Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஈமானுக்கு வேண்டும் இடஒதுக்கீடு! (1)

Posted on January 28, 2010 by admin

MUST READ

திருமண சபை கூடி ஏதாவது தாமதமாக்கப்பட்டிருந்தால் ‘அது’ வரும் வரை பயான் செய்யுங்கள் என ஆலிம்சாவிடம் பணிவாக கேட்டுக் கொள்வார்கள். அவரும் ஆஹா! நம்ம பயானை கேட்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்களே என்ற துடிப்பில் அவர் ”சொற்போரை” நிகழ்த்தத் தொடங்குவார்.

அவரது உரை உச்சகட்டத்தை அடைந்திருக்கும் போது, தாமதமாக்கப்பட்ட ‘அது’ வந்து விட்டால் அந்த ஆலிம்சாவின் காலை கொஞ்சம் சுரண்டி விடுவர். அவர் அதை கவனிக்காமல் இருந்தால் காதில் ரகசியமாய் சொல்லி விடுவார். பிறகு அவர் ”இத்துடன்” என இடையிலேயே வெறுப்போடு முடிப்பார். அப்போது தான் அவருக்கு உண்மை புரியும் இதுக்குத்தான் பயான் பண்ண சொன்னார்களோ என்று!

திருமணத்திற்கு வருவது எதற்காக? வயிறார சாப்பிட்டு மணமக்களை வாழ்த்தி விட்டு செல்லலாம் என்பது தான் பிரதானமானது. பயானின் மீதுள்ள வெறுப்பால் ஜும் ஆவுக்கே தாமததாக வரக்கூடிய மக்கள் திருமணத்திற்கு வரக்கூடியவர்களுக்கு அந்த எண்ணம் இருக்குமா?

அரசியல்வாதி வீட்டுத்திருமணத்தில் வாழ்த்துரை என்ற பெயரில் ஏற்பட்ட இத்தவறான நடைமுறைகள் நம் வீட்டுத் திருமணத்திலும் தொற்றிக்கொண்டு விட்டது.கொஞ்சம் முன்மாதிரியாக இருக்கட்டும் (அ) வித்தியாசமாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில், திருமணத்தில் வாழ்துரை என்ற சந்து வழியாக பயான் நிகழ்சிகள் கொண்டு வரப்பட்டன.இப்பொழுது ஆலிம்கள் வீட்டுத் திருமணத்தில் மட்டுமல்ல, ஏதாவது வித்தியாசமாய் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலுள்ளவர்களுடைய வீட்டுத் திருமணங்களில் பயான் என்ற நோய் பரவி வருகிறது.]

இது இட ஒதுக்கீடு சம்பந்தமான விஷயம் அல்ல. அறிவு ஈமான் ஆகிறவற்றுடனான முஸ்லிம்களின் அணுகு முறை மீதானவிமர்சனம் தொடர்பானது. சமீப காலமாக முஸ்லிம்கள் அறிவை வெகுவாகப் போற்றியும், அதன் மீது தாகத்துடன் அதனைத் துரத்தியும் வருகின்றனர்.

அதே சமயம் முன்பைவிட இப்போது முஸ்லிம்கள் அதிக துயரத்திற்கும் ஆளாகிவருகின்றனர். இச்சூழ்நிலையில் முஸ்லிம்களைக் காப்பாற்றப்போவது எது?  என்கிற தெளிவான முடிவுக்கு நாம் வரவேண்டும்.  நாம் எதன் மீது நம்பிக்கை வைக்கிறோம் என்பது எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானது.

நம் இறந்தகாலம் எப்படிஇருந்தது? இப்போது எந்த அச்சில் நமக்கான எதிர்காலம் சுழன்று கொண்டிருக்கிறது? ஏன்பதை ஆராய்ந்து நமக்கான எதிர்காலத்தைக் கணிக்கலாம்.

சென்ற பத்து பதினைந்து ஆண்டுகளில் தவ்ஹீத் இயக்கங்களின் எழுச்சி பெரிய அளவில் முஸ்லிம் சமூகத்திடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடு அரசியலிலும்,சமூகத்திலும் எதிரொலித்தன. பெருவாரியான முஸ்லிம் இளைஞர்களை அந்த இயக்கங்கள் தன்பால் ஈர்த்தன என்றால் அது மிகையாகாது.

முஸ்லிம் சமூகத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல அந்த இயக்கங்கள் உதவும் என்ற நம்பிக்கையில் கணிசமான முஸ்லிம் இளைஞர்கள் தொடக்கத்திலும், அதன் பிறகு நாளடைவில் நடுத்தர வயதினரும் அந்த இயக்கங்களை ஆதரிக்க தொடங்கிவிட்டனர்.

ஆரம்பத்தில் அந்த இயக்கங்கள் தடம் பதிக்க ”அறிவுரீதியான” வாதங்கள் பயன்பட்டன.  அவர்கள் பேசிய பாணி பகுத்தறிவுக்கு இயைந்ததாக இருந்ததால் வெகுசீக்கிரமாக முஸ்லிம்கள் அணிஅணியாக அதில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆனால் அதற்காக அவர்கள் ஒரு பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதும் உண்மைதான். ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, அந்த இயக்கங்கள் ஒரு அதிகாரமையமாக, பெரும்பாலான முஸ்லிம்களின் சமூக – அரசியல் முடிவைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக மாறிப் போனபோது கொஞ்சங்கொஞ்மாக அவர்களிடம் காணப்பட்ட பலவீனங்கள் வெளிப்பட்டன.

இதன் அடிப்படையில் தான் நமக்கு மேலே கண்ட அடிப்படைக் கேள்வி எழுந்தது ஈமானா? அறிவா? எது நம்மை உய்விக்கும்? அறிவுதான் ஈமானுக்கு அடிப்படையா? ஈமானுக்கும் அறிவுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? இரண்டையும் பிரிக்ககூடிய ரேகைக் கோடுகள் ஏதும் உண்டா?  அல்லது இவையிரண்டும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத கலவையா?

இது அறிவியல் யுகம் மனிதன் அறிவியல் முன்னேற்றத்தின் உச்சத்தில் இருப்கதாக மார்தட்டிக் கொள்கிறான். உலகைப் பற்றியும் பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பற்றியும் இயற்கை விதிகளைப் பற்றியும் வானவெளியைப்பற்றியும், கோள்களின் அமைப்பைப் பற்றியும் கண்டறிந்து இந்த நூற்றாண்டில்தான். ஏன், இவையெல்லாவற்றையும் விட மிகப் பெரிய சாதனையாக இப்பிரபஞ்சத்தின் பிற கோள்களில் காலடியும் கூட எடுத்து வைத்து விட்டான்.

எனினும் இந்த பிரமாண்டமான கண்டுபிடிப்புகளின் முன் ”மனிதன் உண்மையில் முன்னேற்றத்தில் தன்னிறைவு அடைந்து விட்டானா?” எனும் கேள்வியை நாம் எழுப்பினால் ”ஆம்!” என பதில் சொல்ல எந்த மனசாட்சியுள்ள மனிதனுக்கு தைரியமும் துணிவும் வரும்?  அறிவியலின் உச்சாணிக் கொம்பில் ஏறிநின்று கெபண்டிருக்கும் மனிதன். தன் சுண்டு விரலால் இப்பிரபஞ்சத்தின் பிற கோள்களை தொட்டு விளையாடும் அளவுக்குச் சென்று விட்டான்.

இப்போது முஸ்லிம்களும் கூட அறிவு வளர்சியில் முன்னணியில் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆலிம்கள் அறிவியலைப் பற்றி பேசவும் நூல்கள் எழுதவும் சொற்பொழிவாற்றவும் முனைந்து விட்டார்கள். எக்காலத்திலும் இல்லாத வகையில் முஸ்லிம்கள் ”அறிவை” பற்றிக் கவலைப்படத் தொடங்கி விட்டனர். அதைப் பற்றிய பிரச்சாரம் தீவிரமாக மூன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்த அறிவைப் பற்றிய கவலை வேறு ஒரு தளத்திலும் வேலை செய்கின்றது. மார்க்க அறிஞர்கள் – நான் பெரிய ஆளா? நீ பெரிய ஆளா? ஏன தங்களுக்குள் அறிவுப்போட்டி நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். முhதந்தோறும் ஏதாவது விவாதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எதைப்பற்றி பொது மக்கள் முன்னிலையில் பேசக் கூடாதோ அதையெல்லாம் இன்று மக்களைக் கூட்டி வெட்கக்கேடான வகையில் விவாதம் செய்கிறார்கள். விவாதங்களின் தீர்ப்பு அவாம்களின் வகையில் ”மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு”. ஆனால் உண்மையில் சில சமயம் அறிவு நம்மை ஏமாற்றக் கூடியது. ஐம்புலன்கள் மூலம் நிருபிக்கத் தக்கவையாக இருப்பதை மட்டுமே அறிவு ஏற்றுக் கொள்ளும்

”அப்படியானால் பகுத்தறிவு..?” என்கிறீர்களா? அதுவும் ஓர் எல்லை வரை தான். அறிவு பகுத்தறிவு என்பது நம் செயல் தளத்துக்கான ஒரு கருவி. மாறாக அதையே வழிநடத்தும் வழிகாட்டி யாகக் கருதி விடக்கூடாது. வேடிக்கையாகவும் சுருக்கமாகவும் சொல்வ தென்றால் இப்படிச் சொல்லலாம்: ”நாம் பஸ்ல ஏறலாம்: பஸ் நம்ம மேல ஏறக்கூடாது”. இதுதான் அறிவுகான சரியான வரையறை.

ஆனால் முஸ்லிம்கள் இப்போது ”அறிவுவாதம்” பேசத் தொடங்கிவிட்டனர். ஆறிவால் ஆகாதது எதுவு மில்லை என்றும் அறிவு இருந்தால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்றும் பேசத் தொடங்கி விட்டனர். நம்முடைய பின்தங்கிய நிலைக்கு அறிவுப் பற்றாக் குறையே காரணம் எனக்கூறுகின்றனர். அறிவை துரத்திச் செல்லத் தொடங்கிவிட்டனர். இடஒதுக்கீடு பற்றிய உரத்த குரல் இதை மேலும் ”மூன்றரை சதவீத இடஒதுக்கீட்டை” நிரப்பியாக வேண்டும்.

”எல்லாரும் ஓடுங்கள் விரைவாக அதற்குரிய தகுதியை வளர்த்துக கொள்ளுங்கள்” என நமக்கு ஓயாமல் சொல்லபடுகின்றது. நாம் இழந்து விட்ட ஈமானைப் பற்றியோ. அதை மீட்பது பற்றியோ நம்மிடம் எந்தத்திட்டமும் இல்லை. அறிவு என்பது ஈமானுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும் ஈமான் வேறு: அறிவு வேறு. ஈமானின் உயர்ந்த நிலையை அறிவால் – பகுத்தறிவால் உணர முடியாது: உணர்த்தவும் முடியாது.

ஈமானை பகுத்தறிவால் விளக்கவே முடியாது.அது தொப்புள்கொடி மாதிரி மூஸா அலைஹிஸ்ஸலாம்அவர்களின் சமூகத்தைக் காப்பாற்றி நதி இரண்டாகப்பிளந்து வழிவிட்டது என்பதை எந்த பகுத்தறிவால் விளக்கமுடியும்?  எந்த அறிவை நம்பி வெறும் 313 பேர்கொண்ட இறை நம்பிக்கையாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை எதிர்க்கத்துணிந்தனர்? ஆனால் இதை ஒரு முஸ்லிம் அசைக்கமுடியாத உண்மையென நம்புகிறான். இங்குதான் ஈமான் நிலைகொண்டுள்ளது.ஈமான்தான் வழிகாட்டி, ஈமான்ஆசிரியர், அறிவு, பாடம் கேட்கும் மாணவன் ஆசிரியருக்கு, முன்னிலையில் மாணவனுக்கு ”எதிர்கேள்வி” கேட்கும் வாய்ப்பு கிடையாது. ”கீழ்ப்படிதல்” மட்டுமே அந்த மாணவனுக்குரிய ஒரே வாய்ப்பு!

இன்று உலகில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான அறிவாளிகள் நிரப்பியுள்ளனர். ஆவர்கள் அனைவரும் முஸ்லிம்களா? இல்லை! ஈமான் கொள்வதற்கு அறிவுதான் அடிப்படை என்றால், அறிவால் சிறந்து விளங்கும் அனைவரும் முஸ்லிம்களாகத்தானே இருக்க வேண்டும்.ஏன் அப்படி இல்லை? அல்லாஹ் யாரை நாடுகிறானோ அவர் ஈமான் கொள்கிறார். அவ்வளவுதான்!

உண்மையில் ஈமானிய வலிமையால் தான் முஸ்லிம்களின் முன்னேற்றமும் உள்ளது. எனவே நாம் இஸ்லாமியக் கோட்பாடுகளைச் செய்யமுற்பட வேண்டும் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்த்து நம் நெஞ்சத்தில் ஈமான் வலுப்பெற, நன்கு வேரூன்ற, இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராகும் எண்ணம் பெற இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும் ”எவர் உள்ளத்தில் கடுகளவு ஈமான் இருந்தாலும் அவர் நரகம் செல்ல மாட்டார்” என்பதே நபிமொழி. மறுமையில் நமக்கு ஈமானே கைகொடுக்கும் அதையும் கொஞ்சம் கவனித்தால் நல்லது.

இடம் பொருள் ஏவல்

டாடாவின் டைட்டானியம் ஆலை முதல் ஹெல்மெட் சட்டம் வரை அனைத்திலும் அரசு மக்களின் மனோநிலையை புரிந்தே செயல்பட்டது என்று சொல்வது மிகையல்ல, ஹெல்மெட் விவகாரத்தில் கட்டாயமாக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல, நீதிமன்ற தீர்ப்புக்கு பணிய வேண்டிய (அ) கட்டுப்பட வேண்டிய நிர்பந்தம் தான். சட்டம் என்பது மக்களுக்குதான். மக்கள் சட்டத்துக்கு அல்ல என்பதை ஒவ்வொரு அரசம் புரிந்து நடந்து கொண்டாலே அரசு – மக்கள் என்ற இணைப்பு எப்போதும் உடையாமல் பாதுகாக்கலாம். இது அரசுக்கு மட்டும் தானா? பொது வாழ்க்கைக்கு வந்து விட்ட ஒவ்வொருவரும் மக்களின் மனோநிலையை புரிந்து நடக்கும் இங்கிதத்தை கடைப்பிடிப்பது இன்றியமையாதது.

மற்றவர்களுக்கு இருக்க வேண்டிய இங்கிதத்தை விட இமாமாக பணிபுரியக் கூடியவர்களுக்கு கொஞ்சம் கூடுதலாக தேவைப்படுகிறது. காரணம் இமாம்களுக்கு தொழிலே சொந்த வேலை நிமித்தம் போக – அதிகமான நேரங்கள் மக்களோடு கலந்திருப்பது தான். மக்களின் இன்ப – துன்ப அனைத்து காரியங்களிலும் ஆரம்பம் முதல் இறுதி வரை இமாமுடைய பங்களிப்பு தவிர்க்க முடியாதது. முக்களோடு இவ்வளவு நெருக்கமான தொடர்பை வலுப்படுத்தி விடும் இமாம்களில் சிலர் இன்னும் ஏன் இங்கிதத்தை, படிக்காமல் இருக்கிறார்கள். தொழுகை மற்றும் பயான் நிகழ்ச்சிகள் இன்னும் பிற பொதுச் சேவைகள் ஒவ்வொன்றிலும்; இமாம்களின் மீது மக்கள் எவ்வளவு வெறுப்படைகிறார்கள். ஏன்பது தெளிவுபடுத்தப்படுவது சமுதாயக் கடமையே!

ஆலிம்கள் வீட்டுத் திருமணம் என்றாலே செல்வதற்கு பயமாக அருக்கிறது என்று பலர் புலம்புகின்றனர். சுரியாக 11 மணியளவில் என்று பத்திரிக்கையில் போட்ட விட்டு லுஹர் நேரம் வரை பயான் என்ற பெயரில் பலரையும் பேசவிட்டு திருமணத்திற்கு வந்த அனைத்து மக்களையும் நோகடித்து விடுகின்றனர். பொதுவாக திருமணத்திற்கு வரக்கூடியவர்கள் காலை உணவை தவிர்த்துவிட்டதான் வருவார்கள். பதினொரு மணி (அ) பனிரெண்டுக்குள் சாப்பிட்டு விடலாம் என்பதற்காக அப்படி தவிர்த்து கொள்கின்றனர்.

திருமணத்திற்கு வருவது எதற்காக? வயிறார சாப்பிட்டு மணமக்களை வாழ்த்தி விட்டு செல்லலாம் என்பது தான் பிரதானமானது.

பயானின் மீதுள்ள வெறுப்பால் ஜும் ஆவுக்கே தாமததாக வரக்கூடிய மக்கள் திருமணத்திற்கு வரக்கூடியவர்களுக்கு அந்த எண்ணம் இருக்குமா?

அரசியல்வாதி வீட்டுத்திருமணத்தில் வாழ்த்துரை என்ற பெயரில் ஏற்பட்ட இத்தவறான நடைமுறைகள் நம் வீட்டுத் திருமணத்திலும் தொற்றிக்கொண்டு விட்டது.

கொஞ்சம் முன்மாதிரியாக இருக்கட்டும் (அ) வித்தியாசமாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில், திருமணத்தில் வாழ்துரை என்ற சந்து வழியாக பயான் நிகழ்சிகள் கொண்டு வரப்பட்டன.

இப்பொழுது ஆலிம்கள் வீட்டுத் திருமணத்தில் மட்டுமல்ல, ஏதாவது வித்தியாசமாய் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலுள்ளவர்களுடைய வீட்டுத் திருமணங்களில் பயான் என்ற நோய் பரவி வருகிறது.

இதை விட ஒரு கொடுமை என்னவென்றால்.. திருமண சபை கூடி ஏதாவது தாமதமாக்கப்பட்டிருந்தால் அது வரும் வரை பயான் செய்யுங்கள் என ஆலிம்சாவிடம் பணிவாக கேட்டுக் கொள்வார்கள். அவரும் ஆஹா! நம்ம பயானை கேட்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்களே என்ற துடிப்பில் அவர் ”சொற்போரை” நிகழ்த்தத் தொடங்குவார். அவரது உரை உச்சகட்டத்தை அடைந்திருக்கும் போது, தாமதமாக்கப்பட்ட அது வந்து விட்டால் அந்த ஆலிம்சாவின் காலை கொஞ்சம் சுரண்டி விடுவர். அவர் அதை கவனிக்காமல் இருந்தால் காதில் ரகசியமாய் சொல்லி விடுவார். பிறகு அவர் ”இத்துடன்” என இடையிலேயே வெறுப்போடு முடிப்பார். அப்போது தான் அவருக்கு உண்மை புரியும் இதுக்குத்தான் பயான் பண்ண சொன்னார்களோ என்று!

மார்க்க சொற்பொழிவுகளுக்கு கிடைக்கும் அவமரியாதைகளை பாருங்கள். இந்த அவமதிப்புகளை ஏற்படுத்துவோர் உலமாக்களே! அதனால் அவர்கள் இளது விஷயத்தில் எது நாகரிகமோ அதை பேணிக் கொள்ளட்டும். வரும் காலங்களில் திருமண சபைகளில் பயான் (அ) வாழ்த்துரைகள் குறைக்கப் பட வேண்டும்.

அப்படி ஏதாவது சில திருமணங்களில் பயானுக்காகவே பிரத்யேகமாக அழைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட உலமாக்கள் மக்களின் மனோ நிலையை மற்றும் நேரத்தின் அருமை கருதி உரைகளை சுருக்கமாக்கிக் கொள்வது நல்லது.ஒரு பக்ககம் சொற்பொழிவுகளின் நிலைமை அவ்வாறிருக்க! திருமண சபையில் இறுதியாக ஓதப்படும் திருமண துஆ அது தான் உச்சக்கட்ட நோகடிப்பு.

சில உலமாக்கள் தான் இது விஷயத்தில் நாகரீகமாக நடந்து கொள்வர். பெரும் பாலான உலமாக்கள் துஆவுக்காககையை விரித்து ஓத ஆரம்பித்துவிட்டால் மக்களின் கையை உடைக்காமல் விடமாட்டார்கள். அரபியிலும் தமிழிலும் மாறிமாறி ஓதி பதினைந்து நிம்டத்திற்கு பின் துஆ முடியும் போது கூடியிருப்பவர்களின் முகங்கள் பூக்களைப் போல வாடி வதங்கி போயிருக்கும். சில முன்கோபிகள் அந்த இமாம் தனியாக கிடைத்தால் பின்னி எடுத்து விடலாம் என்று நினைப்பார்கள்.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb