Dr. A.P.முஹம்மது அலி. Phd. I.P.S.
[ தமிழ்நாடு மைனாரிடி கமிஷன் தலைவராக எப்போதும் கிறித்துவ மதத்தினரையே தேர்வு செய்கின்றனர். ஆனல் ஆனால் முஸ்லிம்கள் தான் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கி இருக்கிறார்கள்.
அத்தோடு அல்லாமல் அம்பாசங்கர் அறிக்கை மூலம் முஸ்லிம்களில் 27,60,195 பிற்பட்டவர்களும், கிறித்துவர்கள் 25,48,194 பிற்பட்டோர்களும் உள்ளனர். ஆகவே பிற்பட்டோர் பட்டியலில் சமநிலையில் இருந்தாலும் முஸ்லிம்கள் மைனாரிட்டி சேர்மன் பதவியினைக் கேட்டுப்பெற முடியவில்லை. அப்படி பெருவதின் மூலம் முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்ய அவர்களால் முடியும்.
ஆகவே அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் சமமாக ஒவ்வொரு தடவை தலைவர் பதவி கொடுக்க வற்புறுத்த வேண்டும்.]
இந்தியாவில் இட ஒதிக்கீடு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்க பரிசீலனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே முஸ்லிம் அதற்கு நமது கடமை என்ன என்பதை விளக்கலாம் என கருதுகிறேன்.
இதற்கு 12.2.2010 டெல்லியில் நடந்த என்.எம்.எம்.ஆர் (நேஷனல் ரிசர்வேஷன் ஃபார் முஸ்லிம் ரிசர்வேஷன்) அதாவது முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பெற வேண்டி முஸ்லிம் இயக்கம் முன்னாள் ஐ.எப்.எஸ் அதிகாரி செய்யது சகாபுதீன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நீதிபதி சச்சார் கமிட்டியில் இடம் பெற்ற செயலர்-உறுப்பினர் அஃப்சாலே ஷரீஃப் அவர்கள், ”சமுதாயத்தில் உயர்ந்த நிலையிலுள்ள முஸ்லிம்கள் பிற்பட்ட முஸ்லிம் மக்கள் முன்னேற வழிதேட வேண்டும்” என சொல்லியுள்ளார். அதனை உதாரணமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் மேன்பட்ட மக்கள் என்ன என்ன செய்ய வேண்டுமென விளக்க ஆசைப்படுகிறேன்.
1) 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஓட்டுரிமை உண்டு. மக்கள் தொகை கணக்கெடுக்க வரும்போது கண்டிப்பாக வீட்டிலுள்ள அனைவரையும் சேர்க்கச் செய்ய வேண்டும். கண்டிப்பாக ஓட்டர்ஸ் லிஸ்ட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு அடையாள அட்டைக் கேட்டுப் பெறவேண்டும். வெளி நாட்டில் வாழும் முஸ்லிம்களையும் அதனில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் இந்திய நாட்டில் 13 விழுக்காடு உள்ள முஸ்லிம்களுக்கு மக்கள் பிரதிநித்தவ அடிப்படையில்(புரப்போஷனல் ரெப்பரசென்டேஸன்) இட ஒதிக்கீடு வந்தால் அது நிச்சயமாக பலனளிக்கும்.
2) கல்வியில் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என் அறிய ஒவ்வொரு ஊரிலும் 1) பள்ளி இறுதி வரை படித்தவர் 2)பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர் 3)கல்லூரி வரை படித்தவர் 4) தொழில் கல்லூரி கல்வி படித்தவர் 5) டிப்ளமோ பட்டம் பெற்றவர் 6) பள்ளிப்பக்கம் தலை காட்டாதவர் என்ற கணக்கெடுப்பு வேண்டும். அப்போது தான் நாம் எவ்வளவு அளவிற்கு கல்வியில் முன்னேறியிருக்கிறோம் என அறியலாம்.
3) டவுண் பஞ்சாயத்து, தாலுகா, முனிசிபாலிடி, மாநகரங்கள் தோறும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் அரசு வேலைக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும். அதேபோன்று பள்ளி மேல் படிப்பிற்கு மேல் என்ன படிக்கலாம், மேலை நாடுகளில் எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கலாம், இந்தியாவில், வெளிநாட்டில் திறமை வாய்ந்த மாணவர்கள் மேல் பட்டப்படிப்பு படிக்க என்னன்ன ஸகாலர்ஷிப் கிடைக்கிறது, விசாவிற்கு எப்படி மனு செய்யலாம் போன்ற தகவல் மையம் அமைக்கவும், இந்திய நாட்டில் அரசு வங்கிகளில் மாணவர்கள் மேல்படிப்பிற்கான அரசு லோன் பெறுவதிற்கு உதவியும் செய்யலாம்.
4) தோல், கட்டிட அமைப்பு, ஷிப்பிங் போன்ற பெரிய தொழில் முனைவர்களை அனுகி வேலை வாய்ப்பு முகாம்களில் முஸ்லிம்களுக்கு ”ஹிந்து” பத்திரிக்கை, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது போல ”ஜாப் பேர்ஸ்” நடத்தலாம்.
5) கிராமங்களில், நகர பஞ்சாயத்துகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்து அருகில் உள்ள பிளாக் டெவலப்மெண்ட்(பி.டி.ஓ) அவர்களின் அரசு உதவி வாங்கிக் கொடுத்து சிறு கைத்தொழில் தொடங்க உதவி செய்யலாம்.
6) அரசுக் கல்லூரிகளில் பி.காம், பி.எஸ்ஸி படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதே வேலை வாய்ப்பினைப் பெற அவர்களுக்கான ஆறுமாத அல்லது ஒரு வருட தொழில் கல்விசான்றிதழ் படிப்பை படிக்க உயர்கல்வித்துறை அரசு கடந்த 8.2.2010 வகை செய்துள்ளது.
அந்தப்படிப்பில்
1. மல்டி மீடியா,
2. டேலி,
3. ஏ.சி.டெக்னாலஜி,
4. கம்ப்யூட்டர் கார்டுவேர்,
5. டொமஸ்டிக் ஒயரிங்,
6. நெட் ஒர்க்கிங்,
7. வெப் டிசைனிங் மற்றும் அனிமேசன்,
8. இ.காமர்ஸ்,
9. டிரைவிங்,
10. பியூட்டிசியன்,
11. கார்மென்ட் குவாலிடி இன்ஸ்பெக்சன் அண்டு; எக்ஸ்போர்ட்மெர்கண்டிசிங்
12. கம்யூனிகேஷன் ஸ்கில்,
13. ஆபிஸ் ஆட்டோமேசன்,
14. சர்வேஈ
15. டி.டி.பி
ஆகியவை உள்ளன. அந்த படிப்பிற்கான சான்றிதழ் உயர்கல்வித்துறை வகை செய்ய வழிவகுத்துள்ளது.
அந்தப்படிப்பிற்கு ஆறு மாதத்திற்கு கட்டணமாக ரூபாய் 1500, வருடக் கட்டணமாக ரூபாய் 3000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நமது மாணவர்களை அந்தப் படிப்பில் சேர்ந்து வாய்ப்பினைத் தேடிக்கொள்ளச் செய்ய வேண்டும்.
அதே போன்ற படிப்புகளை 20க்கு மேல் முஸ்லிம் அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் செல்ஃப் பைனான்ஸிங் வழியில் தொடங்கவேண்டும்.
அதேபோன்ற படிப்புகளை சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ஜஸ்டிஸ் பஷீர் அஹமது மகளிர் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
7) மத்திய அரசின் மைனாரிடிக்கான 15 அம்ச திட்டத்தின் படி முஸ்லிம்களின் வேலை வாய்ப்பு ரயில்வேயிலும், அரசுத்துறையிலும் 2006-2007 6.92 சதவீதத்திலிருந்து 2008-2009ல் 9.19 விழுக்காடு அதிகரித்தாலும் முஸ்லிம்களின் ஜனத்தொகை 13 விழுக்காடுகளுக்கு அது குறைவே எனலாம்.
ஆனால் பொது நிறுவனங்களிலும், அரசு வங்கிகள், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பு வெறும் 2008-2009ல் 7.9 விழுக்காடிலிருந்து 8.87 விழுக்காடு 48,070 வேலைகளில் தானே இருக்கிறது. இன்னும் முஸ்லிம்கள் அரசு வங்கிகளுக்கும், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கோல் இந்தியா, ஸ்டீல் அத்தாரிடி ஆப் இந்தியா போன்ற பொது நிறுவனங்களில் வேலை வாய்பபிற்கு மனு செய்து வேலை வாய்ப்பினைப் பெற முஸ்லிம் கல்வி நிலையங்களும், தொண்டு நிறுவனங்களும் இளைஞர்களை தயார் படுத்த வேண்டும்.
அரசுடமையாக்கப் பட்ட வங்கிகளில் முஸ்லிம் மாணவர்கள் படிப்பு கடன் பெற எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதினை ஏழை பெற்றோர்களைக் கேட்டால் தெரியும். முஸ்லிம்கள் அந்த வங்கிகளில் இருந்தால் நமது மாணவர்களுக்கு அரசு படிப்பு லோன் வழங்க உதவி செய்வார்களல்லவா? இது போன்று தான் மற்ற பொது நிறுவனங்களிலும் வேலை கிடைத்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதோடு, மற்றவர்களுக்கும் உதவி செய்வார்களல்லவா?
8) தமிழ்நாடு மைனாரிடி கமிஷன் தலைவராக எப்போதும் கிறித்துவ மதத்தினரையே தேர்வு செய்கின்றனர். ஆனல் ஆனால் முஸ்லிம்கள் தான் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கி இருக்கிறார்கள். அத்தோடு அல்லாமல் அம்பாசங்கர் அறிக்கை மூலம் முஸ்லிம்களில் 27,60,195 பிற்பட்டவர்களும், கிறித்துவர்கள் 25,48,194 பிற்பட்டோர்களும் உள்ளனர். ஆகவே பிற்பட்டோர் பட்டியலில் சமநிலையில் இருந்தாலும் முஸ்லிம்கள் மைனாரிட்டி சேர்மன் பதவியினைக் கேட்டுப்பெற முடியவில்லை. அப்படி பெருவதின் மூலம் முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்ய அவர்களால் முடியும். ஆகவே அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் சமமாக ஒவ்வொரு தடவை தலைவர் பதவி கொடுக்க வற்புறுத்த வேண்டும்.
மேற்கூறிய யோசனைகள் நமது சமூதாயம் முன்னேறுவதிற்கான கடல் போன்ற யோசனைகளில் சிறு துளி நீர் போன்றதே. துடிப்பான இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள், சழூக அமைப்புகள் நமது சமூதாயத்தில் இல்லாமலில்லை. அந்த இளைஞர்கள், நிறுவனங்கள் நமது சமூதாய மக்கள் பின்தங்கிய சழூதாயத்திலிருந்து முன்னேறிய சமூதாயமாக மாற்ற வேண்டும். அத்துடன் அரசு சலுகைகளை நாம் நழுவ விடக்கூடாது என வேண்டுகிறேன்.
”Jazaakallaahu khairan” Dr. A.P.முஹம்மது அலி. Phd. I.P.S.