இளம் வயதில் முஹம்மது அலி ஜின்னா
[ இதுவரை நீங்கள் படித்த யாவும் ஜின்னா சாகிபின் காரோட்டி ஆஸாத், அவரைப்பற்றி கூறிய நினைவலைகள். இனி காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் அவர்களைப்பற்றி (எழுத்தாளர்குத்புத்தீன் அஜீஸ் அவர்கள் எழுதிய) சுருக்கமான வரலாற்றைப்பார்ப்போம்.]
காய்தே-இ-ஆஸம் முஹம்மது அலி ஜின்னா 1876- ல்பிறந்தார். தன் வாழ்நாள் முழுவதும் ‘நல்ல முஸ்லீமாக’ வாழ்ந்தார். ஆகஸ்ட் 14, 1947 ஆம் வருடம் அன்றைய தினத்தின் மிகப்பெரிய இஸ்லாமிய நாட்டை உருவாக்கிய பின்னர் 1948- ல்இஸ்லாமிய வரலாற்றிலேயே மிகச்சிறந்த முஸ்லீம்களில் ஒருவராக மறைந்தார்.
அவரது பெற்றோர், ஜின்னாபாய் பூஞ்சா அவர்களும், மிதி பாய் அவர்களுமாவர். இவர்கள் இஸ்னா அஹாரி (கோஜா முஸ்லீம்)-இன் வழியாளர்கள். இவர்களும் நல்ல முஸ்லீம்களாக இருந்தனர். இஸ்லாமிய நெறிகளையும் இன்னும் மற்ற பாடங்களையும் தங்கள் பிள்ளைகளுக்கு, முக்கியமாக மூத்த மகனான ஜின்னாவுக்கு கற்றுத்தந்தனர்.
கராச்சியிலுள்ள மதரஸாவில் சேர்க்கப்பட்ட முஹம்மது அலி ஜின்னா
புகழ்பெற்ற புரவலரும், கல்வியை பரப்பியவருமான ஹஸன் அலி இஃபிண்டி தலைமையில் இயங்கிய சிந்தி முஹம்மதன் அஸோஷியேஷன் நடத்திவந்த சிந்து மதரஸாவில்தான் முதன் முதலில் கராச்சியில் முஹம்மது அலி ஜின்னா சேர்க்கப்பட்டார். ஹசன் இந்த பள்ளியை ஆரம்பிப்பதற்கு முன், அலிகாரில் இருக்கும் எம்.ஏ.ஓ கல்லூரிக்குச் சென்று அங்கு சர் ஸைய்யது அஹ்மத் கானுடன் பேசினார். சிந்தி மதரஸாவின் பாடத்திட்டங்களில் இஸ்லாமிய படிப்புகளும், குர் ஆன் படிப்பும் சேர்க்கப்பட்டது. இங்குதான் ஜின்னா இஸ்லாமிய கல்வியைக் கற்றார்.
அவரது சிறு வயதில், ஜின்னா அவர்கள் பம்பாய் சென்று தனது அன்பான அத்தை மாமா ஆகியோருடன் 6 மாதங்கள் தங்கியிருந்தார். அங்கு அவர்கள் ஜின்னாவை அன்சுமான்-ஈ-இஸ்லாம் பள்ளியில் சேர்த்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் இஸ்லாம் பாடத்திட்டத்தில் ஒரு பகுதி. ஜனவரி 1893 ஆம் ஆண்டு இங்கிலாந்த்துக்குப் புறப்படும் வரை, ஜின்னா கராச்சியில் இருக்கும் சர்ச் மிஷன் பள்ளியில் படித்தாலும், தொடர்ந்து இஸ்லாமிய கல்வியையும் கற்று வந்தார்.
முஹம்மது அலி ஜின்னாவின் திருமணம்
16 வயதில் ஜின்னாவுக்கும் 14 வயது நிரம்பிய எமிபாய் என்பவருக்கும் கத்தியவாரில் இருக்கும் கனேலியில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. ஜின்னாவின் தாயார், தன்னுடைய மகன் இங்கிலாந்து செல்வதால் அங்கு எந்த இங்கிலாந்து பெண்ணின் வசமும் சென்று விடாமல் இருப்பதற்காக இந்த திருமணத்தை அவசர அவசரமாக நடத்தினார். கராச்சியில் அவரது பிள்ளைப்பிராயம் முழுவதும் ஜின்னாவின் பெற்றோர் அவரது இஸ்லாமிய அடையாளத்தையும் இஸ்லாமிய நம்பிக்கைகளையும் அவர் நன்கு உணருமாறு செய்தனர்.
லண்டனில் இருக்கும் லண்டன் விடுதியில் அவர் 3 வருடம் சட்டப்படிப்பு படிக்கும் காலம் முழுவதும் (ஏப்ரல் 1893- ஜூலை 1986), பல வேளைகளில் அவர் கிழக்கு லண்டனில் இருந்த சின்ன மஸ்ஜிதுக்கு செல்லக் கூடியவராக. பலமதங்கள் இருக்கும் இந்தியாவில் சட்டத்தொழில் செய்வதற்காக, தன்னுடைய சட்டப் படிப்பின் பகுதியாக இஸ்லாமிய சட்டத்தையும் கற்றுத்தேர்ந்தார். அவர் ஏற்கெனவே சர்ச் மிஷன் பள்ளியில் கராச்சியில் படிக்கும்போது கிறிஸ்தவ மதத்தைப் பற்றி கற்றிருந்தார். அவருக்கு இந்து மற்றும் ஃபார்ஸி நண்பர்களும் இருந்தார்கள். அவர்களிடமிருந்து அவர்களது மதங்களையும் அறிய ஆர்வமுள்ளராக இருந்தார்.
ஒழுக்கமுள்ள வாழ்க்கை
அவரது சகோதரி பாத்திமா ஜின்னா கூறுவதுபோல, இளம்வயதில் ஜின்னா மதுவையோ பன்றிக்கறியையோ தொட்டதேயில்லை. இங்கிலாந்திலும் அவற்றைத் தொடமாட்டேன் என்று தன் பெற்றோரிடம் உறுதி கூறிவிட்டே அவர் இங்கிலாந்து சென்றார். ஸ்டான்லி வோல்பர்ட் எழுதிய ‘பாகிஸ்தானின் ஜின்னா ‘ என்ற புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சி அவரது குணவலிமைக்கும் ஒழுக்கத்துக்கும் சாட்சி சொல்வதாகும்.
லண்டனில் அவர் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்கார பெண்மணி கிறிஸ்துமஸ் விருந்துக்கு அவரை அழைத்திருந்தார். அந்த வீட்டுச் சொந்தக்கார அம்மாளின் அழகான பெண் அன்றைய இளம் வயது ஜின்னாவுடன் நட்புறவு கொள்ள விரும்பினாள். அந்த கொண்டாட்டத்தின் போது, இங்கிலாந்து பழக்கத்தின்படி கூரையிலிருந்து தொங்கும் மிஸ்ல்டோவின் கீழ் முத்தமிடலாம் என்று அழைத்தாள் அந்த அழகிய பெண். அப்படிப்பட்ட பழக்கம், தான் வளர்ந்து வந்த ஒழுக்கக் கோட்பாட்டின்படி தவறானதென்றும், தன் தாயாரும், தன் 15 வயது மனைவியும் நிச்சயம் ஆட்சேபிப்பார்கள் என்றும் ஜின்னா அந்தப் பெண்ணிடம் கூறினார்.
லண்டனில் ஜின்னா அங்கிருக்கும் பிரிட்டிஷ் மியூஸியத்துக்கு அடிக்கடி விஜயம் செய்தார். மத்தியக்கிழக்கு, அரபு, இஸ்லாமிய சமுதாயம், சிந்து பள்ளத்தாக்கு போன்றவற்றைப் பற்றிய காட்சிகளில் மிகுந்த ஆர்வம் செலுத்தினார். இங்கிலாந்திலிருந்து கராச்சிக்கு வரும் வழியில், சூயஸ் கால்வாயில் இருக்கும் சையது துறைமுகத்தில் கப்பல் நின்றபோது, எகிப்தை ஒரு நாள் சுற்றிப்பார்த்தார். பிரிட்டிஷ் மியூஸியத்தில் இருந்த பழங்கால, மற்றும் மத்தியக்க்கால எகிப்து காட்சிகள் அவரை பெரிதும் கவர்ந்திருந்தன.
காயிதே ஆஸாமுடன் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ்
பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக
1896-ல் ஜின்னா இந்தியாவுக்கு திரும்பி வந்து பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பதிவு செய்து கொண்டபின்னர்,
இந்தியாவில் இருக்கும் சட்டங்களை,
முக்கியமாக இஸ்லாமிய மதச்சட்டத்தையும்,
இஸ்லாமிய தனிச்சட்டத்தையும் பற்றி ஆழமாக கற்றார்.
நவம்பர் 19-லிருந்து அவர் பம்பாயில் பிரஸிடென்ஸி மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தபோது இது வெகுவாக அவருக்கு உதவியது.
அவர் எடுத்துக்கொண்ட பல வழக்குகள் முஸ்லீம்களைப் பற்றியவை.
இந்த வழக்குகள் பல இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய பல்வேறு முக்கிய வேறுபட்ட புரிவிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் தேவையை அவருக்கு உண்டாக்கின.
பம்பாயில் அவர் அன்ஜுமான்-ஈ-இஸ்லாமியாவுக்குச் சென்று அதற்கு நிதியுதவி அளித்தார்.
1901-ல் அவர் வழக்குரைஞராக ஆனபோது, அவருடைய நண்பர் வட்டம் விரிவடைந்து பல முஸ்லீம்களையும், இந்துக்களையும் ஃபார்ஸிகளையும் கிறிஸ்தவர்களையும் ஐரோப்பியர்களையும் கொண்டதாக ஆனது. ஜின்னா தனது நண்பர்களது மத உணர்வுகளையும் பழக்க வழக்கங்களையும் மதித்தார்.
இஸ்லாமிய வக்ஃப் சட்டங்கள் பற்றியஞானம்
கல்கத்தாவில் 1906-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் போது அவர் இஸ்லாமிய வக்ஃப் சட்டங்கள் பற்றிப் பேசிய பேச்சு அவர் எவ்வளவு ஆழமாக இஸ்லாமிய சட்டத்தையும் குர்ஆனையும் பற்றி அறிந்து வைத்திருந்தார் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த விஷயம் சம்பந்தமாக அவர் தெளிவாக இஸ்லாமிய மக்களின் பார்வையை வெளிக்காட்டியதற்காக அவரை பல இஸ்லாமிய அமைப்புக்களும், கல்வியாளர்களும் பாராட்டினர்.
முதன்முதலில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது
அவர் முதன்முதலில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது முஸ்லீம்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியிலிருந்தே ஆகும், அந்தத் தொகுதி மக்கள் அவர் சிறந்த முஸ்லீம் என்று நம்பியிராவிட்டால், அவரை அந்த கடினமான தேர்தலில் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள்.
இஸ்லாமிய எண்டோவ்மண்ட்ஸ் பற்றிய தனிநபர் மசோதாவை அவர் பிரேரணை செய்வதையே எல்லோரும் விரும்பினார்கள். இந்தச் சட்டத்தில் ஜின்னவின் உழைப்பால், இஸ்லாமிய அமைப்புக்களும், அந்த இஸ்லாமிய அமைப்புக்கள் மூலம் பயனடைவோர்களும் சிறப்பான நன்மை எய்தினார்கள். இந்தச் சட்டத்தின் சார்பாக ஜின்னா பேசிய பேச்சுக்கள், அவருக்கு இந்தியா முழுவதிலும் இருக்கும் முஸ்லீம்களிடையே புகழை பெற்றுத்தந்தது.
முஸ்லீம்களுக்கான அவரது சேவையைப் பாராட்டி பல முஸ்லீம் அமைப்புக்கள் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தன. மெளலான ஷபீர் அஹ்மத் உஸ்மானி, மெளலானா ஹுஸைன் அஹ்மத் மதானி போன்றவர்களும் அவரைப் பாராட்டினார்கள்.
அவர் ஒரு முஸ்லீம் சட்டசபை அங்கத்தினர் என்ற முறையில் பல முஸ்லீம் கொண்டாட்டங்களிலும், ஈத் திருநாள், நபிகள் பிறந்தநாள் ஆகியவற்றிலும் கலந்துகொண்டார். அவர் முஸ்லீம்களின், அதிலும் முக்கியமாக முஸ்லீம் பெண்களின் அரசியல், பொருளாதார, கல்வி விடுதலையை வலியுறுத்தினார்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.