Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சகோதரத்துவம்

Posted on February 9, 2010 by admin

[ முஃமின்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதிலும்,

இரக்கம் கொள்வதிலும்,

ஒருவருக்கொருவர் கருணை காட்டுவதிலும் ஓர் உடம்பைப் போன்றவர்களாக இருக்க வேண்டும்.

அந்த உடம்பின் ஓர் உறுப்பு நோயால் அவதிப் பட்டால் ஏனைய உறுப்புக்கள் காய்ச்சல், விழித்திருத்தல் என்பனவற்றின் மூலம் அந்நோயில் பங்கு கொள்கின்றன.”(புகாரி, முஸ்லிம்)

“ஒருவருக்கொருவர் நீங்கள் வெறுப்பு கொள்ளாதீர்கள்.

ஒருவருக்கொருவர் உறவுகளை துண்டித்து நடக்காதீர்கள்.

ஒருவருக்கொருவர் நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்.

அல்லாஹ் உங்களுக்கு கட்டளை இட்டிருப்பது போல்

அல்லாஹ்வின் அடியார்களாக – சகோதரர்களாக இருங்கள்.

ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் (பகைத்து) ஒதுக்கி வாழலாகாது.”(புகாரி, முஸ்லிம்)]

இஸ்லாத்தின் விஷயத்தில் வரும் பொழுது உலகளாவிய அளவில் பல்வேறு விஷயங்களுக்காக எதிர் எதிர் கொள்கைகளில் இருப்பவர்கள் கூட ஓர் அணியில் சேர்ந்து ஒரே சக்தியாக நின்று கொண்டிருப்பதை இன்று நாம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம். நிராகரிப்பாளர்களில் ஒவ்வொரு கூட்டத்தினரும் இஸ்லாத்தின் விஷயத்தில் ஏனைய கூட்டத்தினருடன் நட்புடனும், விசுவாசமாகவும் செயல் படும் பொழுது நம்பிக்கை(ஈமான்) கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் விரோத மனப்பான்மையுடன் மோதிக் கொள்வது மிகப் பெரும் அநீதீயாகும்.

இது குறித்து இறைவன் தனது திருமறையில் எச்சரிக்கிறான்:“நிராகரிப்பவர்களில் சிலருக்கு சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; நீங்கள் இதனைச் செய்யாவிட்டால், அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்”(அல் குர்ஆன் 8:73)

எனவே உடனடியாக முஸ்லிம் சமூகத்திற்கு சமூக ஒற்றுமையும், பரஸ்பர பாதுகாப்பும் மிக இன்றியமையாததாகும். இதையே இறைவன்,

”விசுவாசிகளே! நீங்கள் ஒருவரையொருவர் பலப் படுத்திக் கொள்ளுங்கள்….”(அல் குரான் 3:200)

“நீங்கள் பிரிந்து விடாதீர்கள்”(அல் குர்ஆன் 3:103) என்று தனது திருமறையில் குறிப்பிடுகிறான். மேலும்,”நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்கள்; ஆகவே உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சுங்கள்;” (அல் குர்ஆன் 49:10)

“நிச்சயமாக இது உங்கள் சமுதாயம்(உம்மத்). (வேற்றுமையில்லா) ஒரே சமுதாயம் தான். மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையினால் என்னையே நீங்கள் பயந்து கொள்ளுங்கள்.” என்றும் கூறுகிறான். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “முஃமின் மற்றைய முஃமினுக்கு கட்டடத்தைப் போன்றவன். அக்கட்டடத்தின் சில பகுதிகள் வேறு சில பகுதிகளுக்கு உறுதுணையாக அமைந்திருக்கும் என்று கூறி விட்டு தனது இரு கைகளையும் கோர்த்துக் காட்டினார்கள்” (புகாரி, முஸ்லிம்)

”முஃமின்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதிலும், இரக்கம் கொள்வதிலும், ஒருவருக்கொருவர் கருணை காட்டுவதிலும் ஓர் உடம்பைப் போன்றவர்களாக இருக்க வேண்டும். அந்த உடம்பின் ஓர் உறுப்பு நோயால் அவதிப் பட்டால் ஏனைய உறுப்புக்கள் காய்ச்சல், விழித்திருத்தல் என்பனவற்றின் மூலம் அந்நோயில் பங்கு கொள்கின்றன.”(புகாரி, முஸ்லிம்)

“முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவன் அவனுக்கு அநீதி இழைக்க மாட்டான். அவனை அவன் கைவிடவும் மட்டான்.”(புகாரி, முஸ்லிம்)

“ஒருவருக்கொருவர் நீங்கள் வெறுப்பு கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் உறவுகளை துண்டித்து நடக்காதீர்கள். ஒருவருக்கொருவர் நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கட்டளை இட்டிருப்பது போல் அல்லாஹ்வின் அடியார்களாக – சகோதரர்களாக இருங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் (பகைத்து) ஒதுக்கி வாழலாகாது.”(புகாரி, முஸ்லிம்)

“கருத்து முரண்பாடு கொள்ளாதீர்கள். ஏனெனில் உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் கருத்து முரண்பட்டு கொண்டார்கள். அதனால் அழிந்து போனார்கள்.” (புகாரி)

மேற்கண்ட இறைவசனம் மற்றும் நபி மொழிகளிலிருந்து சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் பேணுவது முஸ்லிம்கள் ஒவ்வொருவருவர் மீதும் கடமை என்பதை அறிந்திட இயலும். தற்போதைய காலத்தின் அவசியமும் அதுதான்.

شَرَعَ لَكُم مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى

أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ

كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاء وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ (42:13)

 நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்¢ ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: ‘நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே – இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் – (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (42:13)

Posted by: shifan hassan

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

22 − 20 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb