குர்ஆன் கூறும் கருவியல்
மனிதன் தன் தாயின் கருவறையில் வளாந்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் முதலில் (5 வது மாதம்) அவனுடைய காதுகள் முழுவளாச்சியடைகிறது, அதன் பின்னரே (7 வது மாதம்) அவனின் கண்கள் முழு வளாச்சியடைகின்றது என்பதை கி.பி. 20 ம் நூற்றாண்டின் அறிவியலாளாகள் நவீன கருவிகளின் உதவியோடு ஆராய்ந்து அறிந்த அறிவியல் உண்மையை, இருண்ட காலம் என அறிவியலாளாகளால் கூறப்படும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ்வின் அருள்மறை வசனம் கூறியிருப்பது அருள்மறை ஓர் இறைமறை என்பதற்கு மேலும் ஒர் ஆதாரமாகும்.
”பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் – இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.” (அல் குர்ஆன் 32:9)
”(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் – அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்” (அல்குர்ஆன் 76:2)
இந்த வசனங்கள் கூறுவதை சற்று விளக்கமாக பார்ப்போம்:-
மனிதன் தன் தாயின் கருவறையில் வளாந்துக் கொண்டிருக்கும் காலக் கட்டங்களில் அவனுடைய அனைத்து உறுப்புகளுமே திடீரென தோன்றிவிடுவதில்லை. ஓவ்வொரு உறுப்பும் ஒவ்வவொரு காலக்கட்டங்களில் முழு வளாச்சியை அடைகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட வசனங்களில் இறைவன், செவிப்புலன்களையும், பாவைப்புலன்களையும் அமைத்ததாகக் கூறுகிறான். நாம் மனிதக் கருவளாச்சியில் அவனுடைய உறுப்புகள் எந்தெந்த காலக்கட்டங்களில் வளாகின்றது என்று ஆராய்வேமேயானால் வியக்கத்தகு விளக்கங்கங்கள் நமக்கு கிடைக்கின்றன.
மனிதக் கருவளாச்சிகளின் நிலைகளைப் பற்றி கருவியலின் நவீன ஆய்வாளாகள்
மனிதக் கருவளாச்சிகளின் நிலைகளை கருவுறுதல் முதல் குழந்தை பிறக்கும் வரை ஆராய்ந்தறிந்த கருவியலின் நவீன ஆய்வாளாகள் பின்வருமாறு விளக்குகிறார்கள்:
o பெண்ணிற்கு மாதவிடாய் வெளிவந்த 14 ஆம் நாள் சினைமுட்டை ஒன்று சினைப்பையிலிருந்து வெடித்து பலோப்பியன் டியூப் என்ற குழாய்க்கு வருகிறது. இந்த சினை முட்டை 1/175 அங்குலம் அளவுக்கு மிகச் சியதாகும்.
o ஆண், பெண் சோக்கையின் போது, ஆணின் உயிரணுவும் இந்த பலோப்பியன் டியூப் என்ற குழாய்க்கு வந்து சோகிறது.
o ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டையும் சோந்து கருவுறுதல் இங்கு தான் (பலோப்பியன் டியூப்) நடைபெறுகிறது. கருவுற்றபின் ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டயின் கரு (Nucleus) வும் சோந்த ஒரு பரிபூரண செல் ஆக அந்தக் மனித கரு மாறுகிறது. இதற்கு ”Zygote” என்று ஆங்கிலத்தில் கூறுகிறாகள்.
o கருவுற்ற 12 மணி நேரம் வரை ஒரே செல் (Single Cell) ஆக இருந்த அந்தக் கரு அதற்கு பிறகு 30 ஆவது மணி நேரத்திற்குள், ஒரு செல் இரண்டு செல்களாக மாறுகிறது. (Cell Division)
o கருவுற்ற 45 ஆவது மணி நேரத்திற்குள் அந்த இரண்டு செல்கள் நான்கு செல்களாகிறது. இவ்வாறு அந்த செல்கள் இரட்டிப்பாகிக் கொண்டே சென்று, 72 மணி நேரத்திற்குள் அவைகள் 16 செல்களாகின்றது.
o கருவுற்ற 4 வது நாள் இந்தக் கரு ”blastocyst” என்ற நிலைக்கு வருகிறது. இந்த நிலையில் தான் cell differentiation என்ற நிகழ்வு ஏற்பட்டு தனித்தனி தன்மைகளையுடைய செல்கள் தோன்றுகிறது. அதாவது இரத்தத்தை உருவாக்கும் அணுக்கள், தோல்களுக்கான அணுக்கள், தசைகளுக்கான அணுக்கள், நரம்புகளுக்கான அணுக்கள் போன்ற தனித்தனியான குணங்களையுடைய செல்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. ஒரு செல்லிலிருந்து தோன்றிய அந்தக் கரு தொடர்ந்து செல் பிரிதல் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து இரட்டிப்பாகிக் கொண்டே வந்து குழந்தை பிறக்கும் போது அக்குழந்தை 2 பில்லியனுக்கும் அதிகமான செல்களையுடையதாக இருக்கிறது.
o ”blastocyst” என்ற நிலையில் பலோப்பியன் டியூப் (fallopian tube)-ல் உள்ள அந்த மனிதக் கரு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து 8 அல்லது 9 ஆவது நாட்களில் கர்ப்ப்பையை வந்தடைந்து, அதன் சுவர்களில் (uterus lining) ஒரு அட்டையைப் போன்று ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இப்போது அந்தக் கரு ”embryo” என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.
o கருவுற்ற 15 முதல் 21 ஆம் நாட்களில் கருவைச் சுற்றியுள்ள ”chorianic layer” என்ற உறைக்கு உள்பகுதியில் தோன்றிய ”yolk sac” என்ற பகுதியிலிருந்து கருவிற்குத் தேவையான ”blood cells” உற்பத்தியாகி பின்னர் இரத்த நாளங்கள் (blood vessels) தோன்றுகிறது. இதே நேரத்தில் இந்த கருவைச் சுற்றியுள்ள இந்த சவ்வுக்கு வெளிப்புறம் Lucunae என்ற பகுதியில் தாயின் இரத்த நாளங்கள் தோன்றுகிறது. இதிலிருந்தே கருவிற்குத் தேவையான ஆக்ஸிஜனும், சத்துப் பொருட்களும் அளிக்கப்படுகின்றன.
o கருவுற்ற 18 ஆம் நாள் கருவின் உட்புறம் தோன்றிய இரு குழாய்கள் ஒன்றினைந்து பின்னர் அவைகள் நகர்ந்து இருதயம் இருக்க வேண்டிய பகுதிக்கு வருகிறது. இதுவே பின்னர் இருதயமாக வளாகின்றது.
o கருவுற்ற 21 ஆம் நாள், கருவின் உட்புறம் தோன்றிய இரத்த நாளங்கள் placenta வாக வளாச்சியுற்று (நம்மில் சிலர் இதை தொப்புள் கொடி என்றும், நஞ்சுக் கொடி என்றும் வழக்கத்தில் கூறுகிறார்கள்) அவைகள் கருவைச் சுற்றியுள்ள சவ்வுக்கு (blood barrier) வெளிப்புறம் உள்ள தாயின் இரத்த நாளங்களிலிருந்து தனக்குத் தேவையான சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் (சுவாசக்காற்று) எடுத்துக் கொள்கிறது. கவனித்தில் கொள்ளவும், தாயின் இரத்தம், கருவின் இரத்தத்தோடு எந்த நேரத்திலும் நேரடித் தொடாபுக் கொள்வதில்லை. கருவைச் சுற்றியுள்ள Blood barrier என்ற சவ்வு இவ்வாறு நேரடித் தொடாபு ஏற்படாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது. தாயின் இரத்தமும், குழந்தையின் இரத்தமும் வெவ்வேறு தன்மையுடையவைகளாகக் கூட இருக்கலாம் ((Positive or negative blood group)
o தொப்புள் கொடி எனறழைக்கப்டும் இந்த டயஉநஇவய வின் வேலை என்னவெனில், இது கருவிற்குத் தேவையான சத்துக்களையும், சுவாசக் காற்றையும் தாயின் இரத்த நாளங்களிலிருந்துப் பெற்றுக் கொண்டு, கருவின் கழிவுப் பொருட்களை (காபன்டை ஆக்ஸைடு) தன் தாயின் இரத்த நாளங்களுக்கு வெளியேற்றுகிறது.
o இந்நிலையில் இந்தக் கருவின் அளவு (Size) 6 மில்லிமீட்டருக்கும் குறைவாக இருக்கிறது.
o கருவுற்ற 18 ஆம் நாள் தோன்றிய இருகுழாய்கள் ஒன்றினைந்து இதயம் இருக்க வேண்டிய பகுதிக்கு வந்த பின் 22 ஆம் நாள் தாயின் இரத்த நாளங்களிளிலிருந்து சுவாசக்காற்றை தொப்புள் கொடிவழியாகப் பெற்று முதன்முறையாக துடிக்கத் துவங்குகின்றது. இதுவே கருவின் முதல் இதயத் துடிப்பாகும். பிறகு இந்தக் குழாய்கள் வளைந்து, நெளிந்து முழு இருதயமாக வளாவதற்கு சில மாதங்களாகின்றன.
o கருவுற்ற 22 ஆம் நாள் கருவின் முகம் வளரத் துவங்குகின்றது.
o கருவுற்ற 31 ஆம் நாள் கருவின் முக்கு மற்றும் கண்கள் வளரத் துவங்குகின்றது.
o கருவுற்ற 33 ஆம் நாள் கருவின் branchial arches எனப்படும் பகுதிகளுக்கிடையில் காதுகள் வளரத் துவங்குகின்றது.
o கருவுற்ற 40 ஆம் நாள் கருவின் இமைகள் வளாந்திருக்கின்றது.
o கருவுற்ற 49 ஆம் நாள் வரை ஆண், பெண் சிசுக்களுக்கு ஒரே மாதியாக இருக்கும் பிறப்புறுப்புக்கள் (reproductive organs) நான்காவது மாதத்திற்குப் பின்னரே முழுவளாச்சியடைந்து முழுமையான ஆணுறுப்பாகவோ, அல்லது பெண்ணுறுப்பாகவோ மாறுகிறது.
கருவில் வளரும் குழந்தை ஆணாகயிருப்பின் androgens எனப்படும் ஒருவகை ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் 49 ஆவது நாள் வரையிலும் ஆண் மற்றும் பெண் குழந்தைக்கான கருவில் ஒரே மாதியாக இருக்கும் பிறப்புறுப்பு ஆணுக்குரியதாக வளர்கின்றது. கருவில் வளரும் குழந்தை பெண்ணாகவிருப்பின் இந்த androgens எனப்படும் ஹார்மோன் சுரப்பதில்லை. ஆதனால் பிறப்புறுப்பு பெண்ணுக்குரியதாக வளர்கின்றது.
o கருவுற்ற 70 நாட்களுக்குள் கருவினுள் மனித உறுப்புகள் அனைத்தும் தோன்றவாரம்பித்து இதுவரையிலும் பார்ப்பதற்கு அனைத்து உயினங்களின் கருவோடு ஒத்திருந்த கருவானது இப்போது மனிதனின் முகம், கை, கால்கள் உட்பட முழு தோற்றமும் பெற்று விடுகிறது.
கவனத்தில் கொள்ளவும், இந்நிலையில் அனத்து மனித உறுப்புகளும் உருவாக துவங்கியிருந்தாலும் அவைகள் முழுவளாச்சியைப் பெற்றுவிடவில்லை. உறுப்புகள் தொடாந்து வளாந்துக்கொண்டே இருக்கின்றன. இதுவரை ”embryo” என்றழைக்கப்பட்ட மனிதக் கரு இப்போது ”fetus” என்றழைக்கப்படுகிறது.
o கருவுற்ற 33 ஆம் நாள் ”branchial arches” என்ற பகுதிகளுக்கிடையில் உருவாக ஆரம்பித்த காதுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துக்கொண்டே இருக்கின்றன. 5 ஆவது மாதத்திற்குப் பின்னரே அவைகள் முழுவளாச்சி பெறுகின்றன. 6 ஆவது மாதம் அக்குழந்தை கேட்கும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன.
o கருவுற்ற 31 ஆம் நாளிலிருந்தே கண்கள் வளர துவங்கியிருந்தாலும் 40 ஆம் நாள் தான் இமைகள் தோன்றவாரம்பிக்கின்றது. சில நாட்களில் இந்த இமைகள் கண்களை மூடிவிடுகிறது. மூடப்பட்ட கண்ணின் இமைகள் 7 ஆவது மாதம் வரையிலும் மூடியே இருக்கும். அதாவது கண்கள் ஏழாவது மாதம் தான் முழுவளாச்சியை அடைந்து பாக்கும் சக்தியைப் பெறுகின்றது.
o 5 ஆவது மாதம் குழந்தையின் நரம்பு மண்டலங்கள் முழு வளாச்சியைப் பெற்று விடுவதால், குழந்தை கருவறைக்குள் நகர ஆரம்பிக்கின்றது. இப்போது குழந்தையின் அளவு 9 அங்குல நீளமாகும்.
o 6 ஆவது மாதம் 13 அங்குல நீளமும், ஒரு பவுண்ட் எடையும் இருக்கும் அக்குழந்தையின் கண் இமையின் முடிகள் வளாந்து விடுகின்றது. ஆனால் தலை முடி இதுவரை வளராமலே இருக்கின்றது.
o கருவுற்ற 22 ஆம் நாள் இதயத்துடிப்பு ஆரம்பித்திருந்தாலும் 56 நாட்களுக்குப் பிறகே முழு இருதயத்திற்கான வடிவத்தை அது பெறுகிறது. எனினும் காப்பப்பைக்குள் இருக்கும் குழந்தையின் இருதயத்திற்கும், பிறந்த குழந்தையின் இருதயத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. பிறந்த குழந்தையின் இதயம் இயங்கும் போது இது இரத்தத்தை நுரையீரக்குள் நெலுத்தி அங்கிருந்து சுவாசக் காற்றை பெற்றுக் கொண்டு பின்னர் மீண்டும் இருதயத்திற்கு வந்து பின்னர் உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும்.
ஆனால் காப்பப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சுவாசக் காற்று தாயின் இரத்தம் வழியாக குழந்தையின் தொப்புள் கொடி மூலம் குழந்தையின் இரத்தத்தை அடைவதால், குழந்தையின் இரத்தம் நுரையீரலுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகின்றது. அதனால் இருதயத்திலிருந்து இரத்தம் நேரடியாக உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படுகின்றது.
எனினும் குறிப்பிட்ட அளவு இரத்தம் நுரையீரலுக்கும் சென்று வருகின்றது. ஆனால் குழந்தை பிறந்ததும் அது நுரையீரல் வழியாகச் சுவாசிப்பதால் இரத்தம் நுரையீரலுக்கு அனுப்பப்பட்டு பின்னர் மீண்டும் இருதயத்திற்குச் சென்று அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுச் செல்கின்றது. முன்னர் இருதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லாமல் நேரடியாக மற்ற பாகங்களுக்குச் சென்ற சென்ற வழி குழந்தை பிறந்ததும் அடைக்கப்படுகின்றது.
கருவில் வளரும் குழந்தைக்கு பார்வைப்புலன் வருவதற்கு முன்னரே செவிப்புலன் வருவதை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே திருமறை கூறியிருப்பதைத் தான் இன்றைய கருவியல் வல்லுணாகள் மெய்ப்பித்திருக்கிறாகள்.
முழுமையான ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது.
”Jazaakallaahu khairan” http://suvanathendral.com