நமது மார்க்கப் போதகர்கள் குறித்து பிற சமய சகோதரர்கள்
[ நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதால் நம்மிடையே நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய மாற்றம் குறித்து நமது உரையாடலை அமைத்துககொள்வோம்.
நமது வாழ்வில் மிக ஆவேசமான குத்பாக்கள் நாம் செவிமடுக்காமல் இல்லை. சிலவேளைகளில் குத்பா பிரசங்கம் செய்பவருக்கே என்ன பிரச்சாரம் செய்தார் என்பது பற்றி பிறகு சொல்ல வேண்டிய நிலைமையை நாம் அவதாணிக்கின்றோம்.]
அன்பின் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
என்னுடன் சுமுகமாகப் பழகும் ஒரு மாற்று மத சகோதரர் என்னிடம் கூறிய ஒரு விடயம் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
குறித்த சகோதரர் அவரது மத போதகரின் போதனை ஒழுங்கிலும் நமது வெள்ளிக்கிழமை பிரசார உரையின் ஒழுங்கையும் நன்கு அவதாணித்து அது பற்றி என்னிடம் குறிப்பிடுகையில் பின்வருமாறு கருத்துரைத்தார்.
நண்பரே நான் வாராந்தம் செல்லும் கிறிஸ்தவப பள்ளியில் நடக்கும் மதபோதனைகளை நடாத்துபவர் எதுவிதமான ஆரவாரமும் இன்று மிக நிதானமாகவும் அமைதியாகவும் கருத்தை முன்வைப்பதை நான் அவதாணித்துள்ளேன். மாறாக நீங்கள் வாராந்தம் ஒவவொரு வெள்ளிக்கிழமைகளிலும் சென்றுவருகின்ற வெள்ளிக்கிழமை உரையை நான் பல இடங்களில் அவதாணித்துள்ளேன். இவ்விரண்டையும் ஒப்பிடுகின்ற போது உங்களது போதகர் மிக உரத்த குரலில் சில வேலை வன்முறையுடன் கூடிய உரையாக இருக்கின்றதே என்று எண்ணுமளவுக்கு மிகக் காரசாரமானதாகவும் மென்மையைக் கண்டுகொள்ள முடியாத விதத்திலும் காணப்படுவதனை நான் அவதாணித்துள்ளேன்.
சில வேளைகளில் இறைவனிடம் பிரார்த்திப்பது கூட அடித்துப் பரிப்பது போன்று ஒரு தோரனையில் உள்ளதை நான் அவதாணித்து உள்ளேன். எனது அவதாணம் தவறு எனின் மண்ணிக்கவும் என்று என்னிடம் கருத்துரைத்தார்.
குறித்த சகோதரரிடம் அதனை ஒத்துக்கொள்வதனையும் அது இஸ்லாம் கற்றுத்தந்துள்ள வழிமுறையன்று என்பதனையும் எனினும் இவ்வாறு அனைத்துப் போதகர்களும் நடந்துகொள்வதில்லை என்று ஒருவாறு சமாளிப்பதனையும் தவிற என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆவேசமான பயான்களை குறிப்பாக ஜும்ஆ பயான்களை ஒலிபெருக்கியில் கேட்கும் மாற்றார்கள் முஸ்லிம்களைப் பற்றிய தவறான கருத்தாடல்களுக்குத் துணையாக இதைப் பயன்படுத்துகின்றனர்.
ஒலிபெருக்கியில் பேசப்படும் பேச்சுக்கள் பல்வேறு தரப்பையும் சென்று அடைவதால் மென்மையான அதேசமயம் சிந்தனையைத் தூண்டும் வகையில் பயான் செய்ய நம்மவர்கள் பக்குவப்பட வேண்டும்..
சில வேளைகளில் இறைவனிடம் பிரார்த்திப்பது கூட அடித்துப் பரிப்பது போன்று ஒரு தோரனையில் உள்ளதை
குறித்த சகோதரர் சொல்ல வந்தது இறைவனிடம் கையேந்திப் பிரார்திக்கும் போது கூட மென்மையான விதத்தில் தயை கூரந்து இறைவனிடம் கேட்பதாக அன்றி பலவந்தமாக வேண்டும் தோரனை என்று குறிப்பிட்டமை அவதாணிக்கத்தக்கது. உண்மையில் குறித்த ஒரு குத்பாவைக் கேட்ட பின்பு அது தொடர்பில் ஏற்பட்ட உரையாடலில் தான் இவ்வாறு கருத்துரைத்தார்.
அத்துடன் அவர் அவரது மதப்போதகரை உயர்த்தும் நோக்கில் கதைக்கவில்லை மாறாக ஒரு நிதர்சனமான ஒப்பீட்டையே முன்வைத்தார். நாம் அவர்களது மதப் போதகிரின் நிலைமை குறித்து இங்கு வாதிப்பதற்காக நான் இதனை எழுதவில்லை.
நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதால் நம்மிடையே நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய மாற்றம் குறித்து நமது உரையாடலை அமைத்துககொள்வோம்.
நமது வாழ்வில் மிக ஆவேசமான குத்பாக்கள் நாம் செவிமடுக்காமல் இல்லை. சிலவேளைகளில் குத்பா பிரசங்கம் செய்பவருக்கே என்ன பிரச்சாரம் செய்தார் என்பது பற்றி பிறகு சொல்ல வேண்டிய நிலைமையை நாம் அவதாணிக்கின்றோம்.
இது குத்பாப் பிரசங்கள், வியாழன் வெள்ளிக் கிழமைகளில் இடம் பெரும் மாலை நேர மார்க்கத் தெளிவுரைகள் என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.
இந்நிலைமை மாற குறித்த பிரசாரகர்கள், நமது பள்ளி நிர்வாகத்தினர் போன்றவர்கள் கூடிய கவனமெடுத்தல் அவசியம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
Postede by: Thalib Zakky <thalibzakky@gmail.com>