இஸ்லாம் முஸ்லீம்களின் தனிவுடமையா?
உலகில் பல்வேறு மதங்கள், சமயங்கள் உள்ளன. ஆவைகளெல்லாம் அவற்றை ஏற்று பின்பற்றுபவர்களுக்குரிய அல்லது சார்ந்திருப்பவர்களுக்குரியவைகளாக இருப்பதைப் போன்று இஸ்லாம் என்கிற மார்க்கமும் முஸ்லிம்களுக்குரிய தனிவுடமையாகும் என பெரும்பாலான மக்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இஸ்லாம் என்பது உலக மக்கள் அனைவருக்கும் உரித்தானக அல்லாஹ் பொதுவுடமையாக ஆக்கியுள்ளான் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
இஸ்லாம் மார்க்கம் உலக மக்களின் மார்க்கமாகும்
இஸ்லாம் என்கிற மார்க்கம் மனித குல முழுமைக்கும் யாவற்றையும் படைத்து பரிபாலனம் செய்கின்ற இறைவன் வழங்கிய பொதுவுடமையாகும்.இஸ்லாம் என்பது மனிதகுல முழுமைக்கும் உண்மையான வாழ்க்கை நெறி வழிகாட்டியாகும்
அல்லாஹ் கூறுகிறான். ”இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;. (அல்குர்ஆன் 5:3)
”நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்;. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்”. (அல்குர்ஆன் 3:19)
மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ”எல்லாக் குழந்தைகளும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள் தாம் அவர்களை (இயற்கை மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 6599)
அல்லாஹ் அகில மக்களின் இறைவனாவான்
ஓவ்வொரு மதத்தில் உள்ளவர்களும் தங்களுடைய தெய்வங்களுக்கு பல பெயர்கள் சூட்டியுள்ளனர். ஆதனைப் போன்று முஸ்லீம்களின் தெய்வத்திற்கு அல்லாஹ் என்று முஸ்லிம்களால் அழைக்கப்படுகின்றது என்று பலரும் எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள். உண்மையில் அல்லாஹ் என்ற அரபிச் சொல்லானது பலஅர்த்தங்களை உள்ளடக்கியது என்றாலும் அதற்கு இணையாக தமிழில் மொழிபெயர்த்துச் சொல்வதென்றால் வணக்கத்திற்குரியவன் என்று பொருள்படும்.
அல்லாஹ் என்பவன் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிமையானவர் அல்ல மாறாக அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறுகையில் அனைத்துப்புகழும், ”அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்”.(அல்குர்ஆன் 1:1)
”எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே – மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்” என்று கூறுவீர்களாக. (அல்குர்ஆன் 29:46)
”(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.” (அல்குர்ஆன் 112:1)
”மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). -நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்”. (அல்குர்ஆன் 4:1
”மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம்.” (அல்குர்ஆன் 2:21)
இன்னும் சிலர் நாகூர் ஆண்டவர், முகையதீன் ஆண்டவர் என்று முஸ்லிம்களின் கடவுளர்கள் உள்ளனர் என நம்புகின்றனர்.
உண்மையில் இவர்களெல்லாம் முன்னால் வாழ்ந்து விட்டு சென்ற மனிதர்களின் அடக்கத்தலங்களை இன்றைய முஸ்லிம்களில் சிலர் உயர்ந்த கட்டிடமாக கட்டிக்கொண்டு (அதாவது தர்ஹா) அவர்கள் பெயரால் வழிபாடு, கந்தூரி விழாக்கள் ஆகியன கொண்டாடி வருகின்றனர்.
இதற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. மாறாக மனிதன் மனிதனை வணங்கி வழிபடுவதை ஒழித்துக்கட்ட வந்த மார்க்கமாகும்.
அல்குர்ஆன் அகிலத்தார்களுக்கோர் அருட்கொடை பொதுமறையாகும்
இந்துக்களுக்கு பகவத் கீதை வேத நூலாக இருப்பதைப் போல், கிறிஸ்தவர்களுக்கு பைபிள் வேத நூலாக இருப்பதைப் போல், முஸ்லீம்களுக்குரிய வேதம் அல்குர்ஆன் என முஸ்லிம்மல்லாதவர்கள் பலரும் எண்ணுகின்றனர். ஆதைப் போலவே பெரும்பாலான முஸ்லிம்களும் கருதுகின்றனர். உண்மையில் அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டக் கூடிய பொதுமறையாகும். அல்லாஹ் கூறுகிறான்.
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (அல்குர்ஆன் 2:185)
”இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்றுங் கூறுவீராக. (அல்குர்ஆன் 6:90)
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகில மக்களுக்கோர் அருட்கொடையாவார்.
அல்லாஹ் உலகத்தை உருவாக்கியது முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமூகத்தில் புரையோடிப் போயிருந்த சகல தீமைகளையும் களைந்து நல்வாழ்வை உருவாக்கிட பல இறைத்தூதர்களை அனுப்பினான். ஆவர்களில் இறுதியாக மனித குலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது குறிப்பிட்ட அரபு தேச மக்களுக்கு மட்டுமின்றி அகில மக்கள் அனைவருக்கும் ஓர் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் அனுப்பியுள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான். ”(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.” (அல்குர்ஆன் 21:107)
உலக மக்கள் யாவரும் உடன்பிறப்புக்களே!
நாகரீகம், அறிவியல் விஞ்ஞானத்தின் உச்சகட்டத்தை முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் மனித இனத்திற்கு மத்தியில் இனத்தால், மொழியால் , நிறத்தால் தங்களுக்குள் வேற்றுமை, பகைமை பாராட்டியும், மனித சமூகத்தை தீண்டாமை கொடுமையால் ஒதுக்கி பல சாதிகளாக கூறுபோட்ட துண்டாடப்படுவதையெல்லாம் இஸ்லாம் மட்டுமே உலகில் மனிதனாக பிறக்கும் யாவரும் நிறத்தாலோ, இனத்தாலோ, மொழியாலோ வேறுபட்டு நிற்பினும் பிறப்பால் அனைவரும் சமம் என்பதை அழுத்தம் திருத்தமாக அல்லாஹ் கூறுகிறான்.
”மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.” (அல்குர்ஆன் 49:12)
மேலும் நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். முக்களே! ஊங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான் . ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும் ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும் ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும் ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைத் தவிர (நூல்: அஹ்மமத் 22391)
இத்தோடு மட்டுமில்லாமல் இஸ்லாம் ஒவ்வொரு துறையைப் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் அலசி தீர்வையும் அளிக்கின்றது. சுருங்கச் சொல்வதென்றால் ஏல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இங்கே இருக்கின்றது உதாரணத்திற்கு ஒரு சில விசயங்களை இங்கே காண்போம்.
உலக சமய நல்லிணக்கத்திற்குண்டான தீர்வு?
உலகில் வெவ்வேறு கால கட்டங்களில் தோன்றிய சமயங்களுக்கிடையே எந்த இணக்கமும் இருந்ததில்லை. முனிதர்கள் தங்களுக்குள் வெறுத்துக் கொள்ளவும், பொருந்திக் கொள்ளவும் காரண காரணிகளாக சமய மதங்கள் மற்றும் சமய மத வாதங்கள் தான் இருந்து வந்து கொண்டிருக்கின்றது என்பது மறுக்க இயலாத உண்மையாகும்
இதன் காரணமாக மதக்கலவரம், சாதிக்கலவரம் ஆகியன உண்டாக்கப்படுகின்றது. அதனை தீர்கக ஜனநாயக அரசியல் சாசன சட்டதிட்டங்கள இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் எண்ணிலடங்கா சிக்கல் இருக்கின்றது. அதற்குண்டான தீர்வை இஸ்லாம் கூறும் முடிவை எல்லோரும் பாரபட்சம், தயவு தாட்சண்யம் இன்றி ஏற்றுக் கொண்டால் பிரச்சினைகள் எழ வாய்ப்பேயில்லை. அல்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
”(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. ”(அல்குர்ஆன் 2:2560
”உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.” (அல்குர்ஆன் 109:6)
ஏக இறைவனின் உலக பொதுமறையாம் திருக்குர்ஆன் உபதேசங்களை மனித சமூகம் முழுமையாக விளங்கி புரிந்து நடந்தால் உலகில் சாந்தி சமாதானம் சமரசம் ஏற்பட்டுவிடும் என்பதில் ஐயமில்லை.
அனைவருக்கும் சமநீதி
எங்கும் எதிலும் வன்முறை கவலரங்கள் தீவிரவாதங்கள் தலைவிரித்தாடுவதற்கு பல காரணங்கள் உண்டு அதனை ஒடுக்குவதற்கும் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் பல்வேறு கட்ட சபைகளைக் கூட்டி மிகக் கடுமையான சட்டங்களைப் போட்டாலும் பயனில்லாமல் போவதற்கு காரணம் என்னவெனில் சரியான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சரியான காரண காரணிகளை கண்டறிந்து அதற்கு சரியான நியாயமான தீர்ப்பும் தண்டனையும் வழங்கப்படும் போது எவ்வித பிரச்சினையும் முற்றவிடாமல் களைந்து விடலாம். ஆதற்கு தோதுவான சட்டதிட்டங்களை வகுத்துக் கொண்டாலே போதுமானதாகும். அல்லாஹ் கூறுகிறான்
”முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்”. (அல்குர்ஆன் 5:8)
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 4:58
”இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; ”எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்ப்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:40)
மேற்கூறப்பட்டுள்ள வசனங்களின் மூலம் எந்த மதத்தைச் சார்ந்தவர்களுகுரிய வணக்கத்தலமாக இருந்தாலும் அதை அவரவருக்கு உரிய முறையில் பாதுகாக்க பட வேண்டும் என்பது அல்குர்ஆனின் ஆணையாம்
இன்னும் பிற மதக்கடவுளர்களை ஏசக்கூடாது என்றும் இஸ்லாம் கூறுகிறது.
”அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்” (அல்குர்ஆன் 6:108)
இறுதியாக இது போன்று இன்னும் எண்ணிலடங்கா விஷயங்கள் உள்ளன. சுருங்கச் சொல்வதென்றால் இஸ்லாம் என்ககிற மார்க்கம் உலக மக்களின் மார்க்கம் ஏற்று நடப்பவர்கள் முஸ்லிம்கள் (இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள்) மற்ற யாவரும் இறைவனுக்கு மாறுசெய்யும் (காஃபிர்) நன்றி கெட்டவர்களாவர்.
அல்குர்ஆனை படியுங்கள்! அதன்படி செயல்படுங்கள்! புரப்புங்கள்!.
”Jazaakallaahu khairan” source: http://kadayanalluraqsha.com/?p=1601