உடலுறவு – உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியம்!
[ அறத்துப்பாலில் மட்டுமே பொருள் கொள்ளப்படும் (”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்…”) அற்புதமான பாலியல் வசனம்.
மனிதனுக்கு உணவுக்கு அடுத்தபடியாக உடலுறவு இரண்டாவது இடத்தை வகிக்கிறது. மனிதன் உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதைப் போல, உடலுறவு இல்லாமல் மனிதன் தொடர்ந்து வாழ முடியாது. அத்துடன் உடலும் உள்ளமும் வளமாய் இருந்தால் உயிர் உடலில் நீண்ட நாள் இருக்கும். உடலையும், மனத்தையும், வளமாய் வைத்திருக்க உடலுறவு உதவுகிறது என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூபிக்கிறது.
எல்லாப் பிரச்சினைகளையும், நோய்களையும் ஒரே ஒரு மருந்தால் தீர்க்க முடியுமா? முடியும்! அது குடும்ப வாழ்க்கையில் உள்ள உடலுறவு ஒன்றால்தான், தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லா வற்றையும் தீர்க்க முடியும்.
உடலுறவுதான் உடலிலுள்ள தடுப்புச் சக்தியான இம்யூன் (Imune) என்னும் சக்தியைத் துரிதப்படுத்துகிறது. இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும் நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன.]
‘உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்களாவர். எனவே உங்கள் விளை நிலத்தில் விரும்பியவாறு செல்லுங்கள்!” (அல்குர்ஆன் 2:223)
திருமணத்தின் மூலம் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலக்கும் தாம்பத்திய உறவு குறித்து எழும் எல்லா ஐயங்களையும் விளக்கும் அற்புதமான வசனம் இது.
இன்னின்ன நாட்களில் உடலுறவில் ஈடுபடக் கூடாது. அதனால் இந்த விளைவு ஏற்படும். பகல் நேரத்தில் தாம்பத்தியம் கூடாது. கண் குருடாகும். தம்பதியரில் ஒருவர் மற்றவரின் மறைவிடங்களைப் பார்க்கக் கூடாது. இப்படி பெரியவர்கள் ஏராளமான அறிவுரைகளைக் கூறி தாம்பத்திய வாழ்க்கையை அர்த்தமற்றதாக்குகின்றனர்.
சில மாதங்களில் தம்பதியரை வலுக்கட்டாயமாகப் பிரித்து வைத்து ரசிக்கின்ற கொடுமையையும் நாம் கண்டு வருகிறோம். அந்தக் கால கட்டத்தில் ஆண்களில் பலர் தவறான நடத்தையில் ஈடுபட்டாலும் அது பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.
இத்தகையோரின் மூட நம்பிக்கைகளைக் களைவதாகக் கூறிக் கொண்டு எழுதப்படும் நூல்களும் விளக்கங்களும் கேட்பதற்கே காதுகள் கூசும் அளவுக்கு ஆபாசமாக அமைந்துள்ளன.
அனைத்து ஐயங்களையும் அகற்றக் கூடிய நாகரீகமான விளக்கம்
ஆபாசமாகவும் இல்லாமல் அனைத்து ஐயங்களையும் அகற்றக் கூடிய வகையில் நாகரீகமாக விளக்க முடியாதா? முடியும்! மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனம் மிக அருமையாக இதை விளக்குகின்றது.
ஆண்களாயினும் பெண்களாயினும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை ஆதரிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆண்கள் ஆண்களுடன் சேர்வதும் பெண்கள் பெண்களுடன் சேர்வதும் கூடாது என்பதை எவ்வளவு அற்புதமாக இவ்வசனம் கூறிவிடுகிறது.
பெண்களை விளைநிலங்களாகவும் ஆண்களை அதில் பயிரிடுவோராகவும் நாகரீகமான உவமை கூறியதன் மூலம் கேடு கெட்ட அந்தக் கலாச்சாரத்தை எதிர்க்கிறது.
விளைநிலத்தில் தான் பயிரிட வேண்டும் என்ற கூற்று ஆண்கள் ஆண்களுடன் கூடுவதையும் மறுக்கிறது. மனைவியரின் மலப்பாதையில் கூடுவதையும் மறுக்கிறது. அவ்விடங்களில் கூடுவதால் எதையும் உற்பத்தி செய்ய முடியாது.
தாம்பத்திய வாழ்வில் எந்த முறையைக் கடைப்பிடிப்பது? எந்த முறையை வேண்டுமானாலும் கடைப்பிடியுங்கள்! இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ‘உங்கள் விளைநிலங்களில் நீங்கள் விரும்பியவாறு செல்லலாம்’ என்ற சின்ன வாசகம் இதற்கு விடையளிக்கிறது.
இரண்டைத் தவிர வேறு எதற்கும் தாம்பத்திய வாழ்வில் தடை இல்லை
அதைச் செய்யலாம். இதைச் செய்யலாம். அதைச் செய்யக் கூடாது இதைச் செய்யக் கூடாது என்றெல்லாம் பட்டியல் போட்டு, கேட்பவர் காதை மூடிக் கொள்ளுமாறு இவ்வாசகம் இருக்கவில்லை. மாதவிடாய் சமயத்தில் உடலுறவு வேண்டாம்,மலப்பாதையில் சேரக்கூடாது என்பதை இவ்வசனத்திலிருந்து அறிகிறோம்.
இவ்விரண்டைத் தவிர வேறு எதற்கும் தாம்பத்திய வாழ்வில் தடை இல்லை. எதைப் பற்றி மனிதர்கள் விலாவாரியாகக் கேள்வி எழுப்ப கூசுவார்களோ, அல்லது காதால் கேட்கக் கூச்சப்படுவார்களோ அந்த விஷயத்தை விலாவாரியாகச் சொல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்கிறது குர்ஆன். அது கூடாது இது கூடாது என்று தடை விதிக்கப்பட்டால் அந்தத் தடைகளைக் கவனத்தில் கொள்ள முடியாத நேரம் அது. எந்தத் தடையும் கட்டுப்பாடும் அர்த்தமற்றதாகத் தான் அமையும். இதனால் பாவம் செய்து விட்டோமோ என்ற உறுத்தல் தான் மிஞ்சும்.
படைத்தவனுக்கு இதெல்லாம் தெரியும் என்பதால் தாம்பத்தியத்தில் அனைத்தையுமே – அனைத்தையும் தான் – அனுமதிக்கிறான்.
அதுமட்டுமின்றி இன்றைய நவீன உலகில் மனிதன் சந்திக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கும் கூட இவ்வசனம் தக்க தீர்வைக் கூறுகிறது.
குழந்தையில்லாத பெண்கள் கணவன் அல்லாத மற்றவனின் உயிரணுவைக் கருவறையில் செலுத்தும் முறை பரவிவருகிறது. உங்கள் மனைவியர் உங்களது விளைநிலம் தான். நீங்கள் தான் பயிரிட வேண்டும். வேறு எவரும் அதில் பயிரிட முடியாது என்று தெளிவாகவே குர்ஆன் கூறிவிடுகிறது.
விவாகரத்து செய்து விட்டு வேறு கணவனை மணந்து அவனது விளைநிலமாக மாறி அவனது கருவைச் சுமக்கலாமே தவிர ஒருவனது விளைநிலமாக இருந்து கொண்டு மற்றவனின் கருவைச் சுமக்க முடியாது என்பதற்கு இவ்வசனம் தெளிவான ஆதாரமாக உள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட எண்ணுவோருக்கு இதில் எச்சரிக்கை உள்ளது. உங்கள் விளைநிலங்களில் – அதாவது மனைவியரிடத்தில் – மட்டும் தான் பயிரிடலாமே தவிர மாற்றாரின் விளைநிலத்திலோ அல்லது உங்களுக்கு உரிமையில்லாத நிலத்திலோ பயிரிட முடியாது என்பதும் இதனுள் அடங்கிக் கிடக்கிறது.
திருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பவர்கள் இவ்வசனத்தையும் இதற்கு முந்தைய வசனத்தையும் சிந்தித்தார்களானால் தாம்பத்திய வாழ்வு குறித்து எவரிடமும் எந்த விளக்கமும் கேட்கத் தேவையில்லை. இவ்வசனங்கள் மட்டுமே எல்லா சந்தேகங்களையும் நீக்குவதை உணர்வார்கள்.
அறத்துப்பாலில் மட்டுமே பொருள் கொள்ளப்படும் பாலியல் வசனம்
”நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;…” (அல் குர்ஆன்: 2:187)
இந்த இறை வசனத்தில் நோன்புகால இரவு நேரங்களில்கூட உறவு கொள்வதற்கு அல்லாஹ் அனுமதியளித்திருப்பதிலிருந்தே உடலுறவின் மேன்மையை விளங்கலாம். அதுமட்டுமின்றி இவ்வசனத்திற்குள் இடம்பெற்றுள்ள ”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும்,நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்…” என்கின்ற பிரபலமான வசனம் எல்லா திருமண சொற்பொழிவுகளிலும் அறத்துப் பாலில் மட்டுமே விளக்கமளிக்கப் படுகிறது.
ஆனால் கவனமாகப் பார்த்தால்; திருக்குர் ஆனில் இடம்பெற்றுள்ள ஒரு வசனத்துக்கு விளக்கமளிக்கும்போது அந்த வசனத்தின் முன் பின் உள்ள வசனங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பது அறிஞர்களின் நடைமுறையாக இருக்கும்போது, இந்த ஒரு வசனத்தைப்பற்றிய விளக்கத்தில் மட்டும் அது பின்பற்றப்படவில்லை என்பது கவனிப்பவர்களுக்கு விளங்கும். முன் பின் வசனம் என்று கூட இல்லை ஒரேவசனத்திற்குள் வரும் இந்த (அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்..) வரிகளை மட்டும் தனியே எடுத்து அறத்துப்பாலில் மட்டுமேவிளக்கமளிக்கப் படுகிறது.
முழுக்க முழுக்க மனைவியுடன் கூடுவதற்கான அனுமதியைப்பற்றி சொல்லக்கூடிய இந்த வசனத்தில் தான் ”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்…” என்கின்ற வரிகள் (இடையில்) வருகின்றன. மனைவியுடன் கூடக்கூடிய அந்த நேரத்தில் ”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்…” என்றால் என்ன அர்த்தம்? … ‘உடலுறவின் நிலையை’ இதைவிட சிறப்பான முறையில் நாசூக்காக எவரால் சொல்ல முடியும்?
சொன்னதில்லை; சொல்லவும் முடியாது. ஏன்?
இது ஜோடிகளை (ஆணையும் பெண்ணையும்) படைத்தானே, அந்த ரப்புல் ஆலமீனின் வார்த்தைகளல்லவா?!
பிரம்மச்சார்யமா தாம்பத்தியமா எது ஆரோக்கியப் பாதை?
உடலுறவு கொள்வது அவரவர்களுடைய உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுபடும். சிலருக்குத் தினமும் உடலுறவு இல்லாமல் முடியாது. சிலருக்கு வாரத்திற்கு இரண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம் இருமுறை இருந்தால் கூடப் போதும். அவரவர்களுடைய உடற்கூற்றைப் பொறுத்து உடலுறவின் தேவை ஏற்படும். உடலுறவு கொள்ளாத பிரம்மசாரிகளைவிடக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவர்களே அதிக ஆயுள் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
மனிதனுக்கு உணவுக்கு அடுத்தபடியாக உடலுறவு இரண்டாவது இடத்தை வகிக்கிறது. மனிதன் உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதைப் போல, உடலுறவு இல்லாமல் மனிதன் தொடர்ந்து வாழ முடியாது. அத்துடன் உடலும் உள்ளமும் வளமாய் இருந்தால் உயிர் உடலில் நீண்ட நாள் இருக்கும். உடலையும், மனத்தையும், வளமாய் வைத்திருக்க உடலுறவு உதவுகிறது என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூபிக்கிறது.
பிரச்சினைகளையும், நோய்களையும் தீர்க்கக்கூடிய ஒரேஒரு மருந்து!
எல்லாப் பிரச்சினைகளையும், நோய்களையும் ஒரே ஒரு மருந்தால் தீர்க்க முடியுமா? முடியும்!அது குடும்ப வாழ்க்கையில் உள்ள உடலுறவு ஒன்றால்தான், தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லா வற்றையும் தீர்க்க முடியும். உடலுறவுதான் உடலிலுள்ள தடுப்புச் சக்தியான இம்யூன் (IMUNE) என்னும் சக்தியைத் துரிதப்படுத்துகிறது. இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும் நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன.
ஒருவன் குடும்ப வாழ்க்கையில் உடலுறவு கொள்ளாதவனாய் இருந்தால் மனத்தில் இறுக்கமும் ஒரு வேகமான கோபமான நிலையும் ஏற்படும். இதற்குக் காரணம், உடலுறவு கொள்ளாததால் அட்ரினலின் (Adernalin)ஹார்மோன் சுரப்பது தான். உடலுறவு கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் இதய நோயைக் குறைத்து இரத்தத்தை விருத்தியடையச் செய்யும். பெண்களுக்கு மார்பில் கட்டி ஏற்படாது சளி பிடிக்காது.
அடிக்கடி உடலுறவு கொள்வதால் தேவையான அளவு இரத்த ஓட்டம் அதிகரித்துப் பெண்களின் உடலிலுள்ள அனைத்து வலிகளும் தீர்ந்து விடும். உடலுறவின் போது ஹார்மோன் சுரப்பது தூண்டப்பட்டுப் பல விதமான இரசாயனப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. அவை வலி நிவாரணியாக, மருந்தாகப் பெண்களுக்கு அமைந்து, நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படும். சரியான அளவில் அடிக்கடி உடலுறவு கொள்பவர்களுக்குச் செரிமானம் அதிகமாகிப் பசி எடுக்கும் ; நல்ல தூக்கம் வரும் ; அதனால் மன இறுக்கம், கவலை தீரும் ; மனத்தில் அமைதி, நிதானம், மகிழ்ச்சி ஏற்படும்.
உதவி: sources: இஸ்லாமிய தஃவா & ”யோகக்கலையும் இயற்கை மருத்துவமும்” (நூல்)