தர்காஹ் என்பது என்ன?
எதற்காக உருவாக்கப்பட்டது?
யார் அறிமுகப்படுத்தியது?
தர்காஹ் என்பது ஃபாரசீக மொழியிலிருந்து வந்த சொல்லாகும் (Persian: درگه) இதற்கான விளக்கம் என்னவென்றால் ஒரு கட்டிடம் என்பதுவே.
இந்த தர்காஹ் கட்டிடத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் பாரசீக நாட்டைச் சேர்ந்த ஸூஃபிக்கள் தான்.
மேலும் இவர்களால் வழிகாட்டப்பட்ட இந்த தர்காஹ் வழிமுறைக்கும் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்காட்டித்தந்த இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமு மில்லை. இது முழுக்க முழுக்க, முழுக்க முழுக்க, முழுக்க முழுக்க, முழுக்க முழுக்க வழிகேடாகும்.
தர்காஹ் முதன்முதலில் எதற்காக கட்டப்பட்டது?
ஸூஃபியிஸத்தை ஃபாரசீகத்திலிருந்து பரப்ப வந்த ஸூஃபியிஸத்தைச் சேர்ந்த சில மார்க்க ஞானிகள் (உங்களைப்போன்ற படிப்பறிவுள்ள அறிஞர்கள் இவர்களுக்கு எந்த இறை/மறை ஞானமுமில்லை) பாரசீகத்தில் நிலவி வந்த வன்முறைக் கொடுமைகளுக்கு ஆளாகி தங்கள் கொள்கையையும் உயிரையும் இழந்துவிடக்கூடாது என்றும் ஸூஃபி கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் பல நாடுகளுக்கு பிரயாணம் மேற் கொண்டார்கள்.
அன்றைய காலகட்டங்களில் இந்தியா செல்வச்செழிப்பில் தழைத் தோங்கியிருந்தது எனவே சொந்த தாய்நாட்டை துரந்த ஸூஃபி அறிஞர்கள் இந்தியாவில் தங்கள் கொள்கைகளை பரப்பி வந்தனர். இவர்கள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தங்கள் கொள்கைப் பிரச்சாரம் மேற்கொள்ளவும் ஒரு இடத்தில் நிலையாக தங்கவும் (அதாவது ஹெட் ஆபிஸ்) அமைத்தனர்.
இந்த தலைமைச் செயலகத்தில் இந்த ஸூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) ஒன்று கூடி தங்களுக்குள் இருக்கும் கஷ்ட நஷ்டங்களையும், நல்ல நிலைமைகளையும் பரிமாறிக் கொள்ளவும் ஸூஃபிக் கொள்கைகளை வீரியப்படுத்தவுமே பயன்பட்டது எனவேதான் நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் தர்காஹ் கட்டிடங்கள் (கிளை அலுவலகம்) எழுப்பினர் அந்த கட்டிடத்தில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது இதுவே தர்ஹா கட்டிடம் எனப்படும். இவ்வாறு இந்த கட்டிடங்களில் தங்குவதற்கு பாரசீக மொழியில் கான்காஹ் (khanqah) என்று அழைப்பர்.
பின்னர் ஸூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) மரணித்துவிட்டால் அவர்களை கவுரவப் படுத்தும் விதமாக அந்த கட்டிடங் களிலேயே கப்ரு தோண்டி அவரை அவ்லியாவாக பிரகடனப்படுத்திவிடுவார்கள் மேலும் அவர் தெய்வீக பதவியை அடைந்துவிட்டதாக எண்ணிக்கொள்வர் இது இஸ்லாமிய கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஏன் அணுவளவும் தொடர்பில்லாத தத்துவமாகவும் தவறான கொள்கையுமாகும் மேலும் இவர்களுடைய இந்த அவ்லியா கொள்கை முற்றிலும் யுத கிருத்தவ கொள்கையின் அடிப்படையில் அமைந்ததாகும்! இதற்கு உதாரணம் வேண்டுமானால் கீழே உள்ளதை படியுங்கள்.
கிருத்தவ கொள்கையுடன் தொடர்புடைய சூஃபிக்களின் அவ்லியா கொள்கை
கிருத்தவ மார்க்கத்தை பரப்ப வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த அன்னை தெரஸா அவர்கள் சென்ற 10 ஆண்டகளுக்கு முன்னர் (1997ல்) மரணித்தார் இந்த அம்மையார் செய்த சமுதாய தொண்டுகள் இன்றளவும் உலகம் முழுவதும் போற்றப்பட்டு வருகிறது.
இதை கண்ட வாடிகன் மத போதகர்கள் மற்றும் மதகுரு போபாண்டவர் இந்த அம்மையாரை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று எண்ணி இவரை செயின்ட் (தமிழில் சொல்வதாக இருந்தால் புனிதவதி என்றும் அரபியில் சொல்வதாக இருந்தால் அவ்லியா என்றும்) கூறி அவரை கடவுளுக்கு இணையான தர்ஜாவை (பதவியை) அளிக்க முயன்று வருகின்றனர்.
இது ஒன்றே போதும் ஸூஃபிக்கள் பின்பற்றும் அவ்லியா கொள்கை யூத, கிருத்தவ மார்க்கத்தை தாயகமாக கொண்ட கொள்கை என்பதற்கு. இப்போது புரிகிறதா எவ்வாறு அவ்லியாக்கள் உறுவாகின்றனர் என்று. இந்த மூடப் பழக்கத்தை நாம் பின்பற்றலாமா?
குறிப்பு
அன்னை தெரஸா உயிருடன் இருக்கும்போது என்றைக்காவது தான் மரணித்துவிட்டால் என்னை வணங்குங்கள் நான் உங்களுக்கு அருள்புரிகிறேன் என்று தொலைக்காட்சியிலோ, பத்திரிக்கைகளிலோ பேட்டி கொடுத்துச் சென்றார்களா? இது இந்த அம்மையாருக்கு செய்யும் பச்சை துரோகமல்லவா?
இந்த கிருத்தவ அம்மையாருக்கு இவர்களின் மதபோதகர்ள் செய்யும் கொடுமைகளை நம் கண்கள் முன்னே நன்மை தீமையை அல்லாஹ் படம் போட்டுக்காட்டுகிறானே இது அல்லாஹ்வின் அருள் இல்லையா! இதைக்கண்டும் நாம் தர்காஹ்வுக்கு செல்லலாமா? நாம் சிந்திக்கின்றோமா?
ஸூஃபிகளினால் தவறான பாதை காட்டப்பட்ட இந்தியர்கள்
பிற்காலத்தில் ஸூஃபிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மாற்றுமதத்தவர்கள் (நம் முன்னோர்கள்) ஸூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) கூறுவதுதான் இஸ்லாம் என்று நம்பினார்கள் காரணம் அவர்களுக்கு இஸ்லாமிய கோட்பாடுகள் தெரியவில்லை! பாவம் என்ன செய்ய முடியும்!
o ரோஜா மலரை வாழ்க்கையில் ஒருமுறை கூட கண்களில் காணாதவர்கள் முன் கல்லிச் செடியை காண்பித்து இதுதான் ரோஜா மலர் என்றால் நம்பித்தானே ஆகவேண்டும்.
o நாம் யாரை உயிரினிலும் மேலாக மதிக்கிறோமோ அவர்கள் விஷம் கலந்த பாலை நமக்கு கொடுத்தால் என்ன செய்ய முடியும் அப்பாவிகளாக மக்கள் அந்த விஷம் கலந்த பாலை குடித்து சாகத்தானே வேண்டும். இது நம்பிக்கை துரோகமல்லவா?
இதே நம்பிக்கை துரோகத்தைதான் சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) அறியாத மக்களிடம் இஸ்லாம் என்று கூறி தங்கள் கெட்ட கொள்கைகளை பரப்பினார்கள் அதன் தாக்கம் இன்றளவும் உள்ளது.
சகோதரரே இப்போது சொல்லுங்கள் நாம் தர்காஹ்வுக்கு செல்லலாமா? ஸூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) கூறிய மார்க்க விரோத கொள்கையை ஏற்கலாமா?
தர்காஹ்வுக்கு போகலாமா?
”அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி மற்றும் முஸ்லிம்.
கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கக்கூடாது
யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டனர்” (நூல்: புகாரி)
கப்ருகள் உள்ள இடங்களில் கட்டிடம் கூட கட்டக்கூடாது என்றார்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
”கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படு வதையும், அதன் மீது கட்டிடம் எழுப்பப்படு வதையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தனர்” (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி.)
கப்ருகளை (தர்காஹ்க்களை) இடிக்க வேண்டும்
”உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்” என்று அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்.)
உண்ணதமான நபிமொழி
”எனது கப்ரை(கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்” அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்.
கப்ருகள் கட்டப்பட்ட இடங்களில் உட்காருவதற்குக் கூட தடை
கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, ”அபீமிர்சத்” என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். (ஆதாரம் : முஸ்லிம்)
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சஹாபா பெருமக்களிடம் கேட்ட கேள்வி
நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் நீ அதற்கு சஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். ”அவ்வாறு நான் செய்ய மாட்டேன்” என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள். (ஆதாரம் : அபூதாவூத் அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத் ரளியல்லாஹு அன்ஹு பக்கம் : 298 பாகம் 1)
நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) புலாலா அவர்களை கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர், ”கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்” என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம் முதல்பாகம் 312)
அருமைச் சகோதர! சகோதரரிகளே தீன்குலத்துப் பெண்களே நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சாபம் உங்களுக்கு வேண்டுமா?
”கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்” என்று அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத், மற்றும் இப்னு ஹிப்பான்.
ஆனால்
அல்லாஹ்வோ தனது திருமறையில் இவ்வாறுதான் கூறுகிறான்
”(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ”நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக”. (அல்குர்ஆன் 2: 186)
”இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்த வர்களாய் நரகம் புகுவார்கள்”. (அல்-குர்ஆன் 40: 60)
அல்லாஹ் என்ன கூறுகிறான் கேளுங்கள்
”இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், மதகுருமார்களையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்களின் தெய்வங்களாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர்”. (அல்குர்ஆன்-9:31)
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்
”அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம்.)
”Jazaakallaahu khairan” Posted by: சிராஜ் அப்துல்லாஹ் internationalparadise@gmail.com