உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்…
அஸ்ஸலாமு அலைக்கும்,
குறை கண்டதில்
கறை கண்டவனாக!
வரிகளில்
வலி உண்டு; வழி இல்லை!
அனைத்திற்கும் பெயரோ
இஸ்லாமிய இயக்கம் – வார்த்தையில் மட்டும்தான்
வாழ்க்கையில் இல்லை!
வெறி பிடித்த எதிரிகளின் நடுவே
சகோதரனின் கறி சாப்பிடுவதில் எத்தனை இன்பம்!
வைகறையில் காணமுடியவில்லை விடியலை;
உணர்வு இருந்தும் மக்களுக்கு உரிமை இல்லை
காரணம் ஒற்றுமை இல்லை!
உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்
தொழுகையில் மட்டும்! – மற்ற நேரங்களில்
தொலைவினில் மட்டும்!
அனைத்து அமைப்பினருக்கும் விமர்சினம் உண்டு;
மறந்துவிட்டோமோ
மறுமையில் நமக்கு விசாரணை உண்டு!
அறிவிக்கவில்லையா அண்ணல் நபி;
உன் மேனியின் ஒரு சதைப் பகுதி உன் சகோதரன் என்று?
மறக்கவில்லை ! மறக்கவில்லை!
சதையினை கடிப்பதற்கு மட்டும் நாம்!
கிடப்பில் போடுங்கள் காழ்ப்புணர்ச்சியை;
இந்த சமுதாயம் காணட்டும் புது எழுச்சியை!!!
”Jazaakallaahu khairan” யாஸர் அராஃபத்