Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இட ஒதிக்கீடு சட்டமும்-முஸ்லிம்கள் கடமையும் (1)

Posted on February 17, 2010 by admin

Dr. A.P.முஹம்மது அலி. Phd. I.P.S.

[ ஆந்திர அரசின் 4 சதவீத இட ஒதிக்கீட்டின் சட்டம் ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.? அதற்குக் காரணம் அந்த அரசு மொத்த முஸ்லிம்களுக்க்கும் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு செய்தது. அரசு எவ்வாறு முஸ்லிம்கள் ஆந்திர மாநிலத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அதன்பின்பு இடஒதுக்கீடு வழங்கியிருந்தால் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் இடஒதுக்கீடு தள்ளுபடியாகியிருக்காது.

தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீத ஒதுக்கீட்டில் ஆந்திர உயர்நீதி மன்ற உத்தரவினால் பாதிப்பு எற்படுமோ என்ற ஐயப்பாடு நமக்கு இருப்பது நியாயமே. ஆனால் தமிழக அரசு இடஒதுக்கீடு எவ்வாறு முஸ்லிம்கள் மற்ற பின்தங்கிய மக்களுடன் பின்தங்கியுள்ளார்கள் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜே.ஏ. அம்பாசங்கர் தலைமையிலான 1985 ஆம் ஆண்டு நியமிக்கப் பெற்ற கமிட்டி தனது அறிக்கையின் மூலமே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ளார்கள்.]

என் இனிய சொந்தங்களே!

இட ஒதிக்கீடு சம்பந்தமாக சமீப காலத்தில் பரபரப்பாக செய்திகள் வெளி வந்த வண்ணமுள்ளன.

நீதிபதி சச்சார் முஸ்லிம்கள், தலித் மக்களை விட படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் பின் தங்கி உள்ளனர் என்றும்,

அந்த முஸ்லிம் மக்களுக்கு 10சதவீத ஒதிக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வழங்கப் பட வேண்டும் என்றும்

முன்னாள் உச்ச மன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவும்,

ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் முஸ்லிம்களுக்கு அந்த மாநில அரசு வழங்கிய நான்கு சதவீத ஒதுக்கீடு செல்லாது என்றும்,

மேற்கு வங்க முதல் அமைச்சர் முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழக்கப்படும் என்றும்

ஏற்கனவே கர்னாடகா மற்றும் மணிப்பூர் அரசுக்கள் 4 சதவீத ஒதுக்கீடும்

கேரளா அரசு 10-லிருந்து 12 சதவீதம பல் வேறு ஒதுக்கீடு முறையில் இடம் ஒதுக்கி அறிவிப்பு வந்தவண்ணம் இருக்கிறது. 

இந்திய குடியுரிமைச் சட்டத்தில் இட ஒதுக்கீடு பற்றி என்ன சொல்கிறது என்பதைப்பற்றியும்  அந்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் ஒதுக்கீடு பெற்று சமூகத்திலும், பொருளாதாரத்திலும், கல்வியிலும் முன்னேற என்ன செய்யலாம் என இந்தக் கட்டுரையில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம் என நினைக்கிறேன்.

அரசமைப்புச் சட்டம் பிரிவு 14ன் படி, சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்றும், ஒத்த தகுதி நிலையில் உள்ளவர் அனைவரும் சட்டத்தால் ஒரே சீராக நடத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. சட்டப்பிரிவு 15(1) ஒத்த தகுதி நிலை கொண்ட எவரையும் மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதாவது காரணத்தால் அரசு வேற்றுமை பாராட்டுவதைத் தடை செய்கிறது, ஆனால் வேறுபட்ட நபர்களின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தி சட்டம் இயற்றுவது தவறாகாது என்கிறது இட ஒதுக்கீட்டுக் கொள்கை. பிரிவு 15(3)ன் படி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறப்பு வகை முறைகள் கொண்டுவர அரசுக்கு அதிகாரம் உண்டு.

அதே போல் பிரிவு 15(4)ன் படி சமூகம் மற்றும் கல்வி வழி பின்தங்கிய குடிமக்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோருக்கு சிறப்பு வகைமுறை செய்வதற்குத் தடையில்லை என்று சொல்கிறது. ஆகவே தான் தலித் மக்கள், பழங்குடியினர் ஹிந்து மதத்தவராக இருந்தாலும் அவர்கள் ஹிந்து சமூக அமைப்பில் நசுக்கப்பட்டு பின் தங்கியிருந்ததால் அவர்களுக்கு தனி ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

ஏன் ஹிந்து மதத்தில் சில நலிந்த ஹிந்து மதத்தினவருக்கும் பிற்பட்டவகுப்பினர் என்ற தகுதி சட்டத்தில் வழிவகுக்கப்பட்டது. சட்டப்பிரிவு 16(4)ன் படி அரசின் கவனத்தில் எந்த பிற்பட்ட சமூகமும் அரசு நிறுவனங்களில் சரியாக பணியமர்த்தப்படவில்லையென அறிந்தால் அவர்களுக்காக தனிச்சட்டம் இயற்றலாம் என்று சொல்கிறது.

பின் ஏன் ஆந்திர அரசின் 4 சதவீத இட ஒதிக்கீட்டின் சட்டம் ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.? அதற்குக் காரணம் அந்த அரசு மொத்த முஸ்லிம்களுக்க்கும் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு செய்தது. அரசு எவ்வாறு முஸ்லிம்கள் ஆந்திர மாநிலத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அதன்பின்பு இடஒதுக்கீடு வழங்கியிருந்தால் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் இடஒதுக்கீடு தள்ளுபடியாகியிருக்காது.

தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீத ஒதுக்கீட்டில் ஆந்திர உயர்நீதி மன்ற உத்தரவினால் பாதிப்பு எற்படுமோ என்ற ஐயப்பாடு நமக்கு இருப்பது நியாயமே. ஆனால் தமிழக அரசு இடஒதுக்கீடு எவ்வாறு முஸ்லிம்கள் மற்ற பின்தங்கிய மக்களுடன் பின்தங்கியுள்ளார்கள் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜே.ஏ. அம்பாசங்கர் தலைமையிலான 1985 ஆம் ஆண்டு நியமிக்கப் பெற்ற கமிட்டி தனது அறிக்கையின் மூலமே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ளார்கள்.

அந்த அறிக்கையில் இஸ்லாமிய சிறுபான்மையினரைச் சார்ந்த 27,05,960 மக்களில் பிற்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் 25,60,195 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல் கிறித்துவ சிறுபான்மை 31,91,989 மக்களில் 24,69,519 பேர் பிற்பட்ட மக்களின் பட்டியலிலும் , 78,675 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் முஸ்லிம் மக்களுக்கு மிகவும் பிற்பட்ட வுகுப்பபில் யாரையும் சேர்க்கவில்லை. இத்தனைக்கும் முஸ்லிம்கள் இந்த நாட்டில் தலித் மக்களைவிட கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்pறார்கள் என்று அறிந்தும் கூட.

அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு தமிழ்நாடு சட்டம் 45, 1994 படியும், அதன் பின்பு தமிழிநாடு சட்டம் பிரிவு 12, 2006 ன் படியும் பிற்பட்ட மக்கள் கல்வி நிலையங்களிலும், அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களில் தனி ஒதுக்கீடு பெற்று வருகின்றனர். அதன் பின்பு கிறித்துவரும், இஸ்லாமியரும் மற்ற பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான பட்டியலிலுள்ள பிற சமூகத்தினருடன் போட்டியிட இயலவில்லை என்பதால் தங்களுக்கென்ற தனி ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை அரசிடம் வைக்கப்பட்டது.

அவர்களின் கோரிக்கையினை பிற்பட்டோர் கமிஷனிடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதன் அறிக்கையில் இரு சமூகத்தினரின் கோரிக்கை சரியானதுதான் என்று சொல்லப்பட்டிருந்தது. அதனை எற்று அரசு 2007 ஆம் ஆண்டு தமிழக அரசு அவசர சட்டம் பிரிவு 4, 2007 ன் படி கிறித்துவ மக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் கல்வி நிலையங்கள்(தனியார் கல்வி நிலையம் உள்பட) அரசு நியமனங்களில் அல்லது பதவி ஒதுக்கீடுகளில் கிறித்துவர்களுக்கு 4 சதவீதமும், முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் அதன்பின் வருங்காலங்களில் அதிகம் படித்த கிருத்துவ மக்கள் தொகையினைக் கொண்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் படித்த இளைஞர்கள் அதிகமாக கல்வி, அரசு வேலை வாய்ப்புகள் பெற முடியவில்லையென அறிந்து அந்த நான்கு சதவீத ஒதுக்கீடு தேவையில்லை. என்றும் தாங்கள் பிற்பட்போருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி அடிப்படையில் அதிக பயன் பெற முடியும் என அரசிடம் சொல்லி அதனை ரத்துச் செய்ய சொல்லி விட்டார்கள். அந்த கிறித்துவ மக்கள் கூற்றுப்படிப் பார்த்தால் அதிகம் படிக்காதவர்கள், கல்வி, அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெற முடியாதவர்கள் முஸ்லிம் பிற்படுத்தப்பட்டபவர்கள் தான் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிதல்லவா நண்பர்களே!

இந்திய நாட்டில் நாட்டின் மொத்த ஜனத்தொகையில் பிற்படுத்தப் பட்ட மக்கள் 41 விழுக்காடு ஆகும். ஆனால் பிற்பட்டோருக்கு இட ஒதிக்கீடுக்கு இந்திய நாட்டில வழிவகுத்த முன்னோடி மண்டல் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழு 1979 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு தனது 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாத அறிக்கையின் படி பிற்படுத்தப்பட்ட மக்கள் எண்ணிக்கை 52 விழுக்காடு ஆகும். ஆகவே தான் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு ஒதுக்கி சட்டம் வகுத்தது மத்திய அரசு.

இந்த பிற்படுத்தப்பட்ட மக்களில் 78 விழுக்காடு கிராமப் புறத்திலும், 22 விழுக்காடு நகரப் பகுதியிலும் வசிக்கிறார்கள். ஆனால் முற்பட்ட மக்கள் ஊரக, நகரப் பகுதி இரண்டிலும் 37.7 விழுக்காடு வாழ்கின்றனர். ஆகவே தான் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்தால் முற்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் கூடிய இடத்தினை பெற்று விடுகின்றனர் இந்தியாவிலே தமிழகத்தில்தான் 74.4 சதவீத பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். இது தேசிய மாதிரி ஆய்வு நிறுவனமான (என்.எஸ்.எஸ்.ஓ) நடத்திய ஆய்வின் கூற்றாகும். ஆகவே தான் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு 20 விழுக்காடு ஒதுக்கீடும், முஸ்லிம்களுக்கு மூன்றரை விழுக்காடு ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கிறித்துவ மக்கள் நான்கு சதவீத ஒதுக்கீடு போதாது நாங்கள் பிற்பட்டோர் ஒதுக்கீடுகளில் அதிக ஒதுக்கீடு பெற வாய்ப்புண்டு என்று சொல்லி அதனை அரசும் ரத்து செய்தபோது, தமிழகத்தில் ஒரே ஒரு முஸ்லிம் பெரியவர் மட்டும் முஸ்லிம் மக்கள் ரிசர்வேஷன் பெறாது முன்னேற வேண்டுமென்றும் சொன்னதோடு மட்டுமல்லாமல் புனித ஹஜ் செய்ய அரசின் சலுகையினைப் பெறாது செல்ல வேண்டுமென்றும் சொன்னதாக அனைத்து பத்திரிக்கையிலும் வெளி வந்து அதனை கண்டித்து நோட்டீசும் சில அமைப்பினர் வெள்ளிதோறும் பள்ளிவாசலில் கொடுக்கப்பட்டது.

அவர் யார் என்று கேட்கிறீர்களா?

அவர் தான் பிரிட்டிஷ் அரசின் எடுபடியாக இருந்து, வட மாவட்டங்களில் அவர்களுக்கு வரிவசூல் ஏஜெண்டாக இருந்ததோடு மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் ஆதிக்கத்தினை எதிர்த்த மதுரை மருதநாயகம் என்ற அஹமது கான், சிவகங்கை மன்னராக இருந்த சின்ன மருது, பெரிய மருது, வேலு நாச்சியார், ஊமைத்துரை போன்றவர்களை வேட்டையாட பிரிட்டிஷ் படையினருடன் தன் கூலிப்படையையும் அனுப்பியதின் பயனாக பிரிட்டிஷ் இந்திய நாட்டினை விட்டு வெளியேறியபோது அவருக்கு மட்டும் இந்தியாவில் தனி கொடியுடன் உள்ள அந்தஸ்து கொடுத்து, தனது சமஸ்தான சொத்தினையும் அநுபவிக்க உரிமை வழங்கப்பட்டுள்ள ஆற்காடு நவாப்பின் சந்ததி ஆவார்.

ஆனால் பிரிட்டிஷாரல் தன் மகன்கள் கொல்லப்பட்டாலும் கடைசி மூச்சு இருக்கும் வரை எதிர்த்த டெல்லி முகலாய கடைசி சக்கரவர்த்திக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா? பர்மாவிற்கு கடத்தப்பட்டு சொந்த இந்திய மண்ணில் கூட தனது கடைசி வாழ்வினை கழிக்க முடியாத நிலை பரிதாபமாகத் தெரியவில்லையா உங்களுக்கு?

அந்த நவாப் தான் சொல்கிறார் முஸ்லிம்கள் அரசில் விசேஷ சலுகை பெறக்கூடாது என்று. பின் என்ன செய்வது ஏழை, எளிய மக்கள் வாழ்வினுக்கு ஒளியேற்ற! அவர்களுக்கு இனாமான கோடிக்கணக்கான சொத்தா இருக்கிறது? அரசின் சலுகையினைத்தானே நாட வேண்டியிருக்கிறது ஏழை முஸ்லிம்கள். ஆற்காடு நவாப் போன்ற பெரியவர்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமல் இருந்தால் ஏழை, எளிய முஸ்லிம்கள் சலுகை பெற வாய்ப்பாக அமையும்.

 

கட்டுரையின் தொடர்ச்சிக்கு கிழே உள்ள ”Next” ஐ ‘‘கிளிக்”  செய்யவும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

43 + = 48

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb