[ அமெரிக்காவிலும்ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளிலோ முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்லாம் அங்கு வளர்ந்து வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி கேலிச்சித்திரம் வரைந்த டென்மார்க் நாட்டில் இஸ்லாம் அதிவேகமாக வளர்ந்து வருவதாக அந்த நாட்டைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் கூறுகிறார்.
இத்தகைய அதிவேக வளர்ச்சியைக் கண்டு பொறுக்காத மேலை நாட்டுச் சக்திகளும், மிஷனரிகளும் பல்வேறு வகையான திட்டங்களைத் தீட்டி இஸ்லாத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்த முனைகின்றனர். இவர்களின் இந்த கீழ்தரமான செயல்களை ஒரு பெரிய பட்டியலாகவே வெளியிடலாம்.]
அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தங்களின் கொள்கைகைளைத் தாங்கிப் பிடிக்க இயலாத மேலை நாட்டு சக்திகளும், தாங்கள் பின்பற்றும் சமயத்தை விட சத்திய இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதைத் சகித்துக் கொள்ள இயலாதவர்களும் இஸ்லாத்தைப் பற்றி பொய்யான தகவல்களையும், அவதூறுகளையும் கூறி இஸ்லாத்தின் மீது சேற்றை வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம்கள் ஏற்பாடு செய்யும் அறிவுப்பூர்வமான விவாத மன்றங்களில் கலந்துக் கொண்டு தங்களின் கொள்கைகளை நிலை நாட்ட சக்தியற்ற இவர்கள், சத்திய இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களை தங்களின் அசத்தியக் கொள்கையின் பால் இழுக்க முயன்று படு தோழ்வியை தழுவிய இவர்கள், சத்திய இஸ்லாத்தின் தூய கொள்கைகளால் கவரப்பட்டு சத்திய மார்க்கமான இஸ்லாத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் தங்களின் கொள்கைச் சகோதர சகோதரிகளையாவது குறைந்தபட்சம் தடுத்து நிறுத்தலாமே என்ற குறுகிய மனப்பான்மையில் இஸ்லாத்தின் மீது பலவாறாக இட்டுக்கட்டி பொய்களையும் கற்பனைகளையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்காக இவர்கள் தங்களின் கைவசம் உள்ள உலகப் புகழ்பெற்ற மீடியாக்களையும், ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர். வலையுலக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் இன்னும் ஒரு படி மேலே சென்று இஸ்லாத்தின் பெயரிலேயே போலி வலைதளங்களைத் துவக்கி வைத்துக்கொண்டு இஸ்லாத்தைப் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி மிக மோசமாக சித்தரிக்கின்றனர்.
தங்களின் கொள்கைகளின் மேன்மையை எடுத்துக் கூறி தங்களின் கொள்கையின் பால் அழைப்பதற்குப் பதிலாக சத்திய இஸ்லாத்தின் தூய கொள்கைகளினால் கவரப்பட்டு அதை நோக்கிச் செல்கின்ற தங்களின் சகோதரர்களை தடுத்து நிறுத்துவதற்காக இவர்கள் செய்கின்ற இத்தகைய கீழ்தரமான செயல்களின் மூலம் தாம் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்பதையும் தாம் பின்பற்றும் கொள்கைகளும் எவ்வளவு கீழ்தரமானவை, மக்களிடம் செல்வாக்கு இழந்து வருகின்றது என்பதையும் அவர்களே நிருபிக்கின்றனர்.
இவ்வாறு இவர்கள் சத்திய இஸ்லாத்தின் மீது வாரியிரைத்துக் கொண்டிருக்கும் சேறுகளில் சிலவற்றைப் பார்ப்போம்!
o முஸ்லிம்கள் மக்காவில் உள்ள கருப்புக் கல்லை வணங்குகின்றனர்- முஸ்லிம்களின் கடவுள் அல்லா என்ற ”சந்திரக் கடவுள்” (Moon god) நவூது பில்லாஹ்- முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள், அவர்களுக்கு பயங்கரவாதமே போதிக்கப்படுகின்றது- இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்தி இழிவு படுத்துகிறது; இப்படி இவர்களுடைய பொய்களை, அவதூறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் சத்திய வேட்கையினால் சத்தியத்தை தேடியலைந்து சத்திய இஸ்லாத்தை தங்களின் சத்திய மார்க்கமாக தேர்ந்தெடுப்பவர்களை இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவர்களுடைய பொய் பிரச்சாரங்கள் அனைத்தையும் தவிர்ந்தவர்களாக இஸ்லாத்தை நோக்கி திரும்புபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறையவில்லை. அல்ஹம்துலில்லாஹ்.
அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு 20,000 (இருபது ஆயிரம்) பேர்களுக்கும் மேல் இஸ்லாத்தை தழுவுவதாக CNN தொலைக்காட்சி கூறுகிறது.
அமெரிக்காவிலும்ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளிலோ முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்லாம் அங்கு வளர்ந்து வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி கேலிச்சித்திரம் வரைந்த டென்மார்க் நாட்டில் இஸ்லாம் அதிவேகமாக வளர்ந்து வருவதாக அந்த நாட்டைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் கூறுகிறார்.
இத்தகைய அதிவேக வளர்ச்சியைக் கண்டு பொறுக்காத மேலை நாட்டுச் சக்திகளும், மிஷனரிகளும் பல்வேறு வகையான திட்டங்களைத் தீட்டி இஸ்லாத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்த முனைகின்றனர். இவர்களின் இந்த கீழ்தரமான செயல்களில் சில:
o குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களைத் திரித்து இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை அவற்றிற்கு கொடுப்பது, அவற்றை தாங்களே உருவாக்கிய போலியான இஸ்லாமிய தளங்களிலே பதிப்பது!
o பொய்களையும் புரட்டுகளையும் இஸ்லாம் மீதுள்ள காழ்புணர்ச்சிகளையும் தங்கள் கைவசம் உள்ள மீடியாக்களின் மூலம் தொடர்ந்து கூறிக் கொண்டிருப்பது
மேலை நாட்டவர்களிலும் மற்ற சமயத்தவர்களிலும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் நல்லுள்ளம் கொண்டவர்கள் பலர் மேற்கத்திய ஊடகங்களின் தொடச்சியான இத்தகையை பொய்களினால் இஸ்லாத்தைப் பற்றி தப்பான அபிப்ராயம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதற்கு சான்றாக பின்வருபவற்றைக் கூறலாம்:
1990 களில் இஸ்லாத்தைத் தழுவிய முன்னாள் கிறிஸ்தவ மதபோதகரும், இன்னாள் இஸ்லாமிய மார்க்க போதகருமான ஷெய்ஹு யூசுஃப் எஸ்டஸ் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் தாம் ஏன் முஸ்லிம் ஆனேன் என்று கூறுகையில்,
”முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள், அவர்கள் மக்காவிலுள்ள கருப்புக் கல்லை வணங்குகிறார்கள், அவர்களிடமிருந்து கிறிஸ்தவர்கள் விலகியே இருக்க வேண்டும்” என கிறிஸ்தவ மிஷனரிகளால் தங்களுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததாகவும் அவற்றை தாம் நம்பி வந்ததாகக் கூறுகிறார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க பிரிவு கிறிஸ்தவ முன்னாள் மத போதகரான ஒருவர் தாம் எவ்வாறு சத்திய இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டேன் என தொலை காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கையில்,
”இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கும் ஒரு மதம், அதைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகள்” என மேற்கத்திய ஊடகங்களினாலும், மிஷனரிகளாலும் தாம் மூளைச்சலவைச் செய்யப்பட்டு அதையே தாம் உண்மை என நம்பி வந்ததாகவும் கூறினார்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிறிஸ்தவப் பெண்மணி Melinda Baig என்பவர் தாம் ஏன் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்தேன் என்று கூறுகையில்,
”இஸ்லாத்தைப் பற்றிய நிறைய தவறான கருத்துக்கள் (misconceptions) மேலை நாடுகளில் உள்ளவர்களிடம் இருப்பதாகவும் அவற்றை மேற்கத்திய ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பி வருவதாகவும், அதனால் மேலை நாடுகளில் உள்ளவர்கள் எளிதாக அவற்றை உண்மை என நம்பிவிடுவதாகவும், அந்த வகையில் தாமும் இஸ்லாத்தை ஆய்வு செய்வதற்கு முன்னர் அவற்றையெல்லாம் உண்மை என நம்பி வந்ததாகக் கூறினார். மேலும் இவர் கூறுகையில் சத்தியத்தை தேடி அலைந்த போது இஸ்லாத்தைப் பற்றிப் படித்த போது தான் மேற்கத்தியவாதிகளால் இஸ்லாத்தைப் பற்றிப் பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் தவறானவை என தாம் அறிந்து சத்திய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்.
எனவே எனதருமை இஸ்லாமிய சகோதரார்களே அந்நிய சக்திகளால் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்காக திட்டமிட்டுப் பரப்பப்படும் இந்த மாதிரியான பொய்களை முஸ்லிம்களாகிய நாம் அறிவுப்பூர்வமான வகையில் எதிர் கொண்டு அவற்றிற்கு தக்க பதிலடி கொடுத்து மேற் கூறப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு ஏற்பட்ட இஸ்லாத்தைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தைப் போன்று இன்னும் அதே நிலையில் இருக்கின்ற சகோதர சகோதரிகளின் சிந்தனையை தட்டி எழுப்பி, அவர்களை சத்திய இஸ்லாத்தின் தூய போதனைகளைப் படிக்கச் செய்து, அவர்களின் சந்தேகங்களைப் போக்கி அவர்களை சத்திய இஸ்லாத்தின் பால் அழைப்பது முஸ்லிம்களாகிய நம் அனைவர் மீதும் தலையாய கடமையாகும்.
ஆகையால் நாம் அதற்குரிய ஆற்றல்களை அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவைப் படிப்பதன் மூலம் வளர்த்துக் கொண்டு இத்தகைய தஃவா (அழைப்புப்) பணியில் தீவிரமாக நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
”உங்கள் மூலமாக ஒருவருக்கு ஹிதாயத் (நேர்வழி) கிடைப்பது சிவந்த ஒட்டகங்களை விடச் சிறந்தது” (ஆதாரம்: திர்மிதி.)
அறிஞர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கமளிக்கையில் ”சிவந்த ஒட்டகங்களை விடச் சிறந்தது” என்பதற்கு ”இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் விடச் சிறந்தது” என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் மற்றும் முஸ்லிம்கள் அனைவருக்கும் இத்தகைய நற்பேற்றினை அளித்திட அருள்பாலிப்பானாகவும்!.
கட்டுரையாசிரியர்: சுவனத்தென்றல் நிர்வாகி
”Jazaakallaahu khairan” source: http://suvanathendral.blogspot.com