Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (10)

Posted on February 4, 2010 by admin
Related image
 
ஜின்னா, அம்பேத்கார் & பெரியார்  

[ பெரியார் ஜின்னாவை 1941ல் சென்னையில் சந்திக்கிறார்: முஸ்லிம் லீக்கின் 28வது வருடாந்திர கூட்டம் ஏப்ரல் 11, 1941ல் சென்னையில் ”மக்கள் பூங்கா” என்ற இடத்தில் நடந்தது. ஜின்னா பம்பாயிலிருந்து, கூட்டத்தின் துவக்க விழாவிற்கு வந்திருந்தார். ஜின்னாவும், பெரியாரும் மேடையில் இருந்தனர். ஜின்னாவும், அவரது தோழர்களும் வெளிப்படையாக தென்னிந்தியாவில் மற்றொரு சுதந்திர நாட்டை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தனர்.

எனது ஆதரவு அந்த பிராமணரல்லாதவருக்கு உண்டு என்றார் ஜின்னா. இந்த விதமாக, ஜின்னா, ”மூன்று-நாடு-சித்தாந்தத்தை”, மூன்று நாடுகளை” ஹிந்துஸ்தானம், பாகிஸ்தானம், திராவிடஸ்தானம் முறையே ஹிந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் திராவிடர்களுக்கு முன் வைக்கிறார்.]

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஜின்னா, அம்பேத்கார் & பெரியார் சந்திப்பு

சுதந்திர போராட்ட காலங்களில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று; சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் சந்திப்பு

சமகால நிகழ்ச்சிகளாகயிருப்பினும், மக்கள் பலவற்றை மறந்து விடுகின்றனர். பல இந்தியத் தலைவர்கள், வேறுபட்ட பின்னணியில் இருந்தாலும், அவர்கள் சந்தித்தது, செயல்பட்டது முதலியன வியப்பாக இருக்கலாம், ஆனால் அவை உண்மையில் நிகழ்ந்துள்ளன.

பீமாராவ் ராம்ஜி அம்பேத்கார் (1891 1956), முஹம்மது அலி ஜின்னா (1876 – 1948) மற்றும் ஈரோடு வேங்கடப்ப ராமசாமி நாயக்கர் (1879 – 1973) இவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது ஜனவரி 8, 1940ல் பம்பாயில். இதற்குமுன் பெரியார் அம்பேத்காரை மும்முறை பம்பாயிலும் 06-04-10, 07-04-10 மற்றும் 08-04-10, சென்னையில் 21-09-14, ரங்கூனில் 03-2-14 எனவும், ஜின்னாவை நான்கு முறை பம்பாயிலும், இருமுறை சென்னையிலும், ஒருமுறை தில்லியிலும் சந்தித்துள்ளார். அம்பேத்காரும் ஜின்னாவும் பாம்பாயிலேயே இருந்ததால், பலமுறை சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பு, நன்கு தெரிந்தது போல இருந்தாலும், இன்னும் பலருக்குத் தெரியாமல் இருக்கிறது. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளில் அவர்களது சந்திப்பு மிகவும் ஆச்சரியமாகவும், விவரமுள்ளதாகவும் முக்கியமனதாகவும் அக்காலக்கட்டத்தில் விளங்கியது. 1929-ற்கு பிறகு, நாடு பொருளாதார பிரச்சினையுடன் தடுமாற்றத்துடன் இருக்கும் பொழுது, இந்திய அரசியல், நாட்டுப்பற்று மற்றும் சுதந்திர போராட்ட அமைப்புகளுடன் உத்வேகம் ஊட்டப்பட்டிருந்தது.

ஒரு சுதந்திர இந்தியாவை நினைத்துப் பார்க்கும்பொழுது, அதனுடன் பிணைந்திருக்கும் பிரச்சினைகளும் அவர்களது முன்பு எழுந்தன. மக்கள் பல காரணிகளால் பிளவுப் பட்டிருந்தது போல, தலைவரர்களும் சித்தாந்த-குழப்பங்களினால் பிளவுப் பட்டிருத்தனர். படித்த மேனாட்டு அரசியல் முறைகளை அறிந்து, அவை எந்த அளவிற்கு இந்திய சூழ்நிலைகளுக்கு ஒத்துப்போகும் என்று ஆயும்பொழுது, மக்கள் பலவித சமூக-பொருளாதார-அரசியல் நிகழ்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

ஆங்கிலேயருக்குப் பின்பு இந்தியாவை யார் ஆளவேண்டும்?  

போராட்ட ”ஆங்கிலேயருக்குப்பின்பு இந்தியாவை யார் ஆளவேண்டும்?” என்ற வினா எழுந்தபோது, அத்தகைய சித்தாந்தகளினால் மக்கள் வேறுபடநேர்ந்தது. அரசியல் தலைவர்களது ஆசைகள்-விருப்பங்கள் வெகுஜன மக்களின் நிலையை பாதிக்கும் முறையில் இருக்கவும் செய்தன. அத்தகைய நிலையில், தமது பேராசைகளுக்கு-லட்சியங்களுக்த் துணைப்போக மக்களை அவர்களது மென்மையான உணர்வுகள் மற்றும் உணர்வுப்பூர்வமாகவுள்ள பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, இயக்கரீதியில் செயல்பட்டனர். இத்தகைய சூழ்நிலையில், ஆராய்ச்சியாளர்கள் அத்தகைய பிரச்சினையை அலசத் தயங்கியுள்ளது அல்லது அறவே தவிர்த்துள்ளனர் எனத்தெரிகிறது. ஆகவே, அந்த மூன்று தலைவர்கள் சந்தித்தது, உரையாடியது, தீர்மானித்தது, செயல்பட்டது அதன் விளைவுகள் முதலியனப்பற்றி இவ்வாய்வுக்கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது.

சந்திப்பின் பின்னணி மற்றும் ஏற்பாடுகள்:

இந்தியாவின் பல பகுதிகளில் பிராமணரல்லாத இயக்கங்கள் 1920களில், குறிப்பாக தென்னகத்தில், ஆரம்பிக்கப்பட்டபோது சில பிராமணரல்லாதவர், முகமதியர் மற்ற தலைவர்கள், சித்தாந்தரீதியில், ஒரு கூட்டணியை தம்முள் உருவாக்கலாம் என தீர்மானித்தனர். அத்தகைய மாற்றங்களில் மதத்தில் ஈடுபாடற்ற, படித்த மேனாட்டு நாகரிகத்தில் ஊறிய ஜின்னா, மதரீதியில் செயல்பட ஆரம்பித்தார்.

அம்பேத்காரும் மேனாட்டு நாகரிகத்தில் ஈடுபாடுக்கொண்டிருந்தாலும், முதலில் மஹர் என்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராட ஆரம்பித்து, சிறிது-சிறிதாக முஸ்லீம்கள்-சித்தாந்தத்திற்கு ஆதரவாக தமது கருத்துகளை வெளிட ஆரம்பித்தார். திராவிட இயக்கமும் பிராமணரல்லாதவர்களின் நலன்களுக்கு மற்றும் அவர்களது மேம்பாட்டிற்கு ஆரம்பித்தாலும், பிறகு பெரியாரின் கொள்கைகளுடன், இந்துக்களுக்கு எதிராக மாறியது.

காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப்

பல நீதிகட்சி தலைவர்கள் முஸ்லீம்கள் நலன்களுக்கு ஆதரவாக இருந்தாலும், இந்து-எதிர்ப்பு நிலையை வெறுத்தனர் என்பதனை இங்கு நோக்கத் தக்கது. இருப்பினும், பெரியாரைப் பின்பற்றுபவர்கள், முஸ்லீம்களுக்கிடையே இருந்த தொடர்புகள் 1930-40-களில் நன்றாகவே வளர்ந்தன. ஜின்னா, முஹம்மது இஸ்மாயில் (காயிதே மில்லத்) அவர்களை சென்னை மாகாணத்தின் முஸ்லீம் லீக் கட்சியைத் தொடங்கப்பணித்து, அவர் 1936ல் அதற்கு தலைவராகவும் ஆக்கினார்.

சென்னையில் 1938ல், முஸ்லீம் லீக் கட்சித் தொடங்கியதுடன், பெரியார் ஜின்னாவை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம். பெரியாரின் இஸ்லாமியத் தலைவர்களுடான தொடர்புகள் 1920களிலேயே இருந்தன. ‘மூன்றாவது மஜிலிஸ்ஸுல் உலமா மாநாடு’ ஈரோட்டில் நடந்தபோது, மௌலானா முஹம்மது அலி, ஹக்கிம் அஹமது கான், ஷௌதிர்கலி குஸ்ஸமான் முதலிய மதத்தலைவர்கள் பங்குகொண்டனர், மற்றும் அவைகள் பெரியாரின் வீட்டிலேயே தங்கினர்.

அலி சகோதரர்கள்

அலி சகோதரர்களை, பெரியார் தமது தாயார், மனைவிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கும்போது, ”இந்த உலகமே காந்தியுடன் இருக்கும்போழுது, அந்த மஹாத்மாவோ, இந்த மௌலானா முஹம்மது அலியின் சட்டைப்பையில் இருக்கிறார்” என்று சொன்னார்! பெரியார், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப் சித்தாந்த ரீதியில் வேறுபட்டிருந்தாலும் 1920-லிருந்து ஒன்றாகயிருந்து, வேலை செய்துள்ளனர், அரசியல் பேசியுள்ளனர் மற்றும் நண்பர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இவர், முஸ்லீம் லீக் கட்சிக் கூட்டங்களில் பங்கு கொண்டது மட்டுமல்லாது, அவர்களது மீலாது நபி, ரம்ஜான் பண்டிகை-விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார்.

அம்பேத்கர் பம்பாயிலேயே இருந்ததால், அவரையும் சந்திக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஜின்னா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்திலிருந்து ”விடுபடும் நாள்” என முஸ்லீம்கள் தீர்மானித்தது, இந்த மூவர்-சந்திப்பின், ஒரு முன்னேற்பாடே எனத்தெரிகிறது:

போராட்ட ”காங்கிரஸை சாராத பல ஹிந்துக்கள் மற்றும் நீதிகட்சி தலைவர்கள், செட்யூல்ட் சாதியினர், பாரசீகர் முதலியோரும், ”விடுபடும் நாள்” என்ற எங்களது கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர் என்பது உண்மை”.

ஜின்னா, ஜனவரி 1, 1940 அன்று இவ்வாறு எழுதுகின்றார், 9வது தேதி, பெரியார், அம்பேத்கார் முதலியோரைச் சந்திக்கின்றார். பெரியார் ”திராவிட நாட்டிற்கான” பிரிவு கோரிக்ககையை திசம்பர் 1938ல் நடந்த 14வது S.E.L.F ன் மாநாட்டில் முன்வைத்தார்! பிறகு, 1939ல் சர் ஸ்டஃபோர்ட் கிரிப்ஸை சந்தித்தபோது, ”திராவிடத் தனிநாடு” கோரினார். அப்பொது அவருடன் இருந்தவர்கள்: சர் முத்தையாச் செட்டியார், என். எஸ். சாமியப்ப முதலியார், W.P.ஆ.சவுந்திரப்பாண்டியன் . அதற்கான தீர்மானம் 1940-ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால், வேடிக்கையென்னவென்றால் முஸ்லீம் லீக் 1942ல் கிரிப்ஸின் உத்தேசத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

அம்பேத்கர் மற்றும் பெரியார் 1939ல் ”விடுபடும் நாளை” ஆதரித்தது:

ஜின்னா டிசம்பர் 22, 1939 நாளை ”விடுபடும் நாளாக” – அதாவது எல்லா காங்கிரஸ் அரசாங்கங்களும் தொலைந்தன, முஸ்லீகள் விடுதலை அடைந்தனர் என்ற ரீதியில், முஸ்லீம்களை அனுசரிக்கச் சொன்னார். ஆனால், காங்கிரஸோ ”பாராளுமன்ற கூடுதல்” என்ற எண்ணத்தை பிரபலமாக்கி, பாம்பேயில் ஜின்னா, நேருவை சந்திப்பார் என எதிர்ப்பார்த்திருந்தனர். அம்பேத்கர், முஸ்லீம் லீக் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கு கொண்டு ஆதரவாக பேசினார். சர் கரீம்பாய் இப்ராஹிம் தீர்மானத்தை டிசம்பர் 22, 1939 அன்று முன்மொழிந்த போது, அம்பேத்கர் வழிபொழிந்தார். அம்பேத்கர் ஜின்னா பெந்தியர்கர் என்ற இடத்தில் நடந்த ஒரு பொதுகூட்டத்தில் சந்தித்துக்கொண்டு ஒருவரைஒருவர் கைகுலுக்கிக்கொண்டனர் என்பதுதான் அன்று முதல் செய்தியாக இருந்தது.

பெரியாரும் தமது கட்சி மற்றும் எல்லா திராவிடர்களும் அந்த நாளை ”காங்கிரஸிலமிருந்து இந்த நாடு விடுதலைப் பெற்ற நாளாக….. பெருமளவில் கொண்டாட…..” அழைப்பு விடுத்தார். உடனே, மேற்குறிப்பிட்டபடி, ஜனவரி 1, 1940 அன்று ஜின்னா காந்திக்கு எழுதுகிறார்: ”காங்கிரஸை சாராத பல ஹிந்துக்கள் மற்றும் நீதிகட்சி தலைவர்கள், செட்யூல்ட் சாதியினர், ஃபாரசீகர் முதலியோரும், ”விடுபடும் நாள்” என்ற எங்களது கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர் என்பது உண்மை.” ஆகவே அவர், அதற்குப் பிறகு பெரியார் அம்பேத்கரை சந்திப்பார் என்பது, நன்கே தெரிந்திருந்தது, என தெளிவாகிறது!

ஜனவரி 8, 1940 ஜின்னா, அம்பேட்கர், பெரியார் சந்திப்பு:

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, மூவர் – ஜின்னா, அம்பேட்கர், பெரியார் சந்திப்பு ஜனவரி 8, 1940 அன்று நிகழ்ந்தது. மேற்குறிப்பிடப்பட்ட சம்பவங்களிலிருந்து, இத்தலைவர்கள் நேரிடையாகவும், தங்கள் நண்பர்கள் மூலமாகவும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பர் எனத் தெரிகிறது. ஜனவரி 5, 1940 அன்று காலை, பெரியார் பம்பாயின் பிராமணரல்லாத குடிமகன்களின் அழைப்பை ஏற்று, பம்பாயிற்குப் புறப்பட்டு செல்கிறார்.

அவருடன், நீதிபதி டி.ஏ.வி.நாதன், பி.பாலசுப்ரமணியம், ”சண்டே அப்ஸர்வர்” பத்திக்கையாசிரியர் (நீதிகட்சி சார்புடையது), சி.என்.அண்ணாதுரை, நீதிகட்சியின் பொதுசெயலாளர், டி.பி.என்.பொன்னப்பன், சி.பஞ்சாக்சரம் முதலியோரும் சென்றனர். குமரராஜா முத்தைய்யச் செட்டியார், கலிஃபுல்லா முதலியோர் வழியனுப்பி வைத்தனர். 06-01௪0 பத்து மணிக்கு தாதர் ஸ்டேசனை அடைந்ததும், அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட குதிரை-கோட்சு வண்டியில் அழைத்துச்செல்லப்பட்டனர். மாலையில், அம்பேட்கர் இல்லத்தில் அவருடன் பல சமூக-அரசியல் பிரச்சினைகளை மணி 9 முதல் 10,30 வரை பேசி விவாதித்தனர்.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.

www.nidur.info

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 7 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb