Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உணவால் வரும் புற்றுநோய்

Posted on February 15, 2010 by admin

டாக்டர் கே. ஸ்ரீதர்

உணவில் நார்ச்சத்துக்கள் இல்லாமல் கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவோரின் உடல் செல்களில் அதிக கொழுப்பு சேர்கிறது. போதுமான ஆக்சிஜன், ஹார்மோன்கள், ஊட்டம் போன்ற எதுவும் கிடைப்பதில்லை. இதனால் செல்லில் மாற்றம் ஏற்பட்டு புற்றுநோய் வருகிறது.

இது உணவில் அதிகமாக கொழுப்பு சேருவதால் ஏற்படுகிற பாதிப்பு மட்டும். இந்த பாதிப்பால் உடலில் கொழுப்பு சேருகிற இடங்களான மார்பகங்கள், குடல், இரைப்பை, கருவுறுப்புகள் போன்ற இடங்களில் புற்றுநோய் வரும்.

நான் கொழுப்பே சாப்பிடுவதில்லை என்கிறீர்களா? சந்தோஷம், கொழுப்பை குறைத்துக்கொள்ளுங்கள்.

சிலர் எப்போதும் டின் உணவுகளை சாப்பிடுவார்கள். சரியாகப் பதப்படுத்தப்படாத பொருட்களில் பாக்டீரியாக்களும், பூஞ்சைக் காளான்களும், வைரஸ்களும் காலனி அமைத்து குடியேறியிருக்கும். இதையெல்லாம் கவனித்திராமல் காசு கொடுத்து வாங்கி சாப்பிடும்போது அவையெல்லாம் சுலபமாக நம் உடலின் உள்ளே சென்று புற்றுநோயை ஏற்படுத்தி விடுகின்றன.

டின் உணவுகள் மட்டுமல்ல, பாஸ்ட்புட் எனப்படுகிற துரித உணவு கடைகளிலும் இதே சமாச்சாரம்தான். அங்கெல்லாம் இறைச்சிகளோ, காய்கறிகளோ சுத்தமாக இருக்காது. அதிலுள்ள கிருமிகள் உடலில் சென்று நோயை உண்டாக்கும்.

உதாரணத்திற்கு ஹெபடைடிஸ்–பி வகை கிருமிகளைச் சொல்லலாம். இந்தக் கிருமி கல்லீரல் பாதிப்பை அதிகமாக உண்டாக்கும். நாட்பட்ட நிலையில் அந்த பாதிப்பு புற்றுநோயாக மாறும். இக்கிருமி சுத்தமாக இல்லாத உணவுப் பொருட்கள், தண்ணிர் ஆகியவற்றில்தான் அதிகமாகக் காணப்படுகிறது.

எப்ஸ்டின்பார் வைரஸ், அப்லோடாக்சின் பூஞ்சை, சிஸ்டோசோமயாசிஸ் போன்றவையெல்லாம் உணவுப் பொருட்கள் மூலமாக மனிதனுக்குள் சென்று நோயை உண்டாக்குகிறது.

ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் போதிய சுகாதாரமற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் மக்களுக்கு உணவுப் பொருட்களால் அதிகமான புற்றுநோய் வாய்ப்பு இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

உணவில் இப்போதெல்லாம் அதிகமான செயற்கை மணமூட்டிகளை சேர்க்கிறார்கள். அஜினாமோட்டா என்ற பொருள் புற்றுநோயைக் கொண்டுவருகிறது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். இப்படித்தான் செயற்கையாக வாசனையூட்டப்படும் உணவுப்பொருட்கள், நேரடியாக நெருப்பில் சுடப்பட்டுத் தரப்படும் உணவுப்பொருட்கள் போன்றவை புற்றுநோயை உண்டாக்குகின்றன.

இதற்கு முன்பெல்லாம் வயல்களில் தழை உரங்களைப் போடுவார்கள். இப்போது தழை உரங்களா? அப்படி என்றால் என்ன என பயிர் செய்யும் விவசாயிகளும் கேட்பார்கள், விளையும் மண்ணும் கேட்கும். அந்த அளவுக்கு இயற்கை உரங்களின் பயன்பாடு இப்போது மறைந்தே போய்விட்டது. அதற்கு பதிலாக நைட்ரேட், பாஸ்பேட் என பலவிதமான செயற்கை உரங்கள் போட்டுத்தான் பயிர் செய்கிறோம். இவற்றிலுள்ள இரசாயனங்கள் புற்று நோயை உண்டாக்குகின்றன.

அதிக காரத்தாலும், புளிப்பாலும்தான் புற்றுநோய் வருமா, ஏன், அதிகமாக உப்பு பயன்படுத்துவதால் வராதா என யாருமே கேட்கமாட்டீர்களே!

உப்புடன் பல வேதிப்பொருட்களை சேர்த்துதான் உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்படுகின்றன. இந்தப் பதமாக்கலின் போது உப்பு இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகிவிடுகிறது. இது இரைப்பை புற்றுநோயை அதிகமாக உண்டாக்கி விடுகிறது. இதனால்தான் ஜப்பானிலும், அமெரிக்காவிலும் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் இருந்து உப்பின் காரணமாகவும் புற்றுநோய் வரும் என்கிறார்கள்.

நொறுங்கத்தின்றால் நூறு ஆண்டு வாழலாம் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆரோக்கியமாக இல்லாத எந்த உணவையும் நொறுங்கத் தின்றால் நூறு ஆண்டு வாழமுடியாது. நோய் இல்லாமலும் இருக்கமுடியாது. அதேபோல, உணவை மென்று சாப்பிடவேண்டும், அவசர அவசரமாக விழுங்கிவிடுதல், அதையும் மூன்றுவேளை விழுங்காமல் வேளை தவறி சாப்பிடுதல், இறைச்சி, மீன் போன்றவற்றை சாப்பிடும்போது அந்த எலும்புகளைக்கூட விட்டுவைக்காமல் அவற்றையும் அரைத்து உள்ளே தள்ளுதல், எதையும் பல மாற்றங்களை, பாதிப்புகளை உண்டாக்கி புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

சிலருக்கு அதிகமாக காபி, தேனீர் அருந்தும் பழக்கம் இருக்கும். சிலருக்கு காபி மற்றும் தேனீரைப்போல அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருக்கும். இதனால் முதலில் அடிவாங்குவது கல்லீரல். கல்லீரலிலுள்ள மேற்புற அடுக்கு பாதிக்கப் பட்டு வாய், தொண்டை, இரைப்பை, கல்லீரல், குடல் ஆகிய இடங்களில் புற்றுநோய் வரும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

சிலவகையான ஒட்டுண்ணிப் புழுக்கள் தண்ணிர் மூலமாகவும், இறைச்சி மூலமாகவும் உடலுக்குள் புகுந்து குடல் புற்றுநோயையும் உண்டாக்குவதாகத் தெரியவந்துள்ளது.

உணவுப் பழக்க வழக்கம்தான் புற்றுநோயை உண்டாக்கும் மூன்றாவது பெரிய காரணம் என ஆராய்ச்சியாளர்கள் அபாயக் குரல் கொடுக்கிறார்கள்.

ஆகவே, உணவை பதப்படுத்தி சாப்பிடுங்கள். பிரச்சினைகளைத் தவிருங்கள். ஹெர்பல் உதவியுடன் புற்றுநோயை தள்ளிப் போடுங்கள்,

source: koodal.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 7 = 16

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb