Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (11)

Posted on February 5, 2010 by admin
 
    முஹம்மது அலீ ஜின்னா பற்றி ஜஸ்வந்த் சிங்    
 
[ ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார்.

நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.

இந்து-முஸ்லீகள் ஒற்றுமையின் தூதராக இருந்த ஜின்னா ஏன் பாகிஸ்தானின் தந்தையாக மாறினார். ஏன் நாடு பிளவுபடக் காரணமானார்.. அவரில் ஏன் அந்த மாற்றம் ஏற்பட்டது.. என்பதை விளக்கும் நூல் தான் இது. இந்தப் புத்தகம் எழுதி நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.

இப்போது கூட முஸ்லீம்களை நாம் சரியாக நடத்துகிறோமா என்றால்.. இல்லை. அவர்களை வெளிகிரகவாசிகள் போல நடத்துகிறோம். அப்படி நடத்தியதால் தான் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. இப்போதும் அவர்களை அப்படி நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டுமா?. – முன்னால் மத்திய அமைச்சர், ஜஸ்வந்த் சிங்!]

இரவு 11 மணிக்கு கூட்டம் முடிந்தது. என்ன விவாதிக்கப்பட்டது என்பது பற்றி முழு விவரங்கள் தெரியவில்லை என்றாலும், அவைகளது கூட்டம் மற்றும் எடுத்த தீர்மானங்கள் இந்திய அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். ஏனெனில், அன்றிலிருந்து மூன்றே மாதங்களில் ”பாகிஸ்தான்” என்ற தனி நாடு கோரிக்கைத் தீர்மானம் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில், லாகூரில் மார்ச் 25, 1940 அன்று, நிறைவேற்றப்பட்டது. ஏழே மாதங்களில், ”திராவிடஸ்தான்” கோரிக்கைத் தீர்மானம் ஆகஸ்டு 1940-ல் திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

லாகூர் தீர்மானத்திற்குப் பிறகு, நீதிக்கட்சி, முஸ்லீம் லீக் இடையிலான உறவின் நெருக்கம் மேலும் கூடியது. மதுரையில் மார்ச் 1940ல் நடந்த ஒரு இரு-கட்சி சேர்ந்த கூட்டத்தில், ”திராவிடஸ்தான்” உருவாக்க ஜின்னாவின் உதவி பெறப்படும் என்றும், அதற்காக ”ஜின்னா பெரியாருக்கு அவ்வாறு வாக்குக் கொடுத்தார்” எனவும் கூறப்பட்டது . இவ்வாறு, இருவரும் நல்ல உறவை வைத்திருந்தனர்.

பெரியார் ஜின்னாவை 1941ல் சென்னையில் சந்திக்கிறார்: முஸ்லிம் லீக்கின் 28வது வருடாந்திர கூட்டம் ஏப்ரல் 11, 1941ல் சென்னையில் ”மக்கள் பூங்கா” என்ற இடத்தில் நடந்தது. ஜின்னா பம்பாயிலிருந்து, கூட்டத்தின் துவக்க விழாவிற்கு வந்திருந்தார். ஜின்னாவும், பெரியாரும் மேடையில் இருந்தனர். மற்றவர்கள் – ஆர்,கே.சண்முகம் செட்டி (கொச்சினுடைய திவான்), கே.வி.ரெட்டி, எம்.ஏ.முத்தைய்யா செட்டி, சீ.ஆர்.ஸ்ரீநிவாசன் (சுதேசமித்திரனின் ஆசிரியர்), எம்.சி.ராஜா, என்.சிவராஜ், சர்.ஏ.பி,பட்ரோ, முதலியோரும் மேடையில் இருந்தனர். ஜின்னாவும், அவரது தோழர்களும் வெளிப்படையாக தென்னிந்தியாவில் மற்றொரு சுதந்திர நாட்டை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தனர்.

ஜின்னா இங்கு, மூன்றாவதாக, மற்றொரு நாட்டையும் முன் வைக்கிறார் :

”இந்தத் துணைக்கண்டத்தில் இரு சமூகங்கள் உள்ளன: ஒன்று முஸ்லீம் சமூகம் மற்றது இந்து சமூகம், இருப்பினும், இந்த இடத்தில், மற்றொரு நாடுள்ளது, அது ”திராவிடஸ்தான்” ஆகும். அப்பகுதியைச் சேர்ந்த 3% மக்கள் தேர்தலில் 3% பெற்று பெரும்பான்மை பெறவேண்டும். இது ஜனநாயகமா அல்லது மாயையா, எனத் தெரியவில்லை. ஆகையால், எனக்கு அவர்களிடத்தில் முழுமையான அனுதாபம் உள்ளது, மற்றும் எனது ஆதரவு அந்த பிராமணரல்லாதவருக்கு உண்டு. நான் ஒன்று அவர்களுக்குச் சொல்கிறேன்: ”தாங்கள் உங்களுடைய வாழ்க்கையில் முன்னேறி வரவேண்டுமென்றால், தங்களுக்குள்ள ஒரே வழி தங்களது கலச்சாரம், மொழி என்ற ரீதியில் செல்வதுதான்” இந்த விதமாக, ஜின்னா, ”மூன்று-நாடு-சித்தாந்தத்தை”, மூன்று நாடுகளை” ஹிந்துஸ்தானம், பாகிஸ்தானம், திராவிடஸ்தானம் முறையே ஹிந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் திராவிடர்களுக்கு முன் வைக்கிறார்.

பெரியார் ஜின்னாவை 1941ல் சென்னையில் மறுபடியும் சந்திக்கிறார்: ஜின்னாவினுடைய ஆகஸ்டு 17, 1944 தேதியிட்ட கடிதத்தின் படி பெரியார் ஜின்னாவை சென்னையில் இருமுறைச் சந்தித்து உரையாடியுள்ளார்கள். ஜின்னா பெரியாரிடம் மிகவும் தெளிவாக கூறியுள்ளதாவது; – தான் ”திராவிடஸ்தானத்தை” கொள்கை ரீதியில் ஆதரிப்பதாகவும், திராவிடர்தாம் அதற்கு பாடுபடடேண்டும் என்றும், தான் ஒரு முஸ்லீம் என்பதினால், தான் முஸ்லீம் நலத்திற்காகத்தான் வேலை செய்ய முடியுமேத் தவிர, முஸ்லீம்-அல்லாதவர்களுக்கு வேலை செய்ய முடியாது. பிறகு தனது கடிதத்தில் இதை வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார். – கே. வி. ராமகிருஷ்ண ராவ்.

இருவரும் நல்ல உறவை வைத்திருந்தனர்.

 Image result for Jaswant singh book about muhammad ali jinnah  முஹம்மது அலீ ஜின்னா பற்றி ஜஸ்வந்த் சிங்   

இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது என்று பாஜகவலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

சி.என்.என்-ஐ.பி.என். தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் ‘டெவில்ஸ் அட்வகேட்’ நிகழ்ச்சியில் ஜஸ்வந்த் சிங் அளித்துள்ள பேட்டியின் சில முக்கிய பகுதிகள்…

o  ஜின்னா சுதந்திர இந்தியாவுக்காக இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து தீவிரவமாக போராடியவர். அதேசமயம், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் நலனுக்காகவும் போராடினார். அதற்காக இந்துக்களை ஜின்னா ஒருபோதும் வெறுத்ததில்லை.

o  அவர் ஒருபோதும் இந்துக்கள் மீது துவேஷம் கொள்ளவே இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே அவருக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இதை தனது கடைசிக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும் அவர் தெளிவுபடத் தெரிவித்துள்ளார்.

o  மகாத்மா காந்தியுடன்தான் அவருக்கு மிகப் பெரிய கருத்து வேறுபாடு இருந்தது. காந்தியை ஒரு அரசியல் சுயநலவாதி என்று அவர் விமர்சித்துள்ளார்.

o  ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார். உண்மையில் இவர்கள் இருவருமே ஜின்னாவை விரும்பாதவர்கள்.

o  ஜின்னாவிடம் பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் சுயமாக வளர்ந்தவர். எந்தவித பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து வளர்ந்தவர். ஆனால் காந்தி அப்படி அல்ல. அவர் ஒரு திவானின் மகன்.

o  அதேபோல நேரு மிகப் பெரிய கோடீஸ்வரரின் வாரிசு. அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள். ஆனால் ஜின்னா அப்படி அல்ல. தானே முயன்று, கடுமையாக உழைத்து தனக்கென ஒரு அரசியல் வரலாற்றை படைத்தவர் ஜின்னா.

o  அவ்வளவு பெரிய மும்பையில், பரம ஏழையாகத்தான் அவரும் வாழ்ந்தார். அங்கு அவர் தாக்குப்பிடிக்க காரணம் அவரது மன வைராக்கியம் மற்றும் கடுமையான முயற்சிகளே.

o  மும்பையில் அவர் வாட்சன்ஸ் ஹோட்டலின் மொட்டை மாடியில் தான் ஒரு அறையில்தான் தங்கியிருந்தார்.

o  ஜின்னா என்றில்லை, சுயமாக உயர்ந்த, கடுமையாக உழைக்கக் கூடிய யாரையும் நான் பாராட்டவே செய்வேன், அவர்களை மதிப்பேன்.

o  இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது.

o  1946ல் நடந்த தேர்தலில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி அனைத்து முஸ்லீம் தொகுதிகளிலும் வென்றது. ஆனால் அவர்களால் ஆட்சியில் அமர முடியாத நிலை. காரணம், காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தாமல் பெரும்பாலான இடங்களில் வென்றிருந்தது. எனவே முஸ்லீம் லீக்கால் ஆட்சியில் இடம் பிடிக்க முடியவில்லை. அப்போதுதான் அவர் தேர்தலில் நின்றால் மட்டும் போதாது என்பதை ஜின்னா உணர்ந்தார்.

o  முஸ்லீம்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்பதை காங்கிரஸுக்கும் உணர்த்தினார். இதையடுத்தே இடஒதுக்கீடு உத்தரவாதம் தரப்பட்டது. முதலில் 25 சதவீதம் என்று அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு பின்னர் 33 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் இது சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டப்பட்டது, இது தான் நாடு பிளவுபடக் காரணமானது.

o  நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.

o  முஸ்லீம்களுக்கு அதிகாரம் வழங்க காந்தி ஒப்புக் கொண்டார். ஆனால் அதை நேரு விரும்பவில்லை. இந்தியா பிரியும் வரை தனது கருத்தில் நேரு உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார்.

o  இந்தத் தவறை பின்னால்தான் நேரு உணர்ந்தார், அதை ஒப்பும் கொண்டிருக்கிறார். இந்தியா இரண்டாகப் பிரிந்ததற்கு நேருவும், அதேபோல ஜின்னாவும்தான் முக்கிய காரணம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

o  இதை நான் குற்றச்சாட்டாக கூறவில்லை. உண்மையைப் பதிவு செய்கிறேன். அந்த சமயத்தில் என்ன நடந்தது, எந்தச் சூழ்நிலை பிரிவினைக்கு இட்டுச் சென்றது என்பதைக் கூறுகிறேன்.

o  எனது கருத்து என்னவென்றால் ஜின்னா மட்டுமே பிரிவினைக்குக் காரணம் அல்ல. அப்படிப்பட்ட கருத்தை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே.

o  மேலும் ஜின்னா பாகிஸ்தான் என்ற வார்த்தையை நெடுங்காலத்திற்கு பயன்படுத்தவில்லை. முஸ்லீம்களுக்கு தனி இடம் வேண்டும் என்று மட்டுமே கோரினார். சில மாகாணங்களை முஸ்லீம்களுக்காக ஒதுக்க வேண்டும். அவை இஸ்லாமிய மாகாணங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும், இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார்.

o  சிறுபான்மையினருக்கும் அதிகாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்தான் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமுதாயத்தில் கெளரவத்துடனும், அதிகாரத்துடனும் இருக்க முடியும் என அவர் நினைத்தார்.

o  அதுதான் அவரது முதன்மையான நோக்கமாக இருந்ததே தவிர பிரிவினை அவரது முதல் எண்ணமாக இல்லை. அதாவது இந்தியாவுக்குள் சுயாட்சி கொண்ட ஒரு பாகிஸ்தானையே அவர் விரும்பினார். அந்தக் கருத்து சாத்தியமானதுதான் என்றும் அவர் நினைத்தார். அவரது எண்ணத்திற்கு மதிப்பளித்திருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது.

o  இந்துக்களை அவர் ஒருபோதும் வெறுத்ததில்லை. காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் தலைமை மீதும்தான் அவரது கோபம் இருந்தது. இந்துக்களை நான் எதிரியாகவே நினைக்கவில்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

o  முதன் முதலாக காந்தியிடம் ஜின்னாவை கோகலே அறிமுகப்படுத்தியபோது, காந்தி சொன்ன வார்த்தை இது- ”ஒரு முஸ்லீம் தலைவரை வரவேற்பதில் பெருமை அடைகிறேன்”. அங்கேயே பிரிவினை வந்து விட்டது.

o  ஜின்னாவை ஒரு முஸ்லீம் என்ற கோணத்தில்தான் காந்தியே பார்த்திருக்கிறார். ஆனால் தான் ஒரு முழுமையான இந்தியர் என்ற எண்ணத்துடன் இருந்தவர் ஜின்னா. தன்னை ஒரு முஸ்லீமாக பார்ப்பதை அவர் விரும்பாதவர்.

o  ஜின்னாவுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜின்னா ஒரு சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, நாடாளுமன்ற அரசியலில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

o  பிரிவினைவாதத்தை எந்த நிலையிலும் அவர் ஏற்காதவர். ஆனால் காந்தி, தனது கருத்துக்களைக் கூற மதத்தைத் துணைக்கு அழைத்தவர். ஆனால் ஜின்னா மதம் என்ற சொல்லை கடைசி நேரத்தில்தான் கையில் எடுத்தார். ஆனால் காந்திக்கோ, அவரது அரசியலின் ஆரம்பத்திலிருந்தே மதமும் கலந்தே இருந்தது. ஆனால் ஜின்னா, அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தவர்.

o  இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை நான் ஜின்னாவின் மாபெரும் வெற்றியாக கூற மாட்டேன். அதேபோல தான் நினைத்ததை ஜின்னாவும் சாதிக்கவில்லை. பாகிஸ்தான் உருவான சில காலத்திலேயே ஜின்னாவின் கொள்கைகள், நோக்கங்கள் அடிபட்டுப் போய் விட்டன. அந்த வகையில் காந்தியும் சரி, ஜின்னாவும் சரி தோல்வியடைந்தவர்கள் என்றே கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Image result for qayde azam muhammad ali jinnah

தொடர்  –  முற்றும்.

sources: www.keetru.com

www.nidur.info 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 57 = 58

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb