Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

லுங்கி!

Posted on February 16, 2010 by admin

லுங்கி  !

[ லுங்கியை விட காற்றோட்டமான உடை ஒன்று உண்டா என்று கேட்டால், இல்லவே இல்லை என்பதுதான் இன்றைய நிலை.

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பார்ட்டிவேராக லுங்கி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தோனேஷியாவிலேயோ, மலேஷியாவிலேயோ இதை தேசிய உடையாகக் கூட அங்கீகரித்திருப்பதாக செவிவழி கேள்வி.]

”லுங்கியுடன் ஆபீஸ் போவதற்கு மனத்தடை இருக்கிறது. அரை டிராயரில் அது இல்லை!”- சமீபத்தில் டவுசர் பற்றிய விவாதம் ஒன்றின்போது ட்விட்டரில் எழுத்தாளர் பாரா சொன்னது இது.  

”லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்கும் போராட்டம் நடத்துவேன்!” சில வாரங்களுக்கு முன்பாக எழுத்தாளர் ஞாநி குமுதத்தின் ஓ பக்கங்களில் சென்னை கமலா தியேட்டர் நிர்வாகத்தை இவ்வாறாக எச்சரித்திருந்தார். அதாவது புதுப்பிக்கப்பட்ட கமலா தியேட்டருக்கு லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்க வருபவர்களை அனுமதிக்கவில்லை என்பதற்காக இவ்வாறு ஞாநி எச்சரித்திருந்தார். பிற்பாடு கமலா தியேட்டர் ”லுங்கி கட்டிக்கொண்டு வரலாம்” என்று ஞாநிக்கு சிறப்பு அனுமதியும், மற்றவர்களுக்கு சாதா அனுமதியும் தந்தது, தொடங்கவே தொடங்காத அவரது போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக லுங்கி கட்டி வருகிறேன். பத்து வயதில் அப்பா, இரண்டு மாஸ்டர் லுங்கி (ஒன்று வெள்ளைப்பூ போட்ட ப்ளூ, இன்னொன்று பச்சை என்று நினைவு) வாங்கித் தந்தார். கிறிஸ்டியன் ஆண்ட்டி வீட்டு டியூஷனுக்கு கூட அந்த லுங்கியோடு போய் வந்ததாக நினைவிருக்கிறது.

முதல் பாராவில் பாரா சொன்ன அந்த மனத்தடை எனக்கு எப்போது வந்தது என்று சரியாக நினைவில்லை. இத்தனைக்கும் லுங்கி தான் ”எல்லாவற்றுக்குமே” வசதியான உடையாக இருக்கிறது என்றபோதிலும், வீட்டுக்கு நூறு அடி தொலைவில் இருக்கும் கடைக்குச் செல்லக்கூட இப்போது ”முழுநீளக் கொழாய்” மாட்டிக்கொண்டு தான் போகிறேன். ஆனால் ரெண்டு, மூன்று அரை நிஜார் இருந்தாலும் (ஒன்லி ஃபார் ஸ்விம்மிங் பூல்ஸ்), லுங்கிதான் இன்னும் ஃபேவரைட் உடை. வீட்டிலிருக்கும்போது கீழாடை மட்டுமே, நோ மேலாடை.

சரி, இந்த மனத்தடைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

எப்படிப் போனாலும் ஒரு அற்புதமான, நிகரற்ற உடை ஒன்றினை என் மனத்தடை காரணமாக பொது இடங்களில் நிராகரிக்கிறேன் என்பதே உண்மை. தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் லுங்கி பிரபலமான ஆடையாக இருப்பதாகவே தெரிகிறது. பொதுவிடங்களில் லுங்கி கட்டி வருவதும் கூட கவுரவமான விஷயமாகவே பல நாடுகளில் இருக்கிறது. பங்களாதேஷ், இலங்கை, மியான்மர், ஏமன், சோமாலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பல தெற்காசிய நாடுகளில் லுங்கியின் பயன்பாடு பரவலாக இருக்கிறது. நம்மூரை மாதிரியில்லாமல் இந்நாடுகளில் பெண்களும் லுங்கிவாலாக்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு உடையாக மட்டுமன்றி திருமணம் போன்ற விழாக்களிலும் லுங்கியின் பயன்பாடு இருந்து வந்தது. அரை டிராயருக்கு ஏற்பட்ட மவுசால் இப்போது ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. உலகின் மிகச்சிறந்த வசதியான உடைகளில் ஒன்றாக இதை சொல்லலாம். அரை டிராயரைப் போல இதற்கு நாடாவோ, எலாஸ்டிக்கோ தேவையில்லை. தலைக்கு மேல் கவிழ்த்து, இழுத்துப் பிடித்து ஒரு சொருகு சொருகினால் போதும். நாய் துரத்தினாலும் கூட கவுரவமாக அவிழ்ந்துவிடாமல் ஓடித் தப்பிக்கலாம். டீக்கடை நாயர்கள் கட்டும் பாலியஸ்டர் லுங்கி மட்டும் விதிவிலக்கு. இடுப்பில் நிற்கவே நிற்காது.

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பார்ட்டிவேராக லுங்கி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேஷியாவிலேயோ, மலேஷியாவிலேயோ இதை தேசிய உடையாகக் கூட அங்கீகரித்திருப்பதாக செவிவழி கேள்வி. இந்தியாவின் லுங்கித் தேவையில் எழுபது சதவிகிதத்தை கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் கவனித்துக் கொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வெயில் காலங்களில் லுங்கியை விட காற்றோட்டமான உடை ஒன்று உண்டா என்று கேட்டால், இல்லவே இல்லை என்பதுதான் இன்றைய நிலை.

லுங்கி எங்கே தொடங்கியது என்று வரலாற்றில் தேடிப்பார்த்தால், அதுவும் கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் தமிழோடே தோன்றியிருக்கும் என்பதாகத் தெரிகிறது. வேட்டி என்றழைக்கப்பட்ட துண்டுதான் பிற்பாடு பரிணாம வளர்ச்சியடைந்து லுங்கியாக மாறியிருக்கிறது. எனவே லுங்கியை கண்டறிந்த பெருமையும் தமிழனையே சேருகிறது.

மஸ்லின் துணியால் நேயப்பட்ட வேட்டி பாபிலோனுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகியிருக்கிறது. பாபிலோனை தொல்பொருளாராய்ந்த அறிஞர்கள் இதை ‘சிண்டு’ என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். மேலும் மீனவர்களான பரதவர்கள் கிழக்கு ஆப்பிரிக்கா, எகிப்து மற்றும் மெசபடோமிய பகுதிகளுக்கு லுங்கி ஏற்றுமதி செய்ததாகவும் உலக வரலாறு செப்புகிறது. கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பே லுங்கியில் கலர்ஃபுல் டிசைன்கள் போடப்பட்டு (அனேகமாக ஆந்திரவாலாக்கள் டிமாண்ட் செய்திருக்கலாம்) தயாராகி வருகிறது.

நன்றி: எழுதியவர் யுவகிருஷ்ணா,

source:http://www.luckylookonline.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 6 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb