பொது மக்கள் இச்சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை தெரிந்து கொள்ள வேன்டியது அவசியம்
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள தகவல் பெறும் உரிமையை நடைமுறைப்படுத்தவும். அரசின் வெளிப்படையான செயல்பாட்டை உறுதி செய்யவும். விரும்பும். மக்களுக்கு அரசின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளால் தகவல்களை வழங்க இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டு மே 11 அன்று இச்சட்ட மசோதா லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. 15,06,2005 அன்று நம் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார். பின்னர். 12,10,2005 அன்று இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டத்தின் முக்கிய பிரிவுகள்
o அனைத்து விதமான ஆவணங்களையும். பல்வேறு வடிவங்களில். ஒவ்வொரு பொது அரசு அதிகாரியும். பராமரிப்பதன் மூலம். அவை குறித்த தகவல்களை மக்களுக்கு சுலபமாக வழங்குவதை உறுதி செய்ய முடியும். (பிரிவு 4)
o தனது துறை குறித்த செயல்பாடுகள். கடமைகள் போன்றவற்றை. இச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து (15,06,2005) 120 நாட்களுக்குள் அரசு அதிகாரி வெளியிட வேண்டும்.
o இச்சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்டுள்ள மத்திய தகவல் வழங்கும அதிகாரிகளோ அல்லது மாநில தகவல் வழங்கும் அதிகாரிகளோ. தகவல் கேட்கும் மக்களுக்கு தகவல் வழங்க வேண்டும். (பிரிவு 5)
o டைப் செய்யப்பட்டோ அல்லது எலக்ட்ரானிக் தொழில் நுட்பம் மூலமோ தகவல் வழங்கப்படும். (பிரிவு 5)
o இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் அல்லது மேல் முறையீடு மனுக்கள் மீதான தகவல்களைப் பெற ஒவ்வொரு அரசுத் துறை அதிகாரியும். ஒரு அதிகாரியை மத்திய துணை தகவல் வழங்கும் அதிகாரியாகவோ அல்லது ஒரு மாநில துணை தகவல் வழங்கும் அதிகாரியாகவோ நியமனம் செய்ய வேண்டும். (பிரிவு 5)
o தகவல்களைப் பெற விரும்பும் நபர். அதற்குரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். (பிரிவு 6)
o தகவல்களைப் பெற விரும்பும் நபர். அதற்கான காரணத்தையோ அல்லது தன்னை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியைத் தவிர. தன் தனிப்பட்ட காரணங்களையோ கூறத் தேவையில்லை, (பிரிவு 6)
o தகவல் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படவேண்டும். (பிரிவு 6)
o ஒருவரின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் குறித்த தகவல் கேட்கப்பட்டால். விண்ணப்பம் பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் தகவல் வழங்கப்படவேண்டும். (பிரிவு 6)
o கேட்கப்பட்ட தகவல் மீது எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லையென்றால். கோரிக்கை மறுக்கப்பட்டது என பொருள் கொள்ளப்படும். (பிரிவு 6)
o கோரிக்கை நிராகரிக்கப்பட்டால். அதற்கான காரணங்களும். மேல் முறையீடு செய்வதற்கான காரணங்களும் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். (பிரிவு 7 (8))
o இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் தகவல். நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல். வியாபார ரகசியம். விசாரணையை பாதிக்கும் தகவல் போன்றவற்றிற்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. (பிரிவு)
o எந்த ஒரு நபரிடமிருந்தும் பெறப்படும் புகாரை விசாரிக்க. மத்திய அரசும். மாநில அரசும் முறையே மத்திய தகவல் ஆணையம் மற்றும் மாநில தகவல் ஆணையத்தை அமைத்து. அறிவிக்கை வெளியிடவேண்டும்,. (பிரிவு 15)
o அளிக்கப்பட்ட கோரிக்கை மீதான முடிவை கால கெடுவிற்குள் (30 நாட்கள்) வழங்காவிட்டால். 30 நாட்களுக்குள் மூத்த தகவல் வழங்கும் அதிகாரிக்கு மேல் முறையீடு செய்யலாம். (பிரிவு 19)
o தகவல் வழங்கப்படவில்லையென்றால். நாள் ஒன்றுக்கு ரூ,250 வீதம். ஒவ்வொரு நாளைக்கும் அபராதமும். அதிகபட்சமாக ரூ,25.000 வரை அபராதம் விதிக்கப்படும். (பிரிவு 20)
o இச்சட்டத்தால் வழங்கப்பட்ட உத்திரவுக்கெதிராக எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்ய முடியாது. (பிரிவு 23)