அதிசயக் கல்லூரிகள்!
[ அதிவேகமாக இயங்கிவரும் இந்த இயந்திரமய உலகிலும் கம்ப்யூட்டர்,அன்டர் நெட்டின் தொடர்பின்றி அரபிக்கல்லூரிகள் இயங்குவதிலிருந்தே அவைகளின் ”கம்யூனிகேசன் கேப்” பை மிக எளிதாக எவரும் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு மனிதனை மாற்றுவது என்பது ஒரு மலையை பெயர்ப்பது போன்று மகாகடினமானதே! வெறும் ஏழாண்டுகளில் பேரொழுக்கமுள்ளவனாக, ஒரு மனிதனை அரபுக்கல்லூரிகள் மாற்றுகிறதென்றால் அவை உண்மையிலேயே அதிசயக்கல்லூரிகள் தான்!]
”அரபுக்கல்லூரிகள் தங்களது ‘கம்யூனிகேசன் கேப்” எனப்படும் மக்கள் தொடர்பின்மையை களையும் போதுதான் அவை மறுமலர்ச்சி பெறும்”- தீபக் தாமூர் S.P, தூத்துக்குடி)
தூத்துக்குடி ”மன்பஉஸ் ஸலாஹ் அரபுக்கல்லூரி”யின் ஆண்டுவிழாவில் அதிஅக்கறையோடு வழங்கிய தீபக் தாமூர் S.P யின் அறிவுரை அனைவராலும் நோக்கத்தக்கதாகும்.
தமிழக அரபுக்கல்லூரிகளின் அரும் பணி அளவிட முடியாதவை. அகிலந்தோறும் ஐவேளை பள்ளி வாசல்கள் இயங்குவது அதற்கானசாட்சி, இக்கல்லூரிகளிலிருந்து வெளிவந்தவர்களால் மடடுமே ”இமாமத்” செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
அன்றைய மதினா பள்ளிவாசலில் இராணுவம், மருத்துவம், அரசியல், கல்வி,விவாதம், விவசாயம் என அனைத்துவகை செயல்பாடுகளும் செவ்வனே செம்மைப்படுத்தபட்டன. எனினும் தற்கால பள்ளிவாசல்களோ தொழுகைக்கு(ம் கூட சரிவர பயன்படுத்தப்படுவதில்லை என்பது வேறுவிஷயம்) மட்டுமே பயன்படுத்தப்படுவதால் தொழுகைக்கு மட்டுமே அவர் இமாமாக இருக்கிறார். ஆதலால் தான் அரபுக்கல்லூரிகளும் தொழுகை, ஜூம்ஆ பயான் மார்க்கச்சட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன போலும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளி இமாமாக மட்டும் இருக்கவில்லை அனைத்துறைக்குமான அதிகாரியாக இருந்தார்கள்.அனைத்து துறைக்குமான வாரிசாக ஆலிம்களை நன்அறிவுப்புச் செய்தார்கள் அப்படியானால் இன்றைய அரபுக்கல்லூரிகள் தம்மை பெரும் பல்கலைக்கழகமாக மாற்றிக் கொண்டிருக்க வேண்டாமா என்ன?
அதிவேகமாக இயங்கிவரும் இந்த இயந்திரமய உலகிலும் கம்ப்யூட்டர், அன்டர் நெட்டின் தொடர்பின்றி அரபிக்கல்லூரிகள் இயங்குவதிலிருந்தே அவைகளின் ”கம்யூனிகேசன் கேப்” பை மிக எளிதாக எவரும் புரிந்து கொள்ள முடியும்.
இ-பிஸ்னஸ். இ-கார்ட், இ-டீச்சீங் என இன்டர் நெட் வழி வியபாரங்களும், தீர்ப்புகளும், படிப்புகளும் பெருக்கிக் கொண்டிருக்கும் வேளையில் இக்கல்லூரி ஆசிரியர் மாணவர் இ.உஸ்தாதாக (இ.இமாம்) எப்படி அவரால் இயங்க, இலக்க முடியும்? மூலகாரணம் நவீனபாடத்திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்படாததே ஆகும். முன்பைவிட மனித அறிவு மிகமிக விரிவடைந்துள்ளது. என்பதை நமது சுட்டிக் குழந்தைகளின் துடுக்கான பேச்சிலிருச்தே அவர்களின் புத்திசாலித்தனத்தை புரிந்து கொள்ள முடியும்.
ஒருமுறை இரண்டுவயதுக் குழந்தைக்க மாடிப்படி ஏறும் போது ”அல்லாஹு” அ என்ற சொல்ல வேண்டும் என்று சொல்லிகொடுத்தேன். அது படியேறும் போது இப்படிச் சொல்லிக்கொண்டே ஏறியது அல்லாஹு அம்மாஹு… அத்தாஹு… இந்நிலையில் அவர்களின் அகோர அறிவுப்பசிக்கு போதிய நூல்கள் அந்த ஆறுமணிநேர பாடத்திட்டங்களில் நிச்சம் இல்லையென்றே சொல்லலாம்.
காரணம் ”பாடத்திட்டங்களுக்கான வரைமுறை” ஏதும் இதுவரை ஜமாஅத்துல்உலமா சபையோ, மஜ்லிசுல். மதாரிஸோ, தேவ்பந்தோ, பாகியாத்துஸ் ஸாலிஹாத்தோ வரைந்து கொடுக்கவில்லை.
பொதுவாக ”நிஜாமிய்யா” பாடத்திட்டம் என சொல்லிக்கொள்ளப்படுகிறதே தவிர வேறில்லை. இதுவரை எந்த அரபுக்கல்லூரியும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படவில்லை. அதனால் ஆலிம்கள் பெறும் ”பட்டம்” அங்கீகாரமற்றதாகவே இருக்கிறது.
அரபுக்கல்லூரிகள் அரசில் பதிவு செய்யப்பட்டே ஆகவேண்டும் என்ற சட்டம் விரைவில் வரவும்கூடும் அரசையும் அரசியலையும் ஒதுக்கிவிட்டு ஒரு சமூகம் நிச்சயம் முன்னேறிவிட முடியாது. அரசுகாஜியைப்போல ஒருஇஸ்லாமிக் எஜூகேஷன் போர்டை அரசு நிச்சயம் நியமித்து அருமையானதொரு பாடத்திட்டத்தை தமிழகமாணவர்களுக்கு தர நிச்சயம் முன்வரவும் கூடும்.
தரம்மென்மேலும் உயரவே செய்யும். அப்போதும் அகீதா எனும் கொள்கைப் பிரச்சனை முன்வைக்கப்படுமானால் நம் எதிர் காலம் கேள்விக்குறிதான்?
ஓவ்வொருபட்டபடிப்பும் அதுவே அவனுக்கு போதுமான வாழ்க்கை ஜீவாதாரமாக இருக்கும் போது
இந்த ”ஆலிம் பட்டம்” மட்டும் ஏன் போதிய வருவாயை அவனுக்கு ஈட்டித்தருவதில்லை?
இன்னொரு இணைத்தொழில் தேவைப்படுவது ஏன்?
இமாமத் அது வேலையா? அல்லது சேவையா?
என்ற வினாக்களுக்க அவன் தன் வாழ்க்கைக்கான விடையை தேடிக்கொண்டே இருக்க வேண்டியதிருக்கிறது. உயர்வான விடை ஒன்று கிடைக்கும் போது அவனது உயிர் ஏனோ விடை பெற்றுக் கொள்கிறது.
80,90, களில் இருந்ததைப்போல் தகுதியானவர்களுக்கு மட்டுமே ”ஆலிம்பட்டம்” வழங்கப்படுமேயானால் அவன் பிற்காலத்தில் தனது வாழ்வாதாரத்தில் நிச்சயம் நிலைத்து நிற்கமுடியும். கல்வித்தரமற்ற சீன விளையாட்டு வீரர்கள் பலரின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகி இருப்பது நாம் நன்கு படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஒரு சமூகத்தலைவன் (இமாம்) நிச்சயம் தரமுள்ளவராக இருந்தால்தானே தன் சமூகத்தை சரியான பாதையில் கொண்டுசொல்லமுடியும்?
இதுவரை எந்த அரபுக்கல்லூரிகளிலும் ”ஆசிரியர் பயிற்சி” என சிறப்புச் பயிற்சி வழங்கப்படாததால் இமாம்களாலும். மத்ரசா மற்;றும் மக்தப் ஆசிரியர்களால் சரிவர பயானோ, பாடமோ, என்றாலும் சொல்லாமல் இருக்கவும் முடியாதே! குறையை மறைப்பது பெருங்குறையன்றோ?
கொள்கைகளால் பிளவுபட்டுக் கிடக்கும் அரபுக்கல்லூரிகள் குர்ஆனியக் கயிற்றை பற்றிப்பிடித்து ஒற்றுமைப்படாதவரை எந்தத் திட்டங்களும் ஏற்றம்பெறப்போவதில்லை!
உண்மையிலேயே ”காலேஜ்டூர்” எனும் அடுத்தக்கல்லுரிகளை பார்வையிடும் பழக்கம் நம்மிடையே இல்லாததால் தான் சராசரி முன்னேற்றங்கள் நம்மிடையே சரிந்துபோய் இருக்கின்றன. அதனால் தான் நெட்வொர்க,; டீம்வொர்க், கம்யூனிகேஷன், டெவலெப்மெண்ட் போன்ற அன்றாட வார்த்தைகள் ஆலிம்களுக்கு அந்நியப்பட்டுக்கிடக்கின்றன. இவை புத்துயிர்பெறுவதற்குள் வேறு வார்த்தைகள் வளவாழ்வு பெற்றுவிடும்.
இதனிடையே ஆலிம்களின் மேம்பாட்டிற்காக வேலூர் (லிபாஸ்) பாகவிகள் பேரவை பொள்ளாச்சி நுஸ்ரத்துல் உலமா அறக்கட்டளை செவ்வனே ஆரம்பிக்கப்பட்டிருப்பது பெரும் ஆறுதலை அளிக்கிறது.
நமது அண்டை மாநில மொழிகளான உருதும் மலையாளமும் கட்டாயம் அரபுக் கல்லூரிகளில் அமுல் படுத்தப்பட வேண்டும் ஏழு ஆண்டுகளில் நிச்சயம் அவன் இவ்விருமொழிகளை கற்றுக் கொள்ள முடியும். இவ்விருமொழிகளில் இஸ்லாமிய இயக்கங்கள் நிறையவே ததும்புகின்றன. கொஞசம் பருகினாலும் நம்வார்த்தைகள் புஷ்டி பெறும்,
(ஆலிம்களின் தமிழும், ஆங்கிலமும் தரப்பட வேண்டும் என்பது வேறுவிஷயம்!) ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு மனிதனுக்குச் சமம் என்பதை அண்டை மாநிலங்களுக்குள் நாம் பயணிக்கும் போது நிச்சயம் உணரமுடியும்! நிழலின் அருமை கோடைவெயிலில் தானே மண்டைக்குப் புரிகிறது!
அல்லாஹ், ரசூல் என்றால் என்ன என்று கேட்டு ஊர்சுற்றும் ஒருவனை அனைவராலும் ஹஜ்ரத் என்று போற்றப்படும் இமாமாக மறுமாற்றம் செய்யும் மகத்தான பணியை மத்ரஸாவைத்தவிர வேறு எந்த நிறுவனங்களாலும், பாடசாலைகளாலும், குருகுலங்களாலும், மடங்களாலும், ஆஸ்ரமங்களாலும், ஆலயங்களாலும் நிச்சயம் செய்ய முடியாத ஒன்று!
ஒரு மனிதனை மாற்றுவது என்பது ஒரு மலையை பெயர்ப்பது போன்று மகா கடினமானதே! வெறும் ஏழாண்டுகளில் பேரொழுக்கமுள்ளவனாக, ஒரு மனிதனை அரபுக்கல்லூரிகள் மாற்றுகிறதென்றால் அவை உண்மையிலேயே அதிசயக்கல்லூரிகள் தான்! அவை தேசியக் கல்லூரிகளாய் விரைவில் நெறிப்பட வேண்டும் என்பது நம் பேரவா! நீ தான் நிறைவேற்றித்தரவேண்டும் இறைவா!
”Jazaakallaahu khairan” ”சிந்தனை சரம்” இஸ்லாமிய மாத இதழ்.