அவள் அன்புக்கும் வானமே எல்லை
எல்லைகளை எனக்குள் உருவாக்கி அதனை
அவ்வப்போது அழகாய் உணர்த்தும்
அன்பான இல்லத்தரசி..
தன் கணவனை முழுமையானவனாய்
இவ்வுலகுக்கு இதமாய் இல்லறத்தின் பயனாய்
ஈன்றெடுத்து அவன் முகத்தில் மலரும் மகிழ்வை
தன்னால் தரமுடிந்ததை எண்ணி உள்ளூர இன்புறும் இல்லாள்
ஆண்டாண்டு காலமாய் எவருக்கும் செவிமடுக்கா
ஆடவனை ஒற்றை மந்திரச்சொல்லால் ((ஏற்றுக்கொள்கிறேன்))
ஒழுக்கமானவாய் மாற்றும் அன்பு படைத்த
அழகான மனையாழி..
கணவனாக வரும் ஆடவனை வேண்டும்பொழுது
இடித்தும் சிலவேளைகளில் அரவணைத்தும்
அழகாய் இன்புற்று வாழ ழிவகுக்கும்
வல்லமைப்படைத்த எழிலரசி ..
தனியாயிருந்து உனக்கு துணையாய் வந்து
இனி காலங்காலமாய் நீ எனக்கு நானுனக்கு
என அமைதி கலந்து உரக்க சொல்லும்
உற்ற மனைவி..
நான் தான் வேண்டுமெனக்கு என்பதை விட்டு
நீயும் நீ சார்ந்ததுமே இனியெனக்கு என
எல்லாவற்றையும் தந்து நல்ல தாயாக
கடைசிவரை நல்ல மனையாழி..