[ கராச்சியில் ஆல் இந்தியா முஸ்லீம் லீக் மாநாட்டில் டிஸம்பர் 26, 1943 அன்று சக்தி வாய்ந்த வார்த்தைகளைப் பேசியபோது, இஸ்லாம் பற்றிய தன் புரிதலை பிரதிபலித்தார்.
”எது எல்லா முஸ்லீம்களையும் ஒரே மனிதனாக இணைக்கிறது? எது இஸ்லாமிய சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது? திருக்குர்ஆன் – இது மாபெரும் புத்தகம். இதுவே இந்திய முஸ்லீம்களின் அடித்தளம். நாம் போகும் வழியெங்கும் இதுவே. ஒரே இறைவன், ஒரே புத்தகம், ஒரே இறைதூதர், ஒரே தேசம்.”
தனது ”ஈத்” திருநாள் வாழ்த்துச் செய்தியில் செப்டம்பர் 1945-ல், ”இஸ்லாமில் வெறும் ஆன்மீக விஷயங்களும், சடங்குகளும், ஆன்மீக கோட்பாடுகளும் இல்லை. இது எல்லா முஸ்லீம் சமூகத்தையும் எல்லா வகைகளிலும் நெறிப்படுத்தும் முழுமையான வழிமுறைகள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும், சமூகம் முழுமைக்கும், தனிமனிதருக்கும் முழுமையான நெறிமுறைகளை வகுத்துத்தந்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.]
1913-ல் ஆல் இந்தியா முஸ்லீம் லீக் அமைப்பு தன் குறிக்கோளைத் திருத்தி அதில் இந்தியா சுயாட்சி பெறுவதை நோக்கமாக இணைத்ததும் அதில் உறுப்பினராக லண்டனில் இணைந்தார். ஆனால் அவர் அதே வேளையில், அவர் 1903-ல் தான் இணைந்த காங்கிரஸில் தொடர்ந்து உறுப்பினராக இருப்பேன் என்றும் தெளிவாக்கினார்.
பம்பாயின் முஸ்லீம் மக்கள் அவரது சேவையில் மகிழ்ந்ததால், அந்தத் தொகுதிக்கு மீண்டும் பிரதிநிதியாக 1916-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசுக்குள் அவர் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக உழைத்ததாலும், புகழ்பெற்ற லக்னோ ஒப்பந்தத்தில் இந்து முஸ்லிம் மக்கள் சேர்ந்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு உழைக்க ஏற்பாடு செய்ததாலும் அவர் இந்து முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என அழைக்கப்பட்டார்.
1918-ல் 18 வயது நிறைந்த ஃபார்ஸிப் பெண்ணான ருட்டி பெட்டி எனும் பெண்மணி இஸ்லாமை தழுவிய பின்னர் திருமணம் செய்து கொள்ள இசைந்தார். இஸ்னா அஹாரியின் பேஷ் இமாமின் முன்னிலையில் மரியம் என்ற இஸ்லாமியப் பெயரை ருட்டிக்கு சூட்டியதன் பிறகு, அடுத்த நாள் ஜின்னா அவரை பல முஸ்லீம் படிப்பாளிகள் முன்னிலையில் முஸ்லீம் நண்பர்கள் முன்னிலையில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்தார். அந்த சிறப்பான குழுவில் மஹ்மூதாபாத் அரசரும் இருந்தார்.
ஆனால் அவர்களின் இல்லற வாழ்வு நீடிக்கவில்லை. 1929-ல் ருட்டி காலமானார். அவரை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்தார். அவர் பம்பாயிலும் பல இடங்களிலும் இருக்கும் இஸ்லாமிய சேவை நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தார். ஈத் திருநாளன்று அவரது தொகுதி மக்களும் அவரது நண்பர்களும் அவர் வீட்டுக்கு வந்து அவரை கவுரவித்தார்கள். லண்டனில் இருந்தபோதும் (1931-35) அவர் கிழக்கு லண்டனில் இருக்கும் சிறிய மஸ்ஜிதில் ஈத் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டார்.
1918 முதல் 1922 வரை இந்தியாவில் நடந்த கிலாஃபத் இயக்கத்தில், ஜின்னா ஓட்டோமான் (Otoman) பேரரசின் நோக்கத்தை ஆதரித்து, கான்ஸ்டான்டினோபிள் மையமாக இருந்த கிலாஃபத்தை ஆதரித்தார். இங்கிலிஷ் டில்லி, பாம்பே குரோனிகிள் ஆகிய பத்திரிக்கைகளை நடத்திய நிறுவனத்தின் சொந்தக்காரர் என்ற முறையில் அந்த பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த பி.ஜி.ஹாரிமனை கிலாபத் இயக்கத்துக்கும், அதன் தலைவர்களாக இருந்த மெளலானா முஹம்மது அலி, அவரது அண்ணன் மெளலானா ஷவுகத் அலி மற்றும் காந்திஜி ஆகியோருக்கு தேவையான முக்கியத்துவத்தை கொடுக்கத் தூண்டினார். 1920களில், லண்டனில் பாராளுமன்ற கமிட்டியின் முன்னர், இந்தியாவின் முஸ்லீம்கள் ஒட்டோமான் பேரரசு மற்றும் கிலாஃபத் ஆகியவற்றைக் கலைப்பதற்கு எதிரானவர்கள் என்ற பார்வையை பிரபலப்படுத்தினார்.
1935க்குப் பின்னர், இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்த பிறகு, ஆல் இந்திய முஸ்லீம் லீக் தலைவராக ஆனார். அதன் பின்னர் பல முஸ்லீம் கூட்டங்களில் கலந்து கொண்டு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும், இந்தியாவிலும் வெளியிலும் முஸ்லீம்களின் நோக்கத்தைப் பற்றியும் பேசினார். அவரது பேச்சுக்களில் எல்லாம், இஸ்லாமின் இறைதூதரரின் பெருங்குணங்களைப் பற்றியும், இஸ்லாமின் உலக மயமான போதனைகளைப் பற்றியும் இருந்தன. அல்லாமா இக்பால் அவர்களின் இஸ்லாமிய மறுமலர்ச்சியை வேண்டி நின்ற கட்டுரைகளாலும், அவரது உணர்ச்சி மயமான கவிதைகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜின்னா, இஸ்லாம் பற்றி நிறையப் புத்தகங்கள் படித்தார். மேலும் முஹம்மது அலி ஜின்னா ஷாபிர் அஹ்மத் உஸ்மானி அவர்களின் ஆலோசனையை விரும்பிக் கேட்டார். லாகூர் ஷாஹீத்கஞ்ச் மஸ்ஜித் வழக்கிலும், கான்பூர் மஸ்ஜித் வழக்கிலும் முஸ்லீம் கண்ணோட்டத்தை எடுத்துறைத்தார்.
1926-ல் ஜின்னா மீண்டும் இந்தியாவின் மத்திய சட்டசபைக்கு பம்பாய் முஸ்லீம் தொகுதி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது முஸ்லீம்கள் அவர் மீது கொண்டிருந்த மாபெரும் நம்பிக்கையை வெளிக்காட்டியது. முஹம்மது அலி ஜின்னா தன் மகளான ‘டினா’வின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தார். ஆனால் அவர் ஃபார்ஸியாகப் பிறந்த நெவில்லி வாடியாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது, வாடியா முஸ்லீமாக மாறினால் மட்டுமே தான் அனுமதி தரப்போவதாகச் சொன்னார். வாடியா மறுத்துவிட்டபோதும், டினா வாடியாவை திருமணம் செய்தபோது, ஜின்னா தன் மகள் மீது கொண்டிருந்த மகள்-தந்தை உறவை அறுத்துவிட்டார். அவரது வாழ்க்கையில் அவர் மிகவும் கலங்கிப்போய் நின்ற சமயம் அதுதான் என்று கூட சொல்லலாம்.
கராச்சியில் ஆல் இந்தியா முஸ்லீம் லீக் மாநாட்டில் டிஸம்பர் 26, 1943 அன்று இந்த சக்தி வாய்ந்த வார்த்தைகளைப் பேசியபோது, இஸ்லாம் பற்றிய தன் புரிதலை பிரதிபலித்தார்.
”எது எல்லா முஸ்லீம்களையும் ஒரே மனிதனாக இணைக்கிறது?
எது இஸ்லாமிய சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது?
திருக்குர்ஆன் – இது மாபெரும் புத்தகம்
இதுவே இந்திய முஸ்லீம்களின் அடித்தளம்.
நாம் போகும் வழியெங்கும் இதுவே.
ஒரே இறைவன், ஒரே புத்தகம், ஒரே இறைதூதர், ஒரே தேசம்.”
தனது ”ஈத்” திருநாள் வாழ்த்துச் செய்தியில் செப்டம்பர் 1945-ல், ”இஸ்லாமில் வெறும் ஆன்மீக விஷயங்களும், சடங்குகளும், ஆன்மீக கோட்பாடுகளும் இல்லை. இது எல்லா முஸ்லீம் சமூகத்தையும் எல்லா வகைகளிலும் நெறிப்படுத்தும் முழுமையான வழிமுறைகள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும், சமூகம் முழுமைக்கும், தனிமனிதருக்கும் முழுமையான நெறிமுறைகளை வகுத்துத்தந்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
டில்லியில் ஏப்ரல் 24, 1943 ஆல் இந்திய முஸ்லீம் லீக் மாநாட்டில் முஹம்மது அலி ஜின்னா, ”மனிதனின் சமத்துவம் இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது. சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என்பன இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்று… இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உலகம் சந்தித்த மக்களிலேயே மிகச்சிறந்தவர்… 13 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர் ஜனநாயகத்தின் அடித்தளத்தை நிறுவினார்” என்று முழங்கினார்.
ஜின்னா மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்களிடம் சகிப்புத்தன்மையை காட்டினார். ஆகஸ்ட் 11, 1947இல் அவர் பாகிஸ்தான் சட்ட அமைப்பு அஸெம்பிளியில் பேசிய பேச்சு இதற்கு நல்ல உதாரணம். முஹம்மது அலி ஜின்னா மத ஆட்சிக்கும், மதப்பிரிவு வாதத்துக்கும் (theocracy and sectarianism) எதிரானவராக இருந்தார்.
1948 பிப்ரவரியில் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில், கவர்னர் ஜெனரல் ஜின்னா அவர்கள், பாகிஸ்தானின் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயக அமைப்பாக, இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகள் பொதிந்ததாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார். இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மனிதனின் சமத்துவத்தையும், நீதியையும், எல்லோருக்கும் சம வாய்ப்பையும் கொடுக்கச் சொல்லி போதித்திருக்கிறது என்று குறிப்பிட்டுக்காட்டினார்.
1947, ஆகஸ்ட் 18ஆம் தேதி, அவர் பாகிஸ்தானிய முஸ்லீம்களுக்கும், இன்னும் உலக முஸ்லீம்களுக்கும் சொன்ன உரையில், ஈத் திருநாளன்று, புதிய விடியலுக்கான ஜின்னாவின் நம்பிக்கையை, ‘ வளமையான புதிய யுகம் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும், அதன் குறிக்கோள்களுக்குமான புதிய குறியீடாக இருக்கும் ‘ என்று சொன்னார். அன்றைய கொண்டாட்டத்தில், கராச்சியில் ஈத்கா மைதானத்தில் வெளிர்நிற ஷெர்வானி அணிந்து ஜின்னா தொப்பி அணிந்து ஈத் பிரார்த்தனை செய்து, எல்லா முஸ்லீம்களோடும் வாழ்த்துக்களைப் பறிமாறிக்கொண்டு, பாகிஸ்தான் என்ற பரிசைக் கொடுத்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.