எவரையும் பழித்துக் காட்டாதீர்!
சில மனிதர்கள் தனக்கு சாதகமான சந்தர்பத்தை எதிர்பார்த்தவர்களாகவே இருப்பார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை நம்மக்கு பயன்படுத்திக் கொள்வோம் அல்லது நமக்கு எதிரானவர்களுக்கு பாதகமாக பயன்படுத்வோம். இத்தன்மை உலக விஷயத்தில் மட்டும் அல்லாமல் மார்க்க விஷயத்திலும் வெளிபடுதுவார்கள்.
எப்படியெனில், அடுத்தவர் தவறு இழைக்கும் போது அவருக்கு அறிவுரை கூற பக்கம் பக்கமாய் ஹதிஸ்களையும் , குர்ஆனுடைய வசனங்களையும் அவருக்கு எடுத்துக் கூறி அவரை திணரடிபோம். ஆனால் தன்னுடைய தவறை மற்றவர் சுட்டிக் காட்டும் போது எளிதாக அவரை விட்டு விலகி விடுவோம் அல்லது விலக்கி வைத்து விடுவோம்.
சத்தியத்தை ஏற்காமல் பிடிவாதம் செய்வதுதான் பெருமை என்பதை நாம் பல நேரங்களில் மறந்து விடுவோம். உதாரணத்திற்கு ஒரு இமாம் மார்க்கத்தில் தாடி வைக்காததை பற்றி பேசும் போது நாம் நம் பக்கத்தில் உள்ள நண்பரை பார்ப்போம், (சிரித்துக்கொண்டே இது உனக்குதான் என்பதுபோல) மேலும் அந்த இமாம் புகை பிடிப்பதை பற்றி பேசினால் அந்த நண்பர் நம்மை பார்பார் (நாம் புகை பிடிபவராக இருந்தால்), இது சாதரணமாக நமது நடைமுறையில் கவனிக்கலாம்.
பிறரை பழித்து காட்டுவதிலும் நாம் கைதேர்ந்தவர்களாகவே இருப்போம், அந்த மாதிரியான நம் குணம் கொண்ட நம் மக்களுக்கு கீழ் கண்ட ஹதீஸ், “அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள், “எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்ப வில்லை, அதற்க்கு பகரமாக ஏராளமான செல்வம் கிடைத்தாலும் சரியே” (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: திர்மிதி)
இன்னும் சிலரை நாம் பார்ப்போம், இரண்டு எதிர் எதிரான நபர்கள் வெவ்வேறு தருணத்தில் அவரிடம் வந்தால்; இவர் அவருக்கும் ஆமாம் போடுவார் , மற்றொருவருக்கும் ஆமாம் போடுவார். இரண்டு பேருக்குமே சாதகமாக பேசி நல்ல பெயர் பெறுவார் அல்லது இரண்டு பேருக்கும் உள்ள பகையை இன்னும் அதிக படுத்துவார். இவ்வாறு உள்ள மனிதருக்கு கண்மணி நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் எச்சரிக்கை என்ன தெரியுமா?”உலகில் இரண்டு முகங்களை கொண்டிருந்த மனிதனை இறுதி தீர்ப்பு நாளில் மிகத் தீய மனிதனாக நீங்கள் காண்பீர்கள் . அவன் சிலரை ஒரு முகத்துடன் சந்திப்பான்; வேறு சிலரை இன்னொரு முகத்துடனும் சந்திப்பான்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி,முஸ்லிம்)
மற்றொரு அறிவிப்பாளர் அம்மார் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ” உலக வாழ்வில் இரட்டை வேடம் போட்டவனுக்கு மறுமை நாளில் நெருப்பாலான இரண்டு நாக்குகள் இருக்கும்.(அபூதாவூத்).
உலகமே தேசத்தின் பெயராலும், இன அமைப்புகளின் பெயராலும் பிரிந்து நின்றாலும், இஸ்லாமிய சமுகம் மட்டும் தான் சகோதரத்துவம் என்னும் தூண்களோடு தூண்களாக இருக்கிறது. அதனாலதான் அடிபடுபவர் பாலஷ்தீனியராக இருந்தாலும் ஆப்கனியராக இருந்தாலும் நம்முடைய இதயங்கள் கனமாகி கண்களில் கண்ணிருடன் இறைவன் புறத்தில் கைகளை ஏந்துகிறோம்.
“எவருடைய நாவலும் கரத்தாலும் ஏனைய முஸ்லிம்களுக்கு தீங்கு ஏற்படவில்லையோ அவர் தான் முஸ்லிம் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்”.(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி ,முஸ்லிம்)