ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளி!
ரத்த உறைவை தடுக்கவும், ரத்த ஓட்டத்தை சீரமைக்கவும் உதவும் ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளியை பயன்படுத்தலாம், என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் உள்ள ரோவெட் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஆசிம் தத்தா ராய் இது குறித்து குறிப்பிடுகையில், ”வயதானவர்கள் தங்கள் உடலின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி கொள்ள, தினமும் சிறிதளவு ஆஸ்பிரின் மருந்தை உட் கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக இந்த மருந்தை உட்கொள்வதால், வயிற்றில் புண் ஏற்பட்டு விடுகிறது. இதனால், சிலருக்கு வயிற்றில் ரத்தக் கசிவும் காணப்படுகிறது.
நாம் தினமும் பயன்படுத்தும் தக்காளியின் விதையில் உள்ள நிறம் மற்றும் வாசனையற்ற பிசுபிசுப்பான பொருள், ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ரத்தம் உறைவதையும் தடுக்கிறது. எனவே, ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளியை பயன்படுத்தலாம்” என்றார்.
இந்த கண்டு பிடிப்பை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில், தக்காளியின் இந்த பகுதியை தனியாக எடுத்து, பசை வடிவில் தயாரித்து விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தக்காளியின் இந்த பசை பகுதி சில பானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
இரத்த ஓட்டத்தை சீராக்கும் தக்காளி
லேசாக காய்ச்சல் அடிக்க ஆரம்பிதலோ அல்லது உடல் வழிக்கோ அன்றி தலை வழிக்கோ மாத்திரை சப்டுறோம் அல்லவா? அப்போது அந்த வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
ஆனால் இந்த மாதிரிக்கு பதிலாக தக்காளியை சாப்டிலம் என்று மருத்துவ ஆய்வில் கண்டு பிடித்துள்ளார்கள்.
தக்காளி விதையில் இயற்கையாகவே ஜெல் போன்ற திரவம் காணபடுகிறது. அந்த திரவமானது இரதம் உரைவதை தடுப்பதில் முக்கிய இடம் பெறுகிறது. சீரான இரத்த ஓடம் மேம்படவும் இந்த ஜெல் முதன்மை இடம் பெறுகிறது.
இரத்த ஓடம் சீராக நடை பெற அதிகமான மக்கள் மாத்திரையை பயன்படுதுகின்றனர். இது வயிற்றில் இரத்த கசிவை ஏற்படுத்தி அல்சர் ஏற்பட வழி வகுக்கும். தக்காளி பயன் படுத்துவதன் மூலம் இந்த இக்கட்டில். இருந்து நாம் தப்பிக்கலாம். இது பக்க விளைவுகள் ஏற்படுத்தாது. அதனால் நாம் எதட்கேடுதாலும் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி இவ்வாறான பழங்களை காய்களை சேர்த்து கொள்ள பழகுவோம்.
ஆண்களின் விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும்
தக்காளி சூப் குடிப்பது ஆண்களின் விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தினமும் ஒரு கப் சூப் குடிப்பதால் விந்தணுக்கள் அதிக சக்தி பெற்றுவிடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்பது போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் முடிவு.
லைக்கோப்பென் கான்சர் நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது கான்சரிலிருந்து பாதுகாக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது ”இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது.
நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருக்கும் தகவல் ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்திருக்கிறது.
அப்புறமென்ன, இனிமேல் வழியில் தக்காளி சூப் விற்றுக் கொண்டிருப்பவனைப் பார்த்தால் பைக்கை கொஞ்சம் நிப்பாட்டி ஒரு சூப் குடிச்சிட்டு போக வேண்டியதுதான்!