக இருக்க முடியும்? ஜின்களாக இருக்குமோ என்று தோன்றுகிறதா?! ”இருக்கலாம்” என்று சொல்வதைவிட ”ஆம்” என்று சொல்வதுதான் பொறுத்தம். ]
வியப்பூட்டும் பிரமிட் மர்மங்கள் எண்ணிலடங்காமல் போய் விட்டதாலும் அதன் பயன்கள் மிகப் பெரும் அளவில் இருப்பதாலும் பிரமிடாலஜி என்ற தனிப் பிரமிட் இயலே தோன்றி விட்டது. பிரமிட் என்சைக்ளோபீடியா என்னும் பிரமிட் பேரகராதியும் இப்போது வந்து விட்டது. அப்படி என்ன மர்மங்கள்?
பிரமிட் கட்டிட அமைப்பு
இருபத்து மூன்று லட்சம் கற்களால் அமைக்கப் பட்டது கிரேட் பிரமிட்.
அதன் ஒவ்வொரு கல்லின் எடையும் 2 டன் முதல் 30 டன் வரை இருக்கிறது. இந்தக் கற்கள் ஒன்றொடொன்று பொருத்தப் பட்டிருப்பது அதிசயக்கத் தக்க அளவில் உள்ளது!
இவை அரை மில்லி மீட்டர் – அதாவது ஒரு மயிரிழை கூட இடைவெளி இன்றி இருப்பது அதிசயத்திலும் அதிசயமே!
இந்தக் கற்களால் 30 எம்பயர் ஸ்டேட் பில்டிங்குகள் கட்டலாம்! பிரமிட் பூமியின் ஸ்கேல் மாடலாக உள்ளது.
இதனுடைய லாடிட்யூட் (latitude) மற்றும் லாங்கிட்யூட் (longitude) ஆகிய இரண்டும் வெட்டிக் கொள்ளும் இடம் 30 டிகிரி வடக்கு மற்றும் 31 டிகிரி கிழக்கு!
இந்த ரேகை மற்ற எல்லா ரேகைகளையும் விட அதிகமான பூமியின் பரப்பின் வழியே செல்கிறது என்பது இன்னொரு அதிசயம்!
பிரமிடின் மொத்தக் கற்களின் எடையான ஐம்பத்தி மூன்று லட்சம் டன்னை 1,000,000,000,000,000 (ten to the power of 15) என்ற எண்ணால் பெருக்கினால் பூமியின் எடை கிடைக்கிறது! பிரமிடின் வெவ்வேறு அளவு விகிதாசாரங்கள் ஆங்காங்கே ‘பை’ எனப்படும் 3.142 என்ற அளவையும் தங்க விகிதம் என்று கூறப்படும் 1.618 என்ற அளவையும் காண்பிக்கின்றன.
பிரமிடில் உள்ள கிங் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு முனைகள் முறையே பீடா ஓரியன் நட்சத்திரத்தையும், ஆல்ஃபா டிராகோனி நட்சத்திரத்தையும், க்வீன் சேம்பரின் தெற்கு, மற்றும் வடக்கு முனைகள் முறையே சிரியஸ் நட்சத்திரத்தையும், ஓரியன் நட்சத்திரத்தையும் நோக்கி இருக்கின்றன!
பிரமிடில் உள்ளே வைத்த பொருள்கள் அழுகுவதில்லை. அதில் முறைப்படித் தெற்கு வடக்காகக் கீழிருந்து மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் வைக்கப்படும் பிளேடு தினசரி சார்ஜ் ஆகி எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடிய அளவு கூர்மையாக இருக்கும்!
அளவுகள் முக்கியம்
பிரமிட் சக்தியைச் சோதிக்க விரும்புவோர் அதன் அளவுகளை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். கீழே தந்துள்ள அளவு விவரங்களைக் கவனித்தால் உயரம், அடிப்பக்கம், பக்க அளவு ஆகியவற்றின் விகிதங்கள் தெரிய வரும்! பிரமிடின் அளவு விபரம் (அனைத்து அளவுகளும் சென்டிமீட்டரில்)
உயரம் அடிப்பக்கம் பக்கஅளவு
5 7.85 7.47
10 15.70 14.94
15 23.56 22.41
20 31.41 29.89
25 39.27 37.36
30 47.12 44.83
இந்த அளவுகளைக் கவனித்தால் ஒவ்வொரு அலகு உயரத்திற்கும் அதன் அடிப்பக்கம் 1.5708 மடங்காகவும் பக்க அளவு 1.4945 ஆகவும் இருப்பது தெரிய வரும்!
நெப்போலியன்
மாவீரனான நெப்போலியன் உலக அதிசயங்களில் மிகவும் தொன்மையான கிரேட் பிரமிடின் முக்கிய உள்ளறையான மெயின் சாம்பரில் ஒரு இரவைக் கழித்தான். காலையில் வெளியே வந்த அவன் எல்லையற்ற பிரமிப்புக்குள்ளாகி இருந்தான்.
என்ன நடந்தது என்று கேட்ட போது அதைச் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் (You wont believe me if I tell you) என்றான். அவனுக்கு மட்டுமல்ல ஆயிரக்கணக்கானோருக்கு அதிசய அனுபவங்களைத் தந்து வருவது பிரமிட்!
ஆயிரக் கணக்கான அபூர்வங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரமிப்பூட்டும் பிரமிடின் மர்மங்களை விளக்க ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுத வேண்டும். பலன்களும் அதே அளவு இருப்பது தான் பெரிய அதிசயம்!
பிரமிடை ஆராயக்கூடிய எவருக்கும் தோன்றக்கூடிய ஒரு எண்ணம்; நிச்சயமாக இதை மனிதர்கள் வடிவமைத்திருக்க முடியவே முடியாது.
பின் யாராக இருக்க முடியும்?
ஜின்களாக இருக்குமோ என்று தோன்றுகிறதா?! ”இருக்கலாம்” என்று சொல்வதைவிட ‘‘ஆம்” என்று சொல்வதுதான் பொறுத்தம்.